(Reading time: 30 - 60 minutes)

 

" டப்பாவி " என்பதுபோல இருவரும் பார்க்க ( ஹா ஹா இதெல்லாம் அர்ஜுனன் ஸ்டைல் சார்) அர்ஜுனன் தொடர்ந்து பேசினான் ...

" ஆமா சார்.,.. நான் பாட்டுக்கு உங்க கிட்ட வந்து நான் அர்ஜுன் .. சுப்ரியா ஆகாஷை பத்தி பேசணும்னு சொல்லி இருந்தா உடனே வா பா உட்காருன்னா சொல்லிருப்பிங்க? "

அவன் கேட்ட வித்தத்தில் பத்மா லேசாய் புன்னகைத்தார்.

" உங்க  காலேஜ் பத்தி பேசினதும் பழி போட்டதும் ஆகாஷின் வலியை உணர்த்தத்தான் .. மத்தபடி நான் உங்க மேல ரொம்ப மரியாதையை வெச்சிருக்கேன் .,.. அதுக்கு காரணமே சுப்ரியாதான் "

" ??? "

" அவ அங்க வந்ததில் இருந்து உங்க நினைவில் தான் இருக்கா..  "

அர்ஜுனனின் நேர்கொண்ட பார்வையே அவன் பொய்யுரைக்க வில்லை என்பதை உணர்த்தியது ..எனினும் அதை ஏற்று கொள்ள விரும்பாதவராய்,

" ஆமா எங்க நினைவில் இருக்குற பொண்ணுதான் கல்யாண பத்திரிகை அடிக்கிற வரை போனாளா  ? "

" சார் ... இந்த கல்யாண ஏற்பாடு சுப்ரியாவின் நிம்மதியை மீறி நடக்குற ஒரு விஷயம் .. ஆகாஷின் முடிவு.,.. உடனே ஆகாஷை தப்பாக நினைக்காதிங்க.. "

" அதெப்படி தம்பி தப்பு இல்லைன்னு சொல்றிங்க ?"

" பின்ன என்ன அம்மா பண்ணி இருக்கணும் ? நீங்க பெத்தவங்க.. உங்களுக்கு  உங்க பொண்ணு மேல கோப படுறதுக்கு உங்களுக்கு இருக்குற உரிமையை நீங்க ஏன் உங்க மனசுல உள்ளதை பேசி புரிய வைக்க உபயோகப்படுத்தல ? அதை விடுங்க ... சுப்ரியா காதலிக்கிற விஷயம் யாரு சொல்லி உங்களுக்கு தெரிய வந்தது ? மூணாவது மனுஷங்க சொல்லியா ? இல்லையே ! சுப்ரியாவும் ஆகாஷும் தானே உங்க கிட்ட சொன்னங்க .. உங்க மேல எவ்வளவு அன்பும் மதிப்பும்  இருந்திருந்த உங்ககிட்ட சொல்லி  இருப்பாங்க? அப்பவும் காதலிச்சிட்டு வந்துடடாங்களேன்னு கோபத்தில் நீங்க பேசினதை எல்லாம் ஆகாஷ் கேட்டுகிட்டு தானே இருந்தான் .. அவன் நினைச்சிருந்தா சுப்ரியா மூலமாகவே உங்களை பழிவாங்கலாமே ? ஆனா அவன் அவளை தனியா விட கூடாதுன்னு தானே நினைச்சான் ? "

" ....."

" இப்போ கூட அவளை ஒரு அப்பா அம்மா ஸ்தானத்துல தான் பார்த்துகிட்டு இருக்கான் சார் .. அவன் கண்ணுல ஆசை இல்ல .. காதலை கூட உங்க அனுமதி இல்லாமல் காட்ட கூடாதேன்னு மறைச்சுகிட்டு நிற்குறான் .. ஆகாஷ் மனசு முழுக்க மாசற்ற அன்பு தான் இருக்கு .. இப்போ சொல்லுறேன் சார் உங்க அனுமதி இல்லாமல் உங்க பொண்ணு அவ வாழ்க்கைய தொடங்க மாட்டாள் .. "

" .. "

" என்னை விடுங்க சார்,... நான் மூணாவது மனுஷன் .. உங்க பெண்ணை பத்தி நினைச்சு பாருங்க .. உங்க பாசம், வளர்ப்பு இதெல்லாம்  தான் இன்னைக்கு சுப்ரியாவின் குணம் ! அதெப்படி தப்பாக போகும் ? உங்க பொண்ணு தப்பான வாழ்கையை தேடி இருப்பான்னு நீங்க நம்புறிங்களா ?"

" இல்லைதான் "  என்று உடனே பதிலளித்தார் பத்மா... பிரபாகரன் பத்மாவை ஒரு தரம் பார்த்தார்..அதே நேரம் அர்ஜுனன்,

" இது பாருங்க அப்பா " என்று பிரபாகரனை அழைத்தான் .. அவரோ அவனை ஆச்சர்யமாய் பார்க்க தொடர்ந்து பேசினான் அர்ஜுனன் ...

" சுப்ரியா எனக்கு தங்கச்சி மாதிரின்னா நீங்க எனக்கு அப்பா மாதிரி தானே .. என் அப்பா இப்போ உயிரோடு இல்ல .. பட் இருந்திருந்தா இப்போ உங்ககிட்ட சுப்ரியாவின் காதலுக்காக எப்படி பேசுறேனோ அப்படித்தான் என் காதலுக்காக பேசி இருப்பேன் ..ஏன்னா அப்பாவும் உங்களை மாதிரிதான் .. அளவுக்கு அதிகமான பாசம் ஆனால் என்ன அப்பப்போ கொஞ்சம் பிடிவாதம் "

" பிடிவாதம் " பிரபாகரனின் பிறவி குணம் .. அவரின் உறவுகள் தொடங்கி நண்பர்கள்  வரை அனைவருமே அவரிடம் சொன்ன கூற்றுத்தான் அது ... பிரபாகரனே ஓரளவிற்கு பிறகு " ஆமா நான் பிடிவாதக்காரன் .. உனக்கென்ன வந்தது ? " அப்படின்னு பேசும் அளவிற்கு மாறி இருந்தார் .. அதனால் அர்ஜுனன் அப்படி சொன்னதும் எங்கே கோபத்தில் கொந்தளித்து விடுவாரோ என்று பத்மா பயத்துடன் அவர் பக்கம் திரும்ப, ஓரபகரின் முகமோ எதிர்மாறான உணர்வுகளை பிரதிபலித்தது.. அர்ஜுனனின் கனிவான குரலும் பேச்சும் அவரின் மனதை அசைத்தது ...

அவரின் மௌனத்தையே சம்மதமாய் ஏற்றுகொண்ட அர்ஜுனன் அவருக்கும் சிந்திக்க நேரம் அவசியம் என்பதை புரிந்து கொண்டு பேசினான் ...

" அப்பா, நான் எதையும் நியாயபடுத்த வரல.. என்னைவிட உங்களுக்கு  எது நல்லது கெட்டதுன்னு தெரியும் ..அதைவிட இந்த உலகத்துலேயே உங்களுக்குத்தான் அதிகம் சுப்ரியா மேல அக்கறையும் அன்பும் இருக்கு .. சோ நீங்களே யோசிச்சு முடிவெடுங்க ... நீங்க வராமல் இந்த கல்யாணம் நடக்காது அதுக்கு நான் உத்திரவாதம் .. நான் வரேன் " என்று வழக்கம்போல  ஓர் அழகிய புன்னகையை சிந்திவிட்டு சென்றான். பெற்றோர் இருவருமே அவன் பேச்சில் அசந்துதான் போயினர் .. அதன் பிறகு அவர்கள் மனம் மாறியதும் அவர்களை எற்றுகொண்டதும் தான் நமக்கும் தெரியுமே !

ர்ஜுனன் நடந்ததை சொல்லி  முடிக்க அங்கு அவனருகில் யாருமே இல்லை ... சுபத்ரா மட்டும் பொறாமையுடன் அவன் எதிரில் நின்று கொண்டிருந்தாள்.. ஏன் தெரியுமா ? ஹா ஹா .. அர்ஜுனனின் பேச்சும் நடந்த நிகழ்வும் அனைவரையுமே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட வைக்க அனைவருமே அவனை ஒரே நேரத்தில் கட்டிகொண்டனர் .

அர்ஜுன் " டேய் விடுங்கடா .... மூச்சு முட்டிரும் போல " என்றதையோ

சுபத்ரா " ஹே என் அஜ்ஜுவை விடுங்க .,.. அஜ்ஜு எனக்கு மட்டும்தான் " என்று ஏகவசனத்தில் பேசியதையும் யாருமே சட்டை செய்யவில்லை ...

"ஹே வாலுங்களா ..ஓடி போங்க " என்றபடி சுபத்ர அனைவரின் முதுகிலும் இரண்டடி வைத்து பிரித்து நகர்த்த ரகுராம் வேண்டுமென்றே

" மச்சான் ஒன்ஸ் மோர் டா " என்றபடி அர்ஜுனனை கட்டிகொண்டான் ....

" அப்படியா குரங்கே , ஜானு நீ என் பேச்சை தானே கேட்ப ? அப்போ இன்னும் ஒரு வாரம் நீ ரகுவின் பக்கமே போகக்கூடாது " என்றால் சுபத்ரா ... உடனே ஜானகி " சாரி சுபி செல்லம் ..அது போன வாரம் இது இந்த வாரம் ... நான் என் ராம் கிழிச்ச கோட்டை தாண்டமாட்டேன் " என்று அழகாய் முகம் சிவந்து சொன்னாள்....

" நீயா பேசியது ? என் ஜானு நீயா பேசியது ? " என்று சுபி பாட, நித்யா

" பின்ன எவ்வளவு நாளுதான் நம்ம ஜானுவும் நல்ல பொண்ணாகவே இருக்குறது " என்று ஒத்துபாடி ஜானகிக்கு ஹை 5 கொடுத்தாள்...

" ஹே என்னடி ஓவரா என் நாத்தனாரை கலாய்க்கிற ? ஓவரா பேசினா, அப்பறம் உன் அண்ணியை வெச்சே உன்னை ஓட்டுவேன் " என்றபடி மீரா சுப்ரியா சுபத்ரா இருவருடன் கூட்டணி அமைத்தாள்....

" ஹெலோ சிஸ்டர் .. அப்படில்லாம் நான் என் நித்தியை கலாய்க்க விட்டுவிடுவேனா? மூணு பேரையும் முட்டிக்கு முட்டி தட்டி ஜெயில் ல போட்ருவேன் " என்று மிரட்டினான் கார்த்திகேயன் ... உடனே ஆகாஷ்

" டேய் ..  முதல்ல நீ கொஞ்சம் தள்ளி வா ... அம்மா உனக்கு ஒகே சொல்லி இருக்கலாம் ...பட் நான் சொல்லலியே " என்று மிரட்டினான் ..

" டேய் அண்ணா .. ஏன் என் கார்த்தியை வம்புக்கு இழுக்குற நீ ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.