(Reading time: 11 - 22 minutes)

ஞ் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பிக்க……

"ஐயோ மறுபடியுமா. என்னால் முடியாது" என்று அலறினால் ஹாசி.

"ஹாசி" என்று பல்லை கடித்தாள் அஞ்.

"விடு அஞ். நீ சொல்லு"

"இன்னிக்கு நான் ஹர்ஷவையும் நரசிம்மனையும் பார்த்தேன்" என்றாள் அஞ்.

"ஹர்ஷா ஓகே. அது யாரு நரசிம்மன்" என்றாள் நிஷ்.

"எங்க கோச் நிஷ்"

"பெயரே நரசிம்மனா" என்றாள் நிஷ்.

"பெயர் அத்வைத். ஆனால் அவனுக்கு நரசிம்மன் தான் சூட் ஆகுது" என்றாள் அஞ்.

"ஏண்டி. பார்த்த முதல் நாளே சண்டையா" என்றாள் நிஷ்.

"நான் சொல்றதை கேட்டுட்டு சொல்லு" என்று  நடந்த சண்டையை சொன்னாள்.

அவள் சொல்லி முடிக்கவும் நிஷாவும் சாதனாவும் சிரிக்க ஆரம்பித்தனர்.

"சே. உன் நிலைமை இப்படி ஆகிடுச்சே அஞ்" என்று தனக்கு தானே பொலம்பினாள். சாதனா சகஜமானாள்.

"இப்போ கால் பண்ணு" என்றாள் ஹாசி.

சாதனா சர்வேஷ்க்கு கால் செய்தாள்.

"ஹலோ. நான் சாதனா பேசறேன்"

"யாரு. எனக்கு தெரியலை"

அப்பொழுதுதான் தாங்கள் அவனிடம் பெயர் சொல்லாதது ஞாபகம் வந்தது.

"இன்னிக்கு மீட் பண்ணோமே. அந்த பையன் எப்படி இருக்கான்"

"ஓ. அவன் நல்லா இருக்கான். ஒண்ணும் ப்ரோப்ளம் இல்லை"

"அவன் வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிடீங்களா. அவங்க வந்துட்டாங்களா"

"வந்துட்டாங்க. அவன் கூட இருக்காங்க"

"எப்ப டிஸ்சார்ச் பண்றாங்க"

"நாளைக்கு வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க. நெக்ஸ்ட் வீக் தையல் பிரிக்கணும்"

"அவன் பெயர் என்ன"

"சந்தோஷ்"

"தேங்க்ஸ்" ஆத்மாத்தமாக அவள் சொன்னதை கேட்டு அவன் ஆச்சரியமடைந்தான். அவளுக்கு சம்பந்தமில்லாத சிறுவனுக்கு இவன் உதவியதற்கு அவள்  நன்றி சொல்கிறாள்.

"ரொம்ப தேங்க்ஸ்.பை" இவன் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்தாள்.

"பை"

தான் அறிந்து கொண்டதை தோழியரிடம் சொன்னாள். அனைவருக்கும் சந்தோஷம்.

அடுத்தநாள் காலை கான்டீனில் நால்வரும் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த டேபிள்லில் ஹர்ஷா,சர்வேஷ்,அத்வைத்,நவீன் நால்வரும் இருந்தனர். நால்வரும் ஒன்றாக UG படித்தார்கள். இவர்கள் பெண்களை கவனித்தனர். ஆனால் அவர்கள் இவர்களை கவனிக்கவில்லை.

"இன்னிக்கு என்ன காலையிலே கான்டீன்?? ஹாஸ்டல்ல சாப்பிடலையா" என்றாள் ஸ்ரீ.

"நாங்க சாப்பிட்டோம். இருந்தாலும் சாப்பிட்டாமாதிரி இல்லை. அதான் கான்டீன்ல சாப்பிடலாம்னு வந்தோம்" என்றாள் ஹாசி.

இதை கேட்டு சாதனா அவளை முறைத்தாள்.

"நம்ம சாப்பாட்டு ராமி எதுக்கு முறைக்கிறாள்" என்றாள் மது.

"உனக்கு நான் வாங்கிதரேன் சாது. கவலைபடாதே" என்றாள் ராதிகா.

"நான் ஏற்கனவே கடுப்பில் இருக்கேன். நீங்க வேற ஏத்தாதீங்க"  என்றாள் சாது.

"சாது மிரண்டால் காடு கொள்ளாது அஞ். அவளை டென்ஷன் பண்ணாத" என்றாள் நிஷ்.

"சாதுமா. நோ டென்ஷன்" என்றாள் அஞ்.

சாது நிஷாவை அடித்தாள்.

"என்னடி ஆச்சு.  ஏன் அவள் வந்ததிலிருந்து கோபமாக இருக்கா" என்றாள் தீபா.

"அவள் சாப்பிடலை தீபா" என்றாள் ஹாசி.

"என்ன அதிசயம். இது 8வது உலக அதிசயம்" என்றாள் ஸ்ரீ.

"ஏன் சாப்பிடலை சாது " என்றாள் மது.

"அதை இவளை கேளு" என்று நிஷாவை காட்டினாள்.

அதற்கு நிஷா "பிரஷ் பண்ணால் சாப்பிடகூடாது மது"

"அப்படி யார் சொன்னது" என்றாள் தீபா.

"நம்ம சாதுதான்" என்றாள் அஞ்.

"புரியறாமாதிரி சொல்லுங்க" என்றாள் ராதிகா.

இவர்கள் பேச்சை பக்கத்து டேபிள்லில் உள்ள நால்வரும் கேட்பதை இவர்கள் அறியவில்லை. அவர்களும் ஆவலுடன் இதை கேட்டனர். நேற்று இரவு நடந்ததை அஞ்சனா சொன்னாள்.

"இந்த டைரிமில்கை எப்படி மறந்தேன்" என்று சொல்லிக்கொண்டே மற்ற மூவருக்கும் கொடுத்தாள் ஹாசி.

நிஷ் மற்றும் அஞ் வாங்கிகொள்ள சாதனா மறுத்தாள்.

"இப்பதான் பிரஷ் பண்ணேன் வேண்டாம்" என்றாள் சாது.

"ஓகே. நாங்க சாப்பிடறோம். பிறகு தரலைன்னு சொல்லகூடாது" என்றாள் அஞ்.

"போடி. நாளைக்கு சாப்பிடுங்க" என்றாள் சாது.

"முடியாது. இப்போ சாப்பிடனும்" என்றாள் ஹாசி.

"பிரஷ் பண்ணிட்டு சாப்பிட கூடாது. அதுகூட தெரியாம நீங்க மூன்றுபேரும் என்ன படிச்சி என்ன  சேவை நாட்டுக்கு பண்ணபோரீங்களோ " என்றாள் சாது.

"ஐ..இங்க பார்ரா நம்ம சாது சேவை பத்தியெல்லாம் பேசுது " என்றாள் ஹாசி.

"ஏன் நான் பேச  கூடாதா"   என்றாள் சாது.

"தராளமா பேசலாம்.  ஆனால் நீ சேவை பத்தி  பேசினதுதான் எங்களால் தாங்க முடியலை" என்றாள் அஞ்.

"ஒய். என்ன கிண்டலா. சேவை பத்தி நான் பேசினால் என்ன"

"பேசு சாது பேசு. உன் வாய் ஓயும் வரையில் பேசு எங்கள் காது ஜவ்வு கிழியும் வரை பேசு" என்றாள் ஹாசி.

"உன்ன இன்னிக்கு கொல்லாம விடமாட்டேன்" என்று ஹாசியை துரத்தினால் சாது.

10 நிமிடம் கழித்து இருவரும் சகஜமானார்கள்.

"ஓடி ஓடி டையர்டாகிட்டேன். அந்த டைரிமில்கை தா" என்றாள் ஹாசி.

"ஏண்டி. இவ்வளவு நேரம் இதை பத்தி தானே பேசணும். இப்போ வேண்டாம். காலையில் சாப்பிடு" என்றாள் ஹாசி.

"நோ. இப்போவே வேண்டும்" என்றாள் அஞ்.

அவள் பேச்சை யாரும் கேட்கவில்லை.

அடுத்தநாள் காலை.

எப்பொழுதும் யாராவது இரண்டு பேர் கீழே சென்று நால்வருக்கும் பால் எடுத்து வருவர். நிஷாவும் அஞ்சனாவும் பால் எடுத்து வந்தனர்.

"என்ன 3 கப் தான் இருக்கு" என்றாள் சாது.

"நீ பிரஷ் பண்ணிட்டியா  சாது" என்றாள் நிஷ்.

"நான் என்ன கேட்கிறேன். நீ என்ன சம்பந்தம் இல்லாம பேசற"

"கேட்டதுக்கு பதில் சொல்லு"

"பண்ணிட்டேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.