(Reading time: 17 - 33 minutes)

 

" நிஜம்மா ஒண்ணுமில்லையா ? "

" ம்ம்ம் "

" சரி அப்போ வெச்சிடவா ? "

" கழுதை கழுதை ,,, ஏன்டா என்னை வெறுப்பேத்துற நீ ? ஒரு வாரம் கழிச்சு பேசுறோமே, நம்மளை பாவம் சின்ன பொண்ணு மிஸ் பண்ணுவாளே , அவ மனசு நோகாமல் கொஞ்சம் பேசலாமேன்னு  தோணுதா உனக்கு ? சரியான அழுத்தம் ..சி போ "

அவளின் கோபக்குரலை கேட்டு மௌனமாய் சிரித்தான் ஷக்தி .. அதை கண்டுகொண்டவள்,

" சிரி சிரி நல்ல சிரி ..அதுமட்டும்தான் இப்போ குறைச்சல் " என்று பொரிந்தாள்....

" ஹஹஹஹ .. அப்பாடி .... ஹே அத்தை பொண்ணு  ... என்னடி உனக்கு இவ்வளோ கோபம் வருது ? உன் உயரத்தை எல்லாம் என்கிட்ட கொடுத்துட்டு கோபத்தை நீ எடுத்துகிட்டியா ? "

 " அத்தை பொண்ணு " அந்த வார்த்தைக்கும்தான் எத்தனை ஷக்தி ? சிறுவயதிலிருந்தே ஒன்றாய் வளர்ந்த இருவருக்குமே ஒருவருக்கொருவர் என்ன பிடிக்கும் என்று நன்கு அறிந்து இருந்தனர் ... மித்ராவிற்கு அவனை " மாமா " என்று அழைப்பதும் அதற்கு  பதிலாய் அவன் " அத்தை பொண்ணே "என்று அழைப்பது மிகவும் பிடிக்கும் .. அது ஷக்திக்கும் தெரியும் என்றாலும்கூட அடிகடி அப்படி அழைக்காமல் அவளை வம்பிழுப்பான் .. இப்போதும் அவன் " அத்தை பொண்ணே " என்றதும் சினம் கொண்ட அவள் மனம் பாகாய் உருகியது ... அதுவும் அவன் அவளின் உயரத்தை கிண்டலாய் சொல்லவும் " பழசை எல்லாம் மறக்காமல் இருக்கான் ஷக்தி " என்று நினைத்து கொண்டாள் மித்ரா... அவனைவிட அவள் கொஞ்சம் உயரம்  கம்மியாய் இருப்பதால், சிறுவயதில்  அவன் அவளை தோளில் கைபோட்டு  பேசும்போதெல்லாம், அவளின் உயரத்தில் கேலி செய்து கொண்டே இருப்பான் .. இத்தனை வருடங்கள் கடந்தும் அதை மறக்காமல் பொக்கிஷமாய் மனதில் வைத்திருப்பவளுக்கு அவனும் அதை மறக்காமல் இருப்பதில் அளவிலா ஆனந்தம் ....

" அய்யே போடா உன்னை யாரு பனைமரம் மாதிரி வளர சொன்னது ? "

" நீ சொல்லல "

" அதானே,...என்னடா ரெண்டு மூணு வார்த்தை ஜாஸ்தியா பேசிட்டியேனு பார்த்தேன் "

" ஹா ஹா ம் "

" நீ அடிதான் வாங்க போற "

" சரி விடு.. சொல்லு எப்படி இருக்க ? வீட்டுல அத்தை மாமா வைஷு நல்ல இருக்காங்களா ? "

" ம்ம்ம்ம் நான் நல்ல இருக்கேன் .. அவங்களும் நல்ல இருக்காங்க .. அவளும் நல்லாத்தான் இருக்கா .... நீ என்ன பண்ணுற? சாப்டியா ? "

" இல்லடி இனிதான் .. இப்போதான் தூங்கி எழுந்தேன் .... "

" எத்தனை தடவை சொல்றது சாப்டுட்டு தூங்குன்னு .. கேக்குறியா நீ ? மணி என்ன ஆச்சு ? "

" மேடம் நீங்க இந்தியா டைம் பார்த்து பேசாதிங்க "

" ஆமால"

" ம்ம்ம்...முகில் எப்படி இருக்கா ? கதிர் போன் பண்ணானா ? அப்பாவுக்கு ஹெல்த் எப்படி இருக்கு ? அம்மா நல்ல இருக்காங்களா ? நான் அப்பறம் பேசுறேன்னு சொல்லு "

" நீ நேரடியா கால் பண்ணி சொல்லிக்க ..... முகில் நல்ல இருக்கா, கதிர் மாமா போன் பண்ணங்க நெனைக்கிறேன் , மாமாவுக்கு இப்போ ஹெல்த் பெட்டெர் டா.. நான் இருக்கும்போது அத்தைக்கு என்ன கவலை ? நான் எல்லாரையும் பார்த்துப்பேன் ஷக்தி .. நீ அங்க நிம்மதியா இரு " என்றவளின் குரலில் தொனித்தது அன்பா, கனிவா? அல்லது  அதையும் தாண்டியா ?

இந்த குரலை கேட்கத்தான், அவன் அவளுக்கு முதலில் அழைப்பான் .. அது ஏனோ  தேசம் விட்டு தேசம் வந்து தனித்திருக்கும் அவன் மனம் அவளின் குரலில்தான் நிழல் தேடும் ... அவளின் அன்பில் இளைப்பாறிய பின்தான் தன் குடும்பத்திற்கே அழைப்பான் ஷக்தி ... இதை அவன் அவளிடம் சொன்னதே இல்லை .. அதை அறியாமலே தன் மீது  நேசம் வைத்திருப்பவளை கண்டு வியக்கும் அவன் மனம் ...

" ம்ம்ம் சரி டீ. உன் கோர்ஸ் எப்படி போகுது ... இன்னும் 2 மாந்த்ஸ் ல முடியுது ல .... நெக்ஸ்ட் என்ன? "

" அடுத்து என் தொல்லையை தாங்க சக்தி உள்ள ஒரு லாயரா பார்த்து அவருக்கு ஜூனியர் ஆகிட வேண்டியதுதான் ஷக்தி ..  உனக்கு நாளைக்கு வேலையா ? "

" இல்லடி.. லீவ் போட்டுருக்கேன் "

" ஏன் என்னாச்சு உடம்புக்கு சரி இல்லையா? "

" ஹே அம்மு அப்படில்லாம் ஒண்ணுமில்ல டி.. நான் நாளைக்கு ஒரு இன்டர்வியு போறேன் "

" இப்போ உள்ள வேலையில ஏதும் பிரச்சனையா ? "

" அப்படி இல்ல.. வந்து "

" ஷக்தி ..."

" ம்ம்ம் ? "

" மறைக்காம சொல்லு "

" என் வேலை காண்ட்ராக்ட் இன்னும் 2 மாந்த்ஸ்ல முடியுது .. அதான் வேற கம்பனி ல வேலை தேடுறேன் "

"... "

" மித்ரா "

" .. "

" ஹே பேசு லூசு "

" ஏன் ஷக்தி எங்களை எல்லாம் தலை முளுகிட்டியா ? "

" ஹேய்!! "

" பின்ன என்ன ? நீ சம்பாதிச்சு பணம் அனுப்ப தான் நீ எங்களுக்கு அவசியம்னு நெனச்சுட்டியா ? "

" மித்ரா "

" பின்ன என்ன ? மாமாவுக்கு அப்போ ஹார்ட் ப்ரோப்ளம், வீட்டுல கொஞ்சம் பணம் தட்டுபாடு, முகில் அப்போ ப்ளஸ் 2 படிச்சா, கதிர் மாமாவும் காலேஜ் படிச்சாங்க சோ குடும்பத்துக்கு மூத்த பையனா நீ பொறுப்பு ஏத்துகிட்ட .. அது வரை சரிதான்.. உன்  நண்பன் ஹெல்ப் மூலமா நீ அங்க போயி 4 வர்ஷம் ஆச்சு ... இப்போ  கதிர் மாமா சென்னையில வேலை பார்கிறார், முகில் காலேஜ் போய்ட்டா, நானும் இன்னும் 6 மாசத்துக்குள்ள வேலைக்கு சேர்ந்திடலாம் , மாமாவுக்கும் ஹெல்த் இப்போ சரியாச்சு ...எல்லாம் மாறின பிறகும் ஏண்டா அங்கேயே இருக்க நீ ? வைஷ்ணவி தான் காரணமா ? "

" ஹே லூசு மாதிரி பேசாத"

" நானும் அதான் சொல்ற, அப்போ உள்ள மனநிலையில் நீ அவகிட்ட காதல் சொன்ன, அவளும் அப்படி ஒரு உணர்வே உன் மேல வரலன்னு சொல்லிட்டா, அவ மனசு இனி கஷ்டப்பட கூடாதுன்னு இன்னும் எவ்வளவு நாள் அங்க இருப்ப நீ ? நாமல்லாம் ஒரே குடும்பம் டா.. அண்ட் நீ ப்ரபோஸ் பண்ணது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல... நீ காதல் இருக்கான்னு கேட்ட  அவ இல்லன்னு சொல்லிட்டா .. அதோடு முடிஞ்சது .. அவளும் ஒன்னும் உன்னை குற்றவாளியாகவோ இல்ல சுமையாகவோ பார்க்கல ... உன்னை பத்தி பேசும்போது கூட குடும்பத்தில் ஒருத்தரை பத்தி தெரிஞ்சுகுற அக்கறை அவகிட்ட இருக்கு .. ஆனா நீதான் அவ என்ன நினைப்பாளோ, நீ பேசுனா அவ தப்பா எடுத்துபாளோன்னு கண்ணாமூச்சி  ஆடிகிட்டு இருக்க .. நான் உன்னால்தான் அவகிட்ட சரியா பேசாம இருக்கேன் .. நீ அங்க இருக்குறதுக்கு காரணமே அவதான்.. அந்த கோபம் எங்க உறவை பாதிக்கிறது .. இருந்தும் நான் அமைதியா இருக்குற காரணம், நீ இங்க வந்ததும் எல்லாம் சரி பண்ணிடலாம்னு நம்பிக்கையில்தான் ...ஆனா நீ ??? ப்ளீஸ் ஷக்தி "

வைஷ்ணவி விஷயத்தில் பல ரகசியங்களை சுமந்திருக்கும் ஷக்திக்கு அவளின் கேள்விகளுக்கு விடையளிப்பது சுலபமாக இருக்கவில்லை..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.