(Reading time: 15 - 30 minutes)

 

ந்த பேய் காற்று வந்த வழியே திரும்ப......மரணத்தன்மை இழந்து மறுபடியும் பிண நாற்றமுள்ள புழுதிக்காற்றாகி விழுந்து கிடந்தவன் முன் சுழன்று முடிந்தது.

அலறியபடி எழுந்த அவன் ஓலம் அமனுஷ்யம்.

தெய்வமே துணை செய்!! துடித்தது இவள் மனது.

தோ இவள் ஜெபம் கேட்டவர் கரை இறங்கி வருவது இங்கே தானா???

வந்து கொண்டிருந்தார் அவர் தன் வாலிப சீஷர்கள் பின் தொடர.

பொழுது புலர்திருந்தது புரிகிறது இவளுக்கு.

தூரத்தில் தடை செய்ய பட்ட தொழில் செய்து கொண்டிருந்தவர் சிலர் தங்கள் தொழில் இடையில் இவர்களைப் பார்க்க

“Come out of the man, you evil spirit.” அவரின் ஆர்பாட்டமில்லாத கட்டளை.

தூரத்திலிருந்தான் அந்த பேய்மனிதன். இப்பொழுது இவரிடமாக ஓடி வந்தான். அவன் அடிக்க தொடங்கினால் பிடித்து நிறுத்த மொத்த ஊர் போதாது என அறிந்த அங்கிருந்த அவ்வூர் மக்கள் – தடை செய்யபட்ட தொழில் செய்பவர்கள் அதிர்ந்தும், அடுத்து என்ன என்று சுவாரஃஸ்யமாகவும்????? பார்க்க

அந்த பேய்மனிதன் ஒரு பெரும் காற்றின் குரலில் கதறினான். கெஞ்சினான்.

புரியவில்லை இவளுக்கு.

அவரின் ஒரு தலை அசைப்பில் அவனிடமிருந்து பிரிந்து பறந்தது அக் காற்று பார்த்திருந்த தொழிளாலிகள் புறமாக.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவர்கள் தொழில் கூடத்தை தூக்கியபடி சென்று மறைந்தது பெரும் பள்ளத்தாக்கினுள். அழிந்தது அசுத்தம்.

அவர் பாதம் பக்கம் பணிவாய் குணமாய் பாசமாய் அமர்ந்திருந்தான் தெளிந்திருந்தவன்.

புரண்டு படுத்தாள் சுகந்தினி. நிர்மலமான வானம் மட்டுமே அவள் மனதிற்குள்.

“நல்லது செய்ய நினைப்பவனை எதிர்க்கும் தீமை” மனதிற்குள் ஆண்டவர் குரல்.

வயிற்று வலியின் காரணம் புரிந்தது அவளுக்கு.

“அசுத்த ஆவிகள் அடி தாங்க தேவை பாவம்.”  

அப்படியானால்???

அந்த விடைபெற்ற பேய்காற்று செல்லும் போது தன்னோடு எடுத்து சென்ற தடை செய்யபட்ட  தொழில் ஞாபக படுத்தப்பட்டது அவளுக்கு. அசுத்த ஆவிகள் தங்க பாவம் தேவை.

அப்படியானால் தயனி தவறு செய்கிறாளா? என்ன பாவம் அவளிடம்?   புரியவில்லை சுகந்தினிக்கு.

அல்லது அவளும் ஏதாவது நன்மை செய்ய முயலுகிறாளா இப்படி பேய்களால் தொல்லை செய்யப்பட???

முழுவதுமாய் விழித்துவிட்டாள் சுகந்தினி.

யனி விழித்தெழும் போது அபிஷேக் அருகில் விழித்தபடி படுத்திருந்தான். இரவெல்லாம் அவன் தூங்கவில்லை என்பது அவன் கண்களில் தெரிந்தது.

தயனிக்கு இருக்கும் மற்ற எல்லா கவலையைவிட இது பெரிதாக தெரிந்தது.

“நீங்க தூங்கலையா..அபிப்பா?”

கவலையும் கரிசனையும் நிரம்பிய குரல்.

அவள் உணர்வு அவனுக்கும் புரிய

“இல்லடா....சும்மா யோசிச்சுகிட்டு இருந்தேன்....எதாவது லாஜிக் புரியுமான்னு...? அம்மாவுக்கும் இங்க நடக்கிறதுக்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமோ..? அப்படின்னா என்னதுன்னு...? அம்மாவோட கடந்த கால நடவடிக்கை பலதும் புரியவே இல்ல....அப்பா இறந்ததை என்ட்ட கூட சொல்லலை.....வீட்டிலயே பூட்டி வச்சுட்டு....உங்க வீட்டுக்கு வந்து....உங்கப்பாவ...அப்படியாவது உன்னை எனக்கு கல்யாணம் செய்து.....எங்க வீட்டுக்கு கூட்டி வந்து....வீட்டில இருந்த வேலையாட்கள் நிறைய பேரை வேலையவிட்டு எடுத்துட்டு....உன்னைய பாடா படுத்தி....இது வெறும் பணத்துக்காகன்னு எனக்கு தோண மாட்டேங்குது...வேற எதோ...? “

அவன் தன் நினைவுகளை அவளிடம் பகிர்ந்துகொள்ள பந்து உருண்டது அவளுக்குள். அந்த மரகத வீணை பற்றி இவள் இன்னும் இவனிடம் தெரிவிக்கவில்லை. சொல்ல வேண்டும் எனவும் வேண்டாம் எனவும் தவிக்கும் இவள் மனம்.

ஆனால் அந்த வீணைக்கும்  இவளுக்கு இப்பொழுது நடக்கும் நிகழ்வுக்கும் என்ன சம்பந்தம்??

அதே நேரம், இவளது அத்தை தன் கணவனின் சடலத்தை ஒளித்து வைக்க காரணம் என்ன? அவர் மரணத்தை மறைத்த நோக்கம்?   

‘விஷயத்தை தன் கணவனிடம் சொல்லலாமா?’  ‘வேண்டாம் பப்பு... ‘ எமிலி சொன்னது ஞாபகம் வந்தது. இவள் மாமனாரே வேண்டாம்னு சொன்னாரே.....அது இந்த விஷயத்தை இவனிடம் சொல்ல கூடாது என்பதைத்தானா?? அப்படி அவர் சொன்னது இதை பற்றி என்றால்  இவனுக்கும் இது தெரியாமல் இருப்பதுதானே நல்லது.

“இது என்னன்னு புரிஞ்சா இந்த ப்ரச்சனைக்கும் விடை கிடைக்கலாம்....சோ நான் திரும்ப அங்க போய்ட்டு வரலாம்னு நினைக்கிறேன்.....எதாவது செய்தாகனும் தயனிமா...” அவன் தவிப்பும் துடிப்பும் புரியத்தான் செய்கிறது.

“ஆனால் இவள் இங்கே மீண்டும் இவனைப்பிரிந்தா....?”

நானும் வருவேன்” அறிவித்தாள்.

சட்டென திரும்பிப் பார்த்தான். நம்ப முடியவில்லை என்ற பாவம் படு தெளிவாக தெரிந்தது அவன் முகத்தில்.

“உங்களைவிட்டுட்டு இருப்பதுக்கு நான் எங்க வேணும்னாலும் வருவேன்....”

அடுத்த நாள் இருவரும் சென்று சேர்ந்தது தயனியின் பிறந்த வீட்டிற்கு.

பெரும் பொறுப்புகள் காத்திருந்தன இருவருக்கும்.

தயனியின் அனைத்தும் அவளது அத்தைக்கு சென்றிருந்தாலும் இப்பொழுது அவரது மறைவுக்கு பின் அது அபிஷேக்கினுடையதாகி   அவனின் வருகையை எதிர்பார்த்திருந்தன.

சென்றதும் அபிஷேக் செய்த முதல் வேலை அனைத்தையும் அவள் பெயருக்கு மாற்றியதுதான்.

உரிமை இவளுடையதாகிவிட்டாலும்   அவளின் அணைத்து செயல்களுக்கும் இவன் துணை தேவைப்பட  இவன் நினைத்து வந்தது போல் தேடும் வேலை எதுவும் எளிதாக இல்லை.

ஆனாலும் செய்யபடும் நியாயம் தெய்வத்தின் பாதுகாப்பை தேடித்தரும் என்று தோன்றியது அவனுக்கு.

இரு வாரம் சென்றிருந்தது. இன்னும் ஒரு வாரம் அபிஷேக்கால் அங்கு இருக்க முடியும். அடுத்து அவனது அடுத்த பட வேலை அவன் தொடங்கியாக வேண்டும். இல்லை இழப்பு இவனது குழுவைப் பாதிக்கும்.

அன்று அந்த முதியவர் அபிஷேக் மற்றும் தயனியைத்தேடி வந்தார். தயனியின் குடும்ப தொழிலை பலகாலம் இவளது தந்தையின் வலக்கரமாக இருந்து நிர்வகிப்பவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.