(Reading time: 13 - 26 minutes)

ரவு படுக்கும் போது ஏதோ ஒரு மகிழ்ச்சி, கூடவே ஒரு மன சோர்வு தவிர ஒரு சலனம். அவன் எப்படி போய் சேர்ந்தான்? என்பதாக.

றுநாள் இவள் பார்கிங்கிலிருந்து வெளி வரும்போதே நவ்யா கடித்துக் குதறிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. வேறு யாரை? மதுரனைத் தான்.

“நீ பாட்டுக்கு விட்டுட்டு போய்ட்ட….நான் எவ்ளவு பயந்துட்டேன் தெரியுமா…? உன்ட்ட எத்தனை தடவை படிச்சு படிச்சு சொல்லிருக்கேன்…ஹாஸ்டல்குள்ள நான் போற வரைக்கும் நில்லுன்னு…”

“இல்ல நவ்யா….நீ கேட் பக்கத்துல போற வரைக்கும் நான் பார்துட்டு தான் போனேன்….”

“கிழிச்ச…கரெக்டா கேட்டுக்குள்ள என்டர் ஆகுறேன்…உள் பக்கமா அவன்…..என் உயிரே போய்ட்டு தெரியுமா….உடனே உன்னைத்தான் திரும்பி பார்த்தேன் அதுக்குள்ள உன்னை காணோம்….இது தான் நீ கொண்டு வந்து விடுற லட்சணம்….எதிர்த்தாப்ல இருக்ற ஹாஸ்டலுக்கு போறதுக்கு உனக்கு அப்டி என்ன அவசரம்….? எவ்ளவு பயந்துட்டேன் தெரியுமா…?”

அப்படியானால்………? இவளுக்காகத்தான் நேற்று வந்தானா? அதுவும் இவளை கண்டு கொள்ளாதது போல் ஒரு சீன் வேறு.எதோ ஒன்று ஜிவ் என்றது மனதினுள் நல்லிசைக்கு…..

“எத்தனை தடவை சொல்லிருக்கேன் நவ்யா….இப்டி அவனைப் பார்த்து பயப்படாதன்னு…இத்தனை பெரிய காம்பஸ்ல….இத்தனை பேர் இருக்றப்ப அவன் உன்னை என்ன செய்துட முடியும்….?”

“போ மது…அவனால எதோ செய்ய முடியப் போய்தான…..இப்டி சுத்தி சுத்தி வர்றான்…”

இப்பொழுதுதான் மதுரன் இவளைப் பார்த்தான். இன்ஸ்டெண்டாக அதில் ஒரு மலர்ச்சியும் அதை அவன் நொடியில் மறைப்பதும் புரிகின்றது.

மௌனமாக அவனைக் கடந்தாள். நவ்யாதான் இவளைக் கண்டதும் “ஹேய்….நல்லிசை…ஒரு நிமிஷம் “என்றபடி இவளிடம் வந்தாள்.

“நேத்தே பேசனும்னு நினைச்சேன்…பட் முடியலை….உங்க சாங் சூப்பர்… உங்களுக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கெடச்சிருக்கனும்…உப்பு பெறாத ரீசனுக்கு போய் இந்த இவன் இப்படி செய்துட்டான்….…ஆல் த பெஸ்ட் நெக்‌ஸ்ட் டைம்.. ”

“இட்’ஸ் ஓகே…தேங்க்‌ஸ்..”

ஏனோ இதை மதுரன் இவளிடம் சொல்லி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் போல் பட்டது. இப்பொழுதோ மனம் சுணங்கியது.

எவ்வளவு முயன்றும் முகத்தில் அது வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

மதுரனை ஒரு பார்வை பார்த்தவள் தன் வகுப்பறைக்கு சென்றுவிட்டாள். இந்த மதுரனை ஏன் பார்த்தோம் என்றிருக்கிறது.

மதியம் லைப்ரரி அவர். விரிந்திருந்த புத்தகத்தை வெறித்தபடி இரு கைகளால் தலையை பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள் நல்லிசை. யாரோ இவள் வைத்திருந்த புத்தகத்தை வலப்பக்கமாக இழுக்க திரும்பிப் பார்த்தாள். அவளது தலைவலியின் நாயகன் அமர்ந்திருந்தான்.

உன்ட்ட கொஞ்சம் பேசனும் …ப்ளீஃஸ் வெளிய வா என்று எழுதி இருந்த ஒரு காகிதத்தை இவள் புத்தகத்தில் விரித்து வைத்தான்.

கட கட வென்று எழுந்து காரை எடுத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கே வந்துவிட்டாள் நல்லிசை. ஆனால் இரவெல்லாம் அவன் என்ன சொல்ல வந்திருப்பான் என்ற தவிப்பிலேயே சென்றது. அதோடு இவளுக்குள் ஆயிரம் கேள்விகள்.

இவள் மதுரனிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாள்? ஏன் இந்த அலைகழிப்பு?

மறுநாள் ஞாயிறு. சர்ச்சுக்கு சென்றால் ஆராதனை முடிந்ததும் வர்ஷிப் லீடர் சாம் தேடி வந்தார். “ நீங்கதான் உங்க காலேஜ்லயே பெஸ்ட் சிங்கராம்….மது சொன்னான்….நம்ம கொயர்ல ஜாய்ன் செய்றீங்களா..?”

தலை கால் புரியவில்லை நல்லிசைக்கு. சர்ச் கொயரில் பாட வேண்டும் என்பது அவளது நீண்ட நாள் கனவு……அதோடு காலேஜ்லயே பெஸ்ட் சிங்கர் பட்டம் அவனிடமிருந்து….

சர்ச்சை விட்டு வெளியே வந்தால் கேட் அருகில் மதுரன் யாரிடமோ பேசிக் கொண்டு நின்றான்.

அவனிடம் பேச வெண்டும். அவனை நோக்கிப் போனாள். இவள் அவர்களை அடையும் முன் மதுரன் கிளம்பிப் போய்விட்டான்.

ஏமாற்றமாக இருந்தது இவளுக்கு.

நாளை பார்த்துக் கொள்ளலாம். மனதை சமாதான படுத்திக் கொண்டு ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள்.

மறு நாள் கல்லூரிக்கு வெகு ஆவலும் ஆசையுமாக கிளம்பிப் போனாள். இனம் புரியா இன்ப ஊற்றாய் இவள்.

ஆனால் எல்லாம் கல்லூரி வளாகத்திலிருந்த அதைக் காணும் வரைதான்.

அவமானமாய் அக்கினியில் புழுவாய் அவள்.

ஏன் இப்படிச் செய்துவிட்டான் இந்த மதுரன்???

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:878}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.