(Reading time: 24 - 47 minutes)

ர்ஜுன் ரொம்ப நல்லவன்! அவனை நல்லா பார்த்துக்க ஒரு நல்ல பெண் வரனும்னு நினைச்சேன். இப்போ நீங்க அவனுக்காக பேசனீங்களே அது காதலா னு தெரியலை... ஆனா ஒரு ஆழ்ந்த அக்கரை இருந்தது. இதே அக்கரை அவன் கூடவே நீங்க இருக்கிற காலம் முழுவதுக்கும் வைத்திருக்கனும்...!

நிச்சயமா! என் உயிருள்ள வரை குழலீ!

ஹாப்பி டூ ஹியர் திஸ்! ரொம்ப நன்றி ப்ரியா! வார்த்தை மாற மாட்டீங்க னு நினைக்கிறேன். மீட் யூ சூன்!' என்றுவிட்டு வைத்தாள்.

எவ்வளவு நாழி தான் டீ பேசுவ? சாப்பிடு..' என்று தட்டை நீட்டினான் வாசு.

சாப்பிட ஆரம்பித்தனர். பிரபுவும் வாசுவும் பேசிக்கொண்டே சாப்பிட இவள் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள். குழலீ என்றழைத்தவாரே வந்து சேர்ந்தான் ராம்.

எதற்கோ இவள் மொபைல் பக்கமாக வாசு கண் போக அதை எடுத்து பார்த்தான்.

நீ திருந்தவே மாட்டியாடீ? இவன் போட்டோவையா இன்னும் வைத்திருக்க? கேட்டா ஆயிரம் வசனம் பேசுவ!

ஆமாம் அப்படி சொல்லுங்க ப்ரோ! இதை எடுத்துட்டு உங்க லவ்ர் ... க்ரஷ்...' என்று கண்சிமிட்டி...'இப்படி யாராவது போட்டோவை வைங்க! இல்ல சீக்கிறமா ஒரு நல்ல பையனா பார்த்து செட்டில் ஆகுங்க.. அவர் போட்டோவை வைத்திடுங்க!

ஏன் இந்த போட்டோவுக்கு என்ன குறை? எனக்கு பிடிச்சிருக்கு.. நான் வைச்சுக்குறேன்!

இவனேல்லாம் ஒரு ஆளுனு..? கிரிக்கெட் ஆடுவதைவிட மன்மதன் வேலையேல்லாம் தான் ரொம்ப நல்ல செய்வாறே?!' என்றவாறு பிரபு விமானத்தில் கிருஷ்ணாவிடம் பேசிய விஷயங்களை பற்றியே திரும்பவும் பேசினான் வாசு.

குழலீ பேச தொடங்கும் முன்னமே பிரபு தொடங்கினான்.

ஏன் வாசு இப்படி சொல்லற? அவன் பக்க நியாத்தை கேட்கனும் ல? அவன் ஒரு நல்ல கிரிக்கெட்ர் தான். கிளாசிக் ப்ளேயர்! இது உண்மையானுக்கூட தெரியாது! அதுக்கு இவன் என்ன செய்வான் சொல்லுடா? இவன் மேல் என்ன தப்பு இருக்கு சொல்லு? ஆனா ஒன்று மட்டும் சொல்லறேன். மனைவியின் நம்பிக்கையின்மையை போக்கியிருக்கனும் அவன் நண்பன்! அது முடியலை! சரி சொல்லு.. இப்படி ஒரு காரியத்தில் ஈடுப்பட்டால்... போர்ட்ல டிஸிப்ளினரி ஆக்‌ஷன் எடுக்க மாட்டாங்களா? இல்லை ல...அது அவனோட தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். நமக்கு கமென்ட் செய்ய உரிமை இல்ல.'

எப்போ டா நீ இப்படி மாறிபோன? நேத்து வரை வேற மாதிரி பேசின!' என்று வாசு ஏதோ கேட்க அதற்கு பதிலுக்கு பதில் கொடுத்தான் பிரபு.

நீங்களுமா பிரபு? இந்த குழலீ தான் இப்படி டயலாக் பேசுவா? உங்களுக்கு என்ன ஆச்சு? - ராம்.

இவ்வளவு பேசறியே பிரபு... நான் ஒன்னு கேட்கவா? உன் லவ்ர்... இல்ல இல்ல உன் மனைவினு வைத்துப்போம்! உன் வைஃப் உன்னை பிடிக்கலை இந்த கிருஷ்ணாவை தான் பிடிச்சிருக்கு.. அவன் கூட போறேன் னு சொன்னா என்ன செய்வ? இப்படி தான் டயலாக் பேசுவியா?

இவ்வளவு நேரம் இவர்கள் பேசுவதை... இல்லை..பிரபு பேசுவதை உள்வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். இவள் பேசியதை வேறு வடிவம் கொடுத்து பிரபு கூறிக்கொண்டிருதான். ஆனால் இப்பொழுது வாசு கேட்ட கேள்வியில் அதிர்ச்சியடைந்தாள். 

பிரபு இவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, 'என்ன டா இப்படி கேட்டுட்ட? அவளுக்கு அவனைதான் பிடிச்சிருக்குனா அவளுக்கு மனவிலக்கு கொடுத்து நானே அவனுடன் சேர்த்து வைப்பேன்.'

என்னது?? லூசா நீ?? அவன் ப்ரண்ட் பத்தி மட்டும் சொன்னே, 'மனைவியின் நம்பிக்கையின்மையை போக்கியிருக்கனும் அவன் நண்பன்!' இந்த டயலாக் எல்லாம் மத்தவங்களுக்கு தானே நமக்குகில்லையே?! உன் மனைவிக்கு உன் மேல் நம்பிக்கையில்லைனா??!! ம்ஹும்... ரொம்ப கஷ்டம்! எல்லாம் பேசிடலாம் டா... ஆனா இதை நீ அனுபவிக்கும் போது தான் டா வலி தெரியும்! உண்மை புரியும்!'

'அப்போ பார்த்துக்கலாம் வாசு! இப்போ விட்டுடூ!'

சட்டென்று பொங்கி வந்தது கோபம் குழலீக்கு! என்ன ஒரு பதில்???

'பிரபு! இதை.. இந்த பதிலை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கலை! என்ன சொன்னீங்க...'அவனைதான் பிடிச்சிருக்குனா அவளுக்கு மனவிலக்கு கொடுத்து நானே அவனுடன் சேர்த்து வைப்பேன்' னு தானே! அதுக்கு எதுக்கு உங்களை திருமணம் செய்துக்கனும்? முதல்ல கேள்வியே தவறு! நீங்க என்ன பதில் சொல்லியிருக்கனும்?? என் வைஃப் அப்படியேல்லாம் செய்யமாட்டா னு சொல்லியிருக்கனும்!'

குழல்.. ஏதோ சும்மா தானே ஒரு எக்சாம்பிளுக்கு தானே பேசிக்கிட்டு இருக்கோம்'- பிரபு

பேசாதீங்க பிரபு! நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஒவ்வொரு பந்தமும் உருவாகுது. அதை புரிஞ்சிக்கோங்க! நம்பிக்கையில்லைனா அதை வரவெச்சிட்டு அப்புறமா திருமணம் செய்யுங்க! இப்போதைக்கு என்னை விட்டுடூங்க!' என்று எழுந்தவளின் கையை சட்டேன பிடித்துவிட்டான் பிரபு.

முதல்ல கையை எடுங்க பிரபு!' என்று விலக்கிக்கொள்ள முற்படுகையில் குழலீயின் விரலில் இருந்து மோதிரம் நழுவி கீழே விழுந்தது!

அமைதியாக இவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்தனர் வாசுவும் ராமும்! மோதிரத்தை எடுத்த வாசு அதை பார்த்துவிட்டு பிரபுவிடம் நீட்டினான். 

குழல் ப்ளீஸ்! இப்படி உட்காரு! என்று கட்டாயப்படுத்தி அமர வைத்தான் பிரபு. இன்னும் அவன் பிடி தளரவில்லை! மோதிரத்தை வாங்கி அவள் விரலில் போட்டுவிட்டான்.

நீ என்னை திட்டு, தண்டனை கொடு.. ஆனால் நான் சொல்லுறதை பொறுமையா கேளு!

ஏய் ஏய்... வெயிட்! இங்க என்ன நடக்குதுனு இரண்டு பேரும் சொல்லறீங்களா? எங்க மேனேஜர் கிட்டவே வம்பு செய்யறீங்களா? - ராம்

பிரபுவின் பிடி சற்று தளர்ந்தாலும் அவள் கை இன்னும் அவன் கைகளுக்குள்ளே இருந்தது!

இப்படி கையை பிடித்துதான் ஏற்கனவே பெரிய சண்டையாச்சு... மறுபடியுமா பிரபு? அவ கையை விடுடா! நீ போ குழலீ!

குழலீ உட்காரு! வேலை மெனக்கேட வந்திருக்கேன்! இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்? அது ஸ்கூல் படிக்கும் போது ஏதோ விளையாட்டுத்தனமா செய்தது வாசு. இப்போ இது வேற! குழலீ கையை பிடிக்க எனக்கு உரிமை இருக்கு! அதனால பிடிக்கிறேன்!

உரிமை இன்னும் வரலை... நானும் கொடுக்கலை! நீங்களா எடுத்துக்கிட்டது! ப்ளீஸ் கையை எடுக்கறீங்களா? - குழலீ

நாலு நாள் முன்னாடி இந்த மோதிரத்தை என் கைகளில் இருந்து கழட்டி உன் விரல்களில் போட்டுவிடும் போது உனக்கு எந்த உரிமையும் இல்ல னு சொல்ல வேண்டியது தானே! அன்று கையை காட்டும் போது இப்போ சொன்னதை சொல்ல தோன்றியதா? இல்லை ல? ஸோ எனக்கான உரிமையை நீங்க கொடுத்து நாலு நாள் ஆச்சு கலெக்டர் மேடம்!

என்ன சொல்லறீங்க பிரபு? நான் புரிஞ்சிக்கிட்டது சரி னா..??? - ராம்

எஸ் வீ ஆர் எங்கேஜ்ட்! கேட்டிங் மெரீட் ஆன் டிசம்பர் 12. 

ஹேய் சூப்பர் குழலீ! - வாசு

கங்ரேட்ஸ் பிரபு!- ராம்

ப்ளீஸ் கையை எடுக்கறீங்களா?-குழலீ

கையை மெல்ல விடுவித்தான். சட்டென்று எழுந்தவள் திரும்பி 'எனக்கு மீட்டிங் இருக்கு. ஏற்கனவே இரண்டாச்சு வாசு. நான் ஆத்துக்கு வந்து பேசறேன்', நீ இப்போ வரியா இல்ல வெட்டி கதை அடிக்க போறியா ராம்?'

நான் சாப்பிட்டு வரேன். நீ போ!

சரி என்றுவிட்டு புறப்பட்டாள். ஒரு வார்த்தை திரும்பி பிரபுவிடம் பேசவில்லை.

அப்போதுதான் கவனித்தான் ராம். 'அச்சச்சோ! மொபைலை விட்டுட்டூ போய்டாளே. எதுக்கு இந்த சாக்லேட் வாங்கினாள். சரி நான் எடுத்துக்கிட்டு போறேன் பிரபு. இல்லைனா மேனேஜர் மேடமுக்கு கோபம் வந்திடும்.'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.