(Reading time: 36 - 72 minutes)

" ட லூசே நான்  ஒரே ஒரு கேள்விதாண்டா கேட்டேன் ... நீதான் சொந்தமாவே உளறிகிட்டு இருக்க .."

" எல்லாம் என் நேரம் டீ " என்றவன் அவளை பேச விடாமல்

" இந்த சாப்பிட்டு சொல்லு" என்று அந்த கேக்கை அவள் வாயில் திணித்து கண் இமைக்கும் நொடியில் மதிக்கும் ஓட்டிவிட்டான்.. முகில்மதியொ அதிர்ச்சியை பார்க்க, அப்போது இருந்த மனநிலையில் மித்ராவும் அதை கவனிக்காமல் தன் நண்பனை வாரிக் கொண்டு இருந்தாள்... அன்பெழிலன் மட்டும் அவ்வப்போது முகில்மதியையும் தங்களது பேச்சில் இழுத்து சீண்டி கொண்டிருந்தான் ...

கே ஓகே ... இவ்வளவு நேரம் வைட் பண்ணிகிட்டு இருந்த நம்ம தேன்நிலா - மதியழகன் சீன் பாப்போம் வாங்க .. அதுக்கு முன்னாடி கடிகாரத்தை ரிவர்ஸ் ல திருப்புங்க பார்ப்போம் ..

" நிலா ரெடியா ??? "

" எஸ் அப்பா " என்றபடி மாடியிலிருந்து இறங்கி வந்த மகளை கண்கள் விரித்து பார்த்தார் மனோ. சென்ற வாரம் அவளுக்கு பிடித்ததென்று வாங்கி தந்த அந்த வெள்ளை நிற கவுன்  மிக அழகாய் இருந்தது அவளுக்கு .. ஆனால் .....

" என்னப்பா இப்படி பார்க்குறிங்க ? "

" இல்லடா .. இந்த டிரஸ் ..?"

" போன வாரம் அடம்பிடித்து உங்களை வாங்கி தர சொன்னேனே "

" அது தெரியுது டா.,. ஆனா நான் கூட வெள்ளை கலர்ல ரொம்ப ப்ளைன் ஆ டல்லா இருக்குன்னு சொன்னேனே ... இப்போ மணி எல்லாம் வெச்சு இவ்ளோ அழகா இருக்கே ?? "

" ஹா ஹா என் செல்ல அப்பா ..எல்லாம் நம்ம பாக்யத்தின் கைவண்ணம்... " என்றவள் தன் தாயைக் கட்டிக்கொண்டாள்... இருவரையும் அப்படியே நிற்க சொல்லி தன் செல்போனில் படமெடுத்தார் மனோ .. அதன் பிறகு மூவரும் ஒன்றாய் செல்பி எடுத்துக் கொண்டனர் .. இப்படியாய் தந்தையும் மகளும் அந்த பார்டிக்கு கிளம்பி சென்றனர் .. வழியில் அவங்க என்ன பேசுனாங்கனு பார்க்குறதுக்கு முன்னாடி நம்ம மதி சார் எனக்கு கொடுத்த காசுக்கு அவருக்கு ஒரு இன்ட்ரோ சீன் கொடுத்திடுறேன் ..

சென்னையில் அந்த உயரக 5 ஸ்டார் ஹோட்டலில் நின்றது அந்த பிரமாண்டமான கார் .. கார் கதவை வந்து ஒருவர் திறந்துவிட, தோரணையாய் இறங்கி வந்தான் மதியழகன் .. கண்களில் ஒரு மிடுக்கு, இதழோரம் புன்னகை, அந்து இரவு வேளையிலும் அவனது கேசத்தை தொட்டு பார்க்க ஆசைக் கொண்டது தென்றல்.  காரை விட்டு இறங்கி வந்தவன் மிக சிலருக்கு வணக்கம் சொல்லிவிட்டு மற்றவர்களின் வணக்கத்திற்கு புன்னகையுடன் தலை அசைத்தான் ... அந்த மீட்டிங் அறையில் அவன் நுழைந்ததுமே மரியாதை நிமித்தமாய் அனைவருமே எழுந்தனர் .. பிசினஸ் பொருத்தவரை அவன் மிகவும் கெடுபிடியானவன்.. இளம் வயதிலே வியாபார நுணுக்கங்களை நன்கு  அறிந்தவன் ..அதனாலேயே அவன்மீது தனி மரியாதை அனைவருக்கும்.. அனைவரையும்varevetru அமர்ந்தவனுக்கே அவர்களின் மரியாதையை சிரிப்பைத் தான் தந்தது.. இருந்தாலும் அதை தன் முகமுடியால் மறைத்து கொண்டான் ...

காரில்

" அப்பா என்ன பார்ட்டின்னு சொல்லவே இல்லையே ..மணி எட்டு ஆகப்போகுது இந்த நேரத்துல எவன் மீட்டிங் எல்லாம் வைக்கிறான் ..??? "

" ஹா ஹா .. மீட்டிங் லாம் எப்பவோ ஆரம்பிச்சு முடியுற தருவாயில் இருக்கு செல்லம் .. நாம போகப்போறது ஒரு செமினார் மாதிரி .. "

" செமினாரா ? சுத்த போர் டேடி.... "

" நீ மதி பேச்சை கேட்டா அப்படி சொல்ல மாட்ட பேபி .. "

" மதியா ? " என்றவளுக்கு அன்று அவன் சொன்ன " மதி" ஞாபகம் வந்தது ..

" யாரந்த மதி ? "

" மதியழகன் .. யாங் பிசினஸ் மென்.. ரொம்ப புத்திசாலி திறமைசாலி .. "

" புத்திசாலி திறமைசாலி வேறென்னல்லாம் டைடல் அப்பா ? என்ன என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு பார்க்குறிங்களா? "

" ஹா ஹா அவ்வளோ சீக்கிரம் கல்யாணம் ஆசை  வந்திடுச்சா மா உனக்கு ??"

" அட போங்கப்பா "

" சரி சரி .. விளக்கமாவே சொல்லுறேன் .. இப்போ போறது ஒரு செமினார் ... ஸ்பெஷல் லி யாங்க்ச்டேர்ஸ் கு ... ஆன்லைன்ல வேலை பார்க்குறதோ இல்லை பிசினஸ் பண்றது எந்த அளவுக்கு சாத்தியம் ? அதில் நாமே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இதெல்லாம்தான் ப்ரெசென்ட் பண்ண போறார் மதி.. "

" வாவ் .. அவ்ளோ இன்போர்மேஷன் அவருக்கு எப்படி தெரியும் "

" மதியழகன் அண்ட் ஹிஸ் டீம் நம்ம பிரபா இருக்கான்ல அவனுடைய ஸ்டுடண்ட்ஸ் .. அவங்க ஸ்டுடண்ட்ஸ் ஆ இருக்கும்போதே ஆன்லைன் பிசினஸ் பத்தி நிறைய ரிசர்ச் பண்ணி இருக்காங்க .. பிளஸ் அவங்களுடைய இன்னொரு நோக்கம், இன்ஜினியரிங் டாக்டர் தவிர வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்குற துறைகளை பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு உதவுரதுதான் .. "

" இது எப்படி சாத்தியம் ஆகும் அப்பா .. எல்லாருக்கும் வேலை தர்ற அவர் என்ன டோன்னா ? "

"  ஹஹ பேபி ..அதுக்குதான் இந்த பார்ட்டி ... ஆறு மாசத்துக்கு ஒரு தடவை நம்மளை மாதிரி கம்பனி லே இருந்து இன்வைட் பண்ணி செமினார் அண்ட் பார்ட்டி  வைப்பாங்க .. வேலை தேடிகிட்டு இருக்குற கேண்டிடேட்ஸ் ஐ செலக்ட் பண்ணி அவங்க இந்த செமினார் முடிஞ்சதும் குறிப்பிட்ட டைம் ல தங்கள் திறமைய வெளிபடுத்த வாய்ப்பு தருவாங்க .. சோ வந்திருக்குற கம்பனி நிறுவனங்கள் தங்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி கேண்டிடேட்ஸ் ஐ  சூஸ் பண்ணிப்பாங்க .. "

" கேம்பஸ் இன்டர்வியு மாதிரி "

" பட் இதுனால மிஸ்டர் மதிக்கு  என்ன லாபம் ??"

" புண்ணியம் ! " அவரின் ஒற்றை வார்த்தையே அவளுக்கு போதுமானதாக இருந்தது ... அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது ..

" அப்பறம் "

" போதும்பா .. மிச்சத்தை நேருல பார்த்து தெரிஞ்சுக்கலாமே "

(அவ்வளவு  சீக்கிரம் உங்களை பார்க்க விட்டுடுவேனா நிலா ? ஹா ஹா ஹா )

 ந்த 5 ஸ்டார் ஹோட்டலில் தன் காரை பார்க் செய்துவிட்டு இறங்கினார் மனோ .. இடது புறமாக இறங்கிய நிலாவின் கண்களில் முதலில் பட்டது ஏதோ ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த பைக் தான் .... சட்டென பார்க்கும் யார் கண்களிலும் படாத இடத்தில்தான் தனது பைக்கை நிறுத்தி வைத்திருந்தான் மதி .. எனினும் சதா அவைனையே நினைத்துகொண்டிருக்கும் நிலாவிற்கு அவன் பைக் போலவே ஒரு பைக் நிற்பதை பார்த்ததுமே கண்கள் தானாய் அங்கு துளாவியது ..

" பைக் பார்ட்டி இங்கயும்  வந்துட்டனா ? எங்க போகப்போறோம்னு நமக்கே இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தானே தெரியும் ? அப்படி இருக்கும்போது இவன் எப்படி இங்க வந்தான் ?  இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும் " என்றவள் அங்கும் இங்கும் பார்த்தாள்...

" நிலா என்னம்மா ? " என்று மனோ கேட்கவும் அவளின் செல்போன் சிணுங்கவும் சரியாய் இருந்தது ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.