(Reading time: 30 - 60 minutes)

 

" ன் கார்த்தியா ? வாங்க மேடம் வாங்க... ஒரு காலத்துல நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறிங்களான்னு எத்தனை தடவை கேட்டேன் .. தப்பா  பேசாதே .அது இதுன்னு என்னை திட்டிட்டு இப்போ ' என் கார்தியாம் என் கார்த்தி "

என்னதான் ஆகாஷ் விளையாடிற்கு சொன்னாலும் அன்றைய நினைவுகளில் நித்யாவும் முகம் வாடி போனாள்... உடனே கார்த்தி  அவளை தோளோடு அணைத்து " அவ  மேல எந்த தப்புமே இல்ல ஆகாஷ் .. ப்ளீஸ் டா எனக்காக ஏதும் சொல்லாதே " என்றான் ...

ஆகாஷ் கு மட்டும்தான் தெரியும் சிவகார்த்திகேயன் எவ்வளவு மனவேதனையோடு சென்னைக்கு சென்றான் என்று .. அவன் சென்றதிலிருந்து இன்று வரை அப்படி ஒருவன் தன் வாழ்விலேயே வரவில்லை என்பது போல சிரித்து மகிழ்ந்து துள்ளி விளையாடும் தங்கையை பார்த்து  அவன் ஆச்சர்ய பட்டதும் உண்டு ...கோபப்பட்டதும் உண்டு .. ஆனால் இதுவரை அவளிடம் அதை பற்றி பேசியதில்லை ... இன்று கார்த்தி அவளுக்கு துணையாக நின்று பேசுவதை பார்த்து மனதளவில் பூரித்து போனான் ஆகாஷ் .

" வைட் வைட் வைட் .. எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு ... இந்த அண்ணா யாரு ? இந்த நித்தி குரங்கு கூட லவ் பண்ணாளா இதெல்லாம் எப்போ நடந்துச்சு ? " என்றாள் மீரா ...

" அது ஒரு பெரிய காவியம் சிஸ்டர் " என்று சிவகர்த்திகேயன் சிரிக்க

" இரு கார்த்தி நீ இப்போ சொல்லாதே இதோ வந்திடுறேன் " என்ற நித்யா பெண்கள் அனைவரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.

" எங்க போறா என் பாச மலர் ? "

" எனக்கு மட்டும் என்னடா  தெரியும் கிருஷ் ?" என்றான் ஆகாஷ் .. சிறிது நேரத்தில் வந்த ஐவரும் கையில் தலையணை  பாய் கொண்டு வந்திருந்தனர் ...

" ஹே என்ன இதெல்லாம் " என்று அர்ஜுன் கேட்டான் ...

" பிரின்ஸ் நீங்க சொனனது மாதிரி நாங்க சொல்ல போறது குட்டி பிளாஷ் பேக் இல்லையே ..அதான் இந்த செட் அப்.. நல்ல ஆற அமர்ந்து உட்கார்ந்து கதை பேசுவோம் " - நித்யா ...

ந்த மொட்டை மாடியில் பாய் விரித்து அனைவரும் வட்டமாய் அமர்ந்தனர்.. ஆகாஷை தொடர்ந்து ஆண்கள் நால்வரும் அவனருகில் அமர கிருஷ்ணனின் பக்கத்தில் மீரா அமர, அவளை தொடர்ந்து மற்ற நால்வரும் அமர்ந்தனர் .. ஆகாஷும் கிருஷ்ணனும் மட்டும்தான் தங்களது ஜோடியோடு அமர்ந்து இருந்தனர் .. (என்ன ஒரு வில்லத்தனம் .. இது யாரு பார்த்த வேலைன்னு தெரிலையே ... வேற யாரு நான்தான் ! ஹ ஹா )

" எல்லாரும் செட்டல் ஆயாச்சா??? ஓகே ஸ்டார்ட் கமெரா ஆக்க்ஷன் " என்றாள் சுபத்ரா ... கிட்ட தட்ட தன் வயது ஒத்த தோழியான நித்யாவின் காதல் கதையை கேட்க அவளுக்கு அப்படி ஒரு  ஆர்வம் ... அவளுக்கு மட்டுமா ? காதல் கதைன்னா  சும்மாவா என்பதுபோல அனைவருமே  ஆர்வமாய் பார்க்க காதலர்களுக்கே உரிய முக லட்சணத்தில்  கண்களில் மின்னலுடன் தங்களது கதை ஆரம்பித்தனர் கார்த்தி- நித்தி ..!

  வாங்க நாமளும்  கதை கேட்போம் .. வழக்கம் போல இதுவும் கதைக்குள் கதை சீன் தான் .... அதனால் இப்போ அவர்களின் கல்லூரிக்கு போகலாம் ...

சிரிப்பு, கேலி, பரபரப்பு, பாட்டு, நடனம், பைக் சத்தம் இப்படி பரபரப்பாக காட்சி அளித்த அந்த ஆர்ட் காலேஜில் காலடி வைத்தாள் நித்யா ..

(சத்தியமாக எனக்கும் ஆர்ட் காலேஜ்க்கும் எந்த சம்பந்தமும் இல்ல .. பட் ஏனோ எனக்கு பிடிக்கும் .. என் காலேஜ் பக்கத்துக்கு காலேஜும் ஆர்ட் காலேஜ் தான் .. அதை கடந்து போகும்போதெல்லாம் " ச்ச அவசரபட்டு சைகாலஜி எடுத்துட்டோமே .... மியுசிக் படிச்சிருக்கலாமே நு இன்றுவரை தோணும் .. சோ அதுக்காக தான் இந்த காலேஜ் தேர்ந்தெடுத்தேன் .. அதுவும்  மெடிக்கல் காலேஜை வாழ வைக்க டைரக்டர் ஷங்கர் சாரும் இஞ்சினியரிங் வாழ வைக்க டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன் சாரும் இருக்காங்களே .. சோ நாம ஆர்ட்ஸ் காலேஜிற்கு வருவோம் ... சோ என்னுடைய வர்ணிப்பில்  ஏதும் தவறு இருந்தா மன்னிச்சுகோங்க ... முடிஞ்சா எது தவறுன்னு சுட்டி காட்டிடுங்க .. ஓகே யா ? சமத்து அப்படித்தான் தலைய தலைய  ஆட்டனும்.... வாங்க கதைக்கு போவோம் .... )

ல்லாரையும் போலவே அவளுக்கும் காலேஜ் சேருரதுக்கு முன்னாடி ஆயிரம் அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் இலவச இணைப்பாகவே கிடைத்தன..

" காலேஜ் போனோமா படிச்சோமான்னு இரு "

" பசங்க கிட்ட அதிகம் வாய் பேசாத "

" ரேகிங் பண்ணா பயப்படாதே ..ரொம்ப கஷ்டமா இருந்தா கம்ப்ளைன்ட் பண்ணலாம் "

" நல்ல பிரண்ட்ஸ் ஆ பார்த்து பழகு"

" காலேஜ் லைப் ரொம்ப முக்கியமான பருவம் ..அதை என்ஜாய் பண்ணு பட் படிப்பையும் விட்டு கொடுக்காதே "

" பி கேர்புல் "

இப்படி பல அறிவுரைகள் ..  இதை சொன்ன அந்த ஜீவன்களுக்கு இருந்த பதட்டத்தில் துளியளவும் நம்ம நித்யாவிற்கு இல்லை .. அதற்கு காரணமே தமிழ் சினிமாதான் ...

இது வரைக்கும் வந்த காலேஜ் ஸ்டோரி எல்லாமுமே ஆரம்பிக்கும்போது அப்படியே அதிரடியா, ரணகளமா ஆரம்பிச்சாலும் போக போக எஸ் ஏ ராஜ்குமார் சார் பாட்டில் வர்ற மாதிரி சீனியர்ஸ் ஜூனியர்ஸ் சேர்ந்து 'ல ல ல ல ' நு பாட்டு பாட ஆரம்பிச்சிடுவாங்க .. அதிலும் நல்ல கேரக்டர்க்கு  அதே குணத்துல ஒரு டீம் செட் ஆகிடும் ..அதே மாதிரி கொஞ்சம் அப்படி இப்படி உள்ளவங்களுக்கு அவங்க குணத்திற்கு ஏற்ற குரூப்  செட் ஆகிடும் .. அதனாலேயே நித்யாவிற்கு பெருசா எந்த பயமும் இல்லை ... அதுவும் நித்யா அங்க ஹோஸ்டல் ல தங்கி படிக்கலை இல்லையா.. அதுனால எவ்வளவு பிரச்சனையை வந்தாலும் வீட்டுக்கு வந்ததும் அம்மா கையால ஒரு காபி வாங்கி குடிச்சிட்டு  அப்பா மடியில படுத்துகிட்டா எல்லாம் சரி ஆகிடும்னு நம்பினாள்... அதுனாலே அதிக தன்னம்பிக்கையோடு, முகத்துல பய ரேகையின் சாயலே இல்லாமல்  அங்கு காலடி எடுத்து வைத்தாள்....

அதே நேரம் நம்ம கார்த்திக் எங்க ?? அப்படின்னு தானே கேட்குறிங்க ? வாங்க பார்ப்போம் ...

கார்த்திக் நித்யாவின் சீனியர் .. டிசைன் கம்முனிகெஷன் கோர்ஸ் 3வது வருடம் படிக்கும் மாணவன் ... காலேஜ்ல என்னதான் கார்த்திக் தன்னோட  குரும்புதனத்தில் எல்லாருடைய உயிரை எடுத்தாலும் அவனுக்குன்னு உயிரை கொடுக்கவும் பெரிய கூட்டமே இருக்கு ... இதெல்லாத்தையும் விட அந்த காலேஜின் மியுசிக் பேன்ட் கார்த்திக்கின் பொறுப்பில் தான் இருக்கு .... திறமையா பியானோ வாசிப்பது, இனிய குரலில் பாடுவது, சுட்டித்தனம், அதே நேரம் நேர்த்தியான தலைமைத்துவம் இப்படி எல்லா குணமும் பொருந்திய கார்த்திக் அந்த காலேஜில் அலைபாயுதே மாதவன் ரேஞ்சுக்கு பாராட்டப்படும் ரசிக்கப்படும் ஹீரோ ...

" ஹே கார்த்திக் ஒரு ஹெல்ப் டா."

" சொல்லு மச்சி .. நம்ம மியுசிக் பென்ட்ல சேர விருப்பம் உள்ள ஸ்டுடண்ட்ஸ் எல்லாரும் இன்னைக்கு பேரு கொடுக்கலாம்னு சொன்னோம்ல "

" ஆமா "

" அதை நீ பார்த்துக்குரியா ? "

" விளையாடுறியா ? "

" நோ மச்சான் .. இட்ஸ் வெரி இம்பார்டண்ட் ... ஐ எம் கோயிங் அவுட் டா "  என்றான் வினோத்

" ஏ சரி சரி ... பீட்டர் விடாதே ... நேம் லிஸ்ட் தானே நான் பார்த்துக்குறேன் .. என்ஜாய் "

" எப்படி மச்சான் ... கேட்டதுமே சரின்னு சொல்லிட்டே "

" உனக்கு நான் கிடைச்ச மாதிரி எனக்கு இன்னொரு பலி ஆடு கிடைக்காதா ? " என்று அவன் சொல்லி முடிக்கும் நேரம் அங்கு வந்து சேர்ந்தான் அஸ்வத்..

" வா மச்சான் ...வா வா ... ஆயுசு நூறுடா.. உனக்கு"

" என்னடா ?"

" இல்ல இப்போதாண்டா   உன்னை நெனச்சேன் நெனச்சேன் பாட்டு படிச்சேன் "

" பாட்டா என்ன பாட்டு மச்சி ?" என்று ஆர்வமுடன் கேட்ட அஸ்வத்தை பார்த்து தலையில் அடித்து கொண்டான் வினோத்.. அதை கவனித்த கார்த்திக் ' சும்மா இரு ' என்று செய்கை காட்டிவிட்டு

" என் ப்ரண்ட போல யாரு மச்சான்

அவன் ட்ரெண்டை எல்லாம் மாத்தி வெச்சான் " என பாடினான் ....

" கலக்குற மச்சி .. உன் வாய்ஸ் கு பொண்ணுங்க மட்டும் இல்லடா நானும் அடிமை தாண்டா ... ஆனா இப்போ ஏண்டா இந்த சாங் ?? " என்றான் அஸ்வத்...

" அதுவா ..என்னை எச் ஓ டி  கூப்பிட்டாராம் டா... இந்த வினோத் கிட்ட ஒரு வேலையை கொடுத்தேன் ,,அவன் என்னால முடியாது போடான்னு சொல்றான் ..அதான் அவன்கிட்ட சொன்னேன் என்னதான் இருந்தாலும் என் நண்பன் அஸ்வத் போல ஆகுமான்னு ... நான் சொன்னது சரிதானே டா ? "

"  ரைட்டு மச்சி ... நீ என்கிட்ட சொல்லுடா " என்று சொன்ன அஸ்வத்திடம் பொறுப்பை கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடினான் கார்த்திக் ... ( இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லவரு அஸ்வத்.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு ஹார்ட் அட்டேக் வர்ற போகுது பாருங்க "

அஸ்வத்திடமிருந்து ஓடி வந்த கார்த்திக், கண்ணில் பட்ட நண்பர்களிடம் ஒரு புன்னகையை சிந்திவிட்டு ஜாகிங் போவதுபோல மெதுவாக ஓடி கொண்டிருந்தான் ... காலேஜில் நுழைந்த நித்யாவின் கண்களில் முதலில் சிக்கயவனும் கார்த்திக் தான் .. " இந்த உச்சி வெயிலில் இவன் எதுக்கு இப்படி ஓடுறான் ? " என்று அவள் நினைக்கும்போதே கார்த்திக் ஓடுவதை நிறுத்திவிட்டு பெஞ்ச்சில் அமர அவனருகில் சென்றாள் நித்யா ..

அருகில்  வந்ததும் இல்லாமல் தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டிய நித்யாவை ஆச்சர்யமாய் பார்த்தான் கார்த்திக் .. இருந்தாலும் , மூச்சு வாங்கும்போது நமக்கு தண்ணிதானே அவசியம் என்றெண்ணியவன் " தேங்க்ஸ் " என்றுவிட்டு நீரை குடித்து தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டான் ...

" யார் நீ ? " என  அவன் கேட்கும் முன்னே

" நீயும் என்னை மாதிரி ப்ரெஷர் தானே ? ஹாய் , ஐ எம் நித்யா ... நித்யா ராதாமோகன் .. இங்க பேஷன் டிசைனிங் படிக்க போறேன் " என்றபடி  கை நீட்டினாள்...

" ஐ எம் கார்த்திக் ... சிவகார்த்திகேயன் ... நான் ப்ரெஷர்னு உனக்கு எப்படி தெரியும் ? " என்று ஆச்சர்யமாய் கேட்டான் ....

நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் .. இன்னைக்கு எபிசொட் இதுதான் ... எனக்கு எக்ஸாம் இருப்பதினாலும் சில முக்கியமான காரணங்களினாலும் என்னால் முழு  எபிசொட் தர முடியல .. காலம் ஒத்துழைத்தால்  மிக விரைவில் அடுத்த எபிசொட் தர்றேன் ..நன்றி 

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.