(Reading time: 55 - 110 minutes)

 

ந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே… என்று பாடாத குறையாக ஒருவர் தோள் மீது ஒருவர் கைப்போட்டு நடந்து வருவதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர் மயூரியும் சாகரியும்…

“ஜனா… சாகரி வேலை விஷயமா சென்னை வந்தியா?...”

“ஆமாடா ராசு… நீடா?...”

“நானும் அதே தாண்டா…”

“ஹ்ம்ம்… பொண்ணுக்கு இங்கே எஸ்.எம் சாஃப்ட்வர் சொலுஷன்சில் வேலை கிடைச்சிருக்கு… அவ என்னடான்னா ஹாஸ்டலில் தங்கிக்கிறேன்னு சொல்லுறா… காலேஜ் இங்கே தான் படிச்சா… அப்போ, ஒரு பொண்ணு இருந்தா இவ கூட, காலேஜ் ஹாஸ்டலில்… இப்போ அவ வெளிநாடு போயிருக்கா… எனக்கு என்னம்மோ ஹாஸ்டலில் தங்க வைக்குறது சரின்னு படலைடா ராசு… அதான் குழப்பமாயிருக்குடா…”

“கடவுளா பார்த்து தான் உன்னை இன்னைக்கு பார்க்க வச்சிருக்கார்டா ஜனா… நான் எதை நினைச்சு பயந்தேனோ அதே தான் நீயும் நினைச்சு பயப்படுற…”

“என்னடா சொல்லுற ராசு?...”

“ஆமாடா.. நம்ம மயூரி கூட அதே கம்பெனியில் தான் செலக்ட் ஆகிருக்கா…”

“நிஜமாவாடா சொல்லுற?...”

“நிஜம் தாண்டா ஜனா…”

“ஹ்ம்ம்… இப்போ என்ன பண்ணுறது டா…?”

“என் ஊர்க்கார ஸ்நேகிதன் ஒருத்தன் இங்கே இருக்கான்… அவன்கிட்ட கேட்டுப் பார்க்கலாம்டா…”

“சரிடா… ராசு… லஷ்மிய கூப்பிடுடா… புள்ளைங்க பசி தாங்காது… சாப்பிட வைக்கலாம்…”

நால்வரும் அங்கே பக்கத்தில் இருந்த ஹோட்டலில் உணவருந்திவிட்டு செல்வராஜ் சொன்ன நண்பருக்காக காத்திருந்தனர்…

“வாடா… துரை… எப்படி இருக்கே..?...”

“நான் நல்லாயிருக்கேண்டா.. நீ?...”

“எல்லாம் சுகம் தான்… இவன் என் பால்ய ஸ்நேகிதன் ஜனாடா… இவன் பொண்ணும் என் பொண்ணும் இங்கே தங்கி வேலைப் பார்க்க போறாங்க… அதுக தங்க ஒரு வீடு வேணும்டா… அதான் உன்னைக் கூப்பிட்டேன்…”

“செல்வராசு… நீ கேட்குற மாதிரி இங்கே பக்கத்துல ஒரு ஃப்ளாட் இருக்கு… அதை எனக்கு தெரிஞ்ச பையன் தான் வாங்கியிருக்கான்… அவன் அதே கட்டிடத்துல இப்போ நான் சொன்ன வீட்டுக்கு எதிர் ப்ளாட்ல இருக்காண்டா… அவங்கிட்ட பேசிட்டு சொல்லுறேன்… இப்போதாண்டா அங்க இருந்தவங்க காலி பண்ணி போனாங்க… அவங்க பொண்ணு காலேஜ் சேர்ந்திருந்தா… காலேஜ் பக்கம் இது இல்லைன்னு… ரெண்டு நாள் தான் ஆகுது… அவங்க காலி பண்ணி…”

“சரிடா.. கொஞ்சம் சீக்கிரம் பேசி பாருடா…”

பேசி முடித்துவிட்டு செல்வராசுவிடம் பேசியவர், “அவன் சரி சொல்லிட்டாண்டா… நாம போகலாம் அங்கே இப்பவே… வாங்க…” என்றார்…

“வாங்க அங்கிள்… காவ்யா… இங்கே வா…”

“இதோ வரேங்க…”

“தினேஷ் இவங்க என் நண்பர்கள் செல்வராஜ், ஜனகன்… இது இவங்க பொண்ணுங்க.. மயூரி லக்ஷ்மி, சாகரிகா சீதை… இந்த பொண்ணுங்க தான்ப்பா இங்கே தங்க போறாங்க…”

“சரி அங்கிள்… அவங்க ப்ளாட்டைப் பார்க்கட்டும்… பிடிச்சிருந்தா தங்கிக்கட்டும்… வாங்க அங்கிள் போய் பார்க்கலாம்…” என்றபடி துரையிடம் கூறினான் தினேஷ்…

“காஃபி குடிச்சிட்டு போய் பாருங்க…” என்றபடி அங்கே காவ்யா வந்தாள்…

னோ பார்த்த மாத்திரத்திலே அவர்கள் இருவரையும் ராசு-ஜனாவிற்கு பிடித்து போனது…

வீடும் பிடித்துவிட, சிறிது நேரம் பேசிய பின், அவர்களை அங்கே விட்டுவிட்டு கிளம்ப முடிவெடுத்தனர் நண்பர்கள் இருவரும்…

“அதுக்குள்ளே எங்கே கிளம்பிட்டீங்க அப்பா?...” என்றபடி அங்கே வந்தான் தினேஷ்…

இருவருக்குமே ஆனந்த அதிர்ச்சி தான்… அதை கேட்டு…

“இல்லப்பா… வந்து…”

“ஏன்ப்பா…. நான் உங்களை அப்பான்னு கூப்பிட்டது பிடிக்கலையா?...” என்று தயக்கத்துடன் கேட்டவனை இருவரும் நெருங்கி அவன் கைகளைப் பிடித்து,

“இப்படி ஒரு வார்த்தையை நீ சொல்லலாமாப்பா?... பெற்றால் தான் பிள்ளையா?... நாங்கள் பெறாவிட்டாலும் நீ எங்க பையன் தான்ப்பா…” என்றனர்…

“தேங்க்ஸ்ப்பா…” என்றவன்  குரலும் கலங்கியது…

“அடடா… அப்பா… பாவம் அவர்… இப்படி வீட்டு ஓனரையே அழ வைச்ச பெருமை உங்க இரண்டு பேரையும் தான் சேரும்…” என்றாள் சாகரி…

அனைவரும் தன்னை மறந்து சிரிக்க…

“சரிப்பா… கிளம்புறோம்…”

“சாப்பிட்டு போகலாமே அப்பா…” என்றபடி காவ்யாவும் அங்கே வந்தாள்…

இரு நண்பர்களின் வயிறு நிறைந்தது போல், மனசும் நிறைந்தது தினேஷ்-காவ்யா அன்பினால்….

“மயூரி இங்கே இரண்டு அறை இருக்கு… நீ தனியா தங்க விருப்பப்படுறியா?... இல்லை சேர்ந்தா?...”

“உன் விருப்பம் சாகரி…”

“இரண்டையும் யூஸ் பண்ணிக்கலாம்… ஒரு அறையில் உன்னோட திங்ஸ் வச்சிக்கோ… இன்னொரு அறையில் நான் என்னோடதை வச்சிக்கிறேன்… நைட் தூங்கும்போது மட்டும் சேர்ந்து தூங்கலாம் ஒரே அறையில்…”

“சரி சாகரி…” என்றாள் மயூரி…

அங்கே தினேஷின் வீட்டில், “கொஞ்சம் பார்த்துக்கோப்பா… சின்னப்பொண்ணுங்க… நாங்க ஆறுமாசத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டு போறோம்… எதும் தப்பு பண்ணங்கன்னா…. திட்டி அவங்களை உன் வழிக்கு கொண்டு வா… பார்த்துக்கோப்பா…” என்று இருவரும் அவனின் கையைப் பிடித்துக்கொள்ள,

“நீங்க கவலைப்படாம பத்திரமா போயிட்டுவாங்கப்பா… எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு எதும் பிரச்சினை வராது… எனக்கு தான் வரும்… அநேகமா நான் தான் உங்களுக்கு போன் பண்ணுவேன்னு நினைக்கிறேன்ப்பா…” என்றாள் காவ்யா…

“ஏன்ம்மா… இப்படி சொல்லுற?...”

“ஆமாப்பா… ஒரு நாத்தனார் இருந்தாலே சமாளிக்கிறது கஷ்டம்… இதுல இரண்டு நாத்தனார்… அப்போ கேட்கவா வேணும்?...” என்று சிரித்தாள் காவ்யா…

“நீ சொல்லுறது சாகரிக்கு வேணா பொருந்தும்மா காவ்யா… ஆனா, மயூரிக்கு பொருந்தாது… அவ ரொம்ப அமைதியான பொண்ணும்மா… சாகரி மாதிரி வாலு இல்லை… நானும் வந்ததில இருந்து பார்த்துட்டு தான இருக்குறேன்...”

“டேய்… ஜனா… அப்படி எல்லாம் இல்லடா… நானும் சாகரி மாதிரி பொண்ணு வேணும்னு தான் கடவுளை வேண்டிக்கிட்டேன்… ஆனா எனக்கு இப்படி ஒரு அமைதியான பொண்ணு கிடைச்சிருக்கா… ஆனா.. இவளும் பேசினா நல்லா பேசுவாடா….”

அந்நேரம் அம்மா… என்று ஓடி வந்த இருவரும், வீட்டிலுள்ள புதியவர்களைப் பார்த்து முழிக்க, காவ்யா வந்து அவர்களிடத்தில் ஏதோ கூறினாள்..

“வாங்க தாத்தா… நல்லாயிருக்கீங்களா?...” என்று குட்டீஸ்கள் கேட்க,

பெரியவர்கள் இருவரும், அவர்களை தூக்கி முத்தமிட்டு, அந்த குட்டி செல்வங்களுடன் சில மணி நேரம் விளையாடிவிட்டு, அவர்களை விட்டு சென்றனர்…

தனக்கு ஆண் பிள்ளை இல்லாத குறையை தீர்த்து வைத்த தினேஷை எண்ணி மகிழ்ந்து கொண்டார் ஜனா… கிட்டத்தட்ட ராசுவிற்கும் அதே நிலை தான்…

மகள்களிடமும் சொல்லிவிட்டு கிளம்பினர் அந்த தந்தையர் இருவரும்… அவர்கள் கிளம்பியதும் காவ்யா தன் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு சாகரி-மயூரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.. சிறு பிள்ளைகள் இருவருக்கும் அவர்களை பிடித்துவிட, அதன் பின் நண்பர்களாகிவிட்டனர் ஒருவருக்கொருவர்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.