(Reading time: 36 - 72 minutes)

" ச்சோ ... அப்பா, என் பிரண்ட் பூவி சிங்கப்பூர் ல இருந்து கூப்பிடுறா பா .. கொஞ்சம் அர்ஜெண்ட் கால் .. பாவம் இப்போ விட்ட அவகிட்ட பேச கஷ்டம் .. நான் பேசிட்டு வந்திடுறேன் " என்றாள்...

" சரி லெவல் 3 ல தான் இருப்பேனடா.... கண்டுபுடிக்க முடிலன்னா கால் பண்ணு "  என்றுவிட்டு சென்றார் ... ( ஹா ஹா ... லெவல் 3 ல இடதா வலதா நு சொல்ல மாட்டிங்களா மனோ அங்கிள் ஹா ஹா ஹா )

போனில்

" ஹே பூவி "

" ஹாய் ஹனிமூன் "

" ஏய் .. எத்தனை தடவை சொல்றது இப்படி கூப்பிடாதேன்னு "

" ஹா ஹா விடு செல்லம் ..அதை எல்லாம் நான் எண்ணியே பார்க்கல .. சரி .. நான் போன் அடிச்ச உடனே எடுக்காமல் என்ன பண்ணிட்டு இருந்த நீ ? "

" இல்லடி அப்பா கூட வெளில போறேன்னு  உனக்கு மெசேஜ் பண்ணிருந்தேனே "

" அச்சோ சாரி டார்லு ... மறந்துட்டேன் மா ..... சரி அப்போ நீ அப்பாகிட்ட பேசு நான் அப்பறமா பேசறேன் "

" சான்ஸ் ஏ இல்லை டி .. உன்னை விட்ட திருப்பி புடிக்க முடியாது .. நான் இங்கயே இருந்து பேசிட்டுதான் போனை வைப்பேன் " என்றவள் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து  பேசிக்கொண்டு  இருந்தாள்.... ஆனால்  அவளது பார்வை மட்டும் அவனின் பைக் மீதே படிந்தது ..

" என்னடி  ஹனிமூன்  விட்டு விட்டு பேசற நீ ?  ஏதும் ப்ரொப்லெம் ஆஅ ?"

" இல்லடா.. அந்த பைக் பார்ட்டி பத்தி சொன்னேன்.. "

" ஓஹோ அத்தானின் முத்தங்கள் நு நீ கூட பாட்டு பாடுனியே ? " என்று சொல்லி பழமை சிரித்தாள் பூவி...

" பிசாசே.... சொல்ல  வந்ததை கேளுடி ... "

" ஓகே ஓகே சொல்லு"

" அவன் பைக் இங்கயும் இருக்குடீ . என்னைத்தான் தொடர்ந்து வந்துருக்கான் நெனைக்கிறேன் .. "

" அப்போ சின்சியராத்தான் லவ் பண்றான் போல ... ஹே ஆளு எப்படி??? "

" அடியே போன் லே பேசினா என்னால அறைய முடியாதுன்னு தைரியத்துல பேசுறியா ?  மகளே  அடுத்த வருஷம் நான் அங்க வரும்போது வட்டியும் முதலுமாய் பார்த்துக்குறேன் "

" அட விடுடி தங்கம் ..நாம எல்லாம் அப்படியா பழகி இருக்கோம் .. சரி இப்போ என்ன யோசனை உனக்கு "

" அவன் பைக் கண்ணு முன்னாடி  இருக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன் .. இங்க வேற எங்கப் பார்த்தாலும்  ஆளு இருக்காங்க டீ :

" டயர் பஞ்சர் ஆக்கி விட்டுடு .. "

" து .. பழைய ஐடியா டி "

" ஓஹோ ... மண்ணை வாரி போட்டிரு "

" நான் என்ன அவனுக்கு சாபமா விடுறேன் "

" கண்ணாடிய உடைச்சிறு "

" சத்தம் வருமே டீ "

" அப்போ இன்னொன்னு பண்ணு "

" என்னடி ? "

" பைக் குக்கு  ஒரு உம்மா கொடுத்திடு "

" அடியே "

" பின்ன என்ன டி ? எனக்கே மூளை கொஞ்சம் தான் வேலை செய்யும் .. இருக்குறதை வெச்சு ஐடியா கொடுத்த ஏதாச்சும் சொல்லிகிட்டே இருக்க ? "

" ... "

" சரி உன் பேக் ல கண்மை இருக்கா ? "

" இருக்கு "

" பேசாம அவனை திட்டி கண்ணாடில ஏதும் எழுதிடு "

" அம்மா தாயே ..நான் அவனை நேரடியாவே சந்திச்சுகுறேன் .. உன் ஹாய் கிளாஸ் லெவல் ஐடியாவெல்லாம் என்னாலே பண்ண முடியாது .. " என்றாள் தேன்நிலா

" ஹ்ம்ம் நீ கொடுத்து வெச்சது அவ்ளோதான் " என்றாள் பூவி..தோழிமார்கள் இருவரும் நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தனர் .. மதியழகனே பேசி முடிக்கும் தருவாயாக, மனோ நிலாவிற்கு போனில் அழைத்தார் ..

" இருடி பூவி அப்பா கூப்டுராறு ... லைன் ல இரு "

" அப்பா "

" எங்கம்மா இருக்க ? "

" கீழதான் "

" என்ன பேபி இது ?"

" சாரி பா .. இதோ இப்போ வந்துடுறேன் .. 10 நிமிஷம் "

பத்து நிமிஷம் என்று தந்தையிடம் பேரம்பேசிவிட்டு இன்னும் 20 நிமிடங்கள் தோழியிடம் பேசிவிட்டு மேலே சென்றாள் நிலா...

தனது பேச்சினை முடித்துவிட்டு  தன்னறைக்கு சென்றிருந்தான் மதியழகன் ..

" ஹப்பாடா ..." என்று பெருமூச்சு விட்டுக்கொண்டவன், தன் கணினியில் பாடலை உயிர்பித்துவிட்டு நிலாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் .. ஏனோ அவளின் முகம் பார்ப்பதே அவனுக்கு பெரிய  நிம்மதியை தந்தது ..பாடல் ஒரு புறம் அவனின் எண்ணங்களை தட்டி  எழுப்பி கொண்டு இருந்தது

மேகமாய் வந்து போகிறேன் 

வெண்ணிலா உன்னை தேடினேன்

யாரிடம் தூது சொல்வது

 என்று நான்  உன்னை சேர்வது ?

என் அன்பே - -  என் அன்பே - - ,

உறங்காமலே உளறல் வரும்

இதுதானோ ஆரம்பம் ?

அடடா மனம் பரிபோனதே

 அதில்தானோ இன்பம் இன்பம் ?

காதல் அழகானதா

 இல்லை அறிவானாதா ?

காதல் சுகமானதா

 இல்லை சுமையானாதா ?

என் அன்பே - - , என் அன்பே - -

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.