(Reading time: 31 - 62 minutes)

ங்கே போய் தொலைஞ்சா… இந்த ஷன்வி… இரண்டு ரோஜாப்பூ பறிக்க, இவ்வளவு நேரமா?... இவளை… என்றபடி ஷன்வியைத் தேடி தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தாள் மயூரி…

ஷன்வி… என்று அழைத்துக்கொண்டே மயூரி வர, சட்டென்று அவளின் குரலில் நினைவு வந்தவளாக அவ்னீஷ், ஷன்வி வருகிறாள்… விடுங்க… என்றாள்…

கொஞ்ச நேரம்டி… என்றான் அவன் கெஞ்சுதலோடு…

ப்ளீஸ் வனீஷ்… அவ இப்போ பார்த்தால், அவ்வளவுதான்… நான் அப்பறம் வரேன்… என்றாள் அவளும் கெஞ்சலாக…

கண்டிப்பா வரணும்… சரியா… என்ற வேண்டுகோளோடு அவளை விடுவித்து விட்டு அங்கிருந்து அகன்றான் அவ்னீஷ்…

அவன் சென்றதும், இதோ வரேன் மயூரி என்று வேகமாக மயூரி வந்த குரல் நோக்கி ஷன்வி செல்ல, அங்கே மயூரி இல்லை…

என்னடா இது… மயூரி குரல் தானே அது… இங்கிருந்து தானே வந்தது… எங்கே போயிட்டா இவ?... ஒருவேளை என்னையும் அவ்னீஷையும் பார்த்திருப்பாளோ, அச்சச்சோ… போச்சு… போச்சு… அவ வேற யாருகிட்டேயும் சொல்லுறதுக்கு முன்னாடி உடனே அவளைத் தேடி கண்டுபிடிச்சாகணுமே… என்றவாறு அவளைத் தேடிச்சென்றாள் ஷன்வி…

ஷன்வியைத்தேடி வந்த மயூரியை, முகிலன் பார்த்துவிட்டு, அவளுக்கு முன் வேகமாக, தோட்டத்திற்கு செல்லும் பாதையில் மறைவாக நின்று கொண்டான்…

அவள் அடுத்து ஷன்வி என்றழைக்கும் முன், அவளை அப்படியே பின்னிருந்து அணைத்துக்கொண்டான் முகிலன்…

அவன் அணைப்பில் வார்த்தைகள் மறந்தவள், அப்படியே நின்றுவிட்டாள்..

மெல்ல அவன் அவளைத் திருப்பி அவள் முகம் பார்க்க… அவள் முகம் வெட்கத்தில் சிவப்பதற்கு பதிலாக கோபத்தில் சிவந்தது..

என்னடி… இப்படி அக்கினி பார்வை பார்க்குற?... உன்னைக் கட்டிக்கப் போற உன் மாமா நான்… செல்லமா உன்னை பின்னாடியிருந்து கட்டிக்கிட்டேன்… இது ஒரு குத்தமா?... என்றபடி அவன் கேட்க…

அவள் முறைத்தபடி… அங்கிருந்து அவனை இழுத்துக்கொண்டு அங்கிருந்த அறையினுள் சென்றாள்…

ஹேய்… என்னடி… என்னை எதுக்கு இப்படி இழுத்துட்டு இங்கே வந்த?...

நீங்க செய்யுறது உங்களுக்கே நல்லா இருக்கா?..

சாரிடி… நீ இந்த புடவையில ரொம்ப அழகா தெரியுற… உன்னைக் கட்டிக்கணும்னு ஆசையா இருந்துச்சு… அதான்… சாரிடி… என்றான் பாவமாக…

அவள் பேசாமல் அமைதியாக இருக்கவும், அவன் சரிடி… வேணும்னா அடிச்சிக்கோ என்னை… இந்தா என்று ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்…

சும்மாவே அடவு கட்டி ஆடுவா… குச்சியை வேற கொண்டு வந்து கொடுத்திருக்கேன்… ஹ்ம்ம்.. கேட்கவா வேணும்?... ஹ்ம்ம்… முகிலா… அடி வாங்க ரெடியாகுடா… என்றபடி தனக்குள் சொல்லிக்கொண்டவன் இறுக கண் மூடிக்கொண்டான் அவள் அடிக்கப் போகிறாள் என்று…

அவன் முகம் பற்றி இரு கன்னங்களிலும் முத்தத்தைப் பதித்தாள் அவள்…

அவளின் முத்தத்தில், சற்றே அதிர்ச்சியாகி, விழி திறந்தவன் மயூயூயூயூ…. என்றழைக்க…

என் அழகு முகில்… நீங்க என்னை பின்னாடி இருந்து அணைத்ததும் ஒரு நொடி ஒன்றுமே ஓடவில்லை… என்னைப் பற்றி நீங்கள் திருப்பியதும் உங்களைத்திட்ட வேண்டுமென்று தான் நினைத்தேன்… ஆனால், உங்களைப் பார்த்ததும் நான் என்னையே மறந்துவிட்டேன்… அங்கே வைத்து முத்தம் கொடுத்தால் யாராவது பார்த்து விடுவார்கள் என்று தான், இங்கே உங்களை அழைத்து வந்தேன்… என்றாள் அவள் வெட்கம் பொங்க…

ஹேய்… என் செல்லம்…. என்றபடி அவன் அவளை இடையோடு சேர்த்து அணைக்க…

என்ன மாமா?... சொல்லுங்க… என்றாள் அவளும் அவன் அணைப்பில் அடங்கியபடி…

என்னால நம்பவே முடியலைடி… சென்னையில், நான் பார்த்த மயூவா நீ!!!!!!!!!!!... அநியாயத்துக்கு என்னைக்கொல்லுறியேடி….

ஆமா… அதே உங்க மயூ தான்… இப்போதான் நம்ம வீட்டில் ஓகே சொல்லிட்டாங்களே… அதனால் தான் இந்த கொஞ்சல்ஸ் எல்லாம்… என்றாள் அவளும்…

அடிப்பாவி… நீயெல்லாம் நல்லா வருவடி… என்றான் அவன் சிரித்தபடி…

நிச்சயமா என்றாள் அவளும் சிரித்தபடியே…

அவள் சிரிப்பு அவனை இழுக்க, அவன் அணைப்பை இறுக்கினான்… அவள் முகம் பற்றியவன் மெல்ல அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு, எனக்கு நீ இவ்வளவு இடம் கொடுக்கும்போது நானும் அதற்கு தகுந்தபடி நடந்துப்பேன் மயூ… எல்லை மீறமாட்டேன் என்றவன், அவளை மேலும் ஒருமுறை இறுக்கி அணைத்துவிட்டு, அவளை விடுவித்தான்…

அவளுக்கு அவன் வார்த்தைகள் உவகையாய் இருக்க… அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு, ஐ லவ் யூ சோ மச் முகில் கண்ணா… என்று சொல்லிவிட்டு ஓடியவள், அவன் தன் கன்னத்தை தடவிவிட்டு சிரிப்பதைப் பார்த்தபடி வெட்கத்தோடு அவனுக்கு கையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்…

பூஜையறையில் இருந்த படங்களுக்கு மாலை போட்டுக்கொண்டிருந்த ரிகா, அந்த ராம்-சீதா உருவ சிலையைப் பார்த்தாள் மிக அருகில்…

விரைவில் தானும் தன்னவனுக்கு மாலை சூடும் நாள் வரும் என்று எண்ணி சிரித்துக்கொண்டாள் கையில் மாலையைப் பிடித்தபடி…

திடீரென மனம் திரும்பி பார் என்று சொல்ல, சட்டென்று திரும்பியவளின் கண் முன், நடந்து வந்து கொண்டிருந்தான் அவளின் ஆதர்ஷ் ராம்…

அவன் வருகையை, கையில் பிடித்திருந்த மாலையின் நடுவே கண்டவள், அவனுக்குத் தான் மாலை சூடுவதைப் போல் இருந்த அந்த காட்சியைக் கண்டு நின்றாள் நாணம் மிக…

முகிலன் சென்ற பின், அவன் சொல்வதுபோல், எனக்கும் இதில் ஏதோ ப்ளான் இருக்கிறது என்று தான் தோன்றுகிறது ஹரி… என்று ஆதி சொல்ல…

நீயுமாடா… ஹ்ம்ம்… சரி போ… அவனுக்கு ஹெல்ப் பண்ணு… போ… என்றபடி அவனை அனுப்பி வைத்தான் ஹரி…

சரி… முகிலன் என்ன யோசித்தான் என்று கேட்கலாம் என வந்தவன், அவனைத் தேடினான்… அப்போது கீழே பூஜையறையில் தன்னவள் புடவையில் அழகாக நிற்பதைப் பார்த்தவன் மனம் அங்கே செல்ல வேண்டுமென்று அடம்பிடிக்க… மெல்ல கீழிறங்கி வந்தான்… அவளைப் பார்த்தபடியே…

அவன் கீழே வரவும், அவள் மாலையோடு திரும்பவும் சரியாக இருக்க… அவன் விழி அகற்றாமல் அவளையேப் பார்த்திருந்தான்…

மெல்ல பூஜையறைக்குள் வந்தவன், கடவுளை தரிசித்துவிட்டு, இப்படி கையிலேயே மாலையைப் பிடிச்சிட்டிருந்தா, கை வலிக்கும் என்னவளுக்கு… அதனால் அதை கீழே வைக்க சொல்லுங்க இப்போ… மாலை சூடுற நாள் வரும்… அன்று நான் வாங்கிக்கொள்வேன் அவள் கையினால் அவள் சூடும் மாலையை… என்றவன் அங்கிருந்து வெளியே வேகமாக சென்றுவிட…

அவன் பின்னாடியே வெளியே வந்தவள், அவனைத் தேட, அவனைக் காணவில்லை…

சோர்வுடன், சே… போயிட்டாரே… ஒரு வார்த்தைக்கூட பேசலையே… சே… என்ன சாகரி நீ… என்று தன்னையே திட்ட வாயெடுக்கும் போது,

அருகிலிருந்த சுவரின் மறைவிலிருந்து வெளியே வந்தவன், என்னைத் தேடுறியாடா?... என்று கேட்டான் அவளின் முன் வந்து…

மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி நின்றிருந்தவனை பார்த்தவள், அமைதியாக நின்றாள்…

என் சீதை என்னைக்குமே அழகு தான்… இருந்தாலும், இன்னைக்கு புடவையில் ரொம்ப அழகா இருக்குறடா… என்று சொல்ல… அவள் வெட்கத்தில் சிவந்தாள்..

இதுதான்… இந்த வெட்கம் தான்.. என்னவளுக்கு ரொம்ப அழகு… என் அழகு சீதை… என்றான் இரு கைகளையும் அவள் முகம் நோக்கி சுற்றி…

அவனின் செயலில் முகம் மலர்ந்தவள், ராம்.. போதும்… ப்ளீஸ்… என்றாள்… வெட்கத்துடன்…

பூஜையறையில் இருந்து ஏன் வெளிவந்தேன் என்று இப்போது புரிகிறதாடா?... அங்கே அவ்வளவுதான் சொல்லவேண்டும்… சொல்லவும் முடியும்… அதனால் தான் இங்கே வைத்து… என்றான் அவளைப் பார்த்தபடி…

அவள் அவனின் பேச்சில் உள்ளம் மகிழ்ந்து நிற்க… உன்னை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குடி… உன் முகத்தில் இந்த வெட்கத்தையும் சந்தோஷத்தையும் நான் எப்பவுமே பார்க்கணும்டி…. என் ஆசை நிறைவேறுமாடா சீதை?... என்று அவன் தவிப்போடு கேட்க…

ரா….ம்ம்ம்ம்ம்ம்ம்ம்….. என்றவள் அவன் அருகே செல்ல எத்தனித்தபோது, சாகரி.. பூப்போட்டுட்டியாம்மா?... என்ற கோதையின் குரல் கேட்க…

போட்டுட்டேன்ம்மா… இதோ வரேன்…. என்று அவள் சொல்லிவிட்டு அவனைப் பார்க்க…

அம்மா… கூப்பிடுறாங்க… நீ போடா… நான் வரேன்… என்றபடி அங்கிருந்து சென்றவனையே விழி மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.