(Reading time: 31 - 62 minutes)

கோதை, பெயரை சொன்ன அடுத்த வினாடியே ஹரியின் இதழ்கள் அவளது பெயரை மென்மையாக உச்சரித்துப் பார்த்தது… அதைக் கவனித்த முகிலன் ஓஹோ….. என்று ஆர்ப்பரிக்க…

டேய்… சும்மா இருடா… என்று சொன்ன ஹரியின் பார்வை அவளிடத்தில் வந்து சேர்ந்தது…

அவன் குரல் கேட்டதும், அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவளுக்கும் எழ, அவளின் பார்வையும் அவனிடத்தில் நின்றது…

இருவரின் விழிகளும் அலைபாய்ந்தபடி முகம் பார்க்க துடிக்க, இறுதியில் வெட்கத்தை ஓரங்கட்டி விட்டு, விழிகளோடு விழிகள் கலந்தன…

ஹரிக்கு உடலில் புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது… அவளுக்கோ அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது…

எத்தனையோ பெண்களை தொழில் நிமித்தமாக பார்த்த போது வராத உணர்வு இன்று இவளைப் பார்த்தவுடன் மட்டும் ஏன்?... எனக்கு என்னாயிற்று???... இவளது பார்வையை விட்டு என்னால் ஏன் பார்வையை அகற்ற முடியவில்லை… என்னடி செஞ்ச நீ?... என்னை… டாக்டர்டி நான்.. எனக்கே வைத்தியம் பார்க்க வச்சிடுவ போலேயே… என்று அவன் தனக்குள் கேட்டுக்கொண்டே அவளைப் பார்த்த வண்ணம் இருக்க…

படிக்கும்போது நண்பர்களுடன் பேசி பழகியிருக்கிறேன் தானே… பின், இவரைப் பார்த்த உடன் மட்டும், ஏன் தடுமாறுகிறேன் நான்?... என் விழி ஏன் என் பேச்சைக் கேட்க மறுக்கிறது?... ஒருநிமிட பார்வையால் என்னை நான் எனதாக உணராமல் உனதாக உணரும் மாற்றம் ஏனடா எனக்கு கொடுத்தாய்?... எல்லோரும் இருக்கிறார்கள்… என்னை அழ வைத்துவிடாதே… சீக்கிரம் என்னை உன்னவளாய் ஏற்றுக்கொள் மன்னவா…. என்று அவளும் பார்வையை அகற்றாமல் அவனையேப் பார்த்தபடி இருக்க…

அடடா… அம்மா… செம காதல் காவியம்… நம்ம டாக்டர் தம்பி என்னமா காதல் பண்ணுறார்?... பின்னிட்டார் போங்க… என்று முகிலன் சொல்ல… ஹரி அவனைத்துரத்திக்கொண்டே ஓட, அங்கே பெரிய சிரிப்பலை எழுந்தது…

பின் கோதை-சுந்தரம் ஹரிக்கும், மைத்ரேயிக்கும் புதுத்துணிமணிகளை கொடுத்தனர்..

அதேபோல, ஆதி-ரிகாவிற்கு, ராஜசேகரும், முகில்-மயூரிக்கு பர்வதம்-செல்லம்மாப்பாட்டியும்,  அவ்னீஷ்-ஷன்விக்கு ராசு-செல்வியும் புதுத்துணிமணிகளை கொடுத்தனர்…

அதை வாங்கிக்கொண்ட சிறியவர்கள் பெரியவர்களைப் பார்த்த வண்ணம் இருக்க…

கோதை அனுவிடமும் காவ்யாவிடம் கண் ஜாடை காட்ட… சுந்தரம் ஷ்யாமிடமும், தினேஷிடம் ஜாடை காட்டினார்…

என்ன கல்யாணப்பொண்ணுங்களா.. ரெடியா?... என்றபடி காவ்யாவும் அனுவும் பெண்கள் நால்வரையும் அழைத்துக்கொண்டு செல்ல…

வாங்க மாப்பிள்ளைகளா போகலாம்… என்றபடி தினேஷும், ஷ்யாமும் ஆண்கள் நால்வரையும் அழைத்துக்கொண்டு சென்றனர்…

பட்டுப்புடவை, தலைநிறையப்பூ, அளவான நகைகள், முகத்தில் படர்ந்திருந்த வெட்க செம்மையோடு பெண்களும், பட்டுவேஷ்டியில், முகத்தில் விரும்பியவளைக் கைப்பிடிக்கபோகும் பெருமையில் ஆண்களும் எதிர் எதிரே அவரவர் ஜோடியைப் பார்த்த வண்ணம் நிற்க…

ஹ்ம்ம்… நல்ல நேரம் முடியப்போகுது… போடுங்கப்பா… என்று பெரியவர்கள் அனைவரும் சொல்ல…

ஆமா… மாமா.. போடுங்க… பார்க்க நாங்களும் ஆசையா இருக்குறோம்… என்றபடி நந்துவும் அபியும் சொல்ல…

ஹேய்… குட்டீஸ்… எங்கே போயிட்டீங்க எல்லாரும்… இங்கே வாங்க… என்றபடி ஆண்கள் நால்வரும் அழைக்க…

ஹ்ம்ம்…கும்… உங்களுக்கு உங்க ஜோடியைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு… இதுல எங்க இருந்து எங்களை கவனிக்கப் போறீங்க… அதான்… நான் அவங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு போயிட்டு இப்போ வந்தேன் என்றான் சித்து…

அட சித்து கண்ணா… பெரிய பையன் மாதிரில்ல பேசுறான்… என்று கோதை சொல்ல..

ஆமாப்பாட்டி… நான் வளர்ந்துட்டேன்ல… அதான்… என்றான் சித்து..

ஆமாப்பாட்டி… என் அண்ணன்.. வளர்ந்துட்டான்… உயரமா இருக்கான்ல… என்றாள் நந்து தன் அண்ணனுக்கு சப்போர்ட்டாக..

ஆமாடா… தங்கம்… சரி சரி… இங்கே வாங்க… என்றபடி கோதை அவர்களை அருகே அழைத்துக்கொள்ள..

இன்னும் என்னடா யோசனை… போடுங்க… என்றபடி சுந்தரம் எடுத்துக்கொடுக்க…

முதலில் அவங்களே போடட்டுமேப்பா… என்றனர் ஆண்கள் நால்வரும்…

அதுவும் சரிதான்… என்று கூறிய சுந்தரம்… நீங்களேப் போடுங்கம்மா… என்று சொன்னார் பெண்களிடம்…

அவர்களும் யோசித்தபடி நிற்க…

அடடா… என்ன இது.. நிச்சயப் பத்திரிக்கை வாசிச்சாச்சு… இன்னும் முப்பது நாளில் கல்யாணம்… இப்படி மோதிரம் போட யோசிக்குறீங்க… இப்போ நீங்க போடுறீங்களா?... இல்லை எங்க கணவன்மார்களை வைத்து உங்களவர்களுக்கு போட சொல்லவா?... என்று அனுவும் காவ்யாவும் மிரட்ட… இல்லை…இல்லை… நாங்களே போடுறோம்… என்ற ஷன்வி… ஹேய்… டைம் வேஸ்ட் பண்ணாதீங்கடி… போடுங்க… என்று எடுத்துக்கொடுக்க.. மற்ற மூவரும் தலை அசைத்தனர்….

மெல்ல தன் வருங்கால கணவன்மார்களான ஆதி, முகிலன், ஹரீஷ், அவ்னீஷ் என ஆண்கள் நால்வரின் கைவிரலில் சாகரி, மயூரி, மைத்ரேயி, ஷன்வி என பெண்கள் நால்வரும் வரிசையாக மோதிரம் அணிவித்தனர்….

சுற்றியிருந்த சொந்தங்கள் அனைவரும் பூமழை தூவி வாழ்த்த,

இப்போது ஆண்களின் முறை வந்தது..

ஆதி, என்னடா ரெடியா என்று கேட்க… மற்ற மூவரும் ரெடி… என்றனர் சிரிப்புடன்…

என்ன செய்யப்போகிறார்கள் என்று அனைவரும் பார்த்தனர் மணப்பெண்கள் உட்பட…

காற்றுக்கும் நோகாதபடி தத்தமது வருங்கால மனைவிகளின் கையைப் பிடித்தவர்கள், மோதிரத்தை அணிவித்துவிட்டு, சட்டென்று முட்டி போட்டு,

கண்ணேகனியே

உன்னைக் கைவிட மாட்டேன்

சத்தியம்சத்தியம்இது சத்தியமே…” என்று பாட…

பெரியவர்கள் அனைவரும் உதட்டில் பூத்த புன்னகையுடன் சிறியவர்கள் மீது பூத்தூவிய வண்ணம் இருந்தனர்…

தினேஷும், ஷ்யாமும், அந்நேரம் ஆண்கள் நால்வரின் கையிலும் பூமாலை கொடுக்க…

அதை ஆண்கள் நால்வரும் வாங்கிக்கொண்டு, பெண்களைப் பார்க்க, அவர்கள் மென்மையாக குனிந்து தங்களது மணவாளனின் கையால் சூடும் மாலையை ஏற்றுக்கொண்டனர்..

மாலை சூடிய காலை கதிரின் மேலே

சத்தியம்சத்தியம்இது சத்தியமே…”

என்று பாடியபடி அவரவர் மணவாட்டியின் கைப்பிடித்து சத்தியம் செய்தனர்… ஆண்கள் நால்வரும்…

தொடரும்

Go to episode # 28

Go to episode # 30

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.