" ஹே இருக்கியாடி ??? "
" ம்ம்ம்ம் "
" சரி .. நீ இப்போ சிரிச்சா நான் உனக்கு குட் நியுஸ் சொல்லுவேன் .. "
" நீ சொல்லு அப்போதான் நான் சிரிப்பேன் .. "
" பிடிவாதக்காரி "
" உன்னை மாதிரிதான் "
" அதென்னவோ நிஜம்தான் .. அதுனாலத்தான் ரெண்டு பெரும் ராசி ஆகிடுரோமோ ?? "
" தெரியல ஷக்தி ,... சரி நீ விஷயத்துக்கு வா "
" ஹா ஹா .. ஹ்ம்ம்.. எனக்கு லீவ் அப்ப்ரூவ் ஆச்சு .. ஒரு வாரம் ... "
" ஹே .. சூப்பர் ... ஆனா ஒரு வாரம் தானா ?? "
" அம்மு ...நீ சொல்லித்தானே நான் லீவ் போட்டேன்"
" ஓவரா பண்ணாதடா ... ஒரு வாரம்னா சரியா ஒரு வாரம்தான் போடுவியா ? அன்னைக்கு உன்னை ஒத்துக்க வைக்கத்தான் அட்லீஸ்ட் ஒரு வாரம் சொன்னேன் .. உடனே அதையே புடிச்சுக்குவியா ? "
" ஹே லாயரம்மா ... பேச்சை மாத்த கூடாது .. ஒரு வாரம்னா ஒரு வாரம்தான் " என்றான் கள்ளச்சிரிப்போடு..
" சி போடா ..... சரி ஓகே ...அட்லீஸ்ட் வர்றியே .. அது வரை சந்தோசம்தான் " என்றவள் மனதிற்குள் " நீ முதலில் வாடா .. அப்பறம் எப்படி போகுறேன்னு பார்க்குறேன் " என்று மனதிற்குள் திட்டமிட்டாள்...
" சரி எப்போ வர ?"
" அது தெரியாது "
" என்ன விளையாடுறியா ? அதெப்படி தெரியாமல் போகும் ?"
" ஹே என் எச் ஆர் லீவ் ஓகே நு தான் சொன்னாரு ,, எப்போன்னு சொல்ல 10 நாள் ஆகுமாம் "
" கிளிஞ்சது கிருஷ்ணகிரி ... எப்போன்னு தெரிய பத்து நாள் டிக்கெட் போடா பத்து நாள் ... நீ கடைசியா அடுத்த வருஷம் தான் என்னை பார்க்க வரப்போறியா ? "
" கண்டு புடிச்சிட்டயே கள்ளி " என்று மனதிற்குள் மெச்சியவன்
" அதை விடு ,... நான் எல்லாம் கன்பர்ம் ஆனதும் சொல்றேன் .. உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும் சொல்லு?"
" எனக்கா .... எனக்கு ஒரு கப்பல், ரெண்டு ஏரோப்ளேன், பத்து காரு "
" புல் போட்டல் பீரு "
" டேய் "
" பின்ன என்ன கிண்டலா .. ஒழுங்கா சொல்லு "
" எனகென்ன வேணும் ஷக்தி .. நீ சீக்கிரமா என் கண்ணுமுன்னாடி நின்னுட்டாலே போதும் "
" ..... "
" என்னடா ? "
" சரி உனக்கென்ன வாங்கனும்னு எனக்கு தோணுதோ அதை நானே வாங்கிட்டு வரேன்... சரியா ??? "
" ம்ம்ம் டபுள் ஓகே மாமா "
இப்படியே இன்னும் சில நிமிடங்கள் பேசி அவளை உளமார சிரிக்கவைத்துவிட்டு , அவளின் புன்னகையை இதயப் பெட்டகத்தில் சேர்த்து வைத்துவிட்டு நிம்மதியானான் ஷக்தி ... சங்கமித்ராவும் அதே உல்லாசத்தோடு ஊஞ்சல் ஆடிக்கொண்டே பாடினாள்...
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா ?
நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா?
என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய்
மிதக்கிறேன் காற்றாக
உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று
இசைகிறேன் பாட்டாக
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
" அண்ணி " என்றபடி வந்து, நம்ம மித்ராவின் பாடலுக்கு முற்றுபுள்ளி வைத்தாள் முகில்மதி ... காரணம்?? நம்ம அன்பு தான் .. அன்பெழிலன் அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தான் .. அவனை பார்ப்பதை தவிர்க்க முகில்மதி அங்கு வர, மித்ராவும் அங்கே இருக்கவும் அவளுடன் இணைந்து கொண்டாள்..
" சாப்பிடீயா மதி ?? "
" இனிதான் அண்ணி ...நீங்க ? "
" ம்ம்ஹ்ம்ம்ம்... பசியே இல்லடா " என்று அவள் முடிக்குமுன்னே
" கவலையை விடுங்க " என்று அங்கு வந்து நின்றான் அன்பெழிலன் கையில் ஒரு தட்டோடு ..
" ஹே மதி .. என்ன ஜாடையா எஸ்கேப் ஆகலாம் பார்க்குறியா? " என்றான் இருபோருளில் .. அவளோ அச்சோ மித்ராவிடம் ஏதேனும் சொல்லி விடுவானோ என்று முழிக்க, மித்ராவும் கேள்வியுடன் அவனைப் பார்த்தாள்...
" என்ன லாயர் மேடம் , என்னையே பே நு பார்க்குற? நான் என்ன அவ்வளோ அழகாவா இருக்கேன் ??? மதி நீ சொல்லு பாப்போம் ? " என்று முகில்மதியையும் சீண்டினான் ..
" டேய் ... நானே நீ என்ன உளறுற நு பார்த்தா உனக்கு அது ரசிக்கிற மாதிரி இருக்கா ?? ஆமா மதி என்ன எஸ்கேப் ஆகப் பார்த்தாள் ? "
" ஹா ஹா இங்க பார்த்தியா ? "
" கேக் ???"
" ஆமா நானே பேக் பண்ணேன் "
" பேக்கு நீயா கேக் பேக் பண்ண ?? "
" ஆமா .. இன்னைக்கு ஒரு பொண்ணு பேஸ் பூக்ல கேக் பேக் பண்ணி அது எதோ உலக சாதனை மாதிரி போட்டோ போட்டு இருந்தா .. கேக் செய்றது அவ்ளோ பெரிய விஷயமான்னு ஒரு கியுரியோசிட்டி .....அதான் நானே பேக் பண்ணி கொண்டு வந்து ஆன்டி அங்கிள் கு கொடுத்துட்டு உங்களுக்கும் எடுத்துட்டு வந்தேன் .. நான் பார்க்கும்போது மதி உள்ள இருந்தா ..திடீர்னு இங்க வரவும் அதான் எஸ்கேப் பண்றாளா நு கேட்டேன் .. போதுமாடி என் பதில் ?? ப்பாஆஹ்ஹ்ஹ் நீ லாயர் நு ப்ரூவ் பண்ணுற மித்ரூ"