(Reading time: 31 - 62 minutes)

கோவிலில்….

நீளமான போர்வையை விரிக்கப்பட்டு அதன் மேலே பல தட்டுகளில் மஞ்சள், குங்குமம், பூ, பழம், புடவை, நகைகள், என அடுக்கி வைக்கப்பட்டிருந்தது…

செல்லம்மாப்பாட்டி, கோதை, சுந்தரம், ராஜசேகர்… நால்வரும் ஒரு பக்கத்தில் அமர்ந்திருக்க…

ஷ்யாமும், தினேஷும், அவரவர் மனைவியுடன் சேர்ந்து அமர்ந்திருந்தனர் அருகருகே… சுந்தரம், ராஜசேகருக்கு பக்கத்தில்…

சித்து, நந்து, அபி மூவரும் ரிகா, மயூரி, ஷன்வி ஆகிய மூவருடனும் அமர்ந்திருந்தனர்… காவ்யா, அனுவின் பக்கத்தில்…

ஆதி, முகிலன், ஹரி, அவ்னீஷ் ஆகிய நால்வரும் பெண்களுக்கு எதிர் திசையில் கோதையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருந்தனர்…

என்னம்மா எதுக்காக இங்கே வந்து இப்படி உட்கார்ந்திருக்கிறோம்…?... என்ற முகிலனின் கேள்விக்கு,

இரு முகிலா… அம்மா சொல்லுறேன்… என்றவர்… இதோ வந்துட்டாங்களே… வாங்க… வாங்க… என்று எழுந்து வரவேற்க…

அவரைத் தொடர்ந்து மொத்த குடும்பமும் எழ,

அங்கே ராசு-செல்வி-பர்வதம் ஆகிய மூவரும் வந்து கொண்டிருந்தனர்…

செல்வி வந்து ரிகாவை அணைத்துக்கொள்ள, ராசு வந்து ஆதியின் கைகளைப் பிடித்துக்கொண்டார்…

பர்வதம் பேத்தியை முகர்ந்து முத்தமிட… அங்கே நிறைவான ஒரு சூழல் உருவாகியது..

இவர்களைப் பார்ப்பதற்கு இந்த கோவில் சந்திப்பா?... இல்லையே… ஏதோ ஒன்று இடிக்கிறதே… என்று முகிலன் எண்ணமிட்டுக்கொண்டிருக்கும்போதே…

அண்ணா, நான் சொன்னேன் இல்லையா?... அது இவள் தான்… என் தோழியின் மகள்… என்றபடி அங்கே செல்வியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணைக் கை காட்டி சொன்னார் கோதை ராஜசேகரிடம்…

அவர் அந்த பெண்ணைப் பார்த்துவிட்டு லட்சணமா இருக்காம்மா… என்றார்..

அவரைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களின் பார்வையும் அந்த பெண்ணிடம் பதிய, அவள் நிமிரவே இல்லை…

யாருடா இந்த பெண்?... இங்கே எதுக்காக வந்திருக்கிறா?... என்று ஆதியிடம் கேட்டான் முகிலன்..

எனக்கென்னடா தெரியும்…. நீ வேணும்னா அம்மாக்கிட்ட கேளு… சொல்லுவாங்க… என்றான் அவன்…

அதுசரி… நீ அந்த பொண்ணைப் பார்த்துட்டு இதை சொன்னா சரி… உன் பார்வை தான் ரிகாவை விட்டு அகல மாட்டிக்குதே கொஞ்சம் கூட… நீயெல்லாம்… போடா… என்று அவனை ஒதுக்கிவிட்டு, அவ்னீஷிடம் விசாரித்தான் முகிலன்…

எனக்குத் தெரியலையே அண்ணா… யாரா இருக்கும்?... என்று எதிர் கேள்வி கேட்டான் அவ்னீஷ்…

அதான்… அம்மா சொன்னாங்களேடா அம்மாவோட தோழி மகள்ன்னு… ஹ்ம்ம்… இந்த பொண்ணு எதுக்கு இங்கே வந்திருக்கிறா… அதுதான் தெரியலை என்றவன் பார்வை சட்டென்று ஹரியிடம் நிற்க… அவனும் அந்த பெண்ணை சட்டை செய்யவில்லை கொஞ்சமும் ஆதியைப் போல…

ஆஹா……………. ஒருவேளை இப்படி இருக்குமோ?... என சிந்தித்த முகிலனின் மூளைக்குள் பல்பு எரிந்தது…

சட்டென்று முகிலன், தாயிடம், அம்மா… இந்த பொண்ணு பேரு என்ன… சாந்தியா?... ரொம்ப அமைதியா இருக்குறாங்க… அதுவும் தரையையேப் பார்த்தபடி…

டேய்… வாலு… அடங்குடா நீ… என்று அனு சொல்ல…

நீ முதலில் அடங்குடி… என்று முகிலன் சொல்ல…

இரண்டு பேரும் சும்மாயிருங்க… என்ற கோதை, என் தோழி சில வருடத்திற்கு முன் இறந்து விட்டாள்… இளம் வயதிலேயே கணவனை இழந்தவள், அவள் மகளை வளர்த்து ஆளாக்கிப் பார்க்கும் முன்னமே, கடவுளிடம் போய் சேர்ந்து போய்விட்டாள்…

அதன் பின், இவளை வளர்க்கும் பொறுப்பு எனதானது… சில வருடங்களாக இவளை நான் தான் வளர்க்கிறேன் என் தோழி சொன்னபடி… அப்போதே வீட்டிற்கு அழைத்து வர எண்ணிணேன்… ஆனால், இவள் மறுத்துவிட்டாள்… படித்து முடித்தபின் வருகிறேன் என்று சொல்லிவிட்டாள்..

கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் தங்கி படித்தாள்… நான் வாரம் ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வருவேன்…

ஐந்து வருடங்களாக படிப்பைக் காரணமாக்கி மறுத்துக்கொண்டிருந்தாள்.. இப்போது படிப்பும் முடிந்து விட்டது.. அதனால் தான் அழைத்தும் வந்தேன்…

மேலும், என்று நிறுத்தி ராஜசேகரை கோதைப் பார்க்க… அவர் சொல்லும்மா என்று எடுத்துக்கொடுக்க…

கோதை அந்த பெண்ணிடம் சென்று,

எனது நான்கு பையன்களில் மூன்று பையன்களும் எனக்கு வேலையே கொடுக்காமல் அவர்கள் திருமணம் செய்யப்போகும் பெண்ணைத் தேர்வு செய்து விட்டனர்…

எனது பையன் ஹரி மட்டும்தான்… எனக்கு வேலை கொடுத்திருக்கிறான்… உன்னை என் பையனுக்கு மணமுடித்துக்கொடுக்க ஆசைப்படுகிறேன்… நீ என்னம்மா சொல்லுகிறாய்?... உனக்கு விருப்பமா?... என் பையனைக் கைப்பிடிக்க… என்று அவர் கேட்க…

நீங்க சொன்னது போலே உங்க வேலையே முடிச்சிட்டீங்க… என் அம்மாவுக்கும் நான் மகளா நடந்துக்குற வேளை வந்துட்டுன்னு நினைக்கிறேன்ம்மா……… என்றவளை என் தங்கமே… என்று அணைத்துக்கொண்டார் கோதை…

பின், ஹரியிடம் சென்று, ஹரி… அம்மா உனக்காகப் பார்த்திருக்கும் பெண் இவள் தான்… உனக்குப் பிடித்திருக்கிறதாப்பா?... என்று கேட்க…

நீங்கள் சில வருடம் வளர்த்த மகள் உங்கள் பேச்சைக் கேட்கும் போது, நான் பிறந்ததில் இருந்து என்னை வளர்த்து ஆளாக்கிய என் அம்மாவின் பேச்சைத் தட்ட நான் எண்ணுவேணாம்மா?.... என்று ஹரி கேட்க…

என் செல்வமே… என்று ஹரியை அணைத்து உச்சியில் முத்தமிட்டார் கோதை…

அம்மா… ஸ்டாப்… ஸ்டாப்… நீங்க பாட்டுக்கு சம்மதம் கேட்டீங்க… அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க… ஆனா, அவங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கவே இல்லையேம்மா… இன்னும்… என்று முகிலன் எடுத்துக்கொடுக்க…

ஹரி… முகிலனிடம் சும்மா இருடா… என்று சொல்ல…

பாருடா… டேய்… ஆதி… மச்சான்… நம்ம டாக்டர் சப்போர்ட் பண்ணுறாண்டா… என்று முகிலன் குதூகலிக்க..

அங்கே அவளை சூழ்ந்து கொண்டனர், மயூரி, ஷன்வி, அனு, காவ்யா ஆகிய நால்வரும்…

ரிகா மட்டும் ஹரியின் அருகில் வந்து, எனக்கு அண்ணியை ரொம்ப பிடிச்சிருக்குண்ணா… நீங்களும் பார்த்து சொல்லுங்கண்ணா… பாருங்கண்ணா… என்று கெஞ்ச..

மச்சான்… பாருடா… என் தங்கச்சியை… பாருடா… வெட்கப்படாம பாருடா… என்று ஆதியும் சொல்ல…

ஆமாண்ணா… அண்ணி அழகா இருக்காங்க… உங்களுக்கு சரியான பொருத்தம்… பாருங்கண்ணா… என்று அவ்னீஷும் சொல்ல…

அங்கே அவளிடம்… நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… எங்க அண்ணாவுக்கு ஏற்ற ஜோடிதான்… எங்க அண்ணாவைப் பிடிச்சிருக்கான்னு பார்த்து சொல்லுங்க… என்று மயூரியும், ஷன்வியும் சொல்ல…

அம்மா… அவங்களைப் பார்க்க சொல்லுறது இருக்கட்டும்… முதலில் தங்கச்சிப் பேரை சொல்லுங்கம்மா என்று முகிலன் சொல்ல…

அடடா… மறந்துட்டேனே… என்றவர்… அம்மாடி… இவன்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போற என் பையன் ஹரீஷ்… ஹரீஷ், இவள்தான் உனக்காகப் பார்த்திருக்கும் உன் வருங்கால மனைவி மைத்ரேயி ஸ்ரீ… என்று இருவரின் பெயரையும் இருவருக்கும் தெரியப்படுத்தினார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.