(Reading time: 11 - 22 minutes)

"ப்ப உனக்கு பால் இல்லை"

"அடிப்பாவி. ஏன்டி"

"நீதான நேத்து பிரஷ் பண்ணா எதுவும் சாப்பிட கூடாதுன்னு சொன்ன"

"நான் நைட் சொன்னேன். காலையில் இல்லை"

"எல்லாம் ஒன்னுதான்". அவள் பால் குடிக்காமல் குளிக்க சென்றாள்.

டிபன் சாப்பிட சென்றபோது

"பிரஷ் பண்ணிட்டு சாப்பிட கூடாது சாது. சோ நீ சாப்பிடாத" என்று சொல்லி மூவரும் அவளை சாப்பிடவிடவில்லை.

இந்த குட்டி பிளாஷ்பாக் சொல்லி முடித்ததும் அனைவரும் சிரித்தனர்.

சாது  கடுப்பாகி இதை ஆரம்பித்து வைத்த நிஷாவை மொத்தினாள்.

"ஹே. இது காலேஜ்டி. ஹாஸ்டல்ல பார்த்துகலாம்” என்றாள் நிஷ்.

"கடவுளே. நான் என்ன பாவம் பண்ணினேன். இப்படி குட்டி பிசாசுங்களை எனக்கு பிரிண்ட்ஸா அனுப்பிருக்கியே. இது உனக்கு  அடுக்குமா? " என்றாள் சாது.

"எல்லாம் கரெக்ட்தான். உனக்கு ஏத்தாமாதிரி அனுப்பிருக்கார்" என்றாள் ஹாசி.

"ஒரு குட்டி பொண்ணை ஏன் எல்லோரும் கிண்டல் பண்றீங்க" என்றாள் சாது சாதுவாக முகத்தை வைத்துக்கொண்டு.

"ஹா ஹா. இந்த வருஷ செம்ம காமெடி இதுதான்" என்றாள் ஸ்ரீ.

"சிறந்த நகைச்சுவைகாண விருதை நாங்க உனக்கு தற்றோம்" என்றாள் அஞ்.

"போடி" என்று தலையில் கை வைத்தாள் சாது.

சாதனாவிற்கு பிடித்த பூரி வாங்கி கொடுத்தாள் நிஷா. இதுதான் அந்த விருது என்று சொல்லிக்கொண்டே கொடுத்தாள்.

மற்றவர்கள் கிளம்ப நால்வர்மட்டும் இருந்தனர்.

"நீ கிரேட் நிஷ். நம்ம சாதுவையே சாப்பிடாம பண்ணிட்டியே" என்றாள் ஹாசி.

சாதனா அதை கண்டுகொள்ளாது "மச மசன்னு நிக்காம  எனக்கு பால் வாங்கிட்டு வா ஹாசி"

"அடிங்க. உன்னை சாப்பிட விட்டதே தப்பு" என்று சொல்லிவிட்டு பால் வாங்கி தந்தாள்.

"எப்ப ஊருக்கு போகலாம்" என்றாள் அஞ்.

அனைவரும் ஒன்றாகதான் கிளம்புவார்கள். ஹாசி திருவண்ணமலையில் இருக்கும் அவள் சித்தி வீட்டிற்கு செல்வாள்.

"இந்த வீக்எண்ட் போகலாமா" என்றாள் ஹாசி.

"நெக்ஸ்ட் வீக் போகலாம்" என்றாள் நிஷ்.

"ஓகே " என்றனர் மூவரும்.

"இந்த வீக் சந்தோஷை பார்க்க போகலாமா" என்றாள் சாது.

"போகலாம் சாது. அதுக்குதான் ஊருக்கு போகவேண்டாம்னு சொன்னேன்" என்றாள் நிஷ்.

"எப்ப போகலாம்? " என்றாள் அஞ்.

"சனிக்கிழமை போகலாமா" என்றாள் ஹாசி.

"சண்டே போகலாம். சனிக்கிழமை ஷாப்பிங் போகலாம். எப்பவும் போல வீட்டுக்கு வாங்கிட்டு சந்தோஷ்கும் வாங்கலாம்" என்றாள் நிஷ்.

" டன்" என்றனர் கோரஸாக.

"எந்த ஹாஸ்பிடல் சாது. கேட்டு இருக்க மாட்டியே நீ " என்றாள் ஹாசி.

"நீ என்னிக்கு தப்பா  சொல்லி இருக்க  ஹாசி" என்றாள் சாது

"கேட்கறதை ஒழுங்கா கேட்காம பேசறதை பாரு" என்றாள் அஞ்.

"நம்ம சர்வேஷ் தான கேட்டுக்கலாம்" என்றாள் சாது.

சாது சொல்லி முடிக்கவும் நவீன்,ஹர்ஷா,அத்வைத் மூவரும் அவனை பார்த்து நக்கலாக சிரித்தனர். சர்வேஷ் எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியாமல் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க மற்ற மூவரும் அவனுடன் கிளம்பினர்.

நால்வரும் தோழியரை கடந்துதான் செல்ல வேண்டும். இவர்களை கடக்க அவர்கள் வர தோழியரும் வகுப்புக்கு செல்ல எழ அனைவரும் அவர்களின் ஜோடிக்கு எதிரே இருந்தனர். தோழியர் அங்கு  வந்தபோதே யாரோ நால்வர் இருப்பதை பார்த்தனர். இப்பொழுது இவர்களை பார்த்த பின்பு தாங்கள் பேசினதை இவர்கள் கேட்டிருப்பார்கள் என்று தெரிந்தது.

சாது கடைசியாக பேசினது நினைவு வர தோழியர் மூவரும் சாதுவை பார்த்தனர்.  சாது முழிக்கவும் அவளை காப்பாற்றும் நோக்கத்தோடு நிஷ் சாரி என்று பொதுவாக சொல்லி மூவரையும் கூட்டிகொண்டு வகுப்புக்கு சென்றாள். சாது தனது வகுப்புக்கு வந்தும் நார்மல் ஆகவில்லை. சர்வேஷ் முகமே அவளுக்கு கண் முன் தோன்றியது.

சர்வேஷ் நிலையும் அதுவே. மற்ற மூவரும் அவனை கிண்டல் செய்ய இவன் சமாளிக்க என்று அந்த நாள் சென்றது.

அட்லீஸ்ட் சாது சர்வேஷ்க்கு ஸ்பார்க் வந்ததே. மத்தவங்கயெல்லாம் ரொம்ப ஸ்லோ

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.