(Reading time: 10 - 20 minutes)

 

"முடிச்சாச்சு! முடிச்சாச்சு! கிளம்பலாம் வா!"-நிபந்தனைகள்  அனைத்தையும் முடித்துக் கொண்டு,இருவரும் வெளியே வந்தனர்...

"அப்பா,எப்படி இருக்காருடா?பெரியம்மா...ஸ்ரீராம்,மாமா,அத்தை,அம்மா"

"எல்லோரும் நலமாக இருக்கின்றனர் ராஜகுமாரி!"

"ராஜகுமாரியா?"

"ஆமா...இனிமே,வீட்டில உன் ராஜ்ஜியம் தான் நடக்கும்!அதான்,ராஜகுமாரி..."

"அப்போ,நான் இருக்கிறது உனக்கு தொல்லைன்னு சொல்லாம சொல்றீயா?சரி..நான் கிளம்புறேன் போ!"

"அம்மா..தாயே..."

"இப்போ எதுக்கு பிச்சை எடுக்குற?"

"பிச்சையா?அட...ச்சே!ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரை பார்த்து,என்ன பேச்சு பேசுற நீ?"

"சாப்ட்வேர் என்ஜினியர்?நீ?"

"ஆமா...டேய்! முதல்ல சாப்ட்வேர்ன்னா என்னன்னு சொல்லுடா!"

"இது என்ன பிரமாதம்?செடியை பிடுங்கினா,வரறது சாப்ட்வேர்!"

"அப்போ மரத்தை பிடுங்கினா,வர்றது ஹார்டுவேர்ரா?"

"டெப்பனட்லி..."

"உன்னை..."

"சரி...வா! நடுரோட்ல அசிங்கப்படுத்தாதே!"

"அப்போ,வீட்டிக்கு போய் அசிங்கப்படுத்துறேன் வா!"

"ஆஞ்சநேயா!"

"இப்போ,எதுக்கு அவரை கூப்பிடுற?"

"நான் ஆஞ்சநேயர் பக்தன்ல!"

"அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேனே!"

"விடும்மா! விடும்மா!"-இவ்வாறு பேசிக் கொண்டு காரில் ஏறி இருவரும் வீடு வந்துவிட்டிருந்தனர்.

அவர்கள் கார் வந்ததைப் பார்த்த அவர்கள் தம்பி ஸ்ரீராம்,

"அத்தை...அக்கா வந்தாச்சு!"-என்று குரல் கொடுத்தான்.

"இதோ வந்துட்டேன் ராம்!"-என்று கூறியப்படியே ஆரத்தி தட்டை எடுத்துக் கொண்டு வந்தார் விஷ்வாவின் தாய் லதா.

"வா! நிலா! எப்படி இருக்க?"

"நல்ல இருக்கேன் பெரியம்மா! நீங்க...எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்மா!"-என்றப்படி ஆரத்தி எடுத்தார்.

"உள்ளே! வாம்மா!"- உள்ளே வந்ததும்,

"மாமா!உங்க பொண்ணை ஒப்படைச்சிட்டேன்!"-என்றான் விஷ்வா.

(என்னடா,முறை மாறுகிறதே,என்று குழப்புகிறதா?வெண்ணிலா சிறு வயதிலே தாயை இழந்தவள்.அவள் தந்தை வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.அவருக்கு, தொழில் மட்டுமே மூலாதாரமாய் இருந்தது.அவள் சிற்றன்னைக்கு அவளை தவிர மற்ற அனைத்தையும் கவனிப்பதற்கு நேரம் இருந்தது.தாய் பாசத்திற்காக ஏங்கியவளுக்கு வடிகாலாய் அமைந்தது,அவள் தாயின் சொந்தங்கள் மட்டுமே.தன் தங்கையின் வாரிசை தன் வாரிசாக ஏற்று அவளை தம்மோடே வைத்து பராமரித்து,அவளை ஒரு குழந்தை நல மருத்துவராய் உருவாக்கி வி.எம். ஃப்வுண்டேஷன்ஸ் என்ற ஒன்றை அவள் உருவாக்கி,இன்று அவளை ஒரு அகிலம் அறிந்த மங்கையாக மாற்றியுள்ளனர்.)

"எப்படி இருக்கீங்கப்பா?"-என்றாள் தான் தந்தையாக ஏற்ற மகேந்திரனிடத்தில்!!!

"நல்லா இருக்கேன் நிலா! நீ இன்னும் மாறவே இல்லையா?"

"என்னாச்சுபா?"

"இன்னும் ஒட்டடைகுச்சி மாதிரி இருக்க?"

"அப்படி கேளுங்க!"-என்றப்படி வந்தார் அவள் அன்னை மீனாட்சி.

"அம்மா!"

"என்ன அம்மா?இன்னும் அதே 46 கிலோவில தான் இருக்கியா?இல்லை...45,44 ன்னு முன்னேறி இருக்கியா?"

"45 ம்மா!"

"ம்...பாருங்க...உங்க பொண்ணை!"

"நீ தான் வெயிட்டை ஏத்தி விடேன்."

"வந்துட்டால,நல்லா ஏத்துறேன்!"

"அப்படி போடுங்க பெரியம்மா!"-ஸ்ரீராம்.

வெண்ணிலா அவனை முறைத்தாள்.

"அது...வந்து...அக்கா!"

"போடா! சின்ன தடியா!"

"மாமா,அத்தை,பெரியப்பாலாம் எங்கே?"

"முக்கியமான வேலையா மதுரைக்கு போயிருக்காங்க..."-மீனாட்சி.

"சரி...என் பொண்ணு களைப்பா இருப்பா,அவ ரெஸ்ட் எடுக்கட்டும், அப்பறமா பேசுங்க!"-மகேந்திரன்.

"நிலா! நீ போய் ரெஸ்ட் எடு!"

"சரிம்மா!"-வெண்ணிலா தன் அறைக்கு சென்றாள். கதவை தாளிட்டாள். பெருமூச்சு ஒன்று அவளிடத்தில் வெளியானது.

"எவ்வளவு அழகான குடும்பம் எனக்கு வாய்த்தது...என் மேல் உயிரையே          வைத்திருக்கின்றனரே?அம்மா உயிரோடு இருந்திருந்தாலும் இந்த நேசம் கிடைத்திருக்காது!"-அவள் கண்கள் சற்றே கலங்கின.

ஏதேதோ நினைவலைகள் அலை மோதின,பயணம் செய்தது மேலும் சோர்வினை அளிக்க உறங்க சென்றாள்.நன்றாக உறங்க தொடங்கினாள்.

"ஞ்சித்!"

"என்னம்மா?"

"நான் உனக்கு பிடிக்காத விஷயத்தை பற்றி பேச நினைக்கிறேன்.."-புரிந்துவிட்டது அவனுக்கு தன் தாய் யமுனா,தன் திருமண விஷயத்தைக் குறித்தே பேச இருக்கிறார்.

"சரி..பேசுங்க...நான் கிளம்புறேன்!"

"ஏன்?"

"எனக்கு பிடிக்காத விஷயத்தை பற்றி நான் பேச விரும்பலை."

"ரஞ்சித்,எதுக்குடா நீ உன் கல்யாணத்தை தள்ளிப் போட பார்க்கிற?"

"தள்ளிப் போடலைம்மா... கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன்!"

"ரஞ்சித்??"

"எனக்கு இஷ்டமில்லை...என் வாழ்க்கையை யார் கூடவும் பங்கு போட பிடிக்கலைம்மா!"

"சித்தப்பா!"-அழகாய் அழைத்தான் கார்த்திக்கின் மகன் ராஜா.

"என்னடா?"

"கோபமா ஏன் பேசுற?"

"இங்கே இருக்கிற எல்லாரும் கோபமா பேச  வைக்கிறாங்கடா!"

"பாட்டி,கேட்கறதுல்ல என்ன தப்பு?அவங்க உன் நல்லதுக்கு தானே சொல்றாங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.