(Reading time: 31 - 62 minutes)

பெண்கள் அனைவரும் தயாராகி கீழே வந்த போது, செல்லம்மாப்பாட்டி, அனுவையும், காவ்யாவையும் சமையலைறைக்குள் அழைக்க,  

நந்து-அபியை தயார் செய்வதற்காக கோதை, மயூரியையும், ஷன்வியையும் அனுப்பி வைத்தார்…

அம்மா… அப்போ சித்து?... என்று கேட்ட ரிகாவை ஏற இறங்க பார்த்தவர்,, என்ன சொன்ன நீ… என்று  கேட்க…

இல்லம்மா… இல்ல… அத்தை… அது வந்து… என்று ரிகா இழுக்க…

கோதை சிரித்துக்கொண்டே, அட என் தங்கமே… நீ எப்படின்னாலும் என்னை கூப்பிடலாம்… அம்மான்னு சொன்னாலும் எனக்கு சம்மதம்.. அத்தைன்னு சொன்னாலும் எனக்கு சம்மதம்… உன் விருப்பம்… எப்படி கூப்பிடனும்னு நீ ஆசைப்படுறியோ அப்படியே கூப்பிடும்மா… என்றார்…

சரிங்க அம்மா… என்றாள் அவள் சிரித்துக்கொண்டே…

என் தங்கம்… என் கண்ணேப் பட்டுடும் போல இருக்கு… இரு வரேன்… என்றவர், மருமகளான மகளுக்கு திருஷ்டி கழித்தார்…

பின், சித்துவை அவ்னீஷ் ரெடி பண்ணுறான்ம்மா… நீ போய்… சாமிக்கு பூப்போடு… என்று பூஜையறைக்கு அனுப்பி வைத்தார்…

ஹேய்… சித்து கண்ணா… ஏண்டா இப்படி படுத்துற… சீக்கிரம் இந்த சட்டையைப் போடுடா…

நீங்க தான் மாமா படுத்துறீங்க… வளர்ந்த பையங்கிட்ட சட்டையைப் போடுன்னு சொல்லிட்டு இப்படி முன்னாடியே நின்னுகிட்டு இருந்தா, எப்படி போடுறது சட்டையை?...

அடப்பாவி… டேய்… எல்லாம் என் நேரம்டா… நீ வளர்ந்துட்ட தான்… என்றபடி சிரித்த அவ்னீஷ் சித்துவை பார்த்தான்…

பதினொரு வயதை எட்ட முயன்றுகொண்டிருக்கும் சித்துவைப் பார்த்து சிரித்துவிட்டு, சரி சரி… நீயே போட்டுகிட்டு சீக்கிரம் வா சித்து… என்றபடி வெளியே வந்தவன், ஷன்வி அங்கே தோட்டத்தின் பக்கம் செல்வதைப் பார்த்துவிட்டு, அவள் பின்னாடியே சென்றான்…

அவள் அங்கே இரண்டு ரோஜாவைப் பறித்துவிட்டு திரும்புகையில், அவள் கைப்பிடித்து அவ்னீஷ் இழுக்க, அவள் பயத்தில் கத்தப்போனாள்… அவள் வாயில் கை வைத்து தடுத்த அவ்னீஷ்…

ஹேய்… நான் தாண்டி… கத்தி ஊரைக்கூட்டிடாதே… என்றபடி வாயில் இருந்து கையை எடுக்க….

என்ன வனீஷ்… இப்படி பயமுறுத்திட்டீங்க… சே… நான் பயந்துட்டேன்… ரொம்ப… என்றாள் வேகமாக…

அவன் பதில் பேசாது அமைதியாக இருக்க… அவள், என்ன வனீஷ்… என்னாச்சு?... என்று கேட்டாள்…

ஆமா… இந்த வனீஷ் என்ற பெயருக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்லை… ப்ச்… என்று அவன் அலுத்துக்கொள்ள…

அவள் வனீஷ் இப்போ என்னாச்சுன்னு சொல்லப்போறீங்களா இல்லையா?... என்று கேட்க… அவன் அப்போதும் மௌனம் சாதித்தான்…

சரி… நீங்க சொல்லவேண்டாம்… நான் போறேன்… என்றபடி அவள் நகர, அவன் அவள் கைப்பிடித்து தடுத்தான்…

ஏண்டி… நீ இப்படி இருக்க… உன்னைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு?.. உன் நியாபகமாவே நான் இருக்கேன்… நீ என்னடான்னா நான் வந்த பின்னாடி கூட என்னைக் கண்டுக்க மாட்டிக்கிற?... போறேன்னு போறேன்னு சொல்லிகிட்டு… போடி… போ… யாரு வேண்டான்னு சொன்னா.. என்று அவன் படபடவென்று பொரிய…

அவளுக்கும் அவன் காதல் புரிய, என்னைப் போன்னு நீங்க சொல்லுறவரை நானும் போகமாட்டேன் இங்கிருந்து… என்றாள் அவள் காதலுடன்…

ஹேய்… என்றவன் அவளை ஆசையுடன் பார்க்க… வீட்டில் எல்லாரும் இருக்கும்போது உங்களை எப்படி பார்த்து நான் பேச முடியும் வனீஷ்… ?... எனக்கு மட்டும் ஆசை இல்லையா உங்ககிட்டப் பேசணும்னு?... என்று அவள் முகம் தூக்கி வைத்துக்கொள்ள…

அவன் சவி… சாரிடி… நான் எதோ கோபத்துல.. அப்படி பேசிட்டேன்… சாரிடி… சாரி… என்று சொல்ல.. அவள் முகம் அப்போதும் சரி ஆகவில்லை…

அப்போதுதான் கவனித்தான் அவள் கை இன்னமும் தன் கைப்பிடியில் இருப்பதை… உன் முகத்தை எப்படி சரி செய்யணும்னு எனக்குத் தெரியுமே… என்றவன் அவள் எப்படி என்று பார்க்க, இப்படித்தான் என்றபடி அவள் கைப்பிடித்து இழுக்க, அவள் அவன் மேலே விழுந்தாள்..

வனீஷ்… என்னப் பண்ணுறீங்க… விடுங்க…

முடியாது சவி… உன் முகத்தை சரி பண்ணாம நான் விடமாட்டேன்…

வனீஷ்… அதெல்லாம் நல்லா தான் இருக்கு… முதலில் விடுங்க என்னை…

அவன், நிஜமா இந்த புடவையில ரொம்ப அழகா தாண்டி இருக்குற… அழகுக்கு அழகு சேர்க்கணும் இல்லையா… அதனால… என்று அவள் முகம் நோக்கி குனிய… அவள் திமிர… கடைசியில் அவனது பிடிவாதமே ஜெயித்தது..

இதழ் தேனைப் பருகியவன், அவளைப் பார்க்க, அவளோ கண்கள் கூட திறக்காமல் அப்படியே இருந்தாள்..

அவன் அவள் முகத்தை கையிலேந்தி கொள்ள, அவள் விழி திறந்தாள்… அவளது வெட்கம் அவள் முகமெங்கும் பரவ,

இதை.. இதை தான்… நான் எதிர்பார்த்தேன்… இப்போ என் சவி முகம் மாறிட்டே… அழகாய்… என்று அவன் சொல்ல…

அவள் சிரித்தபடியே அவன் மார்பில் ஒன்றிக்கொண்டாள்…

டேய்…. மச்சான்… உனக்குத்தெரியுமா?... அம்மா நம்ம எல்லோரையும் எதற்காக கோவிலுக்கு கூட்டிகிட்டு போறாங்கன்னு?...

எனக்குத் தெரியலைடா மச்சான்… என்றான் ஹரி…

ஆமா.. உனக்கு எதுதான் தெரிஞ்சது இது தெரியறதுக்கு… நீ எல்லாம் என்னடா டாக்டர்?... என்றான் முகிலன் அவனை வம்பிழுத்தபடி…

டேய்… உன்னைக்கொலை பண்ணிடுவேன்… பார்த்துக்கோ… எப்ப பாரு என் வேலையை குறை சொல்வதே உனக்கு வேலையாப் போச்சு… இன்னைக்கு உன்னை நல்லா சாத்தினா தான் நீ எல்லாம் திருந்துவ… என்றபடி ஹரி தனது அருகிலிருந்த தலையணையை எடுத்து அடிக்க…

டேய்… வலிக்குதுடா… விடுடா… என முகிலன் கெஞ்சுவதை பொருட்படுத்தாமல் ஹரி அடுத்துக்கொண்டே இருக்க,

டேய்… டேய்… என்னடா பண்ணுறீங்க இங்க.. என்றபடி அங்கே வந்த ஆதி, முகிலனை ஹரியிடமிருந்து காப்பாற்றினான்…

என்னடா ஹரி… எதுக்கு இவனை இந்த சாத்து சாத்துற?... என்னாச்சுடா?...- ஆதி..

அது வந்து மச்சான்… என்று ஹரி சொல்ல முனைவதற்குள்

கோவிலுக்குப் போறதுல… ஏதோ ப்ளான் இருக்கு மச்சான்… அது என்னவா இருக்கும்னு நான் இவங்கிட்ட கேட்டேண்டா… அதுக்கு போய்… இப்படி ட்ரெஸ் எல்லாம் கசங்குற அளவு அடிக்குறாண்டா என்னை இந்த டாக்டர்… என்று முகிலன் வேகமாக சொல்ல…

இல்லையே… ஹரி… இவ்வளவு கோப்ப்படுறான்னா, நீ எதோ வில்லத்தனமா சொல்லியிருக்க… அதான்… காரணமா இருக்கும்… என்னடா ஹரி சரிதானா நான் சொல்லுறது…

100% சரி மச்சான்… என்றான் ஹரி…

ஆமாடா இப்போ 100% சொல்லத்தான் ஆளில்லைன்னு சொல்லிக்கிட்டாங்க… ஏண்டா… நீங்க வேற… நானே கோவிலுக்குப் போறதுல இருக்குற திட்டத்தைப் பற்றி யோசிச்சிட்டிருக்கேன்… முதலில் அது என்னவா இருக்கும்னு யோசிங்கடா… என்று முகிலன் சற்றே சிந்தித்தவாறு சொல்ல…

அதான்.. உனக்கு மூளை இருக்குல்ல… அப்போ நீயே யோசிக்க வேண்டியது தானே… என்று ஹரி சொல்ல…

என் ஏழாம் அறிவை பயன்படுத்தி நானே கண்டுபிடிக்கறேன் பாருடா… என்று முகிலன் காலரை தூக்கிவிட்டு சொல்ல…

ஏழு, என்ன எட்டாம் அறிவைக்கூட பயன்படுத்தி கண்டுபிடிச்சுக்கோ… நாங்களா வேண்டாம் என்று சொன்னோம்… இல்லடா ஆதி?... என்று அவன் ஆதியிடம் கேட்க…

அதானே… நாங்க வேண்டாம்னு சொல்லலையே… என்றான் ஆதியும் ஹரியுடன் சேர்ந்து கொண்டு…

போங்கடா.. மூளை இல்லாதவனுங்களா… என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி வெளியே வந்தான் முகிலன் அடி விழும் முன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.