(Reading time: 47 - 93 minutes)

 

வர்களின் அழகில் அன்று மயங்காதோர் இருக்க முடியாது தான்... பின்ன அன்கங்கமாய் தேர்ந்தெடுத்து வாங்கியவை ஆயிற்றே... பால் போல் வெண்மை இன்றி முத்து போன்ற வெண்மையில், கொஞ்சி பேசி பழகிடும் கிளியின் நிறத்தில் கலந்த லெஹங்கா அணிந்திருந்தாள் தேஜு. அனுவோ அதே முத்து வெண்மையில் தோகை விரித்து ஆடி மனதை ஈர்க்கும் மயிலின் கழுத்து நிறத்தில் லெஹங்கா அணிந்திருந்தாள். கையில் அணிந்திருந்த மருதாணி மனதில் இருக்கும் காதலை பறைசாற்றி சிவந்திருக்க, காலில் அணியும் கொலுசில் இருந்து நெற்றியில் சூடும் நெத்திசுட்டி வரை முத்தால் நிறைந்திருந்தனர். தேஜு முத்தும் பச்சையும் கலந்த அணிகலன்கள் என்றால், அனுவோ முத்தும் மயில் கழுத்து நிறத்தில் அணிகலன்கள் அணிந்து இருந்தாள். வடநாட்டு மக்கள் போல லெஹங்கா அணிந்து முத்தோடு சேர்ந்து அறிய முத்தாய் மிளிர்ந்தனர் இருவரும்... அந்த உடையில் வேகமாக நடப்பது கடினம் தான் ஆனால் அழகாய் அன்னம் போல் நடந்து கண்களை குளிர செய்தனர். இருவருக்கும் புகைப்படம் எடுப்பதர்கேற்ற அலங்காரம் செய்ய,சளைக்காமல் போஸ் தந்தனர்.

விபுனையும், விருஷிகாவையும் தேடி வந்த அம்மாக்களை கண்டு கண் வைத்தனர் மணப்பெண்கள். கையில் அழகாய் கோலமிட்டு, காய்ந்ததும் சிவந்து உடலில் குளுர்ச்சி தருகின்ற மருதாணியின் நிறத்தில் பட்டு border வைத்து அதற்கேற்ற தங்க நகைகள் அணிந்து இன்னும் இளமையாய் முன்னே அஹல்யா வர, வெளிர் சிவப்பும் இல்லாமல் கண்ணை கவரும் பிங்கும் இல்லாமல் இரண்டும் கலந்த பீச் கலரில் சேலை அணிந்து தங்க நகைகள் அணிந்து பின்னே அழகாய் வந்தாள் அர்ச்சனா.... “அண்ணி ரெண்டு பேருமே சூப்பர்...”

“உங்க அளவுக்கு இல்லைதான்...”

“அது சரி அப்பறம் கல்யாண பொண்ணுன்னு கொஞ்சம் வித்தியாசம் தெரிய வேண்டாமா?”

“சரி சரி பிழைச்சு போங்க...”

“ஆனா அண்ணி இப்படியே போனால் நாங்க honeymoon போறத்துக்குள்ள நீங்க ரெண்டாவது குட்டீஸ் ரெடி பண்ணிடுவிங்க போலவே” என்று கண்ணடித்து இருவரும் கிண்டல் செய்ய, என்னதான் வெட்கம் வந்தாலும் “போங்கடி வாலுங்களா... சீக்கரம் ரெடி ஆகுங்க கொஞ்ச நேரத்தில மேடைக்கு போகணும்” என்று சமாளித்து சென்றுவிட்டனர்.

“நாங்க ரெடி அண்ணி.. உங்க தம்பிங்களை போய் பாருங்க” என்று தேஜு கிண்டல் செய்யவும் “ஐயோ ஆமா இந்நேரம் அவங்க ரெடி ஆகிருக்கணும்” என்று பரபரத்து அவர்களின் அறைக்கு சென்றனர். அங்கே கம்பீரமாக தாயராகி காத்திருந்தனர் மணமகன்கள், எங்கிருந்து தான் இவர்களுக்கு உடைகள் தைத்து வந்ததோ அவர்களின் உடல் வாகிற்கு சரியாக கச்சிதமாக இருந்தது. அடர்ந்த கிரே இல்லாமல் அதில் வெண்மையும் கலந்த நிறத்தில் மேலே குர்தாவும், கீழே மணமகளின் லெஹங்காவிற்கு பொருத்தமாய் மயில் கழுத்து நிறத்தில் அஸ்வத்தும், கிழி பச்சை இல்லை என்றாலும் பச்சை நிறத்திலும் pant அணிந்து கம்பீரமாக இருந்தனர். நெஞ்சின் மேல் அழகாய் ஒரு சின்ன செயின் வைத்து அலங்கரித்து இருக்க, ராஜாக்களின் அதே தோரணை இருவரிடமும் இருந்தது.அவர்களை பார்த்து பார்த்து தயார் செய்த மாமாக்கள் இருவரும் அழகாய் பாந்தமாய் முத்தின் நிறத்தின் வெவேறு வேலைபாடுகளோடு அதே நேரம் அவர்களது மனைவிமார்களின் புடவைக்கு பொருத்தமாய் பக்கா handsome ஆக இருந்தனர்.

அர்ச்சனாவையும் அஹல்யாவையும் பார்த்தவர்கள்... “எங்க இருந்து தான் உங்களுக்கு இப்படியெல்லாம் கலர் கிடைக்குதோ, நாங்க உங்களுக்கு பொருத்தமா ரெடி ஆகுரதுகுள்ள சப்பா...” என்று மெருமூச்சுவிட்டான் நவீன்.

அவனின் அழகில் தன்னை கொஞ்சம் மறந்தவள் “நீங்க என்ன போட்டாலும் அழகாதான் இருக்கீங்க” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறினாள். அவ்வளவு தான் அதன் பின் அவன் வாயே திறக்கவில்லையே...

அஸ்வத்துடன் கைகோர்த்து அனு முன்னே நடக்க, நிரஞ்ஜனோடு கைகோர்த்து தேஜு பின்னால் வந்தாள். தன் கையோடு பின்னியிருந்த கையை சீண்ட நினைத்த மனதை சிரமப்பட்டு நிறுத்தி ஒழுங்காக பையன்கள் போல் நடித்தனர். இரு ஜோடிகளும் மேடை மீது உள்ள சோபாவில் அமர்ந்து கொள்ள, கீழே சுற்றி போட்டிருந்த நாற்காலியில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் அமர்ந்திருந்தனர்.  நிகழ்ச்சியின் தொகுப்பாளன் போல அர்ஜுன் பேச துவங்க அனைவரும் கவனிக்க துவங்கினர்..

“ரொம்ப ஸ்பெஷல் மொமென்ட் இது.. கல்யாண பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் மட்டும் இல்லை எங்களுக்கும் தான்.. எங்க familyoda கடைகுட்டிகளுக்கு நடக்கும் விழான்றதால கொஞ்சம் வித்யாசமாக நடத்தலாம்னு இருக்கோம்... ஒண்ணுமில்ல முதல்ல எல்லா சங்கீத்லையும் நடக்குற மாதிரி ஆடலுடன் பின்னணி பாடலும் இருக்கும், அப்பறம் என்ன பண்றோம்னு அப்பறமா சொல்லுறேன்...” என்று கூறி நடக்கவும் பின்னேயே ஒரு கும்பல் வந்து நின்றது.

யாரடா அது என்று மணமக்கள் பார்க்க, கூட்டத்தில் அருண் மற்றும் அவன் கூட்டமும், பெங்களூரில் நிருவுடன் சேர்ந்து படித்த சிலரும் இருந்தனர். அனைவரும் ஒன்றாக ஆடுவதை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. இதற்காக மெனக்கெட்டு ஆட பழகி இருக்க வேண்டுமே... அஸ்வத், அனுவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது..

“மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை தோழர்கள் நாம்தாண்டா..

மாத்தியாச்சு வெத்தலைபாக்கு மனம்போல் தானே... ஓஹோ...

பயலுக்குதான் அடுச்சது யோகம் புடிச்சா புளியன்கொம்பதான்

பழையபட்டி தவுளுக்கு ஏத்த வாத்தியம் தானே..

ஹே நண்பா பொண்ண பூ போல் காப்பாத்து

கூஜாவதான் காலபூராவும் நீ தூக்கு...

ஆஜ மேர சோனியே... ஆஜ மேர சோனியே

ஆஜ மேர சோனியே.....

துஹி மேற மிதுவா...”

அதை தொடர்ந்து அடுத்த பட்டாளம் வந்தது... வந்தது வேறு யாரும் இல்லை. கல்லூரி பட்டாளத்தை அடுத்து அனுவின் தோழிகளும், அவளது ரேடியோ ஸ்டேஷனில் பணிபுரிவோரும் தான்..

“அன்பின் உறவாயிரு... உண்மை மறவாதிரு..

நூறு ஆண்டு வரை வாழ்வில் வளமாய் இரு...

வாழை பூ போல வெட்கம் பாரு...

மனசுக்குள்ளே தான் மத்தாபூ

இரவில் இனிமேதான் தூக்கம் ஏது மார்பில்

தங்காது மாராப்பு...

நீ அறியா விஷயம் அது நாளை புரியும்...

அவன் மூச்சுகாற்றில் உன் சேலை எரியும்...”

என்று ஒரு குத்தாட்டம் போட்டு சென்றனர் அந்த வானர கூட்டங்கள்... ஆடியவர்களுக்கு எப்படியோ அதை கேட்ட அனுவுக்கு தான் வெட்கத்தில் அஸ்வத்தின் பக்கமே திரும்ப முடியாமல் போனது. அஸ்வத்திற்கு கூட வெட்கம் வரும் என்று அப்போது தான் உணர்ந்தான்... மெல்ல அவள் விழி பார்க்கவும் வெட்கப்பட்டு வெளிகாட்டாமல் இருக்க முயற்சித்தான்.

அதை தொடர்ந்து யார் என்று ஆவலாக பார்க்க அருகே இருந்த அண்ணிமார்கள் காணாமல் போனனர்.

“கும்மியடி பெண்ணே கும்மியடி..

கூடி கொலவையும் போட்டு கும்மியடி

குமரி பொண்ணுக்கு மாலை வந்தது

குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி

வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது

வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

எங்க வீட்டு தங்க விளக்கு

ஏங்கி நிக்குது கும்மியடி

என்னை ஊற்றி திரிய தூண்ட

ஆளு வந்தது கும்மியடி

....

அடி செக்க செவந்த அழகா

கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா..

பத்து வருஷம் பக்கம் இருந்தும்

பார்க்கவில்லடி நானும்..”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.