(Reading time: 36 - 72 minutes)

" வாங்க போகலாம் " என்றவன் தன் காரை பார்க் பண்ணி வைத்த இடத்திற்கு நகர, அவர்களும் அவனைத் தொடர்ந்து சென்றனர் ..

" உங்க கார் சாவி கொடுங்க அங்கிள் " ( அங்கிளா ??? )

" இந்தாங்க மதி ..."

" நாளைக்கு நானே சர்விஸ்கு அனுப்பிட்டு கொடுத்திடுறேன் .. "

நிலாவோ எப்படியாவது அவனிடம் பேசி அவன் கோபமாக இருக்கிறானா  என்று தெரிந்து கொள்ள விரும்பினாள்..உடனே

" உங்களுக்கு ஏன் சிரமம் ? " என்றாள்...

" ஒரு உதவில என்னங்க இருக்கு ? சப்போஸ் என்னால முடியலன்னா வேற யாராவது நம்பிக்கையானவங்களை அனுப்புறேன் " என்றான் பன்மையில் .. ஏனோ அவன் பன்மையில் பேசவும் அவள் முகம் சுருங்கி போனது ..

" அச்சோ என் குட்டிமா வாடினாலும் அழகா இருக்காளே"

  என்று மனதிற்குள் சொன்னான் .. காரின் முன்கதவை அவன் திறக்க, மிக இயல்பாய் அவனருகில் அமர்ந்து கொண்டாள் தேன்நிலா..வியப்பாகவே இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மறுத்தான்  மதி .. மனோ சாரோ நிலாவின் காரில் உட்காரும் பழக்கத்தில் பின்னாலேயே உட்கார்ந்து கொண்டார் ..

சிறிது நேரத்தில்,

" அங்கிள் நீங்க பழைய பாட்டு கேட்பிங்களா ?  " என்றான் நிலாவிடம் ஓரப்பார்வை செலுத்திவிட்டு

" ஓ கேட்பேன் பா " எனவும் அடுத்த நொடி அந்த சி டி யை போட்டான் மதியழகன் .. ( இந்த பாடல் பழைய அம்பிகாபதி  படத்தில் வரும் .. நம்ம தேன்நிலாவுக்காக ஏற்கனவே மதி தேடி வைத்திருந்த பாடல்தான் .. பாடல் ஒலிக்கவும் இருவரும் பார்வையாலேயே பேசிக்கொண்டனர் .. அதனால் பெண் குரலில் நிலாவின் பெயரையும், ஆண் குரலில் மதியின் பெயரையும் போடுறேன் .. அவங்களே பாடுற மாதிரி நாம கற்பனை பண்ணிப்போம் சரியா ? 1...2....3... ஸ்டார்ட் மியுசிக் )

மதிகண்ணே ... கண்ணே .. கண்ணே ....

       கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா?

      என் கவலை கொஞ்சமா ? அது கண்டு சும்மா இருக்க உனக்கு கல்லு நெஞ்சம்மா ?

சட்டென அவன் புறம் திரும்பினாள் நிலா... பார்வையாலே அவனை  மிரட்டினாள்..பாடல் தொடர்ந்தது ...

நிலா : ஏய்

மதி :  ( ஹம்மிங் )

நிலா : ஏன்யா ? என்னது கண்ணே கின்னே நு சொல்றிங்க ?

மதி : அட உன்னை இல்லம்மா.. என் கண்ணை பத்தி பாடுறேன் .. ரெண்டு நாளா தூக்கமே இல்லை .. சதா அரிக்குது ..கண்ணீரா கொட்டுது ..அதத்தான் வேறொன்னுமில்ல

நிலா : ஓஹோ .. அப்ப பாடுங்க

மதி : தங்கமே ...தங்கமே

தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ, என்றுதான் நான் பெறுவேனோ ?

என் அங்கம் குளிர வாரி அணைத்து அகம் மகிழ்வேனோ ??

நிலா : இந்தா ..

மதி : (ஹம்மிங் )

நிலா : இந்தாரையா இப்போ தங்கமேனு சொன்னது என்னைத்தானே ?

மதி : அய்யோ அய்யோ அய்யோ இது என்னடா இது ??? இது பாரும்மா .. இந்த பாட்டு       பாடுறேன் பாரு ... அதுல பித்தளை காசு வெள்ளிக்காசு வரைக்கும் வந்திருக்கு ..தங்கம் ....கிடைக்கல! அடுத்து தங்கம் வந்துருச்சுனா ... தங்கமே ,,,தங்கமே .. ஹ்ம்ம் அதான்

நிலா : ம்ம்ம்ம் ? ம்ம்ம்ம்ம் ...... ம்ம்ம் ! சரியா பாடும்

..

இதழோரம் புன்னகையை படரவிட்டான் மதி... அடுத்து வரும் வரிகள் அப்படி ...  .. மனோ சார்  ஏதோ சிந்தனையில் இருக்க, அந்த வரிகளுக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் ஓசையை கூட்டினான் ..

மதி : தேனே, தேனே

தேனே... தேனே உன்னை தேடி தேடி நான் அலைந்தேனே ....

நான் அலைந்தேனே ... நீ தெரியும்படி என்  எதிரில் இருந்தும் தொட பயந்தேனே ..

நீ தெரியும்படி என்   எதிரில் இருந்தும் தொட பயந்தேனே ..

நிலா : மொகரைய்ய பாரு ....

மதி : ( ஹம்மிங் )

நிலா : இந்தாரையா இனிமே ஒன்னும் மாத்த முடியாது ..சத்தியமா சொல்லுங்க இப்போ தேனேன்னு என்னை தானே சொன்னிங்க ?

புருவம் உயர்த்தி கேள்வியுடன் நோக்கினாள் தேன்நிலா..எவ்வளவு முயன்றாலும் அவளால் புன்னகையை மறைக்க  இயலவில்லை .பாடல் தொடர்ந்தது

மதிஉன்னை இல்லம்மா .. அது எனக்கு உடம்பு சரி இல்ல .. வைத்தியரு ஒரு பஸ்பம் கொடுத்திருக்காரு .. அதை குழைச்சு சாப்டுரதுக்கு தேன் வேணும் .

 நிலாஅது சரி எதிரில் இருந்து தொட பயந்தேன்னு சொன்னிங்களே அதுக்கென்ன அர்த்தமாம் ..

மதி : அது எதிரில் இருக்கு தொட முடியலையே

நிலா : என்னது ???!!!!!

மதி : தோட்டத்துல ஒரு மரத்துல கீழ இருக்கு தேன் கூடு

தொட .. போனா .. அடிக்குமோ .. கொட்டுமோ நு பயம்மா இருக்கு ..

நிலா : அஹஹஹஹா !

பாடல் முடிந்தது .. அவனின் பாடலின் தேர்வை மெச்சிக் கொண்டாள் தேன்நிலா .... அவன் விழிகளில்  கலந்தவளின் விழிகளும் சிரித்தது ..

ஒருவழியாய் இருவரையும் அவர்கள் வீட்டில் இறக்கி விட்டான் மதி ..

" ஓகே சார் .. பார்க்கலாம்.. குட் நைட் "

" தேங்க்ஸ் மதி .. உங்ககிட்ட ஒன்னு கேட்கணுமே ?? "

நிலாவும் அவனும் பதட்டமாய் பார்க்க,

" எங்க அட்ரஸ் உங்களுக்கு எப்படி தெரியும் ? " என்று கேட்டு வைத்தார் .. ( அதற்கு என்ன பதில் ?  வானத்தை பார்த்து யோசிங்க ..அடுத்த எபிசொட் ல சொல்றேன்  .. ஹா ஹா ஹா )

தொடரும்

Episode # 05 

Episode # 07

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.