(Reading time: 17 - 33 minutes)

 

னினும்  அவனின் நிலையை விளக்கினான் ..

" ஹே நான் வேலை செஞ்சே பழகிட்டேன் டீ.. அங்க வந்து என்னை சும்மா இருக்க சொல்றியா ? "

" யாரு சும்மா இருக்க சொன்னா ? இங்க வா.. இங்க வேலைக்கு போ .. இல்ல சொந்தமா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணு .. சின்ன வயசுல இருந்தே உனக்கு அதுல தானே ஆர்வம் "

" அதுலாம்  சரி பட்டு  வராது " என்றவனின் குரலில் பிடிவாதம் இருந்தது .. அவனின் பிடிவாதத்தை விட வேகமாய் வேலை செய்தது மித்ராவின் சிந்தனை.

" சரி அப்போ எனக்காக ஒன்னு பண்ணு"

" என்ன ? "

" நீ போறதுதான் போற.. உன் வேலை முடிஞ்சதும் அட்லீஸ்ட் ஒரு வாரம் நம்ம ஊருக்கு  வா .. ஒரு வாரம் கழிச்சு புது கம்பனிக்கு வேலை சேர்ந்துக்கோ "

" ஏன் "

" ப்ளீஸ் ஷக்தி ..உன் லைப் ல ஒரு வாரம் எனக்கு நீ தர கூடாதா ? " என்று இறைஞ்சலாய் கேட்டாள் மித்ரா...

" ஏண்டி என் மேல உயிரையே வெச்சுருக்க நீ ? " என்று மனதினுள் வினவியவன்

" ம்ம் ட்ரை பண்றேன் " என்றான்

" ட்ரை இல்ல ... கண்டிப்பா இன்னும் ரெண்டு மாசத்துல நீ இங்க இருக்கணும் .. நான் இப்போ வீட்டுல எல்லாருகிட்டேயும் சொல்ல போறேன் " என்றாள்...

" அம்மாடி .. லாயரம்மான்னா லாயரம்மா தான் ... சரி ஓகே " அதன் பின் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைக்க, ஷக்தி வருவதற்குள் செய்ய வேண்டிய காரியங்களை திட்டமிட்டாள் மித்ரா.... சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு துள்ளலுடன் ஓடி வந்தாள் முகில்மதி ..

" ண்ணி... உம்மா "

" ஹே என்னடி கொஞ்சல்ஸ் ஜாஸ்தியா இருக்கு "

" அண்ணா போன் பண்ணி பேசினாங்களே"

" யாரு உன் கதிரண்ணாவா ? " என்று அவள் வம்பிழுக்க

" இல்ல இல்ல என் ஷக்தி அண்ணா " என்று பெருமையாய் சொன்னவளை பார்த்து புன்னகைத்தாள் மித்ரா ...

" 4 வருஷம் ஆகியும் உன் பாசம் மாறவே இல்லைடா .. இதுக்காகவே உனக்கு வீட்டோடு மாப்பிளைதான் பார்க்கணும் .."

" ஐயோ ஏதோ போனா போகுதுன்னு அண்ணின்னு கூப்பிட்டா நீங்க ரொம்பதான் அக்கறையா சீன் காட்டுறிங்க " என்று அவளின் உதடுகள் கேலி செய்தாலும் அவள் மனமோ இடித்துரைத்தது ..  முகிலுக்கு, மித்ராவே ஷக்தியின் மனைவியாக  வர வேண்டும் என்ற ஆசை .. தன் ஆசை நிறைவேற அவள் அனைத்து கடவுளிடமும் விண்ணப்பம் போடாதா நாளே இல்லை எனலாம் ...எனினும் ??????

ஒரு பெருமூச்சு விட்டவள்

" ஆமா அண்ணா, நீங்க ஏதோ ஒரு குட் நியுஸ் சொல்ல போறதா சொன்னாங்களே ? " என்றாள்..அவளின் ஆர்வம் மித்ராவையும் பற்றிக்கொள்ள, அவளின் கை பிடித்து வெளியே வந்தவள்

" அம்மா, அப்பா, மாமா, அத்தை இங்க வாங்க " என்று கூக்குரலிட்டு அனைவரையும் அவர்களின்  இரண்டு வீட்டையும் இணைக்கும் அந்த முற்றத்தில் இருந்த பிள்ளையார் சிலையின் அருகில் நின்று அழைத்தாள்.. காலேஜ் முடிந்து வந்த வைஷ்ணவியும் அங்கு வந்து நிற்க , அனைவரையும் பார்த்து பெரிதாய் புன்னகைத்த சங்கமித்ரா பேசும்முன்னே , வீட்டு வாசலில் கேட்ட அந்த பைக் சத்தம் அனைவரின் கவனத்தையும் கலைத்தது .. முக்கியமாக அவளின் முகம் அதிர்ச்சி, பிரிவு, அன்பு, ஆச்சர்யம், தவிப்பு , விலகல் இப்படி நவரசங்களையும் பொழிந்தது.

அந்த சூழ்நிலைக்கு சாதகமாய் அவனின் செல்போன் சிணுங்கியது ...

அன்பே அன்பே எல்லாம் அன்பே

உனக்காக வந்தேன் இங்கே

சிரித்தாலே போதும் என்றேன்

மழை காலம் கண்ணில் மட்டும்

வேண்டாம் என்பேன்

பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

அந்த பாடல்வரிகளை கேட்டுகொண்டே ஒரு அர்த்தமுள்ள பார்வையுடன்  அவளைப் பார்த்தான்.. அவனின் பார்வையும்

" உனக்காக வந்தேன் இங்கே என்றது "

அவளின் பார்வையோ

" இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?" என்றது !

அவன் யார் ? அவள் யார் ? அடுத்த எபிசொட் ல சொல்றேன் ​ _/\_

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.