(Reading time: 47 - 93 minutes)

 

வனோ பதறிக்கொண்டு “ஹே... என்னடி???”

“என்ன என்ன?”

“இன்னைக்கு 1st நைட்டி”

“சோ?”

“ம்ம்ம்ம் மண்ணாங்கட்டி...” அவன் பேச்சில் சிரிப்பு வரவும் அதை மறைத்துக்கொண்டு... “இங்க பாரு அஸ்வத் என்னதான் நீ உருகி உருகி பேசினாலும் என் மனசு மாறுற வரைக்கும் காத்திருப்பேன்னு சொன்னியே... அதுனால...”

“அதுனால...”

“அதுனால நானா மாறுற வரைக்கும் ஒன்னும் கடையாது” என்று போலியாக சீன் போட்டாள் அனு. புரிந்து போனது அஸ்வத்திற்கு அவள் நடிக்கிறாள் என்று ஒரு மந்தகாச புன்முறுவல் இதழோரம் தோன்ற “ஓஹோ அப்படியாங்க... அப்போ நீங்க இன்னும் மாறலை அப்படிதானே...”

“ஆமா...”

“சரி அப்போ தொடர்ந்து நான் முயற்சி செஞ்சிகிட்டே இருக்கேன் நீங்க மாறிடுவிங்க” என்று ஒரு கள்ள சிரிப்போடு முடித்தான். அந்த சிரிப்பு என்னவெல்லாம் பண்ணுவதர்க்கு என்று அறியாமல் போனது அனுவிற்கு... “சரி பண்ணு” என்று திரும்பி படுத்துக்கொண்டு சிரித்தாள்.

படுத்தவள் மீண்டும் ஒரு கலவரத்தோடு எழுந்து “அஸ்வத்” என்றாள்...

“என்னடி?”

“இங்க ரெண்டு தலையணை தான் இருக்கா?”

“ ஆமா ஏன்????” என்று விஷயம் புரிந்தவனாக கேட்டான்.

“இல்லை.... கால் வலிக்குமே உனக்கு அதான்” என்று பொய் சொல்லி படுத்துக்கொண்டாள்.

“ஆஹா என்ன ஒரு அக்கறை என்ன ஒரு அக்கறை” என்று கிண்டலாக கூறவும் மீண்டும் தன் தோழன் விநாயகனை வேண்டிக்கொண்டே படுத்தாள் கடவுளே இத்தனை நாளா நான் கை சுப்புற விஷயம் அவனுக்கு தெரியாது இனிமே நல்லா மாட்டிபேன் அது கூட போர்வையை வச்சி தப்பிசிடுவேன். ஆனால் கால் போடுறது??? ஐயோ கடவுளே காலையில எழுந்திரிக்கும் போது அவன் மேல காலை போடாமல் படுத்திருக்கணும் ப்ளீஸ்... இல்லை இப்போ விட்ட வசனத்துக்கு மானக்கேடாகும் என்று நினைத்துக்கொண்டு இழுத்து போர்த்திக்கொண்டு படுத்தாள். பாவம் அவளுக்கு தெரியாது அவள் விரல் சுப்பும் புகைப்படமே அவனிடம் உண்டு என்று...  

மனம் கவர்ந்தவள் அருகிலேயே இருக்க நிம்மதியாக உறங்கினான் அஸ்வத். கண் திறந்து பார்க்கையில் அனு அவன் அருகமையில் அவன் மீது கால் போட்டு உறங்கிக்கொண்டிருக்க சிரிப்பாக இருந்தது அவனுக்கு நேற்று விட்ட வசனத்திற்கும் அவள் படுத்திருக்கும் தோரணைக்கும் சம்பந்தமே இல்லை. அவளாகவே தெரிந்துகொள்ளட்டும் என்று கண்களால் அவளை பருகியபடி படுத்திருந்தான். புதியவனே இல்லாவிட்டாலும் முதல் முறை ஆணின் அருகில் படுக்கும் தயக்கமே இன்றி அவள் உறங்கிக்கொண்டிருக்க பொறுப்பான கதிரவன் ஜன்னல் வழியே அவளின் கன்னங்கள் தொட்டு எழுப்பினான் வெயில் அவள் கன்னம் படாமல் இருக்க அஸ்வத் அவள் கன்னத்தை மறைக்க, சட்டென முளித்துக்கொண்டாள்.

“ஹலோ என்ன கொழுப்பா? கன்னத்தை தொடுற?”

“யாரு நானா?”

“ஆமா எவ்வளவு சொன்னேன் இப்போ இவ்வளவு பக்கத்தில படுத்திருக்க?”

“அதுவும் நானா?”

“ஆமா...”

“அது சரி எழுந்து யார் யார் பக்கத்தில படுத்திருக்கான்னு பாரு” என்று அவன் கூறவும் தான் தூக்கத்தில் நெருங்கி அவன் அருகில் படுத்திருப்பதே உரைத்தது. உடனே சட்டென எழுந்து சேலையை சரி செய்துகொண்டவள் மனதார விநாயகா.... என்று மானசீகமாக திட்டினாள். அவள் தடுமாறுவதும் தானாக கன்னங்கள் சிவப்பதும் பார்த்து ரசித்தவனுக்கு குதுகலமாக இருந்தது.

“நான் ஆசையாய் பண்ண வேண்டியதை mr.சூரியன் பண்ணாரு அதான் உங்கன்னத்தை தட்டி எழுப்பினாரு அதுக்குதான் கைவச்சு மரச்சேன்... வேறெதுவும் இல்லை” என்பது போல் கண்களில் குறும்பு மின்ன கூறினான்.

அதற்கும் எதுவும் கூறாமல் கைகளை பிசைந்துகொண்டே நின்ற அனுவை பார்க்க புதிதாக இருந்தது குனிந்த தலை, முகம் முழுதும் வெட்கம், களைந்த கூந்தல், கசங்கிய சேலை என்று பார்த்துக்கொண்டே இருந்தவனின் கண்கள் அவள் கழுத்தில் இருந்த தாலியில் வந்து தங்கியது. மனம் முழுதும் ஒரு பூரிப்போடு தனது கிண்டலை தொடர்ந்தான்.

“அனு நேத்து நைட் தூங்குரத்துக்கு முன்னாடியே விபுனை கொண்டு அண்ணிட்ட விட்டுட்டு தானே வந்த?” என்று வினவவும் அவனே பேச்சை மாற்றியதில் நிம்மதியுற “ஆமாம்” என்று பதில் தந்தாள்.

“அப்போ நேத்து நைட் யாரோ என் பக்கத்தில விரல் சுப்பிட்டு படுத்திருந்தாங்களே அது யாரு???” என்று வினவவும் தான் அனுவுக்கு விஷயம் புரிந்தது இப்போது மேலும் வெட்கம் அதிகமாக எப்படி தப்பிப்பது என்று புரியாமல் நின்றவள் சரியாக அவளது அரை கதவு தட்டவும் திறந்தாள்.

வெளியே நின்ற அஹல்யா “எழுந்திட்டியா? இல்லை ரெண்டு பேரும் இன்னும் தூங்குரீங்களோனு தான் எழுப்ப வந்தேன். போய் குளிச்சிட்டு வாமா” என்று கிண்டல் செய்யாமல் மேலோட்டமாக பேசி சென்றாள்.

அதுதான் சாக்கு என்று குளிக்க ஓடி சென்ற அனுவை பார்த்து குறும்புடன் சிரித்தான். ஒருவழியாக சிறுசுகள் வந்ததும் அஸ்வத் வீட்டில் அனைவரும் சேர்ந்துவிட உணவை ஒன்றாக சாப்பிட்டனர். பெரியவர்களுக்கு தெரியாமல் புதுமண தம்பதியர்களை மற்றவர் ஓட்ட, கன்னம் மின்ன நேரத்தை கடத்தினர் புதுமண மக்கள். அதன் பின் மதியம் நிரஞ்ஜன் வீட்டில் உணவு தயார் ஆனது. பேசி கலாட்டா செய்து குட்டிசுடன் விளையாடி, கணவனை சீண்டிக்கொண்டு, அவனின் பார்வையில் வெட்கப்பட்டு என்று நேரம் சுகமாக கரைந்தது. மதிய உணவு முடிந்ததும் மாலை நேர வரவேற்பு விழாவிற்கு தயாரனனர் அனைவரும்.

பெரும் திருவிழா போல திருமணம் முடிய, வரவேற்பு கொஞ்சம் சிறிய மண்டபத்தில் தெரிந்தவர்கள் மட்டும் வர துவங்கியது. இனிய தருணத்தை குளிர்விக்க மெல்லியதாய் தூறல் மூலம் ஆசிர்வதித்தாள் வான் மகள். குளிர் காற்றோடு பாடல்களின் வரிகள் இல்லாது இசை மட்டும் ஒலிக்கவிட பட்டிருந்தது. மணமக்கள் இருவரும் தயாராகிக்கொண்டிருக்க வருவோரை இன்முகத்தோடு வரவேற்றனர் சொந்தங்கள்.

“சீகா இங்க வாயேன்...”

“என்ன ணா?”

“இங்க மழை பெய்யுது பாரேன்...” என்று பன்னீர் தெளிக்கும் machine பார்த்து சிரித்து கூறிக்கொண்டு இருந்தான்.

“ஹா ஹா இது என்னது ணா?”

“எனக்கும் தெரியலையே... தாதா இது என்னது?” என்று அருகில் நின்று வரவேற்றுக்கொண்டிருந்த ரவியிடம் கேட்டான்.

“பன்னீர் தெளிக்குற machineடா தங்கம்... வரவங்களுக்கு பன்னீர் தெளிக்கணும் இல்லை அதுக்கு தான் இது...”

“ஓ...” என்று சிறு உதடுகளை அழகாய் குவித்து அவன் பேசியதை ரசித்தபடி தன் வேலையை தொடர்ந்தார் ரவி.

“என்னப்பா ரெடி ஆகிட்டிங்களா” என்று வினவியவாறு கண்ணன் மணமகனின் அறை உள்ளே வந்தார். அவர்களோ முன்பே தயார் ஆகிவிட்டு கதை அடித்துக்கொண்டிருந்தனர். மணமகன் தோழர்கள் இருவரும் செதுக்கினார் போல தைக்க பட்ட raymond சூட்ஸ் அணிந்து மிக இளமையாக handsome ஆக சுற்றிக்கொண்டு அனைவரையும் வசிகரித்துக்கொண்டிருக்க, அவர்களுக்கு போட்டியாக அவர்களது மனைவிகளோ அழகாக அலங்கரித்து சுற்றி இருப்போரை மொத்தமாக மயக்கினர். வெளுமையும் இல்லாமல் சந்தன நிறமும் அல்லாது அரை வெள்ளையில் சிவப்பு நிற border வைத்து அதற்கேற்ற அணிகலன்களோடு அழகாய் இருந்தாள் அஹல்யா. அர்ச்சனாவோ தன் நிறத்தை மேலோங்கி காட்டும் வகையில் அரக்கு நிறத்தில் பட்டின் நிறத்தில் முத்துக்கள் வைத்து அலங்கரிக்கப்பட்ட சேலைகட்டி மயக்கினாள். அர்ஜுன் மனைவிக்கு பொருத்தமாக சாண்டல் நிற சூட்ஸ் அணிந்திருக்க, நவீன் கருப்பு நிற சூட்ஸ் அணிந்து சுற்றிக்கொண்டிருந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.