(Reading time: 15 - 30 minutes)

'... ஒரு விஷயம் டா  ... அது... ந.. நம்ம... அரு....அருந்ததிக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுடா' தயங்கி தயங்கி வெளி வந்தது அவன் குரல்.

இதயம் பல நூறு பாகங்களாய் தெறித்து விழுந்ததைப்போல் அதிர்ந்து எழுந்தான் ரிஷி 'எப்போடா?'

'இன்னைக்கு காலையிலே. காரிலே என்.எச். லே வேகமா போயிருக்கா... முன்னாடி போன லாரிலே இடிச்சு, கார் பறந்துபோய்... குரல் நடுங்கியது சஞ்சீவுக்கு.

'அய்யோ... அலறலாய் வெளிவந்தது ரிஷியின் குரல். இப்போ எப்படி டா இருக்கா? எங்கே எந்த ஹாஸ்பிடல்?'

'ரொம்ப... சீரியஸாதான் இருக்கா போலிருக்கு... மருத்துவமனையின் பேரை சொன்னான் சஞ்சீவ்.

.'இது அவள் பழக்கம். அதிகமான சந்தோஷத்திலும் சரி, கோபத்திலும் சரி காரை வேகமாக செலுத்திக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி வருவாள் அவள்.' இன்று எதனால் அவள் அப்படி சென்றிருக்க கூடமென யாரும் சொல்லவேண்டியதில்லை ரிஷிக்கு.

'எனக்கு இப்போவே அவளை பார்க்கணும்... ப்ளீஸ்டா..' உடைந்தான் ரிஷி.

அவனை காரில் ஏற்றிக்கொண்டு பறந்தான் சஞ்சீவ். ரிஷியின் கண்ணீர் கட்டுக்குள் நிற்கவில்லை. 'மை காட்...மை காட்...' உச்சரித்துக்கொண்டே இருந்தன அவன் உதடுகள்.

'இறைவா என்னவளை எனக்கு திருப்பி தந்துவிடு. எது நடந்தாலும் இனி அவளை காயப்படுத்த மாட்டேன். நான் பேசிய வார்த்தைகளுக்கு நான் இன்னமும் அழவேண்டும் தான். அழுகிறேன். ஆனால் அவளை மட்டும் எழுப்பி தந்து விடு '

ருத்துவமனை வாசலை அடைந்தனர் இருவரும். அதற்குள் பத்திரிகைகளுக்கு செய்தி போய்விட்டிருந்தது. கேமராகளுடனும், மைக்களுடனும் பத்திரிக்கையாளர்கள். இரண்டு பாதுகாவலர்களை அழைத்துக்கொண்டுதான் வந்திருந்தான் சஞ்சீவ். இறங்கினார்கள் நால்வரும். அடுத்த நொடி பளிச்சிட்டன பிளாஷ்கள்.

கண்ணீர் ஆறாய் பெருகிக்கொண்டிருந்தது. ரிஷிக்கு. அதை சடசடசடவென தங்களுக்குள் பதித்துக்கொண்டன பல கேமராக்கள். 'மனதார அழக்கூட சுதந்திரம் இல்லாத வாழ்கையடா இது.!!!'

'மருத்துவமையில் கண்ணீருடன் நடிகர் ரிஷி.' மாலைக்குள் செய்திகள் பறக்கும்!!!!

ஆனால் இது எதுவுமே கருத்தில் பதியவில்லை அவனுக்கு. அவன் மனமெங்கும் அவள் மட்டுமே நிரம்பி இருந்தாள்' வேகமாய் நடந்தான் ரிஷி.

அவனெதிரில் ஒரு மைக் 'சார்.... அருந்ததி கடைசியா உங்களை தான் பார்க்க வந்ததா சொல்றாங்களே உண்மையா.? உங்க மேலே இருந்த கோபத்தில தான் வேகமா கார் ஓட்டிட்டு போனாங்களாமே? விழி நீர் இன்னும் அதிகமாக இமை தாண்டியது  ரிஷிக்கு.

யாருக்கும் எந்த பதிலும்  சொல்லாமல் மருத்துவமனைக்குள் நுழைந்து விட்டிருந்தான் ரிஷி. சி.சி,யூ வில் இருந்தாள் அவள். அங்கே நின்றுகொண்டிருந்தனர் அவளது குடும்பத்தினர். அந்த மூன்று பேர்.!!!!

அதில் ஒருவன் அஸ்வத். அருந்ததியின் அண்ணன். மற்றொருவர் அவனுக்கு ஒரு காலத்தில் எல்லாமாக இருந்து அவனை ஏற்றி விட்டவர். அவனது குரு இயக்குனர் இந்த்ரஜித்.!!! அருந்ததியின் தந்தை.!!! அவன் நடை கொஞ்சமாக வேகம் குறைந்தது. அவனால் அவரை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. அவரும் மொத்தமாக துவண்டுதான் போயிருந்தார். சிலையாக அமர்ந்திருந்தார் அவர்.

அவனை நோக்கி பாய்ந்தான் அஸ்வத். 'என் தங்கச்சியை இப்படி ஆகிட்டேயேடா  சந்தோஷமா? எங்களை பழி  வாங்கியாச்சு. நிம்மதியா போய் தூங்கு.'

'அஸ்வத்.... இது ஹாஸ்பிடல்.... இங்கே எது நடந்தாலும் அது நியூஸ் ஆகும்.' என்றான் சஞ்சீவ்.

'ஆகட்டுமேடா. இவன் பேர் நாறட்டும். இவனாலே அவ எங்க யாரோடையும் ஒன்றரை வருஷமா பேசவே இல்லைடா.' என்ன ஆனாலும் சரி இவன் அவளை பார்க்க கூடாது நான் பார்க்க விட மாட்டேன்' கண்ணீருடன் உறுமினான் அவன்.

ஒன்றரை வருடங்களாக யாருடனும் பேசவில்லையா அவள்.????  ஆச்சரியம் ரிஷிக்கு. அவளை பார்த்துதான் ஆகவேண்டுமென்று போராடவில்லை ரிஷி. பேசாமல் சென்று அங்கே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். 'அவள் பிழைத்து எழுவதை தவிர வேறே எதுவும் முக்கியமாக படவில்லை அவனுக்கு. அவன் அவளை பார்ப்பது கூட.....

கடந்து போகிறவர்கள் எல்லாரும் இவர்களை சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டுதான் சென்றார்கள். நடப்பவை எல்லாமே அங்கே செய்தியாகிக்கொண்டிருந்தது.

கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் ரிஷி. டாக்டருடன் பேசிவிட்டு வந்தான் சஞ்சீவ். அவனருகில் அமர்ந்து அவன் கையை அழுத்தினான். 'ஏதோ சில சர்ஜரி பண்ணனுமாம். பிழைக்க 30% இருக்குன்னு சொல்றார்.'

அப்போதுதான் நடந்தது அது. அவனருகில் வந்து அமர்ந்தார் இந்தர்ஜித். எதிர்பார்க்கவில்லை  இதை .சடக்கென நிமிர்ந்தான் ரிஷி.

'என்ன தோன்றியதோ? அவனது கையை பிடித்து தனது கைக்குள் வைத்துக்கொண்டார்''

மெல்ல வெளிவந்தது அவர் குரல் 'நான் ஒண்ணு சொன்னா கேட்பியா ரிஷி?'

'சொல்லுங்க அங்கிள்.....'

'நடந்தது எல்லாத்தையும், எல்.......லாத்தையும் மறந்திட்டு இப்போவே நீ அவளுக்கு தாலி கட்டிடுவியா ரிஷி?

அங்கிள்???? பேசுவது இவர்தானா? இந்த வார்த்தையை சொல்வது இவர்தானா? நம்ப முடியவில்லை அவனால்.

'கடந்த ஒன்றரை வருஷமா அவ எங்க யாரோடையும் பேசலை. இன்னைக்கு காலையிலே உன்னை பார்க்க போறதுக்கு முன்னாடிதான் என்கிட்டே வந்தா. என் மடியிலே படுத்துகிட்டா ரிஷி அவ. நான் என் வசியை பார்க்க போறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பா.' அப்படின்னு சொன்னா. நான் எதுவுமே பேசலை.

திடீர்னு என்னை நிமிர்ந்து பார்த்து  'ஏதாவது மேஜிக்  பண்ணி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து  வெச்சிடறீங்களாபா. அப்படின்னு கேட்டா அவ. நான் அதுக்கும் பதில் சொல்லலை ரிஷி.

ரிஷியின் கண்களில் நீர் மேகங்கள்.

சில நொடிகள் மௌனமாய் அமர்ந்திருந்தவர் 'எனக்கு என்னமோ  நீ தாலி கட்டினா அவ பிழைச்சிடுவாளோன்னு தோணுது ரிஷி.' என்றார் உறுதியான குரலில்.

கொஞ்சம் வியப்புடனே நிமிர்ந்தான் ரிஷி.

'அவளுக்கு எல்லாமே நீ தாண்டா. நீ அவ பக்கத்திலே போனாலே அவ உள்ளுணர்வுக்கு தெரியும். நீ தாலி கட்டினா உன் கூட வாழணும்னே அவ எழுந்து வந்திடுவா. நான் சொல்றேன் பாரு.'

'வருவாளா அவள்? வந்துவிடுவாளா அவள். நிஜமாகவா?'

தனது இருக்கையை விட்டு மெல்ல எழுந்தான் ஆர்.கே. அவன் கண்ணோரத்தில் சின்னதாய் ஒரு நம்பிக்கை துளி. 'சஞ்சா... எங்கிருந்தாவது ஒரு தாலி வாங்கிட்டு வர சொல்லுடா......' என்றான் உறுதியான குரலில்.

Episode # 02

Episode # 04

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.