(Reading time: 10 - 20 minutes)

 

"னக்கு புரியாது ராஜா! உன் பாட்டி சொல்றதை என்னால செய்ய முடியாது!"

"சரி...விடு! எனக்கு இது வேணாம்...வா வெளியே போகலாம்!"

"ராஜா! பெரியவங்க பேசிட்டு இருக்காங்கல?"-என்று தன் மகனை கடிந்தாள் காயத்ரி.

"அண்ணி ப்ளீஸ்...இந்த வீட்டில என்னை பற்றி புரிஞ்சிக்கிட்டவன் இவனா தான் இருக்கான்..."

"இல்லை ரஞ்சித்.."

"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன்!"-ரஞ்சித் எழுந்து சென்றுவிட்டான் ராஜாவை அழைத்துக் கொண்டு!!!

"ஏன்?இந்த பையன் என்னை புரிஞ்சிக்கவே மாட்றான்னு தெரியலையே!"-கலங்கிவிட்டார் யமுனா.

"அத்தை ப்ளீஸ்...அழாதீங்க!அவர் மாறிவிடுவார்!"

"எத்தனை நாள் காத்திருக்கிறது காயத்ரி?அவனுக்கு அப்படி எந்த பிரச்சனை கூட சொல்ல மாட்றானே??மூணு வருஷம்,என் ரஞ்சித்தை நான் தொலைத்து மூன்று வருடங்கள்..."-பேச்சு வராமல் தவித்தார். திடீரென்று தன் மகனின் நடவடிக்கைகளில் மாறுதல் தெரிந்து,விதையாய் இருந்தது விருட்சமானால்??எந்த தாய்க்கு கவலை இருளென சூழாமல் இருக்கும்??

ன்றிரவு...தாமதமாக வந்தான் ரஞ்சித்.அவன் கைகளில் ராஜா உறங்கிக் கொண்டிருந்தான்.

"அண்ணி!"

"சாப்பிட்டீங்களா?"

"சாப்பிட்டோம்!"

"ஏன் இவ்வளவு நேரம்??"

"கொஞ்சம் கெஸ்ட் ஹவுஸ்க்கு போயிட்டு வந்தோம்!"-அவள் எதையும் கேட்பதாய் இல்லை.. கேட்டாலும் அவன் பதில் சொல்வதாய் இல்லை என்பது புரிந்தது.

"சரிங்க...நீங்க போய் தூங்குங்க!"-ராஜாவை வாங்கிக் கொண்டாள்.

"சரிங்க...அண்ணி!"-ராஜா தன்னறைக்கு வந்து படுத்துக் கொண்டு கண்களை மூடினான்...உறக்கம் வர மறுத்தது...புரண்டு படுத்தான்...ம்ஹீம்...உறக்கம் வரவில்லை.       நித்திராதேவியோடு போரிட்டு கொண்டான். அதிலும் பாருங்கள்...நித்திரா தேவியே வாகை சூடினாள்.இதற்கு மேல் முடியாது என்று எழுந்து சென்று வானில் வெண்ணிலவாய் பிரகாசித்து கொண்டிருந்த வான்நிலவோடு மௌன சம்பாஷனை நடத்திக் கொண்டிருந்தான். வட்டநிலாவாய் அவனுக்கு அவளின் முகம் தெரிந்து,அவனை வதைத்தது.

வேண்டாம் என்று மறுத்தாலும்,அவன் நினைவுகளில் அவளோடு வாழ்ந்த நாட்கள் வராமல் இல்லை.

"டியே! இங்கே என்னடி பண்ணிட்டு இருக்க?"

"பார் ரஞ்சு...இந்த நிலா எவ்வளவு அழகா இருக்கு?"

"ஐயோ...எதை பார்த்தாலும் அழகா இருக்குன்னு அது கூட போய் ரொமான்ஸ் பண்றாளே??"

"உனக்கு பொறாமை!"

"நீ சொன்னாலும், சொல்லாட்டியும் அதான் உண்மை.என்னை தவிர இருக்கிற எல்லா பொருள் கூடவும் டூயட் பாடு!"

"போடா! அதுக்கு உயிர் இருக்கும்."

"இன்னும்,இருந்துட்டா...என் நிலைமை??"

"திண்டாட்டம் தான்!"

"எது?"

"சும்மாப்பா!"

"உன்னை..."-அவன்,அவள் செய்யும் குறும்புகளை ரசிக்காத நாள் இல்லை. அவர்கள் எழுதும் காதல் மடல்களை போல் கம்பனும் எழுதியதில்லை.

"என்ன?பண்ணுவியாம்?"

"ஒண்ணும் பண்ண முடியலையே!"-நினைத்து பார்த்தவனுக்கு மனதில் இல்லா பாரம் புகுந்தது. காதலர்கள் தனிமையில் தவிக்கும் நொடியானது கொடுமையான ஒன்றே!!!

எந்த ஒரு ஆண்மகனும் சரி,பெண்ணும் சரி...பொழுதை கழிப்பதற்காகவோ, விளம்பரத்திற்காகவோ காதலிப்பதில்லை அல்லவா?மனதில் கவலையும்,ஏக்கமும்,தனிமையும் வியாபிக்கும் போது தன் காதலின் அன்பான ஆறுதலானது எந்த மனிதனுக்கும் தேவைப்படும் அல்லவா???

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் ரஞ்சித்.

"நிலா!"

"இதோ வந்துட்டேன்மா!"

"வா சாப்பிடலாம்!"

"அம்மா! நான் கொஞ்ச நாள் கோயம்புத்தூர் போயிட்டு வரட்டா?"

"ஏன்?"

"ப்ளீஸ்மா!"

"சரி...உனக்கும் ஓய்வு தேவை தான்! எத்தனை நாள் தான் நீயும் அந்த ஃபவுண்டேஷன்ஸ் மட்டும் கட்டிட்டு அழுவ,போயிட்டு வா!"

"தேங்க்ஸ் மா!"

"கோயம்புத்தூர்க்கு ஃபோன் பண்ணி சொல்றேன்."

"ம்மா...கோயம்புத்தூரால பேச முடியாதும்மா!"

"அடி கழுதை!"

"ஸாரி மிஸ்!"

"ஓடு!"-வெண்ணிலா ஓடி விட்டாள்.மீனாட்சி முன்பொரு காலத்தில் ஆசிரியையாக பணியாற்றினார்.அதனால், நிலா அடிக்கடி அவரை மிஸ் என்று கேலி செய்வது வழக்கம்.

இது அடுத்த காதல் காவியம்...வித்தியாசமான திருப்பங்களுடன்,இரு மனதின் துணை கொண்டு காதல் விளையாடும் கண்ணாமூச்சி!!!

நடக்க இருக்கும் விளையாட்டை கண்டு களிக்க தயாரா???

தொடரும்

Episode # 02

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.