(Reading time: 10 - 19 minutes)

ல்லைடா கிளம்பி போயிட்டேன். ஏனோ ரூமுக்கு போக மனசில்லை. இங்கேயே சுத்திட்டு இருந்தேன். உன் ரூம்லே திடீர்னு லைட் அணைஞ்சு போச்சு. நீ பயப்பட போறியேன்னு உள்ளே வந்தேன்.' புன்னகைதான் அவன்.

அவனுக்கு என் மேல் ஏன் இவ்வளவு அக்கறை.? என் மீது ஏன் இத்தனை பாசம்? அந்த நிலையில் எதையுமே யோசிக்க தோன்றவில்லை அவளுக்கு.

'சரி தூங்குமா. நான் இங்கேயே இருக்கேன்' சொன்னான் அவன்.

ரொம்ப தாங்.....க்ஸ் என்றாள் அவள்.

புன்னகையுடனே அவன் அவள் அருகில் அமர்ந்துக்கொள்ள, மனம் எங்கும் பரவிக்கிடந்த நடுக்கத்துடனே படுத்துக்கொண்டாள் அவள்.

கண்கள் இங்கும் அங்கும் அலைபாய்ந்துக்கொண்டே இருக்க, பயத்தின் தாக்கத்திலேயே இருந்தவளை ஏதேதோ கதை பேசி, சிரிக்க வைத்து, அப்படியே உறங்க வைத்திருந்தான் அவன்.

அசந்து உறங்கி விட்டிருந்தாள் அவள். அவன் பார்வை மட்டும் அவளை விட்டு அகலவில்லை.

'ரொம்ப தேங்.......க்ஸ்' அவள் சொன்ன விதத்தை நினைக்கும் போது, ஒரு குறுநகை எழுந்தது அவன் உதடுகளில். முதல் முதலில் அவளை சந்தித்த போது இப்படிதான் சொன்னாள் அவள்.

அந்த கிராமத்து மருத்தவ மனையில் மருத்துவன் அவன். சில நாட்களுக்கு முன் கொதிக்கும் காய்ச்சலில் தனது அக்காவின் கணவருடன் அவனை பார்க்க வந்திருந்தாள் அவள்.

அவள் மாமா வெளியிலேயே இருக்க அவள் மட்டும் உள்ளே வந்தாள்..

சுற்றும் முற்றும் தவிப்புடன் சுழன்றுக்கொண்டிருந்த அவள் கண்களை அவனை சட்டென ஈர்த்தன.

என்னாச்சுமா? என்று துவங்கினான் அவன்.

'காய்ச்சல். ரொ....ம்ப தலைவலி டாக்டர்.' குழந்தைத்தனத்துடன் ஒலித்தது அவள் குரல்.

ரொ......ம்ப... வலிக்குதாமா? சரியாயிடும். சீக்கிரம் சரியாயிடும். அவன் இதமாய் சொல்ல மலர்ந்துதான் போனது அவள் முகம். அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

என்னமா அப்படி பார்க்கறே?

இல்லை நீங்க ரொம்ப அன்பா பேசறீங்க. 'ரொம்ப தேங்.......க்ஸ்' இப்படி யாரவது என்கிட்டே பேசணும்னு எனக்கு ஆசை.

அவள் மனநிலை சட்டென புரிந்தது அவனுக்கு.

சரி வேற என்ன என்ன ஆசை உனக்கு? அவள் கையை பிடித்து பரிசோதித்த படியே புன்னகையுடன் அவன் கேட்க, சொல்லலாமா வேண்டாமா என தவித்தன அவள் கண்கள்.

சும்மா சொல்லு... என்றான் அவன்.

உங்க ஸ்டெதெஸ்கோப் குடுக்கறீங்களா. ஒரு தடவை நான் காதிலே வெச்சு பார்க்கணும்.

அழகான புன்னகையுடன் அவன் சட்டென கழட்டி கொடுக்க, அவள் தனது அதை காதில் வைத்து அவனது இதய துடிப்பை கேட்ட நொடியில் சட்டென அவளுக்கானதாய் ஆகி விட்டிருந்தது அவன் இதயம்.

அதன் பிறகு அவளை பரிசோதிக்கும் பாவனையில் அவள் கரத்தை விடவே இல்லை அவன். அதை அவள் உணரும் சந்தர்ப்பமே தராமல் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான் முகுந்தன்.

அப்போதே அவன் மனம் முழுவதும் நிறைந்துப்போனாள் அவள்.

அதன் பிறகு வந்த நாட்களில் தனது தாத்தாவின் மூலமாக அவளது மாமாவிடம் பேசினான் அவன். அவனது தாத்தா அவளது மாமாவுக்கு தெரிந்தவர் என்பதால், வேலை சுலபமகாவே முடிந்தது. இதோ நிச்சியம் வரை எல்லாம் வந்து நிற்கிறது.

அவளை விட்டு அகலவில்லை அவன் விழிகள். அவள் தலையை வருடியபடியே உறங்கிக்கொண்டிருந்தவளை பார்த்து வாய்விட்டே சொன்னான்.... 'பேயெல்லாம் ஒண்ணுமில்லைடா இங்கே. அப்படியே ஏதாவது வந்தாலும் இனிமே அது என்னை தாண்டிதான் உன்னை தொடணும். பார்த்துடலாம் எது வருதுன்னு. நீ தைரியமா இரு'

அங்கே ஜன்னலின் அருகிலேயே நின்றிருந்தது அந்த பூனை. அதன் கண்களில் கோப தாண்டவம். 'யாரை தாண்ட வேண்டும்.? தாண்டுகிறேன் நான். எத்தனை வருட போராட்டம் இது? அந்த கொலுசொலிதானே என் சுவாசமாக இருந்தது. இந்த உலகத்தில் யாருமே பிரிக்க முடியாத பந்தம் எங்கள் இருவருக்குமானது. கொண்டு சென்று விடுவேன். அவளை என்னுடன் கொண்டு சென்று விடுவேன்.

திகாலை மணி நான்கு. சென்னையில் தனது வீட்டில் கண் திறந்தார் அவர். குளித்து தயாராகி பூஜை அறைக்கு வந்தார் அவர். அவரிடம் அப்படி ஒரு கம்பீரம் மிளிர்ந்தது. அவர் கண்களில் அப்படி ஒரு தீட்ஷண்யம். அவர்தான் முகுந்தனின் தாத்தா. எழுபத்தியாரு வயதிலும் வயதை மீறிய சுறுசுறுப்புடன் வலம் வருபவர். அவருடைய மிகப்பெரிய பலம் அவர் செய்யும் பூஜையும், தியானமும்.

வந்து அமர்ந்தார் பூஜை அறையில். அங்கே மணக்கும் மல்லிகை மாலையுடன் அம்பிகையின் வெள்ளி விக்கிரகம் ஜொலித்தது.

அயிகிரி நந்தினி நந்தித மேதினி

விச்வ வினோதினி நந்தநுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே   ஒலித்தது அவர் குரல்.

பூஜையை முடித்து விட்டு தியானத்தில், அமர்ந்திருந்தவரின் உடலெங்கும் திடீரென்று ஒரு நடுக்கம் பரவ, ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது அது. மாதங்கியை நெருங்கி இருப்பது எது என்று அவருக்கு புரிந்தது. இந்த உலகத்தில் இருக்கும் எதற்கும் கட்டுப்படாத வேகம் அதற்கு இருக்கும் என்பதும் புரிந்தது.

கொஞ்சம் விடிய துவங்கி இருக்க, அதற்கு மேல் அங்கிருப்பது சரியில்லை என்று முகுந்தனுக்கு தோன்ற, உறங்கிக்கொண்டிருந்தவளை பார்த்தான் அவன்.

இன்னும் கொஞ்ச நேரம் அவள் உறங்கட்டுமே என்று எண்ணத்துடன் அவளை எழுப்பாமலே அவள் வீட்டை விட்டு அவன் கிளம்பிய நேரத்தில் ஒலித்தது அவன் கைப்பேசி.

'சொல்லுங்க தாத்தா' என்ன இந்த நேரத்திலே?. என்றபடியே அவள் வீட்டை தாண்டி நடந்தான் முகுந்தன்

'இன்னைக்கு ராத்திரி இருட்டறதுக்குள்ளே நீயும் மாதங்கியும் இங்கே வந்தாகணும்' அவர் குரலில் இருந்த அந்த பதற்றத்தை இதுவரை அவன் பார்த்ததில்லை..

தாத்தா?????????

அவ இனிமே கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுக்குள்ளேயேதான் இருக்கணும். இது மட்டும்தான் அவளுக்கு பாதுகாப்பான இடம். சீக்கிரம் கூட்டிட்டு வந்திடு.

தாத்தா. என்ன பிரச்சனை தாத்தா.? எனக்கு எதுவுமே புரியலை.

புரியவேண்டாம். நம்ம வீட்டுக்குள்ளே அவளை கூட்டிட்டு வந்திடு அது போதும்.

நானும் வரணுமா? எனக்கு இங்கே வேலை.....

'எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு ரெண்டு பேரும் உடனே கிளம்பி வாங்க' உறுதியான குரலில் அழுத்தம் திருத்தமாக சொன்னார் அவர்.

எதுவுமே புரியாமல் திகைத்து நின்றவன் அங்கே அவனருகே நின்றிருந்த பூனையை கவனிக்கவில்லை.

'இல்லை. அவள் அந்த வீட்டுக்கு போகக்கூடாது. அய்யோ மாது..மா என்னை விட்டு போயிடாதே மாது ...மா' அவளை நோக்கி ஓடியது அந்த பூனை.

அவளது அறைக்குள் நுழைந்தது அந்த பூனை. அவள் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தாள்.

இல்லை. அவள் என்னை விட்டுப்போகக்கூடாது. அந்த பூனையை விட்டு வெளியே வந்தது அந்த உருவம். அவள் கொஞ்சம் அசைய அவள் முகத்துக்கு மிக அருகே சென்றது அது. அதன் சிவந்த கண்கள் கோரமாய் விரிந்தன.

தொடரும்...

Episode - 02

Episode # 04

{kunena_discuss:781}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.