(Reading time: 47 - 93 minutes)

 

லிபெருக்கியில் ஓடிய பாடல் மனதில் புதிதாய் பூத்த மலர் போன்ற உணர்வு தர, அகம் முதல் புறம் வரை அனைத்தும் தூய்மையாய் உணர செய்தது. கண்கள் முழுதும் கனவுகள் கைகோர்த்து நிற்க, ஒவ்வொரு சடங்கையும் ஒரு முகசுளிப்பு கூட காட்டாமல் மனம் நெகிழ செய்தனர் மணமக்கள்... நலுங்கு முதல் ஆரம்பித்து, அய்யர் கூறும் மந்திரங்கள் சொல்லி, தாய் மாமன் மாலை சூடி புத்தாடை தர, அதை மாற்றி வந்து அழகாய் வலம் வரும் மணமக்களையே மற்றவர் கண்கள் தழுவியது. அமர்ந்து இருக்கும் சிலருக்கோ ஒவ்வொரு சடங்கையும் பார்க்க பார்க்க அவரவர் திருமண நிகழ்வு நினைவு வர, இதழோர முறுவலோடு அனைத்தையும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர். மணமக்களை காட்டிலும் அவர்களின் குடும்பத்தில் உள்ள வயது பெண்களுக்கு தான் என்ன செய்வதென்றே புரியாது, சுற்றி வரும் வீடியோ எடுப்பவரை பார்த்து பார்த்து எதர்ச்சியாய் நிர்ப்பது போல பாவனை செய்வதும், மனதில் ஒருவனை கொண்டு திருமணம் ரசிக்கும் பெண்களோ என்னவோ அவர்களின் திருமணமே நடப்பது போல் ஒரு பூரிப்புடன் கண்டுரசிக்க, மண்டபத்திலேயே தன் ஜோடி கொண்ட காளையர்கள் தங்கள் கண்ணசைவில் திருமணத்தை  சுட்டிக்காட்டி அவர்களின் ஜோடிகளை வெட்கப்பட செய்துக்கொண்டிருந்தனர். பெற்றோருக்கு அவர்களின் கடமையில் ஒன்று முடியும் சந்தோஷம், பிள்ளைகளின் வாழ்வில் ஒரு முக்கிய விழா என்று மனம் நிறைந்து நின்று ஆசிர்வதித்தனர். 

அடர்ந்த நீலமும் இல்லாமல் வான் நீலமும் இல்லாமல் இரண்டும் கலந்த கண்ணை பறிக்கும் நீல(cyan) நிறத்தில் சேலை உடுத்தி பட்டிற்கே அழகு சேர்ப்பது போல் தங்க நகைகள் அணிந்து அழகாய் மல்லி கொடியாய் நின்ற மனைவியை புது மாப்பிள்ளை போல பட்டணிந்து கம்பீரமாய் இருந்த அர்ஜுன் ஏதோ பேச வந்து மயங்கி நின்றான். அவன் மயங்கி நிற்க, இன்ப அவஸ்தையை மறைத்து “அச்சோ போங்க போய் அஸ்வத், நிருவ கூட்டிட்டு வாங்க” என்று அனுப்பிவைத்தாள் அஹல்யா... இவன் தான் இப்படி என்று திரும்பி பார்க்கையில் அர்ஜுனை போலவே புது மாப்பிள்ளை போல இருந்த நவீனோ, கையில் விருஷிக்கா ஆசையாய் பேசுவதையும் கவனிக்க மறந்து, திராட்சை கொடியாய் அதே அடர்ந்த நிறத்தில் சேலை கட்டி இரவில் மின்னும் நட்சத்திரமாய் ஒளிரும் அர்ச்சனாவையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றான்.

அதுசரி இது சரிபட்டு வராது என்று நினைத்துக்கொண்டு... “அண்ணா போங்க போய் மாப்பிள்ளைகளை கூப்பிட்டு வாங்க” என்று கூறி கையில் இருந்த விருஷிக்காவை தூக்கிக்கொண்டாள். பட்டு வேஷ்டி சட்டையே என்றாலும், மணமகனுக்கே உரிய கலை எந்த அலங்காரமும் தேவைபடாமல் வந்துவிட, ரோஸ் இதழ்கள் சிரிக்க மாலை அணிந்து மேடைக்கு ஏறி வந்தனர் கம்பீர ஆண் மகன்கள். மேடையில் ஏறி அமர்ந்து மணமகள்களை அழைத்து வர சொல்லும் வரை மணமகன்களுக்கு ஏனோ மேடையே வெருசோடிதான் தெரிந்தது. இருவரும் அடுத்தடுத்து இருந்த பந்தல்களில் அமர்ந்து கை தன்பாட்டிற்கு மந்திரத்திற்கு ஏற்ற மாதிரி அக்னிக்கு அர்ச்சதை தூவ, கண்கள் வழி மீது விழிவைத்து காத்திருந்தது. இவர்கள் இப்படி தேடுவதை நிருவின் அருகில் நின்று பார்த்த நவீனுக்கும், அஸ்வதின் அருகில் நின்று பார்த்த அர்ஜுனுக்கும் ஒரே பாடல் தான் தோன்றியது... ஏதோ சீரியஸ்ஸாக கூறுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு, “தேடும் கண்பார்வை தவிக்க... துடிக்க...” என்று ஒருவரி அவர்கள் காதில் பாடவுமே மணமகன்கள் இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

பொண்ண கூப்பிடுங்க...(இந்த வார்த்தைய கேட்டதும் 2 முகத்துல பல்பு எரியுதே...)   

கையில் தூக்கி இருந்த விருஷிக்கா, இறங்கி மணமகளின் அறைக்கு ஓட, பின்னாலேயே இரு அம்மாக்களும் சென்றனர்.

கதவிற்கு நீளமாய் பின்னலிட்டு நேர்த்தியாய் செய்து கோர்த்த மலர்களின் அலங்காரத்தை காட்டி கண்ணாடியில் முகம் காட்டி அமர்ந்திருந்தனர் மணமகள்கள். வெளியே பார்க்க முர்க்களாய் தெரிந்தாலும், தொட்டால் மென்மையை உணர வைத்து தன் நிறத்தால் பார்போரை கவரும் நிறம் கொண்ட வாடாமல்லியின் நிறத்தில் சேலையுடுத்தி, அன்கங்கமாய் அலங்காரம் மின்ன, முகமெல்லாம் செம்மையும் எதிர்பார்ப்பும் பொங்க காத்திருந்தாள் அனு. சேலைக்கு ஏற்ற நகைகள் அணிந்து என்றும் இருக்கும் அழகை காட்டிலும் அழகாய் மிளிர்ந்து விபுனிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

அவளை தொடர்ந்து அமர்ந்து இருந்த தேஜுவும் அழகிற்கு குறைந்தபாடில்லை. வெளியே பார்க்கவே அமைதியை வெளிபடுத்தி, பெண்மைக்கே உரிய அடக்கத்தை தன் தோற்றத்தால் காட்டி, கோபத்தில் இருப்போரையும் மனம் கரைய கண்குளிர வைக்கும் லாவெண்டர் நிறத்தில் சேலை உடுத்தி அதற்கு பொருத்தமான பாந்தமான நகைகள் அணிந்து அழகாய் சொக்கவைத்தாள் தேஜு. நீளமாய் பின்னலிட்ட கூந்தலில் சேலை நிறத்திற்கு ஏற்ற மலர்களால் அலங்காரம் செய்து அன்ன நடை போட்டு வந்தாள்.

மணப்பெண்களை அழைத்து கொண்டு அருகிலேயே அஹல்யாவும், அர்ச்சனாவும் வர, அவர்களின் செல்வங்கள் இரண்டும் அழகான வேஷ்டி சட்டை அணிந்தும், குட்டி சேலை அணிந்தும் பெண்களுக்கு முன்னே தத்தி தத்தி வந்தனர். வீடியோ எடுப்பவர்க்கே பெண்களை எடுப்பதா இல்லை குழந்தைகளை எடுப்பதா என்று குழம்பி போனது. இனிய கனியாம் இல்லற வாழ்கையை நோக்கி ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வந்த மணமகள்களை அவர்களின் ஜோடியின் கண்கள் தாமாக தொடர்ந்தன. வீடியோ எடுப்பவர் விடுவாரா என்ன, வீடியோ எடுக்கும் இருவரும் இரு மாப்பிள்ளைகளின் வசீகர புன்னகையையும், காதல் பார்வையையும் அழகாய் பிடித்துக்கொண்டனர். 

சிறிது நேரம் மிருதங்க நாதஸ்வர ஓசையில் மூழ்கி போன அனைவரையும் எழுப்பி கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று அய்யர் கையால் அசைக்க, சட்டென நின்று போனது வாத்தியங்கள். கூடியிருந்தோர் ஒரு நொடி தயங்க அடுத்த நொடியே இனிமையாய் ஒலித்தது பாடல்...

“மாங்கல்யம் தந்துனானேனா மம ஜீவன ஹேதுனா...

தண்டே பத்னாமி சுபகே சஞ்சிவ சரதாச்சதம்...

என்றென்றும் புன்னகை முடிவிலா புன்னகை

இன்று நான் மீண்டும் மீண்டும்

பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே...

ஓ என்னுயிரே...ஓ என்னுயிரே...

ஓ என்னுயிரே...ஓ என்னுயிரே...

மாங்கல்யம் தந்துனானேனா மம ஜீவன ஹேதுனா... (மாங்கல்யம்....)

கண்டே பத்னாமி சுபகே சஞ்சிவ சரதாச்சதம்...”

எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில் எதிர்பாராத விதமாய் பொருத்தமான பாடல் ஒலிக்க, உள்ளம் ரெட்டிப்பு மகிழ்ச்சியில் பொங்க, வெட்கமெனும் குடையை நீக்கி காதலெனும் சாரலில் நினைந்தவாறே நான்கு ஜோடி கண்கள் ஒன்றோடு ஒன்று கலக்க, உரிமையான மூன்று முடுச்சினை போட்டனர் அஸ்வத்தும் நிருவும்... காத்திருந்து கனிந்த காலம் பொற்காலமாய் மின்ன தாலி கட்டியபின்னும் கையை எடுக்க மறந்து நின்ற தம்பிகளை உலுக்கி எழுப்பினர் அக்காகள். ஆச்சர்யம் தாங்காமல் இது உங்க வேலை தானா என்று மணமக்கள் அண்ணன் அண்ணிகளை பார்க்க, அவர்களோ பெற்றோரை கண்களால் சுட்டி காட்டினர். எல்லை இல்லா ஆனந்தம் பொங்க அனுவிற்கும் தேஜுவிற்கும் ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது. அண்ணியை இறுக அனைத்துக்கொண்டவர்களை விளக்கி... “பார்த்தும்மா இப்போவே ரொம்ப பொறாமையோட பார்க்குறான் நீ கொஞ்சம் தள்ளியே இரு” என்று கிண்டல் செய்தாள் அர்ச்சனாவும் அஹல்யாவும்.

அதன்பின் சின்ன சின்ன விளையாட்டுகள் நடக்க, அம்மி மிதித்து தன்னவனின் கைப்பட்டு கூசிய பாத விரல்களை கஷ்ட்டப்பட்டு நிறுத்த, அவர்களுக்கு வலிக்காமல் மெட்டி போட்டு விட்டனர் கணவன்மார்கள்... தன்னவனின் மீது இவ்வளவு காதல் இருக்கும் என்று அவர்களே உணராத தருணத்தை உணர்த்தி காட்டியது திருமணம். அய்யரே கூறாவிட்டாலும், ஜோடிகளின் கைகள் இணைந்தே இருந்தது... மணமகன் மணமகளின் கையை பிடித்து அக்னியை சுற்றிவர சத்தியம் செய்து கொண்டனர் இருவரும்...

“கண்ணே கனியே உனை கைவிட மாட்டேன்...

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே

தூய்மையான என் சத்தியம் புனிதமானது.

...

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்

பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்

செல்ல கொலுசின் சிணுங்கள் அறிந்து சேவை செய்வேன்..

நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்

...

கை பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்கு கேளேன்...

உன்வொரு வாதமும் முடியும் போதும் உன்னிடம் தோர்ப்பேன்...

அர்த்த ஜாம திருடன் போல அதிர்ந்து பேசேன்..

காமம் தீரும் பொழுதிலும் எந்தன் காதல் தீரேன்...

....

உன் கனவு நிஜமாக எனையே தருவேன்

உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.