(Reading time: 47 - 93 minutes)

 

ஜோடிகள் பிரிந்து அன்றைய ஜோடியை அழைக்க சென்றனர். எப்போதும் போன்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட சேலை கட்டி அழகு ஓவியங்களாய் இருந்தனர் பெண்கள். அனுவோ ரோஜா இதழின் நிறத்தில் violet நிற border வைத்து, அந்த நிறத்திற்கு பொருத்தமாய் பெரிய தொங்கட்டான்களும், கழுத்து நிறைந்த ஒரு செட்டும் போட்டிருந்தாள். பார்த்து பார்த்து அஸ்வத் தேர்ந்தெடுத்தது முந்தானையில் பெரியதாய் மணமக்கள் இருவர் கையில் மாலையோடு இருப்பது போன்று கற்கள் வைத்தே அலங்கரித்து இருந்தது. மிக பிரமாதமாய் வடிவமைத்த புடவையை அந்த வடிவமைப்பு தெரியும் வகையில் வடநாட்டு முறையில் கட்டிவிட மிக அழகாய் மிளிர்ந்தாள். தேஜுவோ அவள் நிறத்திற்கு எடுப்பாய் பெண்களுக்கே உரிய நிறமான பிங்க் நிறத்தில் உடல் முழுதும் இருக்க, நீல நிற border வைத்து அதற்கு பொருத்தமான கற்கள் பதித்த நகைகள் அணிந்திருந்தாள். அனுவின் சேலை போலவே அவளது சேலையில் வேறுவிதமாய் வடிவமைக்க பட்டிருந்தது. மணமக்கள் ஊர்வலமாய் போவது போன்று அமைக்கப்பட்டு இருந்தது. மணமகன் குதிரையிலும், மணமகள் பல்லக்கிலும் வலம் வர அந்த கற்கள் அழகாய் மிளிர்ந்தது.

கம்பன் தீட்டிய கவியோ, தாகூர் வரைந்த ஓவியங்களோ, பிரம்மனின் அழகிய வேலைபாடோ என்று குழம்பி போகும் வகையில் சொக்கி இழுத்தனர் பெண்கள். ஆண்களோ திரையில் வரும் மாடல்களோ, பெண்கள் கற்பனை செய்து கனவு காணும் ரோமியோக்களோ, பிரம்மன் பெண்களுக்கு போட்டியாய் படைத்த பூவுலக அழகன்களாய் தோரணையாய் வந்து மேடையில் நின்றனர். வந்து குவிந்த வாழ்த்துக்களும், பரிசுகளும் வேகமாய் நேரத்தை கடத்தியது. வருவோர் எல்லாம் அழகான ஜோடிகள் என்று இரு ஜோடிகளையும் சொல்ல வெட்கம் கலந்த புன்னகையை பதிலாக தந்தனர். விழா முடிவடைய குடும்ப புகைப்படங்களும், ஜோடி ஜோடியாக நின்று புகைபடம் எடுத்து கொள்வதுமாக நேரத்தை கடத்தினர்.

பெற்றோருக்கெல்லாம் திருமணம் இனிதே முடிந்ததில் மனம் குளிர்ந்து போனது. நெஞ்சில் நினைத்து நினைத்து பார்த்துகொண்டு மையலுடன் சிரித்துகொள்ள எண்ணற்ற நிகழ்ச்சி நடந்திருக்க அனைவரும் மனம் நிறைந்து வீடு திரும்பினர்.       

இனி இந்த ரெண்டு ஜோடியும் பண்ணுற லூட்டீஸ் அப்பறம் அனு போட்ட சீன் என்ன ஆக போதுனு அடுத்த எபிசோடுல பார்க்கலாம். திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தியதற்கு நன்றி பிரிண்ட்ஸ்!!!

என்னலாம் மிஸ் பண்ணிட்டேன்னு நானே சொல்லிடுறேன்... சாரி என்னால பெரியவங்க உடை அலங்காரம் பத்தி சொல்ல முடியலை... அப்பறம் reception கொஞ்சம் கம்மியா எழுதிருக்கேன். மொத்தத்தையும் முன்னாடியே சொல்லிட்டதால என்ன சொல்லுறதுனே தெரியலை... உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்குறேன், உங்க கருத்தை கமெண்ட்ஸ் மூலம் சொல்லுங்க... அப்பறம் திருமணத்தோடு முடிச்சிடலாம்னு பார்த்தேன் ஆனால் உங்க எல்லாருக்காகவும் ஒரு எபிசோடு எக்ஸ்ட்ரா....

Go to Kadhal payanam # 24

Go to Kadhal payanam # 26

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.