(Reading time: 10 - 19 minutes)

"ரி. நீ வேணா கொஞ்சம் நேரம் தூங்கு."

"பரவால்ல அத்தை.இங்க ரூம்ல தனிய இருக்க போர் அடிக்குது.வாங்க கீழ போகலாம்"

அவருடன் இணைந்து நடந்தவள் "ச்சே மதனை பத்தி யோசிச்சா நேரம் போகறதே தெரிய மாட்டிங்குது" என்று மனதினுள் புன்னகையுடன் கூறிக் கொண்டாள்.

மதனிடம் பேசி வேகமாக கைபேசியை அணைத்த ரிது, அதே வேகத்தில் வீட்டை விட்டு தன் ஸ்கூட்டியில்  பறந்தாள்.

தன் அன்னை பேசிய வார்த்தைகளில் இருந்த அழுத்தத்தை கண்டவள், அதன் பின் தான் பேசும் எந்த ஒரு வார்த்தைக்கும் மதிப்பு இருக்காது என்பதை நன்கு அறிவாள்.தன் கல்லூரியை அடைந்ததும், நேரே மரத்தடியில் அமர்தவள், கவியின் எண்களை அழுத்தினாள்.

"ஹலோ!! ரிது 5 மினிட்ஸ்டா வந்துடறேன்".

"கவி!! கிளாஸ்க்கு போகதே டி! நாம எப்பவும் மீட் பண்ற மரத்துக்கு கீழ வெயிட் பண்றேன். இங்க வந்துடு".

"ஹ்ம்ம் சரிடா வரேன்" என்று அழைப்பை துண்டித்தாள்.

அதற்குள் ரிது தன் மொபைலில் ரஞ்சனின் எண்களை அழுத்தினாள். "ஹலோ!!! ரிதா!! வாட் a ப்லீசன்ட் surprise நீயா எனக்கு கால் பண்ணிருக்க.. i am so happy இன்னிக்கு கண்டிப்பா மழைதான் வர போகுது"

"சொல்லு அப்படி என்ன முக்கியமான விஷயம்".

"ஹம்ம்!!! உன்கிட்ட ஒரு important matter பத்தி பேசணும். இன்னும் 10 minitus -la என்னோட காலேஜ்கு வெளில நீ வரணும். ஓகே மறந்துறாத come quick !!"

"ஹேய்!! என்னது பத்து நிமிஷத்துல வரணுமா!! அப்படினா நான் பறந்து தான் வரணும்!!"

"நீ எப்படியோ வா . எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்ல. ஆனா ஒழுங்கா வந்து சேரு". என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

"சே அதுக்குள்ள போனை கட் பண்ணிட்ட.. லூசு மனுஷன படுத்தறதே வேலை இவளுக்கு!!! இவகிட்ட மாட்டிகிட்டு முழிக்கறதே எனக்கு வேலையா போச்சு" என்று புலம்பி கொண்டே அங்கு இருந்து  கிளம்பினான்.

அதற்குள் அங்கு கவியும் வந்து விடவே "வா கவி!! இன்னிக்கு நாம வெளில போறோம். சோ உன் வண்டியை இங்கயே விட்டுடு, வா சீக்கரம் போகலாம் அவன் வந்துடுவான்".

"ஹேய்!! என்னாச்சுடீ!! கிளாஸ் கட் பண்ணிட்டு போற அளவுக்கு முக்கியமான வேலையா!! காலங்காத்தால ஏன்டீ விளையாடுற.. ஹேய் ஹேய்....!!! நீ அவன்னு சொன்னது ரஞ்சனையா???"

"ஹ்ம்ம் ஆமா!!! அந்த லூசு ரஞ்சனே தான்" வா போலாம்

இவர்கள் வெளியே வரவும், ரஞ்சன் கல்லூரி வாசலில் வந்து சேரவும் சரியாக இருந்தது.

"ஹேய்!!! ரஞ்சன் வந்துட்டியா!! வா வா"என்று அவனை அழைத்த ரிது "சீக்கிரம் வாடா! அங்க போய் பேசலாம்" என்று கிளம்பினாள்.

"ஹேய்!! ரிதா பேபி! ரிலாக்ஸ்!! இவ்ளோ தூரம் வந்துட்டேன். அங்க வர மாட்டேனா!!!"

அவனை திரும்பி முறைத்தவள் வண்டியை கிளப்பினாள்.

இதனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த மதுவோ அதிர்ச்சியில் இருந்தாள்...

"இவனா!!!!! இவன் எங்க இங்கே வந்தான். அதுவும் ரிது கூட பேசிட்டு இருக்கான்!!! மதுவிற்கு அவர்கள் பேசியது நன்றாக காதில் விழுந்தது என்றாலும், அவன் சொன்ன "பேபி" என்ற வார்த்தையில் கொதிப்பின் உச்சத்தை அடைந்தாள்.

ரிது சொன்னதில் இருந்து அவன் பெயர்  ரஞ்சன்  என்பதை அறிந்து கொண்டாள். ஆனால் அவர்கள் பேசியதை பார்த்தால் நெடு நாள் பழகியவர்கள் போல  தோன்றியது.

அவர்கள் மூவரும் அங்கு இருந்து கிளம்பி சென்ற பின்பு , தான் அங்கு நெடுநேரம் நின்று கொண்டு இருப்பதை உணர்ந்து உள்ளே சென்றாள்.

தன் வீட்டை விட்டு கிளம்பிய மதன் நேராக பண்ணை வீட்டை அடைந்து காரை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்.

தன் சித்தப்பாவுடன் பேசி கொண்டு இருந்த அவனை பார்த்து புருவம் உயர்த்தியவன் அவரிடம்  பேச ஆரம்பித்தான்.

"சொல்லுங்க சித்தப்பா"

"ஹ்ம்ம் மதன். இவன் பேரு ஆதித்யன். ஆதி குரூப் ஒப் கம்பனியோட எம்.டி" என்று மதனிடம் கூறியவர் ஆதியின் புறம் திரும்பி

"இவன் பேரு மதன் குமார். என் அண்ணன்னோட பையன். கன்ஸ்ட்ரக்சன்  கம்பனியை நடத்துகின்றான்." என்று கூறினார்.

இருவரும் மற்றவரை கண்களால் எடை போட்டு கொண்டே கை குலுக்கினார்கள். அதன் பின் பூமிநாதன்  பேசிய அரை மணி நேரமும் இருவர் முகத்திலும் பல்வேறு உணர்சிகள் வந்து போனது. ஆதி சிறு சங்கடத்துடன் காணப்பட்டாலும் , இனி வரும் காலத்தில் தான் எடுத்த முடிவை என்னை தைரியமாக இருந்தான். மதனோ அதற்க்கு நேர்மாறாக ஆதியின் மேல் வெறுப்பிலும்,கோபத்திலும் இருந்தான்.

"மதன் உங்க கோவம் நியாமானது தான். இல்லைன்னு சொல்லலை. பட் என்னோட சூழ்நிலைல இருந்து நீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க.ப்ளீஸ்."

அவனின் பேச்சில் தெரிந்த உண்மையை கண்டு கொண்டவன் புன்னகையுடன் "ஹ்ம்ம் கண்டிப்பா நான் உங்களை நம்பறேன்"

"ரொம்ப தேங்க்ஸ் மதன்."

"தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும். ஆன நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கணும்"

"ஹ்ம்ம் கண்டிப்பா. சரி அப்போ நான் கிளம்பறேன் மதன். வரேன் சார்"

"ஓகே பார்த்து போங்க.மறுபடியும் பார்க்கலாம்"என்று கூறி அவனை அணைத்து விடை கொடுத்தான் மதன்.

அவன் சென்றதும் "இது பத்தி ரிது, சித்திக்கு எதாவது தெரியுமா சித்தப்பா"

"இல்லை மதன். உங்க சித்தி ரிதுக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டா.அப்போ தான்  கரெக்ட்டா ஆதி போன் எனக்கு பண்ணான் "

"ஹ்ம்ம் நீங்க ஆதிய பத்தி என்ன நினைக்கிறீங்க."

அது தான் அவனே சொன்னனே அப்போ இருந்த சூழ்நிலை அப்படின்னு. எனக்கு அந்த தம்பி மேல முழு நம்பிக்கை இருக்கு. நாம கவலையே பட வேண்டாம் மதன். கண்டிப்பா உங்க சித்திக்கும் இவனை ரொம்ப பிடிக்கும்.

சரி எல்லாம் நல்ல படியா நடந்து ரிது சந்தோசமா இருந்த அதுவே நமக்கு போதும்.

அப்போ நான் கிளம்பறேன் சித்தப்பா.சைட்ல  கொஞ்சம் வேலை இருக்கு.

"ஹ்ம்ம் சரி மதன். ரேவதி எப்படி இருக்கா. செக்கப்க்கு  எல்லாம் ஒழுங்கா கூட்டிட்டு போறயா.கவனமா பார்த்துக்கோடா."

"போன வாரம் தான் போய்ட்டு வந்தோம்.ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க சித்தப்பா"

"சரிப்பா நீ கிளம்பு".

அவரிடம் விடை பெற்று கிளம்பிய மதன் நேராக தன் வேலையை  பார்க்க சென்றான்.

இங்கு ரிது கூறியதை கேட்டு கொண்டு இருந்த இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.ஆதியோ தான் நினைத்ததை முடித்து விட்ட மகிழ்ச்சியில் இருந்தான்.

காற்று வீசும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:848}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.