(Reading time: 13 - 25 minutes)

லியின் கொடுமையை குளுமையாய் ரசனையுடன் அனுபவிக்க கற்று கொடுத்துள்ளது.மெல்ல மேனி சிலிர்த்தாள்.வீட்டிற்கு சென்றதும் டைரி எழுத வேண்டும் நினைத்து கொண்டாள்.

புத்துணர்வு வந்திருந்தது கூடவே தன்னம்பிக்கையும் தான். புது தெம்புடன் அந்த தோட்டத்தில் உலாவினாள். அரை மணி நேரத்தில் திரும்பி வந்தவள். காலை கடன்களை முடித்து விட்டு பரத்தின் பர்சுடன் ஹாஸ்ப்பிடல் கான்டீன் சென்று காபி வாங்கி வந்தாள்.

ரத் இன்னும் உறங்கி கொண்டிருந்தான்.பாவம் நைட் ஷிப்ட் செஞ்சுட்டு நேத்து வேற அலைச்சல் கண்டிப்பா தூங்கி இருக்க மாட்டான். அவன் தலைமுடியை வருட அவள் கை தூக்க, அவன் புரண்டு படுத்தான்.

அவன் புரண்டு படுத்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் விழித்து விடுவான் என்பது தான் அவளுக்கு தெரியுமே. அவன் தலை முடியை கொத்தாக பிடித்து அவள் இழுக்க,

"ஆஆஆஆ அம்மா" என கத்தியவாறு எழுந்தான்.

"ஏய் பிசாசே முடிய விடு டீ"

"மாட்டேனே"

"எரும பண்ணி விடு டி"

"ம்ம்ம்ஹும் மாட்டேன்"

"ஒழுங்கா கையை எடுடி பெரிய இவ மாதிரி பேசாம போன, சாப்டாம இருந்திருக்க, நேத்து எனக்கு வெயிட் பண்ணாம அபீஸ்ல இருந்து வந்திருக்க.. இப்போ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகுற லெவல் கு வந்து நிக்குது"

"....."

"சிரிக்கத டி, அழு அதுக்கு தான நேத்து அவ்வளவு ஆசை பட்ட? அதுக்கு தான் ஆதிராவ அந்த பார்வை பார்த்த அழுடி"

"..."

"எதுக்கு டி முட்ட கண்ண உருட்டி சிரிக்கிற, போடி"

"...."

"வாய திறந்து பேசவே மாட்டியே சிரிச்சே மலுப்புவியே?"

"ஹிஹிஹி"

"ப்ப்பாஆ பயமா இருக்குடி பிசாசு சிரிச்சு தொலையாத"

"என்ன டா சொன்ன" என்று அவள் கையில் இருந்த முடியின் பிடியை இருக்க,

"ஆஆஅ ஐயோ ஐயோ வலிக்குது டி செல்லம் விடு டி ப்ளீஸ்"

"ம்ம்ம்ஹும் என்ன சொன்ன"

"என் அம்மு சிரிச்சா தேவதை மாதிரி இருப்ப.. அவ்வளவு அழகு" என அவன் உணர்ந்து சொல்ல அவன் முடியை விட்டவள் லேசாக கண் கலங்கினாள்.

"ஹேய் ஹேய் ப்ளீஸ் டி அழுக மட்டும் கூடாது"

"பாத்திஈஈ"

"ம்ம்ம்ம் என்ன டா"

"அவன்..." சிறு விசும்பல் அவளிடம் தோன்ற,

"இங்க வா" என கை நீட்டியது தான் தாமதம். அவன் கைக்குள் அடங்கி தோல் வளைவில் சாய்ந்திருந்தால் அனன்யா.

"அனு"

"ம்ம்ம்ம்"

"அழாத டா, அவன் எல்லாம் வேஸ்ட் விடு டா குட்டிமா"

"பாத்திஈஈ" ராகத்துடன் அவர் பெயரை சொன்னவளின் அழுகை அதிகரிக்க,சட்டென அவளை தள்ளி நிற்க வைத்து விட்டு காப்பியை எடுத்து அவன் பருக ஆரம்பித்தான்.

ஒரு நிமிடம் புரியாமல் முழித்தவள்,

"டேய் கொரங்கு நாயே, என் காபி டா அது கொடு டா" என பிடுங்க முயற்சிக்க,

அதை தராமல் போக்கு காட்டியவன் அவளை சிணுங்க வாய்த்த பின் அவள் கையில் திணித்தான்.

"வெவ்வெவெவ்வெவ" அழகு காட்டியபடி அவள் குடிக்க சிரித்தபடி பார்த்திருந்தான்..!!!

ல்யாண பேச்சை எடுத்த அமலாவிடம் கத்தி கொண்டிருந்தான் ருத்ரன்.

"யாரு உங்கள இந்த தேவை இல்லாதவேலை செய்ய சொன்னது?"

"டேய் ருத்ரா அப்படி சொல்லாத டா கண்ணா ப்ளீஸ்"

"ஐயோ அம்மா எனக்கு கல்யாணம் வேண்டாம் ஜஸ்ட் கெட் அவுட்"

என கத்தி விட்டு தாய் வெளியே சென்றவுடன் கதவை அறைந்து சாத்தினான் ருத்ரன்.

Episode 02

Episode 04

ஊஞ்சல் ஆடும்..!!!!

{kunena_discuss:884}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.