(Reading time: 31 - 62 minutes)

காலை உணவிற்குப் பின், அனைவரும் ஊட்டிக்கு கிளம்பினர்…

என்னம்மா… எவ்வளவு நேரம் தான் இங்கே வர… எப்போதான் வரப்போறாங்களாம்?... என்று கேட்டுக்கொண்டே அனு குறுக்கே நெடுக்கே நடந்து கொண்டிருந்தாள்…

வருவாங்கடி… அவசரப்படாதே… என்று கோதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

பூனை மாதிரி இப்போ எதுக்கு நீ இங்கேயும் அங்கேயும் நடந்துக்கிட்டிருக்குற லூசு அனு?... என்றபடி அங்கே வந்தான் முகிலன்….

டேய்… இப்போ எதுக்குடா நீ என்னை லூசு சொன்ன?... எருமை மாடே… உன்னை என்னப் பண்ணுறேன் பாரு… என்றபடி அனு அவனை அடிக்க…

ஸ்…………. ஆ………….. பிசாசே வலிக்குதுடி… நீ லூசுதானேடி… அதை சொன்னா உனக்கு கோபம் வேற வருதா?... பாருங்கம்மா இவளை… என்றபடி முகிலன் அவளிடமிருந்து தப்பித்து தாயின் அருகே செல்ல…

இவ்வளவு அடி வாங்கியும் நீ இன்னும் லூசா சொல்லுற… உன்னை… என்றபடி அவள் அவனைத்துரத்த…

மாமா…. வந்தாச்சு…. என்ற அபியின் குரல் அவர்களுக்கு கேட்க… அனுவும், முகிலனும் போட்டுக்கொண்டிருந்த சண்டையை மறந்து அபி குரல் வந்த திசையை நோக்கி சென்றனர்…

அபி அளவிற்கு ஆதியும், ரிகாவும் முட்டிப் போட்டிருக்க… அபி அவர்கள் இருவரையும் கழுத்தோடு சேர்த்தணைத்தபடி இருந்தாள்…

ஆதி, அவளை மெல்ல தூக்கிக்கொண்டு இரண்டடி எடுத்து வைக்க, ரிகா தயங்கி அங்கேயே நின்றாள்…

என்னுடன் தானே வந்தாள்… எங்கே அவள்… என்றபடி அவன் திரும்பி பார்க்க… அவள் கைகளைப் பிசைந்த வண்ணம் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்…

இத்தனை நாள் எப்படியோ, ஆனால், இதுதான் இனி தான்வாழப்போகும் இடம் என்பதை உணர்ந்தவளுக்கு உள்ளே செல்ல நாணமும் கொஞ்சம் பயமும் எழுந்தது…

அவள் அங்கிருந்தபடி ஆதியைப் பார்க்க ஆதிக்கு அவள் நிலைமைப் புரிந்தது… கூடவே அவன் முகத்தில் புன்னகையும் வளர்ந்தது…

அவளை நோக்கி புன்னகையை சிந்தியவன், அபியின் காதில் மாமா வந்துட்டேன்னு பாட்டிகிட்ட சொல்லுடா… போ… என்றபடி அவளை அனுப்பி வைத்துவிட்டு ரிகாவின் அருகில் வந்தான்…

நம்மவீடுடா… நாம வாழப்போற வீடு… எதுக்கு இந்த பயம்?... உன் கூடவே தான் நான் இருப்பேன்… வா… இங்கே இருக்கிற எல்லாரும் உன்னை நல்லாப் பார்த்துப்பாங்க என்னோட சேர்ந்து… இனி என்னை எல்லாம் கவனிக்க மாட்டாங்க… உன்னை தான் நல்லா கவனிப்பாங்க என்று சிரித்துக்கொண்டே சொல்ல..

அப்போ, என் தர்ஷை நான் பார்த்துப்பேன்… என்று மென்மையாக அவள் சொல்ல, அவன் மனதில் தென்றல் தவழ்ந்தது…

மெதுவாக அவனே அறியாத வண்ணம் அவள் விரல்களைப் பற்ற அவன் முனைய, அவள் விரல்கள் நடுங்குவதைக் கண்டவன், கைகளைப் பற்றாமலே, தான் இருந்த மோன நிலையிலிருந்து விடுபட்டு வெளியே வந்தான்…

உள்ளே போகலாம்டா வா… என்றபடி அவள் கண்களோடு கண்கள் கலக்கவிட்டு பேசியவனின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டவளாக, அவனுடன் சேர்ந்து தான் வாழப் போகும் வீட்டினுள் வலது கால் எடுத்து வைத்தாள் அவனுடன் சேர்ந்து…

அவன் அவள் விரல் பற்ற முனைந்ததை எண்ணியவள், மெல்ல அவனுடன் அடுத்த அடி எடுத்து வைக்கையில், அவனது சுண்டு விரலை தன் சுண்டு விரலால் பிணைத்துக்கொண்டாள்….

அவள் ஸ்பரிசம் உணர்ந்து அதிர்ந்து பார்த்தவன், அவள் செய்கையைக் கண்டு மகிழ்ந்தான்… அவளுக்காக என்று யோசித்து தன் உணர்வுகளை அடக்கியவனுக்கு இப்போது அவள் செயலால் அது முடியவில்லை…

அவன் அவளைப் பார்க்க முயற்சிக்க, அவள் நிலத்தை விட்டு பார்வையை அகற்றவுமில்லை… அவன் விரலோடு பிணைத்திருந்த தன் விரலை விடுவித்துக்கொள்ளவுமில்லை…

சீ…….தை…. என்றவனின் குரலே அவனது நிலையை உரைக்க… அவள் அவன் முகம் பார்க்க முடியாமல் திணறினாள்…

குட்டிமா… இங்கே பாரு… என்று அவன் அவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்த போது, எங்கே அபி இருக்கிறான் உன் மாமா… ஆளையேக் காணோம்… என்ற அனுவின் குரல் கேட்டது இருவருக்கும்…

மெல்ல அவன் விரலிலிருந்து தன் விரலை உருவிக்கொண்டவள் அவனை விட்டு சற்று தள்ளி நின்றாள்…

அங்கே வந்த அனு, ரிகாவை பார்த்துவிட்டு ஓடி வந்து அணைத்துக்கொள்ள, முகிலனோ ஆதியை மச்சான்…. வாடா…….. என்றபடி அணைத்துக்கொண்டான்…

அப்போது ஹரி, அவரின் அப்பா ராஜசேகர், மற்றும் அவ்னீஷ் அங்கே வர, அனைவரும் உள்ளே சென்றனர்…

உள்ளே சென்றதும், ஆதி, ரிகாவை கண் அசைவில் அழைக்க, அவள் புரிந்துகொண்டு அருகில் வர, இருவரும் கோதை சுந்தரத்தின் காலில் விழுந்து வணங்கினர்… கோதை ரிகாவை எழுப்பி நெற்றியில் இதழ் பதித்து அணைத்துக்கொண்டார்… சுந்தரமோ மகனை மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொண்டார்…

ராசு மாமா செல்வி அத்தை எங்கே என்ற ஆதியின் கேள்விக்கு அவர்கள் சாயங்காலம் வருவாங்க அண்ணா… என்றாள் மயூரி…

முகிலன், தினேஷ்-காவ்யா, ஷன்வி, மற்றும் செல்லம்மாப் பாட்டிக்கு ரிகா வரப்போகும் தகவல் கொடுத்திருந்தபடியால் அவர்களும் அங்கே இருந்தனர்…

ரிகா தினேஷைக் கண்டதும் அவனருகில் செல்ல… அவன் சந்தோஷமா இருக்கும்மா… முகிலன் எல்லாம் சொன்னான்… என்றபடி தங்கையைப் பார்க்க… அவளோ வெட்கத்துடன் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்…

செல்லம்மாப்பாட்டி மிகுந்த சந்தோஷத்துடன் ரிகாவின் தலையை கோதிவிட்டார்… நல்லாயிருப்பம்மா… எப்பவும்… என்று வாழ்த்தவும் செய்தார்…

ஷன்வியும், மயூரியும், காவ்யாவும் மாறி மாறி ரிகாவை அணைத்துக்கொள்ள,

போதும்… போதும்… உங்க பாசத்தைக் காட்டி ஆதியைக் கடுப்பேத்தாதீங்க என்று முகிலன் சொல்ல…

டேய்… அவன் அமைதியா தான்டா இருக்கான்… நீதான் அவனுக்கு உதவி செய்யுறேன் பேர்வழின்னு சொல்லிகிட்டு உன் கோபத்தை காட்டுற… இதுக்கு நீ நேரடியாவே சொல்லியிருக்கலாம்… என்று முகிலனிடம் சொன்னவன்,

மயூரி நீ பாவம்தான்ம்மா… இப்படி தெரிஞ்சே உன்னை எல்லாரும் இவன் தலையில கட்டப்போறாங்களே… அய்யோ…. என்னால முடியலையே… அய்யோ… என்று அவன் நெஞ்சில் கை வைத்து சொல்ல…

அங்கே ஒரு பெரும் சிரிப்பலை எழுந்தது…

டேய்… என்னையே கிண்டல் பண்ணுறியா?... அம்மா… பாருங்கம்மா… இவனை… என்று தாயிடம் போய் முகிலன் கொஞ்ச…

முகிலா… நீ விடு.. அவனை அம்மா பார்த்துக்கறேன்… என்ற கோதை… சரி சரி… எல்லாரும் போய் கிளம்புங்க… சாயங்காலம் கோவிலுக்கு போகணும்… ஹ்ம்ம்… போங்க… போய் ரெடி ஆகுங்க… என்றபடி அனைவரையும் அனுப்பி வைத்தார்…

அனுவிடம் சென்று பெண்கள் அனைவருக்கும் எடுத்த புடவையை கொடுத்துவிட்டு சென்றார்…

சுந்தரம் ஷ்யாமிடம் ஆண்கள் அனைவருக்கும் எடுத்த புதுத்துணியை கொடுத்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.