(Reading time: 47 - 93 minutes)

 

ணவனின் காதலில் உருகி கரைந்த பெண்கள் அவர்களின் சத்தியத்தை செய்தனர்.. 

“காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன்...

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...

தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...

....

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே

தூய்மையான என் சத்தியம் புனிதமானது.

வாழை மரம் போல என்னை வாரிவழங்குவேன்..

ஏழை கண்ட புதையலை போல ரகசியம் காப்பேன்...

...

கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண்ணவன் என்பேன்..

உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன்..

மழைநாளில் உன் மார்பில் கம்பிளி ஆவேன்..

மழை காற்றாய் தலை கோதி நித்திரை தருவேன்...

...

அழகு பெண்கள் பழகினாலும் அய்யம் கொள்ளேன்..

ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன்..

உன் கனவு நிஜமாக எனையே தருவேன்

உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்...”

எல்லை இல்லா நம்பிக்கையும், எல்லை இல்லா காதலும் அங்கு ஒரு புது உறவினை துவங்க, கண்கள் முழுதும் கனவுகளோடு காத்திருந்தனர் புது ஜோடிகள்...

எல்லா சடங்குகளும் முடிந்துவிட, மணமக்களை பெண்ணின் வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவெடுத்தனர் பெற்றோர். ஆனால் மணமகன்களோ பிடிவாதமாக இருந்து அனைவரையும் ஒரு இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறினர்.

“என்ன அஸ்வத் புரியாமல் பேசுற? கல்யாணம் ஆனதும் முதல நம்ம வீட்டுக்கு தான் போகணும்... இப்போ யார் வீட்டுக்கு கூட்டிட்டு போக போற?” என்று அர்ஜுன் கொஞ்சம் அலுத்துகொண்டான்.

“அதெல்லாம் போனதும் தெரியும், இப்போ எல்லாரும் கார்ல ஏறுங்க...”

“இது எனக்கு சுத்தமா பிடிக்கலை அஸ்வத். என்ன இது புதிசா அடம் பிடிச்சுகிட்டு...” என்றார் கண்ணன்.

“அங்கிள் நாங்க கூப்பிடுற இடத்துக்கு வந்து தான் பாருங்களேன்...” என்று நிருவும் வலியுறுத்த வேறு வழி இன்றி காரில் ஏறினர்.

அஸ்வத்தும் நிருவும் எப்படி எப்படியோ அவர்களை சமாளித்து வேறிடத்திற்கு கூட்டி சென்றனர். கணவன் வண்டியை லாபமாக செலுத்த, மனைவியின் கண்கள் என்னவோ, எங்கே போகிறோம் என்று கூற மாட்டானா என்பது போல் கணவன்மார்களையே தொடர்ந்தது. அவர்களின் பார்வை தங்கள் மீது படுவது தெரிந்ததாலேயோ என்னவோ அவர்கள் அந்த பக்கம் திரும்பாமல் ஒரு ரகசிய முறுவலோடு வண்டியை ஒட்டினர்.

அஸ்வத், அனு, அர்ஜுன், அஹல்யா, வெங்கட், ஹேமா, விபுன், துளசி, கண்ணன் ஒரு காரிலும், நிரு, தேஜு,விருஷிக்கா, அன்பு, அர்ச்சனா, நவீன்,அவனது பெற்றோர்கள் ஒரு காரிலும் ஒரே பாதையில் சென்றனர். பயணம் ஒரு முடிவுக்கு வர, இருவரும் ஒரு வீட்டின் வாயிற்கதவின் முன் நின்றனர். இரு வீடுகளும் ஒரே எல்லைக்குள் ஒன்று போல் இருந்தது. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு ஒன்று போல இருந்த இரு வீடுகளும் அனைவரையும் ஈர்த்தது. நிரு ஒரு வீட்டை நோக்கியும், அஸ்வத் மற்றொரு வீட்டை நோக்கியும் சென்றனர். பெரியவர்கள் ஒன்றும் புரியாமல் பார்க்க, அவர்களின் நிறுவனத்தில் பணிபுரியும் இருவர் ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் நின்று அவர்களை வரவேற்றனர். அழகாக பூக்கோலம் போட்டு, மலர்களால் தோரணம் கட்டி, பார்க்கவே கண்களை ஈர்த்த வீட்டினை கண்டு அனைவரும் மயங்கி தான் போனனர்.

(இதை சினிமால காட்டுற மாதிரி ரெண்டு சீன் ஒரே நேரத்தில் நடப்பவை முதல்ல துளசி, அடுத்து நிரஞ்ஜன்... இப்படி ரெண்டு வீட்டில் பேசுவதும் சேர்ந்து நடப்பது போல் எழுதிருக்கேன்.)

“ஹே யார் வீடுடா இது...” என்று துளசி ஆச்சர்யமாக விசாரித்தார்.

“நம்ம வீடுதான் அத்தை...” என்று நிரு மனதின் உள்ள மகிழ்ச்சியை முகத்தில் காட்டி பதில் தந்தான்.

“என்னடா சொல்லுற... எப்போ இந்த வீட்டை கட்டின???” - அஹல்யா

கொஞ்சம் அசடு வழிந்தவாறே “இப்போதான் ஒரு 10 மாசமாய்...” – நிரஞ்ஜன்

“சொல்லவே இல்லை... ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை... முதல்ல சுத்தி போடணும் அவ்வளவு அழகா கட்டி இருக்காங்க...” என்றார் ஹேமா.

“கட்டினது யாரு உன்னை கட்டினவன் ஆச்சே...” என்று தேஜுவிற்கு மட்டும் கேட்கும்படி கூறினான் நிரு.

“அந்த வீடும் இதே போல இருக்குமா அஸ்வத்...” வினவினான் அர்ஜுன்.

“இல்லை அக்கா... வெளில இருந்து பார்க்க மட்டும் ஒன்னு போல கட்டி இருக்கோம் மத்தபடி உள்ள வீட்டின் அமைப்பு கொஞ்சம் அவங்க அவங்களுக்கு பிடித்த மாதிரி...” என்றான் நிரு.

“அது சரி எப்போ இந்த furnitures எல்லாம் இங்க கொண்டு வந்த...” என்று கூறிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டு “வந்திங்க...” என்று மாற்றினாள் தேஜு.

“மூணு நாள் கல்யாணம் யாருமே வீட்டு பக்கம் போகலை... சோ நேத்து நைட் கொண்டு வந்துட்டாங்க, இன்னைக்கு morning arrange பண்ணியாச்சு... சோ இனிமே இங்க தான் இருக்க போறோம்...” என்றான் அஸ்வத்.

“என்ன முன்னாடியே well prepared ஆ இருக்க போல...” என்று அஹல்யா எதார்த்தமாக கேட்க, “ஆமா அப்பறம் உட்கார ஒன்னும் இல்லை, சாப்பிட ஏதும் இல்லைன்னு சொல்ல கூடத்துல அதான்” என்று அஸ்வத் கூறவும், அஹல்யா அவனுக்கு மட்டும் கேட்கும்படி “உன்னோட கவலையெல்லாம் உட்காருறது சாப்புடுறது பத்தி மாதிரி தெரியலையே” என்று நக்கலாக கூறவும் அது அவன் அருகில் நின்ற அனு காதிலும் விழுந்தது, அடிநெஞ்சில் இருந்து இனம் புரியாத ஒரு பதட்டம் எழுந்து முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது அவளுக்கு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.