(Reading time: 21 - 42 minutes)

பின்னர், எல்லாம் அவர்கள் திட்டப்படி சென்று கொண்டிருந்த வேளை, சாகரியின் பெற்றோர், மறைவு பற்றி கேட்டதும், அவளுக்கு இருக்கும் கஷ்டத்தில் இது வேறா என்று உண்மையாகவே வருந்தினான் இலங்கேஷ்…

பின், தினேஷ், ஆதர்ஷை அவளிடம் இருந்து பிரித்து, அவளை மும்பைக்கு வரவழைத்தான்…

சாகரியின் மனம் மாறிடாதா என்ற நப்பாசையுடன் அவளுக்காக காத்திருந்தான் ஒரு வருடம் வரை அவளின் வார்த்தைகளுக்காக…

ஆனால், அவள் அசைந்தே கொடுக்கவில்லை… பின்னர், விபத்தில் அவள் சிக்கியதும், இலங்கேஷ் துடித்தே போனான்…

அவளை எப்படியாவது பார்த்திட வேண்டும் என்றெண்ணினான்… ஆனால், ஹரீஷின் கண் பார்வையில் மருத்துவமனையில் இருக்கும் அவளை எப்படி நெருங்குவது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்த போது சைதன்யா தான் அவ்னீஷ் உதவியுடன் அவளை இங்கு அழைத்து வருகிறேன் என்றாள்… இலங்கேஷும் சரி என்றான்…

அவளை அழைத்து வந்த மூன்றாம் நாள், அவள் கண் விழிக்க இருந்த நேரத்திற்கு சற்று முன், சைதன்யா இலங்கேஷை அறைக்கு வெளியே போக சொன்னாள்… அவனும் சென்றான்…

அவன் சென்றதும் கதவை சாத்தியவள், கூர்ந்து சாகரியையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்… உனக்கு நினைவு எதும் இல்லை, இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால், என் அண்ணனின் வாழ்வும் இப்படியே இருந்து விடும்… மன்னித்து விடுண்ணா, மன்னித்துவிடு சாகரி… என்று சொல்லியவள், சாகரியை நெருங்கி அவள் உடலில் சில காயங்களையும், தன் விரல் தடங்களையும் ஏற்படுத்தினாள்…

பின் இலங்கேஷிடம் எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்துவிட்டு அறைக்கு வெளியே காத்திருந்தாள்…

அதே போல், இலங்கேஷ், அவளிடம் பேசி முடித்துவிட்டு அவளை நெருங்கிய போது அவள் அலறலுடன் மயங்கி சரிந்தாள்..

அவள் சத்தம் கேட்டு சைதன்யா அறைக்குள் வந்த போது, நினைவில்லாமல் கீழே கிடந்தவளை தூக்கி கட்டிலில் படுக்கவைத்துவிட்டு, வெளியே சென்றுவிட்டாள்…

இலங்கேஷின் விரல் நுனி கூட அவள் மீது பட்டிருக்கவில்லை… இந்த உண்மை சைதன்யாவிற்கும், இலங்கேஷிற்கும் மட்டுமே தெரியும்…

ஆனால், சாகரியோ, அவனால் தான் களங்கப்படுத்தப்பட்டவள் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்…

அவள் மேலும் தவறு இல்லை… உன்னோடு வாழ்ந்தவன் என்று ஒருவன் சொல்லும்போது அதை நம்பவும் அவள் முயலவில்லை… ஆனால், சமயங்களும், சந்தர்ப்பங்களும் அவனுக்கு சாதகமாக இருக்கும்போது அவள் தான் பாவம் என்ன செய்ய முடியும்???...

கிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லி அங்கே வந்தவளை ஹரி இவள் தானா அத்தனைக்கும் காரணம் என்பது போல் பார்க்க…

ஆதியோ அவள் குரல் வந்த திசையை கூட திரும்பி பார்க்கவில்லை…

வா சது… இத்தனை நாள் நீ காத்திருந்ததற்கு பலன் கிடைத்துவிட்டதும்மா… இங்கே வா… என்று தங்கையை அருகே அழைத்தான்…

அவள் வந்ததும், ஆதியின் அருகே செல்ல, அவன் விலகினான்…

என்ன ஆதி?... ஏன் விலகிறாய்…. என்ற இலங்கேஷின் கேள்விக்கு ஆதி பதில் அளிக்கவில்லை…

முதன் முதலில் அவனை தன் எதிரே பார்த்தாள் சைதன்யா… புகைப்படத்தில் இருந்தவனுக்கும் இவனுக்கும் பெருமளவு வித்தியாசம் இருந்தது… சற்றே இளைத்து, கலை இழந்த முகத்துடன் காணப்பட்டான் ஆதர்ஷ்…

அவள் அவனையே பார்க்க, அவனோ அவளை சற்றும் பார்த்தானில்லை…

அது அவளுக்கு கோபத்தை உண்டாக்க… அவள் தமையனை விட்டு அகன்றாள்…

சது… எங்கே செல்கிறாய்?... என்றபடி இலங்கேஷும் அவள் பின்னே செல்ல..

ஹரி… ஆதியிடம், இதற்கு மேல் இங்கே இருக்க வேண்டாம் ஆதி… என் மனதிற்கு சரி என்று படவில்லை… வா என்று ஆதியின் கைப்பிடித்து இழுத்தான்…

ஆதி அசையவே இல்லை…

வாடா… போயிடலாம்… சொல்வதைக் கேள்… என்று ஹரி வற்புறுத்திக்கொண்டிருந்த போது,

என்னைப் பார்க்க கசக்கத்தான் செய்யும்… ஆனால், இவளைப் பார்க்க கசக்காது அல்லவா?... என்றபடி சாகரியின் கையைப்பிடித்து இழுத்து ஆதர்ஷின் முன் நிறுத்தினாள் சைதன்யா…

இமைகளை கூட மூடி திறக்காது சாகரியை மட்டுமே பார்த்தான் மனதில் குடி கொண்ட பெருங்கவலையுடன்…

என்னை மன்னித்துவிடு சீதை… உன்னை இந்த துஷ்டர்களின் கையில் மாட்டும்படி வழி செய்த என்னை மன்னித்துவிடு…. என்று அவள் விழிகளைப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருந்தான் ஆதர்ஷ்…

ஹரியோ, ரிகா இங்கே எப்படி என்று புரியாமல் ஆதர்ஷையும் சாகரியையும் மாறி மாறிப் பார்த்தான்…

ஹரிக்கு ஏதோ கொஞ்சம் விளங்கிற்று… வாடா போகலாம்… என்று வற்புறுத்தி ஆதியை அழைத்த போது அவன் வராத காரணம் இப்போது புரிந்தது ஹரிக்கு… ஆக, ரிகா இங்கே வரவழைக்கப்படுவாள் என்று அறிந்து தான் ஆதி இன்று இலங்கேஷை சந்திக்க முன் வந்திருக்கிறான் என்ற உண்மையும் அவனுக்கு உரைத்தது…

சாகரி ஆதர்ஷின் பார்வையில் நிலை குலைந்தாள்… அவனை ஒரு முறை மீண்டும் பார்க்க வேண்டும் என்று துடித்தவள், இப்போது நேரில் பார்க்கிறாள், அதுவும், தன் வாழ்வை நாசமாக்கியவன் முன்னரே... என்று எண்ணியவள், சட்டென்று ஆதர்ஷைப் பார்ப்பதை தவிர்த்தாள்… அவளது தலை நிலம் நோக்கி குனிந்தது…

அவள் நிலம் பார்க்க, ஆதர்ஷ், அவளை விட்டு இன்னமும் பார்வை அகற்றவில்லை…

சாகரியைப் பிடித்திருந்த சைதன்யா விரலால் அவளை அழுத்த, சாகரிகா நிமிர்ந்து ஆதர்ஷைப் பார்த்தாள்…

நீங்க ஒரு உதவி செய்யணும்… செய்வீங்களா?... - சாகரி

செய்வீங்களான்னு என்ன கேள்வி… என்ன செய்யணும்னு சொல்லு… செய்யுறேன் – ஆதி

நீங்க… நீங்க… கல்யாணம் பண்ணிக்கணும்…. – என்றவள் சற்றே முகம் திருப்பிக்கொண்டாள்…

நான் கல்யாணம் செய்துக்கணுமா?... சரி செய்துக்கறேன்… என்றான் அவனும் சட்டென்று…

சாகரி திரும்பி சைதன்யாவைப் பார்க்க, அவள் முகத்தில் புன்னகை வந்திருந்தது…

இலங்கேஷும் சற்றே நிம்மதி அடைந்தான்…

சாகரி அங்கிருந்து நகர முற்பட்ட போது, ஆதர்ஷின் குரல் அவளை தடுத்தது…

கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டு நீ எதுவும் சொல்லாமல் போனா என்ன அர்த்தம்டா?...

அவள் திரும்பி நின்று கஷ்டப்பட்டு வரவழைத்துக்கொண்ட குரலில், இதில் நான் சொல்ல என்ன இருக்கு… உங்களை கல்யாணம் பண்ணிக்கப்போற பொன்னுகிட்ட பேசுங்க… என்று அவள் முடிக்கும் முன்,

அவளிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறேன்…. என்றான் ஆதர்ஷ் சட்டென்று…

இலங்கேஷும், சைதன்யாவும் அதிர்ச்சியுடன் பார்க்க, ஹரியோ முகத்தில் விரிந்த புன்னகையுடன் ஆதியை பெருமையாக பார்த்தான்…

ஹரியின் பார்வையையும், புன்னகையையும் கண்ட சைதன்யா ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றாள்…

நீங்க கல்யாணம் பண்ணிக்கப்போறவ, எப்படிப்பட்டவன்னு உங்களுக்கு தெரியுமா?... என்று அவள் ஆதர்ஷைப் பார்த்து கேட்க,

சாகரி அதிர்ச்சியுடன் சைதன்யாவைப் பார்த்தாள்…

என்ன சாகரிகா,… நான் வேணும்னா அவரிடத்தில் தெளிவா சொல்லவா?, உன் வாழ்க்கையில் என்ன நடந்ததென்று…. என்று சைதன்யா சொல்லி முடித்த வேளை,

சாகரிகா, வேண்டாம்… ப்ளீஸ்… எதையும் சொல்லாதீங்க… சொல்லிடாதீங்க…  நான் அவரிடம் பேசுகிறேன்… ப்ளீஸ்… எதையும் சொல்லாதீங்க… என்று கெஞ்சினாள்…

அப்போ பேசு…. அவரிடம்… என்றாள் அவளும் குரோதமாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.