(Reading time: 15 - 29 minutes)

வனது அம்மாவின் கண்கள் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே இருந்தன.

சில நிமிடங்கள் இப்படியே நகர கோதையின் மனதிலும் முகத்திலும்  ஏமாற்றத்தின் அறிகுறிகள் பரவின.

'ஒரே ஒரு முறை பார்த்த அவன் உன்னை அவன் நினைவில் வைத்திருப்பான் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறாய்? அவன் தகுதி என்ன? அந்தஸ்து என்ன?' அவள் தலையில் நறுக்கென குட்டியது அவளது மனக்குரல். சின்ன பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டாள் கோதை.

பூஜை முடிந்திருந்தது. நேரம் ஏழு மணியை தொட்டிருந்தது. அதற்குள் அந்த வீட்டில்  நிறைந்துவிட்டிருந்த குழந்தை கண்ணன்களின் விளையாட்டுக்கள்  துவங்கி இருந்தன. தோட்டத்தில் எல்லா குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருக்க அந்த குழந்தைகளுடன் கலந்து விட்டிருந்தான் கோகுல்.

ஒவ்வொரு குட்டி கண்ணனையும் தூக்கிக்கொஞ்சிக்கொண்டு அவர்களுடன் ஆடிப்பாடிக்கொண்டு, ஒரு குழந்தையாய் மாறிவிட்டவன் போகுமிடமெல்லாம் பயணித்துக்கொண்டிருந்தது அந்த தோட்டத்தில் நின்றிருந்தவளின் பார்வை. இவளாக சென்று அவனிடம் பேச்சை துவங்கும் தைரியம் ஏனோ இல்லை அவளிடம்.

'இன்னும் சிறிது நேரத்தில் கிளம்ப வேண்டும். அப்பா யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். இதோ கிளம்பி விடுவார். மறுபடியும் இவனை எப்போது பார்ப்பேனோ.?????

ஒரு வேளை அவன் திருமணத்தை நடத்தி வைக்க அப்பாவை அழைப்பர்களோ என்னவோ? அப்போது வருவேனோ? இப்போதே கவனிக்காதவன் அப்போதா கவனிக்க போகிறான்?

ஒரே ஒரு முறை என்னைபார்த்து சின்னதாய் புன்னகைத்திருக்கலாம் அவன்!!! பொங்கிய மனதை கட்டுப்படுத்திக்கொண்டே, தோட்டத்தின் ஒரு ஓரத்தில் சென்று நின்றுக்கொண்டாள் கோதை.  

சில நிமிடங்கள் கரைய கைகளை கட்டிக்கொண்டு எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள் கோதை.

திடீரென ‘எங்கேடா அந்த நாய் சீசர்? இங்கே கொண்டு வாங்கடா. அதை விட்டு இந்த பொண்ணை கடிக்க விடுவோம்.’ அவள் பின்னாலிருந்து மென் குரல்

உடலெங்கும் பரவிய சில்லென்ற சிலிர்ப்புடன் சுழன்று திரும்பினாள் கோதை. பளீர் புன்னகையுடன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றிருந்தான் கோகுல கண்ணன்.  

வானமே வசப்பட்டுவிட்டதை போன்றதொரு மகிழ்ச்சியிலும், அவன் வந்துவிட்டான் என்பதை நம்பவும் முடியாமலும் படபடத்தன அவள் கண்கள். அங்கேயே தடுக்கி மொத்தமாய் அவளுக்குள் விழுந்தான் கோகுல்.

அவன் இமைதட்டாமல் கடந்த சில நொடிகளுக்கு பிறகு அவள் பெயருக்கு வலித்துவிடுமோ என்பது போலவே மெதுவாக அழைத்தான் ‘கோதைப்பொண்ணு ....  எப்படிடா இருக்கே???

வேகமாக தலை அசைத்தாள் கோதை. ஏனோ எதுவுமே பேசத்தோன்றவில்லை அவளுக்கு.

‘ஆமாம் ரொம்ப நாழியா யார்கிட்டயோ பேசணும் பேசணும்னு தவிச்சிண்டிருந்தே போலிருக்கே யார்கிட்டே? என்கிட்டேயா?’ குறு குறு பார்வையுடன் கேட்டான் கோகுல்

கண்களை மெல்ல தாழ்த்திக்கொண்டு அழகாய் சிரித்தாள் ‘ அது எப்படி உங்களுக்கு தெரியும்?

அழகாக மலர்ந்து ’சிரித்தான் கோகுல். ஆல் டீடைல்ஸ் ஐ நோ’. சரி, இந்த பொண்ணை கொஞ்ச நாழி சீண்டி பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனா இதுக்கு மேலே விட்டா நீ அழுதிடுவேன்னு தோணித்து அதான் ஓடி வந்திட்டேன் ‘ என்றான் அவன். ‘ஆமாம் நோக்கு என்கிட்டே ஏதாவது சொல்லணுமா?’  குனிந்து அவள் கண்களை பார்த்து கேட்டான் கோகுல்.

‘இல்லை... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.. சும்மா உங்களை பார்க்கணும் தோணித்து அவ்வளவுதான். ‘ஆமாம் அந்த நாய் சீசர் என்னாச்சு?

'இதை கேட்கத்தான்  இத்தனை நாழி என்னை பார்த்துண்டே இருந்தியா? அதை  நான் ஊருக்கு போறச்சே என் பிரென்ட் கிட்டே கொடுத்து வளர்க்க சொல்லிட்டேன் நீ தைரியமா இரு’ என்று சிரித்தவனின் சிரிப்பில் இணைந்துக்கொண்ட படியே  திரும்பியவளின் கண்களில் பட்டார் அவள் அப்பா. எல்லாரிடமும் விடைபெற்று கிளம்பிக்கொண்டிருந்தார் அவர்.

‘அப்பா கிளம்பறார் போலிருக்கு  நான் வரேன்’ நகர்ப்போனாள் கோதை.

‘ஹேய்... அதுக்குள்ளே ஓடினா என்ன அர்த்தம்.? திரும்ப எப்போ பார்க்கலாம்.?’

‘உங்க கல்யாணத்திலே....

‘என் கல்யாணத்திலேயா?’??? அவன் குரலில் வியப்பு

‘ஆமாம் உங்க கல்யாணத்தை நடத்தி வைக்க அப்பா வருவாரோன்னோ அப்போ நானும் வருவேன். அப்போ பார்க்கலாம் போயிட்டு வரேன்..’ தனது அப்பாவை நோக்கி வேகமாய் நடந்தாள் கோதை.

மெல்ல உயர்ந்தன அவன் புருவங்கள். ‘அடிப்பெண்ணே... என் கல்யாணத்தில் மணப்பெண்ணே நீதான் என நான் நினைத்துக்கொண்டிருகிறேன். இதை எப்படி உனக்கு புரிய வைப்பது??

சில அடிகள் நடந்தவள் சட்டென திரும்பி வந்தாள்  அவன் கண்களை பார்த்து சொன்னாள் ‘ரொம்ப தேங்க்ஸ்....’

‘எதுக்குடா ???’

‘இல்லை... இங்கே உங்காத்துக்கு வரச்சே, நேக்கு உங்ககிட்டே பேசணும்னு ரொம்ப ஆசையா இருந்தது ஆனா நீங்க பெ.....ரிய பணக்கா......றரா இருக்கேள். ரொ....ம்ப படிச்சிருக்கேள். அதனாலே என்கிட்டே பேசவே மாட்டேள். என்னை மறந்தே போயிருப்பேள்ன்னு நினைச்சேன். இப்போ மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ்...’ நிறைவான குரலில் அவள் சொல்ல, அவளே அறியாமல் அவள் கண்களுக்குள் கொஞ்சமாய் நீர் துளிர்த்தது.

அவன் மனம் மொத்தமாய் கனிந்து போனது. அந்த நொடியே அவளை அப்படியே அள்ளி தோள் சாய்த்துக்கொள்ள வேண்டும்மென்றே தோன்றியது அவனுக்கு. ‘நீ என் உயிரடிப்பெண்ணே உன்னோடு பேசாமல் வேறு யாருடன் பேசப்போகிறேன் நான் ’ என்று சொல்லி அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட அவன் உள்ளம் .விழைந்தது

‘நான் வரேன்’’ அவன் சுதாரித்து அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அங்கிருந்து ஓடியே விட்டிருந்தாள் கோதை.

அவள் சென்ற திசையிலிருந்து விழி அகற்ற முடியாமல் அப்படியே நின்றிருந்தான் கோகுல்.

தே நேரத்தில் தனது இன்னொரு நண்பன் விக்கியுடன் ஹோடேலில் அமர்ந்திருந்தான் சரவணன்.

'நீ ஏன்டா இப்படி  இருக்கே?' என்றான் விக்கி. பெரிய வேலை கிடைக்கலைன்னா என்ன இப்போ? பெரிய வேலையிலே இருக்கிற பொண்ணை கரெக்ட் பண்ணி வாழ்க்கையிலே செட்டில் ஆக வேண்டியதுதானே. .அதை  விட்டுட்டு என்னமோ புலம்பிட்டு இருக்கே?'

'பொண்ணா? என்னை எவளும் திரும்பிகூட பார்க்க மாட்டேங்கறாளுங்க. இதிலே எங்கே கரெக்ட் பண்றது?' அலுத்துக்கொண்டான் சரவணன்.

'திரும்பி பார்க்க வைக்கணும்டா. நீ இப்படியே இருந்தேனா வேலைக்கு ஆகாது. முடியை கொஞ்சம் ஸ்டைலா வெட்டிக்கோ. எவனாவது ஒரு பணக்கார பிரெண்டா பிடிச்சு அவன்கிட்டே இருந்து ஒரு காரை  வாங்கி வெச்சுக்கோ. கையிலே ஒரு ஸ்மார்ட் போன் வெச்சுக்கோ. எங்கப்பா கோடீஸ்வரன் அப்படின்னு பிலிம் காட்டுடா. எல்லா பொண்ணும் திரும்பி பார்க்கும். அப்படி ஏதாவது ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி  கல்யாணம் வரைக்கும் கொண்டு போயிடு. அதுக்கப்புறம் மிச்சத்தை பார்த்துக்கலாம்.'

'சும்மா இருடா டேய். மாட்டினோம்னா அவ்வளவுதான்.'

'நான் சொல்றேன்லே மாட்ட மாட்டோம் தைரியமா இறங்கு. அதுக்கு ஏத்த பொண்ணை, நம்மை மாட்டிவிட சாமர்த்தியம்  இல்லாத பொண்ணை நான் காட்டுறேன்.' என்ற விக்கியின் மனதில் வந்து போனாள் அவனது அலுவலகத்தில் பணி புரியும் வேதா.

பணியில் சேர்ந்த சில வருடங்களிலேயே தனது திறமையினால் வேகமாக வளர்ந்துக்கொண்டிருப்பவள் வேதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.