(Reading time: 13 - 26 minutes)

னால் அவனோ அது சலங்கையாக இருந்தாலும் இவள் அதை இசைகருவியாக பயன்படுத்தியிருப்பதாக கூறி பாடலை தகுதி நீக்கம் செய்வதாக சொன்னான்.

ஒரு வகையில் அவன் சொல்வதும் சரி தானே.

மேடையிலிருந்து கீழிறங்க தொடங்கினாள்.

ஆனால்………அவன் இதை இவள் பாட தொடங்கும் போதே சொல்லியிருக்கலாம்…..

சட்டென திரும்பி அவனிடமாக சென்றவள் “ இதை நீங்க முதல்லயே சொல்லிருக்கலாம்….தோற்க வைக்றதுக்கா காம்படிஷன்…?..” இவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அடுத்த போட்டியாளர் மேடை ஏறி இருக்க…கடகடவென திரும்பி நடந்தாள்.

ஹேய்…என ஏதோ சொல்ல தொடங்கிய அவனும் அதோடு பேச்சை நிறுத்திக் கொண்டான்.

கல்சுரல்ஸ் முடிந்து வெளியே வரும் போது அனேகர் சொல்லி முடித்திருந்தனர் உண்மையில் பரிசு பெற தகுதியானது இவள் பாடல் தான் என.

அதுவே ஜெயித்த மாதிரி தானே. சந்தோஷமாக கார் பார்க்கிங்கை நோக்கிப் போனாள்.

அவள் காருக்கு அடுத்து நின்ற அந்த ஹூண்டாய் டஸ்கன் கண்ணில் பட்டது. ஃபோர் வீல் ட்ரைவிங்……ஒரு நாள் ட்ரைவ் செய்து பார்க்கனும் நினைத்துக் கொண்டே இவள் தன் காரை அடைய அந்த டஸ்கனின் கதவை திறந்து கொண்டு துள்ளி இறங்கினான் ஒருவன்.

பார்க்க மூவி ஹீரோ போல் இருந்தான். “ஹாய்….உங்க நேம் நல்லிசை தானே….ரொம்ப அழகா பாடுனீங்க….ஐ பிகம் யுவர் பிக்  ஃபேன்….பை த வே ஐம் சதீஷ்…” கை கூப்பினான்.

அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது…இந்த பேங்களூரில்…அதுவும் இந்த மார்டன் மனிதன்… இவளிடம் கை கூப்பினால்….

“ஏங்க என்னை பார்த்தா அவ்ளவு ஆர்தடாக்ஸாவா தெரியுது….?”

“அப்டி இல்ல…ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைப்…கை நீட்டின பிறகு அவங்க முகம் சுருக்குனாங்கன்னா….ரெண்டுபேருக்கும் கஷ்டமா இருக்கும்…அதான் ஏன் தேவையில்லாம….இப்போ உங்களை பத்தி தெரிஞ்சிட்டு…இனி தாராளமா….” கை நீட்டினான் சதீஷ்.

கை குலுக்கினாள் நல்லிசை.

“ரொம்ப நல்ல சாங்….மது சார் கூட உங்களுக்குதான் ஃபர்ஸ்ட் ப்ளேஸ் கொடுத்ருப்பார்…ஆனா அவர் ஃப்ரெண்டு நவ்யாவும் காம்படிஷன்ல இருந்தாங்கல்ல…சோ அவங்கள ஜெயிக்க வைக்றதுக்காக இப்டி செய்துட்டார் போல…..யூ டோண்ட் கெட் டிஸ்கரேஜ்ட்….”

இந்த நிமிடம் வரை மனம் இவ்வளவு சோர்வாக உணரவில்லை. ஆனால் இந்த நொடி மிகவும் சோர்ந்து போனது…

“இட்ஸ் ஓகே சதீஷ்…இன்னொரு தடவை பார்த்துகலாம்…இப்போ கிளம்புறேன்….பை…”

காரைத் திறந்து இவள் ஏறி ஓட்டுனர் இருக்கையில் அமர, அந்த சதீஷ் தான் அலறினான்.

“ஹேய்….ஹோல்ட் ஆன்…..லுக் அட் த வீல்ஸ்…”

இறங்கிப் பார்த்தால் நான்கு டயரும் பஞ்சர். கண்டிப்பாக யாருடைய வேலையோ தான் இது.

இருக்கும் மனநிலையில் இது வேறயா?

“அப்பப்ப இப்டி செய்துருவாங்கபா…நானும் நாலஞ்சு தடவை மாட்டிருக்கேன்…ஜெலசி பீபுள்..”

“ம்” இவள் கண்கள் அந்த டயர்களில் இருக்க மனதில் ஏனோ மதுரன் முகம். மொத்தத்தில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“ஸ்டெப்னி வச்சு சமாளிக்க முடியாதுங்க நல்லிசை…நீங்க சர்வீஸ் சென்டர்க்கு கால் செய்துடுங்க….அவங்க வந்து பார்துகட்டும்….நான் இப்போ உங்களை ட்ராப் செய்துடுறேன்….”

அந்த சதீஷிற்கு பின்னாக வந்து கொண்டிருந்தனர் மதுரனும் அவனுடன் சற்று குட்டையான அந்த சல்வார் பொண்ணும், பாட்டுப் போட்டியில் பரிசு வாங்கியவள். சதீஷுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த இவள் கண்களில் அவன்  முகம் தெளிவாக விழ,

அதில் ஒருவித முகபாவம்… இவள் சதீஷோடு நிற்பது அவனுக்கு பிடிக்கவில்லை என்பது தெரிகின்றது..

இவனுக்கு என்னவாம்…? பெரிய இவன்…?

இருந்த எரிச்சலில் எள்ளும் கொள்ளும் துள்ளி வெடித்தது இவள் முகத்தில்.

எதோ உணர்ந்தவனாக சதீஷும் தன் பின் திரும்பி பார்த்தவன், இவளிடமாக திரும்பி மெல்ல முனங்கினான் “இது தான்  அவரோட ஃப்ரெண்ட் நவி…”

அதான் சொல்லாமலே புரியுதே

“தேங்க்ஸ் சதீஷ்….பட் நான் ஆட்டோல போய்ப்பேன்….” இவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

“மழை வருது நல்லிசை….இப்பல்லாம் ஆட்டோ கிடைக்காது….”

“பிரவாயில்ல….நான் சமாளிச்சுப்பேன்….”

“ஓகே….தென் நானும் கூட வர்றேன்.” சதீஷும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

நின்று அவனை ஒரு கணமான பார்வை பார்த்தாள்.

“நானே போய்ப்பேன் சதீஷ்..”

அத்தனை அழுத்தம் உஷ்ணம் அந்த வார்த்தைகளில்.

சதீஷ் அப்படியே நின்றுவிட்டான்.

“ஓ…ஓகே…க்கூல்….சீ யூ ..பை நல்லிசை”

“பை” இதற்குள் வேகமாக வெகு தூரம் சென்றிருந்தாள் அவள்.

தனக்குள் என்ன கொதித்துக் கொண்டிருக்கிறது என்று அவ்வளவாக புரியவில்லை.

ஆனால் ரெண்டு விஷயம் புரிந்தது. பாதி காரணம் மதுரன் என்றால் மீதி காரணம் சதீஷ் தான். ஏனோ உள்ளுணர்விற்கு சதீஷைப் பிடிக்கவில்லை.

கல்லூரி வளாகத்திற்கு அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றாள். சில்லென்ற குளிர்காற்று. இருண்ட வானம். இன்னும் இரண்டு நிமிடங்களில் கடும் மழை கட்டாயம் என கட்டியம் கூறின.

கல்லூரிக்கு அருகில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தான் தங்கி இருக்கிறாள். ஆனால் நடக்கும் அளவு மிக அருகில் அது இல்லை.

என்ன செய்யலாம்?

அருகில் நிழலாட திரும்பி பார்த்தால் அவன் மதுரன்.

அவன் இவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

மழை தொடங்கியது.

பார்வைக்குபட்ட அத்தனை ஆட்டோகளும் பயணிகளோடு.

என்னதான் பேருந்து நிறுத்த நிழற்குடை  என்றாலும் வீசுகின்ற காற்று வீசியடிக்கும் சாரலால் நனைந்து கொண்டிருந்தாள். நடுக்கி எடுத்தது குளிர் காற்று.

வந்த அனைத்து பேருந்துகளில் அவனுக்குதவும் பேருந்து ஒன்றுமில்லை போலும். அவனும் இவளைப் போல் காத்துநின்றான்.

இரவாகிப் போனது. இனி என்ன செய்யவென்று தெரியவில்லை. இவள் ஏரியா செல்லும் பேருந்து எது என்று தெரிந்தால் அதிலாவது செல்வாளே…

மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“மிஸ்டர் மதுரன்…எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?...கோஷிஷ் ஹாஸ்பிட்டல் பக்கம் தான் என் ஹாஸ்டல்…இங்க இருந்து எந்த பஸ் போகும்…?”

“பஸ் வர்றப்ப சொல்றேன் நல்லிசை..”

அடுத்து வந்த பேருந்தில் அவளை ஏறச்சொன்னவன் தானும் ஏறிக் கொண்டான்.

இவனும் இங்கதான் இருக்கானா?   

“அடுத்த ஸ்டாப்…நீங்க இறங்கனும்..” அதைத் தவிர அவன் எதுவும் பேசவில்லை.

இவள் இறங்கும் போது இவளுக்கு அடுத்து இறங்கியவன் இவள் நன்றி சொல்ல பார்க்கும்போது அருகிலிருந்த கடைக்குள் நுழைந்திருந்தான்.

அருகில் தான் அவள் ஹாஸ்டல் அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அதனுள் சென்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.