(Reading time: 24 - 47 minutes)

டேய் நீ இருக்கிறதை மறந்துட்டேன் டா.. ஏன் டீ பூ... இவனை தெரியும்ல நம்ம சீனியர் பிரபு...

டேய் வாசு நீ அடி தான் வாங்கப்போற! எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன் இப்படிக்கூப்பிடாத னு?! உன்னால தான் எல்லோரும் இப்படி கூப்பிடுறாங்க என்று பிரபுவை பார்த்தாள். 

அப்போ உனக்கு இவனை நினைவிருக்கு! சரி சரி நினைவில்லை னு சொன்னாதான் தவறு. சரி சாப்பிட்டியா?

இல்லை நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டேளா?

இல்லை.. இவன் யாரோ ப்ரண்டுக்காக வெயிட் செய்யறான். என்ன டா இன்னும் எவ்வளவு நேரம்? கால் போடு உன் ப்ரண்டுக்கு!

அதற்குள் பிரபுவிற்கு அழைப்பு வந்தது.

சொல்லுங்கப்பா!

...

ம்ம் வந்தாச்சு.. பார்த்தாச்சு! சாப்பிடப்போறேன். அப்புறமா கூப்பிடறேன் அப்போ பேசுங்க!' என்று எழுந்து சற்று தள்ளி நின்றான்.

அதற்குள் குழலீக்கும் அழைப்பு வர, வாசு இவர்களுக்கு உணவு வாங்கிவர எழுந்து சென்றான்.

அர்ஜுன் எங்க டா இருக்க??

ஏய் வாத்து! உன்ன மட்டும்ல வர சொன்னேன்.... எதுக்கு பிரபுவை வேற வரவச்சிருக்க??

டேய் எரும நான் எங்க வரச்சோன்னேன்...அவன் என்னை பார்க்க வந்தான்... உன்னைய இல்ல...

வாட்??!

எப்போ வர??

இப்போதைக்கு வர முடியாதுடா...

ப்ரியாவை வேற கூட்டிட்டு வந்தேன்! நீ அவனை நம்ம மீட் செய்யற இடத்துல உட்கார வைத்துட்டு எங்கடீ போன? 

அச்சோ?? அவ எதுக்கு இங்க?? என் வாழ்க்கை பிர்ச்சனைனு சொன்னேன்... நீ அவளை கூட்டி வந்திருக்கே??

உன்னை பார்க்கனும் னு தான் கூட்டி வந்தேன்.

அதற்குள் பேசிவிட்டு அவள் எதிரில் வந்து அமர்ந்தான் பிரபு.

'எல்லோரும் சேர்ந்து என் வாழ்க்கையில் நல்லா விளையாடறீங்க டா! எனக்கு ஒரு சங்கடம் னு உன்னை கூப்பிட்டேன் பாரு என்னை சொல்லனும்!'

ஏய் நான் என்னடீ பண்ணேன்? என்ன பிரச்சனைனு சொல்லு?

வேண்டாம்பா...நீ போய் உன் ஆளைப்பார்! என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நேரில் இருந்த என்ன செய்வேன் னு தெரியாது? தயவு செய்து பேசாத! எனக்கு ஃபோன் பண்ணாதே!' என்றுவிட்டு கட் செய்தாள். 

இவ்வளவு நேரம் அவள் எதிரில் அமர்ந்து கோபத்துடன் அவள் திட்டிக்கொண்டிருந்ததை பார்த்திருந்தான் பிரபு புன்னகையுடன்.

கால்லை கட்டு செய்துவிட்டு டேபிள் மீது வைத்துவிட்டு அவனை பார்த்தாள்.

'ப்பா...! என்ன ஒரு கோபம் என்ன செய்யப்போறேனோ?' என்றான் பெருமூச்சுடன்.

மீண்டும் அலறியது அலைபேசி! இந்த முறைதான் ரிங்க் டோன்னை கவனித்தான்.

'உன் விழிகளில் விழுந்த நாள் முதல்... 

நான் தொலைந்தது அதுவே போதுமே...

வேறெதுவும் வேண்டாமே... பெண்ணே!'

மீண்டும் அவனை பார்த்தாள். அந்த விழிகள் என்ன கூற வந்ததோ? அவன் எதை புரிந்துக்கொண்டானோ? அந்த பாடலும் இவள் விழிகளும் ஏதோ புரிய, புன்னகையுடன் 'யூ கன்டின்யூ!' என்றுவிட்டு நகர்ந்து வாசுவுடன் போய் க்யூவில் நின்றுக்கொண்டான்.

டேய் அர்ஜுன்! ஃபோன் செய்யாதே னு சொன்னேன் ல?

அந்த பக்கத்திலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. 

ஹலோ பூங்குழலீ! நான் ப்ரியா பேசறேன். நான் தான் உங்ககிட்ட பேசனும்னு வந்தேன். அவரை எதுக்கு திட்டறீங்க??' என்றாள் பொறுமையாக!

தானாகவே கண்கள் பிரபுவின் பக்கம் சென்றது!

குழலீ அமைதியாக இருந்தாள். 'ஏங்க எதுவுமே கேட்காம இப்படியா திட்டுவீங்க? இதுக்கு முன்னாடி இருக்கலாம்... ஆனா இனிமே முடியாது!'

மீண்டும் அதே அமைதி!

லைன்ல இருக்கீங்களா??

'சாரிங்க ப்ரியா! தப்பா நினைச்சுகாதீங்க...அவன்.. சாரி.. அர்ஜுன் வரேன்னு சொன்னார்...வரவில்லையா... ப்ரண்டுனு உரிமைல கொஞ்சம் திட்டிவிட்டேன்! சாரி!'

'இப்படித்தான் எல்லோரையும் திட்டுவீங்களா! அடுத்தவங்க சைடுல என்ன நியாமா இருக்குனு பார்த்துட்டு அப்புறம் திட்டுங்க! படப்படனு பொறிஞ்சு தள்ளாதீங்க! பாவம் உங்க ஆளு என்ன தான் செய்யப்போராரோ???!'

அமைதி!

என்ன பதிலையே காணோம்...! அஜு! ரொம்ப பேசிட்டேனா?? லைன்ல தான் இருக்காங்க.. ஆனால் பதில் இல்லையே!

இருக்கேன் ப்ரியா! நான் ஒன்னு சொல்லட்டுமா? தப்பா நினைச்சாக்கூட பரவாயில்லை! 

சொல்லுங்க குழலீ!

அதற்குள் உணவை வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்தனர் பிரபுவும் வாசுவும்!

கடுமை கலந்த சிரிப்புடன் 'இப்போ...நீங்க மட்டும் இப்போ என்ன செய்தீங்க? என் பக்கம் என்ன இருக்குனு கேட்காம தானே நீங்களும்... அந்தந்த சிட்சூவேஷன்... வந்தா அப்படிதாங்க! ஆனா உங்க கோபத்துக்கான காரணம் எனக்கு புரிஞ்சிட்டு! அதனால நீங்க என்னை திட்டினாலும் நான் ஏற்றுக்குறேன்! நீங்க சொல்லுறதும் உண்மைதான்! ஏன் னு ஒரு வார்த்தை கேட்டிருக்கனும்! ஆனா..எப்பவும் அடுத்தவங்க ஷுஸ்ல இருந்து பார்க்க முடியாது ப்ரியா!'

இப்போது அமைதி ப்ரியாவின் உடைமையானது!

'சரி விடுங்க...என்கிட்ட திட்டு வாங்காம இருக்க..உங்க அஜுகாக நீங்க கவலைப்படுங்க... பட் என் ஆளுக்காக வேண்டாம்! அவர் தலையெழுத்து அவர் அனுபவிச்சித்தான் ஆகனும்! ஃப்ராங்க்லி ஸ்பீக்கிங்...நான் இன்னோரு நாள் உங்களை மீட் செய்யலாம் னு இருந்தேன்.. அதை அர்ஜுன் கிட்டவும் சொல்லியிருந்தேன்! கேட்காம உங்களை கூட்டி வந்திருக்கார்! நான் என்ன செய்ய? நான் இருந்த... இருக்கிற நிலைமை அப்படி! உங்க ஆளு இதற்கு ஒரு விடை சொல்லுவார் னு தான் கூப்பிட்டேன்! அதை தவிர ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு தான்...'

பட் பரவாயில்லைங்க... நான் அப்புறமா அர்ஜுன்கிட்ட விஷயத்தை சொல்லுறேன்! யூ பிப்பிள் என்ஜாய்!

ஆனா ஒன்னு மட்டும் சொல்லனும் னு ஆசைபடறேன் ப்ரியா...

சொல்லுங்க குழலீ!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.