(Reading time: 19 - 37 minutes)

ப்படி அவனுக்கு ஒவ்வொரு செயலுக்கு பின்னிலும் அவள்தான் நின்றாள்  ..

அவன் காதலிலும் தான் ..!  அபிநந்தன் - நந்திதாவின் திருமணத்திற்கு , தனது தந்தையின் வற்புறுத்தலால் சென்றவன் , விஷ்வாநிகாவை பார்த்ததுமே  காதலில்  விழுந்துவிட்டான் .. அதை உடனே பகிர்ந்து கொள்ளவும் அவனுக்கு   ரஞ்ஜினி  தேவைபடவும் , அவளை போனில் அழைத்தான் ..

" மச்சி "

" சொல்லுடா .. ஒரே குஷியா இருக்க ? என்ன விஷயம் ? "

" ஐ எம் இன் லவ்  " என்று உல்லாசமாய் சொன்னான் அவன் .. காய்கறிகளை, நறுக்கி கொண்டிருந்தவள் ஒரு நிமிடம் அப்படியே அமைதியானாள்  ..

" ஹெலோ இருக்கியா டீ ? "

" ம்ம்ம் ?"

" அவ போட்டோ உன் போனுக்கு அனுப்பிருக்கேன் இப்போவே பாரு " என்று போனை வைத்தே விட்டான் கெளதம் .. அவளுக்கும் ஏதோ ஒரு நம்பிக்கைதான் .. தன்னைத்தான் சொல்கிறானோ என்று .. கைகள் நடுங்க விஷ்வாநிகாவின் முகத்தை பார்த்தவளுக்கு பார்வை மங்கிடும் அளவு கண்ணீர் திரண்டது .. ஆனால் அவை சில நொடிகள்தான் ..அதற்குள் கெளதம் அவளை அழைக்கவும் , போனை அங்கேயே வைத்தவள் குளியலறைக்கு சென்று இயன்ற வரை அழுது முடித்தாள் ..

எப்போதும் அவனுக்காகவும் , அவனது ஆசைகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்து பழகியவள்  சதீரஞ்ஜினி .. கல்லூரி காலத்திலேயே தனக்கு முக்கியமான தேர்வு இருந்த   முன்தினம் , அவனது அலுவலகத்தில் ஏதோ பிரச்சனை  என்று  அதை கவனிக்க சென்ற , அந்த பாடத்தில் அரியர் வாங்கும் அளவிற்கு அவன் மீதுதான் அவளுக்கு முக்கியத்துவம் அதிகம் ..

இப்போதும் அந்த எண்ணம்தான் அவளை பக்குவபடுத்தினது .. அவள் மனம் என்னும் தராசில் ஒரு புறம் அவளது காதல் .. இன்னொரு புறம் இவனது காதல் ..இறுதியாய் ஜெயித்தது கௌதமின் காதல் .. அவள் மனதில் கொஞ்சமாய் ஒட்டி இருந்த ஆசைகளையும் மொத்தமாய் கில்லி எறிந்துவிட்டு இருந்தாள்  அவள் .. அவனுக்காக  விஷ்வாநிகாவை பற்றி விசாரித்தாள்  ..ஒவ்வொரு முறை கெளதம் விஷ்வாவை சந்திக்கும்போதெல்லாம்  அவனை அவனுக்கே தெரியாமல் பின் தொடர்ந்து இருந்தாள்  ரஞ்ஜினி ..சரியோ தவறோ , அவன் திரும்பி பார்க்கும்போது தான் அங்கு இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தாள்  ..

அதனால்தான் இன்றும் அவனுக்கே தெரியாமல் அவனை பின் தொடர்ந்து வந்திருந்தாள் அவள்.. விஷ்வாநிகா கௌதமின் காதலை நிராகரித்தது அவளை தான் அதிகம் பாதித்தது ..

" இதை எப்படி அவன் தாங்குவான் ?" என்று மனம் பதைபதைத்தது .. அதனால்தான் மேஜை மீது தலை சாய்ந்து இருந்தவனை எதிர்கொண்டதும் இல்லாமல் அறைந்தே  இருந்தாள்  ..

பிடிவாதத்தில் அழும் பிள்ளையை கட்டுபடுத்த தெரியாமல் , கடுமையாக பேசும் அல்லது கை நீட்டிடும் தாயாய் தான் அவளும் அவனை அறைந்தாள் .. இதோ அதன் பலனாய்  கொஞ்சம் தெளிவாய் இருந்தான் கெளதம் ..

சரி இத்தனையும் செய்தவள் இனியாவது தனது மனதை கூறுவாளா ? இல்லை நிச்சயம் இல்லை .. அவளை பொருத்தவரை காதல் யாசகமாய் பெறுவது அல்ல .. மேலும் , கௌதமின் நட்பிற்கு இது மிக பெரிய துரோகம் ஆகிவிடும் ..அதனால்தான் அவனை விட்டு விலக நினைத்தாள்  , ஆனால் அவன் விடவில்லை ..அதனால்தான் தனது உணர்வுகளை புதைத்து கொண்டாள்  ..இதோ இப்போதும் தலையை வலதும் இடதுமாய் உலுக்கி கொண்டாள் ..அவ்வளவுதான் , அவள் மனம் சற்று தெளிந்து விட்டது .. நிமிர்ந்து அவனை பார்த்தாள்  ..

" நான் என்னடி பண்ணேன் ?" என்று கெளதம் கேட்க அவளோ ,

" ப்ச்ச்ச் , ரொம்ப வலிக்கிறதா கெளதம் ?" என்று அவன் கன்னத்தை வருடினாள்  ..

" விடு டீ , எனக்கொரு சான்ஸ் கிடைக்காமலா போகும் ? அப்போ பளார் பளார் பளார் " என்று செய்கையில் காற்றில் கைகளில் நீட்டி அறைவது போல காட்டி சிரித்தான் .. அவன் சிரிப்பதையே பார்த்து கொண்டிருந்தாள் ரஞ்ஜினி ..

" என்னடா ?"

" இல்ல கெளதம் , நீ நிஜமாய் சிரிக்கல ..அது எனக்கு தெரியுது " என்றாள்  அவள் ..

" என்னை உனக்கு தானே டீ நல்லா தெரியும் ?  "

" ம்ம் அதனால்தான் சொல்றேன் , நீ மலேசியா போயிடு "

" உன்னை விட்டுட்டா ?"

" ப்ச்ச்ச் .. நான் ஒன்னும் குழந்தை இல்லை கெளதம் .. நம்ம அப்பா (கௌதமின் தந்தை ) அங்க தானே உன் அத்தை வீட்டில் இருக்காரு ? உனக்கும் அவரை பார்த்தா சந்தோஷமா இருக்கும்ல ? போன வாரம் கூட, போனில் உன்னபத்தி பேசும்போது ரொம்ப மிஸ் பண்ணினார்  டா .. ஒரு வாரம் ஆச்சும் அங்க இருந்துட்டு வா .. புது இடம் உனக்கு நல்ல மாறுதல் தரும் .. இங்க கோவில் , லைப்ரரி , காபி ஷாப்ன்னு அவளுக்காக நீ சுத்தாத இடமில்லை டா .. இங்கயே இருந்தா நீ நிச்சயம்  மனசு மாற மாட்ட .. யூ நீட் அ  ப்ரேக் டா " என்றாள்   சதீ ..

" ஹ்ம்ம் அப்போ வேலை ?"

" டேய் நான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் ,என்னை பிசினஸ் பார்ட்னரா நீதானே சேர்த்துகிட்ட ? நான் பார்த்துக்க மாட்டேனா ? "

" ஹ்ம்ம் .. எல்லாம் சரி டீ .. நீ எப்படி நான் இல்லாமல் இருப்ப ? "

" தனியா இருக்குறது எனக்கு புதுசா கெளதம் ? அப்பா அம்மா போனதுக்கு அப்பறம் இந்த ரெண்டு வருஷமா அப்படிதானே இருக்கேன் " என்றவள் உதடு கடித்து கொண்டாள்  .. " போச்சு திட்ட போறான் " என்று அவள் சுதாரிக்கும் முன்னே , கெளதம் கவுண்டவுன் ஸ்டார்ட் என்பது போல , அவளை திட்டுவதை தொடங்கினான் கெளதம் ..

இறுதியாய் " நான் இருக்கேன் டீ .. நான் இருப்பேன் எப்பவும் .. சரியா " என்று கேட்டு அவனது கோவத்திற்கு முற்றுபுள்ளி வைத்தான் .. ஒரு பெருமூச்சுடன் தலை அசைத்தாள்  ரஞ்ஜினி ..

காலையிலேயே குளித்து முடித்து , அரக்கு வண்ண பட்டு புடவை கட்டி அழகாய் தயார் ஆகி கொண்டு இருந்த மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தான் அபிநந்தன் .. அவன் பார்வை தன்னை உரசி செல்வதை அவ்வப்போது அவளும் உணர்ந்து கொண்டுதான் இருந்தாள் .. எனினும் அதை பற்றி ஒன்றும் கேட்காமல் , அவன் ஆபிஸ் போவதற்காக உதவி செய்ய ஆரம்பித்தாள்  ..

அவனது சூட்கேஸ் முதல் , கழுத்துபட்டை வரை எல்லாத்தையும் நேர்த்தியாய் எடுத்து அவனுக்கு தந்து கொண்டிருந்தாள் .. வழக்கம் போலவே முகத்தை இருக்கமாய் வைத்து கொண்டவன் , அவள் தன் மீது கொண்டுள்ள அக்கறையை எண்ணி வழக்கம் போல, சிலிர்த்து கொண்டான் ..

" வெளில எங்கயாவது போறியா ?" என்றான் மௌனத்தை களைந்து ..

" ம்ம்ம்ம்ம் "

" எங்க ?"

" கோவிலுக்கு போயிட்டு , அப்படியே டாக்டரை பார்க்கணும் .. வீட்டில் இன்னும் விஷயத்தை சொல்லலை  இல்லையா .. இன்னைக்கு சொல்லுவேன் .. "

" என்கிட்ட இதபத்தி நீ பேசவே இல்லையே " என்றான் அபிநந்தன் .. அவனையே கூர்ந்து நோக்கினாள்  நந்திதா ..

" எதற்கு சொல்லணும் ? இது என் குழந்தை .. உங்ககிட்ட ஆசையா பேசினதுக்கு தண்டனையா நீங்க எனக்கு தந்த உயிர் இது " என்றாள்  நந்திதா .. அவளது வார்த்தை அவனை அம்பாய் துளைத்தது .. அதுவும் சில நாட்கள்  கொஞ்சம்  சுமூகமாய் பேசி கொண்டு இருந்தவள் , இப்போது ஏன் இப்படி பேசுகிறாள் என்று தெரியாமல் குழம்பினான் .. அவனுக்கு தெரியாதே , நேற்று இரவுதான் அவனின் மௌனத்தின் பின்னே இருக்கும் ரகசியங்கள் அவளுக்கு தெரிய வந்தது என்று .. ! அதுவும் அதை அவளிடம் கூறியது யார் என்று அவன் நிச்சயம் யூகித்து இருக்கவே மாட்டான் .. அமைதியாய் அவளை பார்த்தான் ..

" அதற்கும் சேர்த்து தானே உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன் நந்திதா ?" என்றான் அபி ..

" ஆக , நீங்க மன்னிப்பு கேட்டதுமே , என் மனசு ரணம் மாறிடனும்ன்னு எதிர்பார்த்து இருக்கீங்கலா நீங்க ?" என்றாள்  ..மேலும் ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.