(Reading time: 30 - 60 minutes)

 

" நானா ? நான் எதுக்கு வருந்தனும் ? " என்று கேட்டவரின் கைகளில் சுப்ரியா- ஆகாஷின் திருமண அழைப்பதழை கொடுத்தான் அர்ஜுனன் ...

அதை பார்த்த பிரபாகரனின் முகத்தில் ஆயிரம் கலவை உணர்வுகள் .. அதில் ஏமாற்றமும் கவலையும் இருந்ததை கூட கண்டுகொண்டான் அர்ஜுனன்.. மனம் முழுக்க அன்பை நிறைத்து விட்டு வீண் வீம்பு எதற்கு ? என்று எண்ணி கொண்டவன் அழுத்தமான பார்வையுடன் அவர்களை நோக்கினான் ... நடுங்கும் விரல்களால் கணவனிடமிருந்து அந்த பத்திரிக்கையை எடுத்து பார்த்தார் பத்மா ...

" என் மகள் இப்படி அநாதை மாதிரி கல்யாணம் பண்ண போறலே " என்றவர் வாய்விட்டு அழ, லேசாய் கரைந்த பிரபாகரனின் மனம் கல்லாகியது .. பற்களை நறநறவென கடித்தவர்

"  யாருடி மகள் ? அவ நம்ம மகள் இல்ல...  யாரோ அநாதை கழுதை .. அப்படியோ போறா  விடு " என்றார் ...

" சார் வார்த்தைய அளந்து பேசுங்க "

" என்னை அளந்து பேச சொல்ல நீ யாருடா ?"

" நான் அவளின் அண்ணன் .. "

" ஹா ..... அண்ணனா ? நீ என்ன வானத்துல இருந்து குதிச்சு வந்தியோ ? என் பெண்ணை திட்ட எனக்கு உரிமை இருக்கு " என்று கோபத்தில் உளறியவரை பார்க்க சிரிப்புதான் வந்தது அர்ஜுனனுக்கு...

" உங்க பொண்ணா ? அவ யாரோ ஒரு அநாதை கழுதை "

அர்ஜுனன் அப்படி சொன்ன விதத்தில் அவரின் உடலே நடுங்கியது ... அவரை சொல்லும்போது தெரியாத வார்த்தையின் வீரியம் மூன்றாம் மனிதனின் பேச்சில் பெரிதாய் தோன்றியது..,இருந்தும் ஏதும் எதிர்த்து பேச முடியாமல் வேறு பக்கம் திரும்பி கொண்டார் .,...

" தம்பி ப்ளீஸ் அவருதான் ஏதோ கோபத்துல அப்படி சொல்றாருன்னா நீங்களும் என் பெண்ணை  அப்படி பேசாதிங்க "

" ஏன்மா யாரோ ஒரு மூணாவது மனுஷன் என்கிட்ட 'ப்ளீஸ்' போட்டு உங்க பொண்ணுக்காக சொல்றிங்க ? இதையே உங்க கணவன் கிட்ட சொல்ல வேண்டியதுதானே ?  சுப்ரியா அவருக்கு மட்டும்தான் பெண்ணா ? உங்களுக்கு இல்லையா ? உங்க கணவர் என்ன சொன்னாலும்  அப்படியே செய்விங்களா ? பேசுன்னு சொன்னா பேசுவிங்க , பேசதேன்னு  சொன்ன பேசமாட்டிங்க அப்படிதானே ? "

" .... "

" ஏன் சார் .. எவனோ பண்ண தப்புக்கு உங்களை தப்பாக பார்த்தா மட்டும் உங்களுக்கு அவ்வளவு கோபம் வருது .. ஆனா எந்த தப்புமே பண்ணாத ஆகாஷை நீங்க ஒதுக்கி வைப்பிங்க அதுக்கு அவன் பொறுமையா போகுனுமா ? "

" அவன் தப்பு பண்ணலன்னு உனக்கு தெரியுமா ?"

" பண்ணான்னு உங்களுக்கு தெரியுமா சார் ? என்ன ஆதாரம் ? ஒரு தப்பான பையனை கண்டுபிடிக்க தெரியாத அளவுக்கு வெகுளியாகவா உங்க பொண்ணை நீங்க வளர்த்து வெச்சுருக்கிங்க? அப்படின்னா உங்க பெண் முடிவு மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லன்னு தானே அர்த்தம்? "

" நான் ஆமா  அப்படிதான்னு சொன்னேனா? "

" இல்லன்னும் சொல்லலையே சார் ? "

"...."

" உங்களுக்கு ஆகாஷை பிடிக்கலையா ? இல்ல காதலை பிடிக்கலையா ? "

" ???? "

" என்ன சார் அதிர்ச்சியா பார்க்கிறிங்க ? இதுவே ஆகாஷை நீங்களே பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறதா இருந்தா  அவன் உங்க கண்ணுக்கு நல்லவனா தெரிஞ்சிருபான் அப்படிதானே ? "

" உனகெப்படி???"

" அர்ஜுனுக்கு தெரியாம எதுவும் நடக்காது ... சுப்ரியா உங்களை பத்தி சொன்னதுமே எனக்கு தெரிஞ்சு போச்சு ... பிரச்சனையை ஆகாஷ் இல்லன்னு .. எப்பவோ நடந்த சின்ன விஷயத்தை மைண்ட் ல வெச்சு சண்டை போடுற அளவுக்கு நீங்க சில்லியா இருப்பிங்கன்னு தோனல ... சோ கண்டிப்பா வேற காரணமாகத்தான் இருக்கும் .. காதலை பிடிக்காமல் இருக்கலாம் ... உங்களுக்கு வேற மாப்பிளையை பிடிச்சிருக்கலாம் .. ஈகோ பிரச்சனயா கூட இருக்கலாம்..நாம பார்த்து வளர்த்த பொண்ணு அவ இஸ்டத்துக்கு வாழ்க்கையை முடிவு பண்ணிகிட்டாளேன்னு... ! "

"...."

" நான் சொல்றது சரி தானே சார் "

"..."

" நீங்க அமைதியா இருக்குறதுலேயே ஆமான்னு தெரியுது சார் ... ஆனா நீங்க இப்படி அமைதியா இருந்தா எதையும் பேசி சரி பண்ண முடியாது சார்... "

" சரி பண்ண என்ன இருக்கு ? அதான் அவங்கதான் வேணும்னு போய்ட்டாளே " அவரின் குரலில் இருந்தது கோபமா ? அல்லது ஏமாற்றமா ? அவர்களை பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது அர்ஜுனனுக்கு .. சில நேரம் காதல் சகுநியாகி விடுகிறதோ ? ஒரு பக்கம் பெற்றோரின்  அன்பிற்காக ஏங்கும் சுப்ரியா , இன்னொரு பக்கம் அவள் தங்களது பேச்சை மீறிவிட்டாளே என்ற ஏமாற்றத்தில் பெற்றோர், அடுத்த பக்கமோ தன்னவளின் சந்தோஷத்தை பரித்துவிட்டோமோ என்ற பரிதவிப்பில் ஆகாஷ் இவர்களின் நடுவே அழகாய் சிரித்தது காதல் ..

காதல் என்பதின் அர்த்தம்தான் என்ன ?

காதலை அறிந்தவன் இல்லை

அறியாதவனும் இல்லை

புரிந்தவன் இல்லை

புரியதவனும் இல்லை

உணர்ந்தவன் உண்டு ... உணராதவன் ?

இல்லவே இல்லை ..

காதலை உணராதவன் எங்கிருக்கிறான் ? எங்குமே இல்லை . இதோ இவன் முன் அமர்ந்திருக்கும் இருவரும் கூட காதல் இல்லாமலா இணைந்து வாழ்கின்றனர் ? அப்படி பார்த்தால்  காதலை சரி தவறு என்று முடிவெடுக்கும் நீதிபதி திருமணமா????

திருமணமானவர்களின்  மனம் சுமக்கும் காதல் புண்ணியம் என்றால் திருமணமாகதவர்களின் மனம் சுமப்பது பாவமா ?

காதலை பற்றி யோசித்த நேரம் சில மணித்துளிகள் என்றாலும்கூட அர்ஜுனனின் மனம் சுபத்ராவை நாட தவறவில்லை ..

" என்ன பண்ணிகிட்டு இருப்பா நம்ம இளவரசி ? போகும்போது எதாச்சும் சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கிட்டு போகணும் " என்று மனதிற்குள் எண்ணிகொண்டான்.. ( இந்த ரணகலத்துளையும் ஒரு கிளுகிளுப்பு ??? )

மனதிற்குள் காதல் உணர்வுகள் கிளர்ந்தாலும், வந்த வேலையை சரியாய் செய்யலைனா நம்ம அர்ஜுனனை வரலாறு தப்பா பேசிடும் இல்லையா ? அதனால்,

" சார் என்னை பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது .. இப்போ நான் பேசியதை வெச்சு கூட ரொம்ப திமிர்பிடிச்சவன் நான்னு நீங்க நினைச்சாலும் ஆச்சர்யபடுற அளவுக்கு  எதுவும்மில்லை .. ஆனால், எனக்கு உங்க மேல எந்த ஒரு தப்பான அபிப்பிராயமும் இல்லை .. உங்களை பார்த்ததுமே முகம் சுளிச்சது, அப்போதான் நீங்க என்கிட்ட பேசுவிங்கன்னு தான் ..." என்று கண் சிமிட்டினான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.