(Reading time: 13 - 25 minutes)

'தற்கு? ஏன்? எப்படி? யார்?' என்ற எண்ணற்ற கேள்விகளின் ஊர்வலம். தலை வெடிக்கும் போல இருந்தது.

'ச்ச எல்லாரும் நம்ம தங்கம் மாதிரி வந்துருவாங்களா என்ன?' நினைத்த நொடியே நேற்றைய முதல் அதிர்ச்சி மனதிற்குள் பிரவேசம்.

தேவ் இன்னொருத்தியின் கரம் பற்றி இருப்பானா? எத்தனை அன்பானவன்?! அனன்யா என்றாலே போதுமே. மெழுகு கூட அப்படி உருகுமா? பாகு கூட வாயில் அப்படி கரையும என்ன? அவன் கரைந்தானே உருகினானே..

"விதூ எங்க இருக்க டா? நான் வேண்டாமா உனக்கு, எல்லாமே தெரிஞ்சும் கூட.. என்ன பத்தி என்ன விட உனக்கு தானே டா தெரியும்" வாய் விட்டு சொன்னவளின் விழியோரம் நீர் இறங்கி தலையணை நினைக்க, அதை துடைத்து விட்டு அருகில் அமர்ந்தால் ஆதிரா.

"ழாதே டி பேபி"

"ஆதி..." அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. தோழியின் கைகளை பற்றிய அவள் முகத்தில் கண்டிப்பு இருந்தாலும் அவளும் கண் கலங்கவே செய்தாள்.

"ஏய் லூசு இப்போ ஏன் டி அழற அவன் ஒரு ஆளா டீ? ச்ச எப்பிடி எல்லாம் நடிச்சு? விடுடி அவன் என் தங்கத்த இழந்துட்டான் டி. நீ பாரு அவன் நல்லாவே..."

"ஆதி வேண்டாம் ப்ளீஸ்"

"ச்சீ இந்த செண்டிமெண்ட் எல்லாம் தூக்கி போடு நீயும் உன் மூஞ்சியும்"

"அவளை ஏண்டி திட்டிட்டு இருக்க?" என்று ஆதிராவை கண்டித்தவாறு வந்தான் பரத்.

"ஆமா அதான் கொஞ்ச நீ வந்துட்டியே கொஞ்சு போ" என்று கடுப்புடன் கூறியவள், அவன் வாங்கி வந்த காபியை கப்பில் ஊற்றி அவனிடம் கொடுத்து விட்டு இட்லியை தட்டில் வைத்தாள்.

ஒரு மெல்லிய சிரிப்புடன் காப்பியை பருக செய்தான் பரத். அழுது கொண்டே குடித்து முடித்தவள் சற்று தெளிந்து கண்களை துடைத்து கொள்ள.

இட்லியை பிட்டு ஓடுவதற்கு தயாராய் நின்றாள் ஆதிரா.

"கொடு டீ நானே ஊட்டி விடறேன்" என் பரத் வினவவும்

"அதானே பாத்தேன் குரங்கு குரங்கு பிடிச்சு தொலை" என அவன் கைகளில் தட்டை கொடுத்தவள்

"ஏண்டா அவ தான் அடங்க மாட்டேன்கிற நீ வேற அவளுக்கு இப்பவும் காபி தான் வாங்கிட்டு வந்து கொடுக்கனுமா, காசு இல்லனா சொல்ல வேண்டியது தானே நான் ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வந்திருப்பேன்" என சலித்து கொள்ள,

"ஏய் அரிசி மூட்டை போடி, என் குட்டிமா எது ஆச படராளோ அதை தான் வாங்கி கொடுப்பேன்" என்று அவளுக்கு ஒரு கொட்டு வைத்து விட்டு அனன்யாவிர்கு  ஊட்டினான்.

எதையோ நினைத்து கண் கலங்கியவாறே அவள் சாப்பிட அவன் கண்டுகொள்ளாமல் ஊட்டி முடித்தான். அதை ஒரு புரிதலுடன் பார்த்திருந்தாள் ஆதிரா.அவளுக்கு தெரியும் அவளுக்கு தேவை இப்போது "என்ன குட்டிம்மா?" என்ற ஒரு கேள்வி. அதை கேட்டு விட்டாள் போதும் திறந்து விட்ட குழாயை போல அழுது தீர்த்து விடுவாளே.

ஆனால் பரத் கேட்க மாட்டான் தன்னையும் கேட்க விடவே மாட்டான் என நன்றாக தெரியுமே ஆதிராவிற்கு.

அவள் சாப்பிட்டு முடித்ததும் தன் கை குட்டையில் அவள் வாய் துடைத்து விட்டான்.

"குட்டிமா கொஞ்ச நேரம் படுத்திரு டா, இவளை ஹாஸ்டல்ல விட்டுட்டு வந்துடறேன்", பரத்.

"டேய் அதெல்லாம் வேண்டாம் நான் நைட் இவ கூடவே இருந்துப்பேன்", ஆதிரா.

"ஏய் கிளம்பு முதல்ல நான் பாத்துக்கறேன் இவள"

"நீ ஆபீஸ் போக வேண்டாமா?"

"நீ மட்டும் போக வேண்டாமா?"

"நான் லீவ் சொல்லிகறேன்"

"நான் ஆல்ரெடி சொல்லிட்டேன், நேத்து தானே ப்ராஜெக்ட் முடிஞ்சுது எப்படியும் நேசத் ப்ராஜெக்ட் அடுத்த வாரம் தான் அது வரைக்கும் சும்மா தான் இருப்போம் அதும் இல்லாம இந்த ப்ரோஜெக்ட்கு டபுள் ஷிப்ட் சண்டே ஷிப்ட் பாத்தது எல்லாம் சேர்த்து 'காம்ப் ஆப்' இருக்கு டி எங்க ரெண்டு பேருக்கும்"

"ஹ்ம்ம் ஒரு முடிவோட தான் வந்திருக்க?"

"ஆமாம் இப்போ கிளம்பு வா"

"அய்ய பறக்காத அவ கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்"

அது வரை அவர்கள் உரையாடலை பார்த்து கொண்டிருந்தவளின் கண்கள் ஆதிராவை பார்த்து கேஞ்சுதலாய் பார்க்க, பரத் அவளை முறைத்தான்.

"சரி சரி கிளம்பலாம்" ஆதிரா தன் பையை எடுத்து கொண்டு அவளருகில் வந்தாள்.

"பார்த்துக்கோ டி பேபிமா, காலைல நீயும் வந்திடலாம் டிச்சார்ஜ் பண்ணலாம் நு சொல்லிட்டாங்க"

"எங்க வருவா? நான் என வீட்டிற்கு கூட்டிட்டு போறேன்" பரத்.

"டேய் உன் ப்ரெண்ட்?"

"போகும் போது பேசலாம் இப்போ வரியா?" பரத் பற்களை கடிக்க, ஆனந்யாவின் நெற்றியில் முத்தமிட்டு விடை பெற்றாள் ஆதிரா.

"பார்த்துக்கோ அம்மு தூங்குடா" என்று சிரிப்புடன் கிளம்பி போனான் பரத்.

ஆயாசமாய் படுக்கையில் சரிந்து நினைவுகளுக்குள் புதைந்து அழுது கரைந்தாள் அனன்யா.

ப்பொழுது உறங்கினால் என்று தெரியவில்லை இடையில் யாரோ ஏதோ ஊட்டினார்கள் சாப்பிட்டாள், மாத்திரை போட்டாள் மீண்டும் தூங்கி போய் விட்டாள். அடுத்த நாளின் விடியலின் கண்விழிப்பில் அவளுக்கு ஞாபகம் இருந்தது இவை தான்.

பக்கத்தில் இருந்த பெஞ்சில் பரத் படுத்திருந்தான். அவன் தான் ஊட்டியிருப்பான். கையில் இருந்த ட்ரிப்ஸ் அகற்றி கட்டு போட பட்டிருந்தது. மெதுவாக எழுந்தவள் பரத்தின் போனை எடுத்து  மணியை பார்த்தாள் 5.50. அவன் திரையில் அவன் அலாரம் வைத்திருபதாக குறியீடு காட்ட, 6 மணிக்கு வைத்திருந்த அலாரத்தை ஆப் செய்து விட்டு, ஆதிராவிற்கு மெசேஜ் செய்ய நினைத்து மெசேஜை ஓபன் செய்ய, முதல் மெசேஜ் தேவ்விடம் இருந்து வந்திருந்தது.

கைகள நடுங்க அவசரமாய் அதை திறந்து படித்தாள்.

'என்னை பொறுத்த வரைக்கும் அவ ஒரு பொம்மை மாதிரி, நானா அவளை நம்ப சொன்னேன். அது அவள் தப்பு. இனி என் வாழ்கையை ஒரு பொம்மை கூட நடத்த முடியாது. எனக்கு பணம் வேண்டும். அதற்கு சம்யுக்தா வேண்டும்.என்னை தொல்லை செய்தால் நடப்பதே வேறு.போய் தொலை.'

 என ஆங்கிலத்தில் ஆச்சு பிசகாமல் எழுதி அனுப்பியிருக்கிறான்.

அழுகை வரவில்லை. கை நடுக்கம் நின்று விட்டது. கோபம் வரவில்லை. வெறுப்பு அருவெறுப்பு. ஹ்ம்ம்ஹும். எதுவும் இல்லை. எந்த ஒரு உணர்வும் இல்லாத பொம்மையாகி போயிருந்தாள். போனை வைத்து விட்டு வெளியில் வந்தாள்.

மருத்தவமனையின் பக்க வாட்டில் நோயாளிகள் நடக்க உட்கார்ந்து இளைப்பாற என அமைக்க பட்டிருந்த தோட்டத்தில் இறங்கி நடந்தாள். காலை குளிர் காற்று.. பனியில் நனைந்த புற்கள், மலர்கள், பறவைகளின் ஓசை. மெல்ல அந்த சூழலில் அவள் மனம் லயிக்க, வேதனை மிகுந்து வலியை தந்தது. கவிதை ஒன்று மனதில் உதயம்.

'என் கவிதை கிறுக்கல்களுக்கு

தூண்டுகோலாய் அமைகிறாய் நீ..!!

துண்டு துண்டாய் உடைகிறேன் நான்..!! '

மெல்ல முனுமுனுத்தாள். விழியில் நீர் சேர உதடு புன்னகையில் வளைந்தது. இந்த இயற்கைக்கும் தமிழுக்கும் தான் எத்தனை சக்தி..!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.