(Reading time: 19 - 37 minutes)

" ண் முன்னே இருப்பவனை ஒருமையில் அழைக்கிறா , யாருன்னே தெரியாத ஒருவனுக்கு மரியாதை கொடுக்குறா .. எங்கயோ இடிக்கிறதே " என்று யோசித்தார் தாத்தா..

" அப்போ நீ சொல்ற மாதிரி அப்படி ஒரு பையன் நிஜம்மாகவே இல்லையா வினி "

" ப்ச்ச்ச்ச் .. அதான் சொல்றேனே எல்லாம் பொய்ன்னு " என்று சலித்து கொண்டாள்  அவள் ..

" சரி விடு , நீ பண்ணது சரின்னு சொல்ல மாட்டேன் .. ஆனா உன் மனசு மாறாது என்ற பட்சத்தில் , அந்த பையனை தெளிய வைக்கிறதும் நல்ல விஷயம் தான் .. ஆனா நீ ஏன் அவனை ஏற்று கொள்ள கூடாது ?" என்று கேட்டார் அவர் ..

" அது மட்டும் என்னால முடியாது தாத்தா .. கௌதம்ன்னு இல்லை , வேற யாருக்குமே அந்த இடத்தை நான் தர மாட்டேன் " என்றாள்  தீர்க்கமாய் .. அவளது பேச்சினில் இருந்த தீவிரத்தை உணர்ந்தவர் , அதன்பின் , இயல்பான விஷயங்களை பேசி  அவளையும் இயல்பாக்கினார் தாத்தா ..

" தாத்தா "

" சொல்லு வினி "

" நான் ஊட்டிக்கு போயிட்டு வரவா ?"

" ..."

" சாம்பவி பாட்டியை பார்க்கணும் போல இருக்கு " என்றாள் ..எப்போதும் கலகலப்பாய் இருக்கும் தாத்தாவின் முகம் சட்டென விழுந்துவிட்டது ..

" எப்படி இருக்கா, உன் பாட்டி "

" ம்ம்ம் நல்லா இருக்காங்க தாத்தா .. "

" சரி போயிட்டு வா "

" அப்பா , அம்மாகிட்ட ??"

" நான் பேசிக்கிறேன் வினி .. நான் ....... நான் சாம்பவியை கேட்டேன்னு சொல்லிடும்மா " என்றார் தாத்தா ..

ப்படியாய் அனைவரும் தத்தம் வாழ்வில் ஒரு முடிவெடுத்த வேளை,  அந்த இனிய இரவில் உறக்கம் தொலைத்திருந்தான் சகிதீபன் .. (பின்ன நம்ம ஹீரோவுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிருச்சே .. இனியும் அவர் டூயட் பாடலைன்னா எப்படி ? )

கொஞ்ச நேரம் உறங்குவதும் , மீண்டும் கண் விழிப்பதுமாய் இருந்தான் சகி .. இதில் நடுநடுவில்

" ஏய் கிறுக்கி , ஏன் டீ இன்னைக்கு என் கனவில் நீ வரலை ? " என்று கேள்வியை வேறு கேட்டு கொண்டான் .. இருட்டில் அவனது கை பட்டு அலறியது அந்த பாடல் , செல்போனை கைகளால் துலாவி கண்டுபிடித்தவன் , பாடலை நிறுத்தும் நேரம் , அந்த வரிகளால் கவரபட்டு பாடலுடன் லயித்திருந்தான் ..

" தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ... "

அகக்கண்ணில் மைத்ரேயி வந்தாள் .. அவளது மின்சாரம் பாய்ச்சும் விழிகள் அவனை  மேலும் மயக்கியது .. அதே நேரம் , மைத்ரேயியும்  அதே பாடலை தான் கேட்டு கொண்டிருந்தாள் .. மனதிற்குள் , கனவில் வந்த சகிதீபன் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டான் ..

" இது எதுடா வம்பா போச்சு ? சகீ , சீக்கிரமா உன் கிறுக்கிய கண்டு புடிச்சிரு கண்ணா , இப்படி ராத்தூக்கம் கெடுது இல்லையா ?" என்று தன்னை தானே கொஞ்சினான் , கெஞ்சினான் ..

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்

வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா

கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...

கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன

பாவம் அல்லவா...

" ஐயோ படுத்துறாளே " என்று தனக்குள்ளேயே சிரித்து கொண்டான் சகி .. இங்கு மையூவும் அதே பாடல் வரிகளில் தன்னை தொலைத்து  அமர்ந்திருந்தாள் ..

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே

காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

அடுத்த வரிகளை ஏனென்று புரியாமலே வாய்விட்டு பாடினாள்  அவள் ..

காற்றில் ஆடும் "" தீபமோ ""உன் காதல் உள்ளமே...

நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

அவள் வாழ்வின் தீபமாய் வரபோகும் சகிதீபனை எண்ணியே உருகினாள்  அவள் .. ஏனோ இருவருக்குமே இதோ பூர்வ ஜென்ம பந்தமென தான் தோன்றியது ..

பிரிந்தோம்... இணைவோம்...

இனி நீயும் நானும் வாழ வேண்டும்

வாசல் தேடி வா...

இதழில் அழகிய புன்னகையை பட விட்டனர்  இருவரும்  ..

விஷ்வாநிகா அனைவரிடமும் விடைபெற்று ஊட்டிக்கு சென்ற மூன்று மாதம் ,

நந்திதா அபிநன்தனை விட்டு விலகுவதாய்  சொன்ன மூன்று மாதம் ,

கெளதம், சதீரஞ்ஜினியிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு மலேசியா சென்ற மூன்று மாதம் ,

பிரிந்த உறவுகள் மீண்டும் இணைந்த மூன்று மாதம் ,

மற்றும்

நம்ம சகீ , தனது படிப்பை முடிச்சிட்டு தாய் நாட்டிற்கு திரும்பும் மூன்று மாதம் ..

இதோ கடந்தே விட்டது .. இனி ???

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.