'ஏம்மா... நீங்க வரலையா?' அவசரமாக கேட்டாள் அருந்ததி. 'இவனுடன் நான் தனியாகவா?'
'நாங்க ரெண்டு பேரும் பின்னாடியே வரோம் நீங்க கிளம்புங்க. ரிஷி நீ கார் ஓட்டிட்டு போடா' அம்மாவுக்கு இருவரையும் தனியாக அனுப்ப வேண்டுமென்ற ஆசை போலும். எதுவும் பேச முடியவில்லை அவளால்.
மௌனமாகதான் காரை செலுத்திக்கொண்டிருந்தான் அவன். தன்னருகில் உட்கார்ந்திருந்தவளை திரும்பிக்கூட பார்க்கவில்லைதான். ஆனால் அவளை படுத்திக்கொண்டிருந்தது அவன் உதட்டோரத்தில் குடியிருந்த புன்னகை. அவள் பார்வை சாலையில் பதிய மறுத்தது. 'திருடன்..... என்னவெல்லாம் நினைத்து சிரிக்கிறானோ? தனக்குள்ளே புலம்பிக்கொண்டாள்.
'சரி. காருக்குள் ஏதாவது பாடலையாவது ஒலிக்க விடலாம் என்று தோன்ற உயிர்பித்தாள் அந்த ப்ளேயரை. மிக இனிமையாக ஒலிக்க துவங்கியது பாடலின் துவக்க இசை. எப்போதோ கேட்ட பாடல். என்ன பாடல் என சட்டென நினைவுக்கு வரவில்லை அவளுக்கு. சில நொடிகளில் எஸ். பி..பியின் குரலில் வந்தன பாடலின் வரிகள்
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்.....
மயக்கத்தில் தோய்ந்து... மடியின் மீது சாய்ந்து......
திகைப்பில் கண்கள் விரிய அவள் அவன் பக்கம் திரும்ப, தன்னை மறந்து கலகலகலவென சிரித்துவிட்டிருந்தான் ரிஷி. உடைத்தே இருப்பாள் அந்த ப்ளேயரையும் அவனையும் சேர்த்து.... நல்ல வேளையாக அவள் கையில் எதுவும் சிக்கவில்லை. அவரசரமாக பாட்டை நிறுத்தினாள் அருந்ததி. ஒரு வழியாக கார் மண்டபத்தை அடைய காரை விட்டு இறங்கினர் இருவரும்.
படபடவென கேமரா பிளாஷ்கள். தன்னாலே இருவர் இதழ்களிலும் புன்னகை ஓட்டம்.. இமைக்காமல் நின்று விட்டான் சஞ்சா. ரசிப்பின் புன்னகை சஞ்சாவின் முகத்தில். ' கண்கள் படப்போகிறது என் நண்பனுக்கு..'
சில நிமிடங்களில் வரவேற்பு துவங்கி இருந்தது. புன்னகைகளும் வாழத்துக்களும் ஒன்று கூடி வரவேற்றன இருவரையும். அவர்கள் பின்னாலேயே வந்து விட்டிருந்த அம்மா, அப்பாவை முன் வரிசையில் அமரவைத்து விட்டு அங்கே நின்றிருந்த ரிஷி அருந்ததி அருகில் வந்தான் சஞ்சா.
'உடம்பு பரவாயில்லையா டா? அவளை பார்த்து கேட்டவன் அவனை பார்த்து 'என்னடா ராத்திரி கட்டிலை உடைச்சிட்டியாமே?' என்றான் குறும்பு சிரிப்புடன்.
'ஆமாம்டா. உங்க கொள்ளுத்தாத்தா காலத்து கட்டிலை அங்கே போட்டு வெச்சிட்டு என்னை கேள்வி கேளு. உன்னை நம்பி அதிலே படுத்தேன் பாரு' என்றவன் அருந்ததியை பார்த்தபடியே 'ராத்திரி கட்டில் மட்டுமா உடைஞ்சது வேறே என்னென்னமோ உடைஞ்சு போச்சு' என்றான் குறுகுறு பார்வையுடன். கொஞ்சம் திகைப்புடன் நிமிர்ந்தவள், ரிஷியை முறைப்புடன் பார்த்தாள்.
'அது சரி கட்டில் உடைஞ்சது உன் வரைக்கும் நியூஸ் வந்தாச்சாடா?' அவளை விட்டு இன்னும் பார்வை அகற்றவில்லை ரிஷி
'என் வரைக்கும் என்ன? இன்னைக்கு ஈவ்னிங் பேப்பர்லே இதுதான் ஹாட் நியூஸ். உடைஞ்ச கட்டில் பக்கத்திலே உன்னையும் நிக்க வெச்சு போட்டோ எடுத்து பேப்பர்லே போடணும்னு நினைச்சாங்களாம். அதுதான் முடியாம போச்சாம்' சஞ்சா சிரிப்புடன் சொல்ல, ரிஷி சிரிப்பில் இணைந்துக்கொள்ள, அங்கிருந்து அருந்ததி மெல்ல நழுவ அதே நேரத்தில் மண்டபத்தின் வாசலில் வந்து இறங்கினாள் அஹல்யா.
சொல்ல முடியாத ஏதோ ஒரு படபடப்பில் இருந்தாள் அவள். அவள் பாதங்கள் உள் நோக்கி நடக்க யாரையோ எதையோ தேடிக்கொண்டே இருந்தன அவள் கண்கள். ரிஷியை அமர சொல்லிவிட்டு சஞ்சா வாசல் நோக்கி வருவதற்கும், அஹல்யா உள்ளே வருவதற்கும் சரியாக இருக்க, இருவரும் மோதிக்கொள்ள பளிச்சிட்டன அங்கிருந்த சில காமெராக்கள்.
'வாங்க... வாங்க... அகல்யா... ப்ளீஸ் கம்.' அவளை எதிர்பார்த்திராததால் பரவிய திகைப்பை மறைத்துக்கொண்டு புன்னகையுடன் சொன்னான் சஞ்சீவ்.
'சஞ்சா.... நான் உன்கிட்டே கொஞ்சம் தனியா பேசணும்...' என்றாள் அடிக்குரலில். கொஞ்சம் எரிச்சல்தான் பரவியது அவனுக்குள்ளே. அவள் கையை பற்றி ஓரமாக இழுத்து சென்றவன் 'இங்கே எதுக்கு வந்தே?' என்றான் காரமாக.
வீட்டில் உள்ளவர்கள் எல்லாருக்குமே ஆரம்பத்தில் அஹல்யாவை பிடித்தே இருந்தது. ஆனால் அதன் பிறகு அவளால் அவனுக்கு வந்த அவமானத்திற்கு பிறகு அவளை பார்ப்பதை கூட யாரும் விரும்பவில்லை.
'இல்லை சஞ்சா...'
'இங்கே பார் போன்லே உன்னோட பேசினது நான் இல்லை. தேவை இல்லாம ஏதாவது கற்பனையை வளர்த்துக்காதே. இனிமே நான் உன் பக்கம் கூட திரும்ப மாட்டேன். ஞாபகம் வெச்சுக்கோ.'
அந்த போனை பத்தி தான் சஞ்சா நான் பேசணும்....' அங்கே இருந்த பலரின் பார்வை இவர்களின் மீதே.
'பச்... எல்லாரும் நம்மளையேதான் பாரக்கறாங்க..... எனக்கு இது பிடிக்கலை' என்றான் அழுத்தமாக. இதை விட பொறுமையாக அவனால் பேசி இருக்கவே முடியாது.
'இங்கே இருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பு......'. சொல்லிவிட்டு அவள் சொல்ல வருவதை கேட்காமலே அங்கிருந்து விறுவிறுவென அகன்றான் சஞ்சா. தவிப்பில் நின்றிருந்தாள் அவள்.
அஹல்யா..... அவனுடைய அஹல்யா...... அவள் எப்போது வருவாள்.... எப்போதும் பார்ப்போம்.... என்று அவன் தவித்த நாட்கள் பல உண்டு. அவளை இங்கிருந்து கிளம்பிவிடு என்று விரட்டும் நாளும் வந்திருக்கிறது. வலிக்கத்தான் செய்தது அவனுக்கு.
பழைய நினைவுகள் அழுத்த சில நிமிடங்கள் அப்படியே சில நிமிடங்கள் நின்று விட்டான் சஞ்சா. அப்போது அங்கே வந்தார் அருந்ததியின் தந்தை இந்திரஜித்.
'வாங்க அங்கிள். வாங்க..... வாங்க.... மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அவருடன் பேசிக்கொண்டே அவன் நடக்க கொஞ்சம் லேசாகிப்போயிருந்தது மனம்.
'சொல்ல வந்த விஷயத்தை எப்படியாவது அவனிடம் சொல்லி விட வேண்டுமே' பரிதவிப்புடன் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள் அஹல்யா. இரண்டு மூன்று முறை சஞ்சீவை அழைத்து பார்த்து ஆகி விட்டது. அவன் அழைப்பை ஏற்கவில்லை.
மேடையில் நின்றுக்கொண்டு இருந்தவனை பார்த்தபடியே 'சஞ்சா... யூ அண்ட் ரிஷி ஆர் இன் ட்ரபிள்' குறுஞ்செய்தி தொகுத்து அனுப்பினாள் அவள். அவன் கைப்பேசியை கையில் எடுக்கவே இல்லை. ரிஷியிடம் சொன்னால் என்ன? பொறி தட்ட அவனை கண்களால் தேட துவங்கினாள் அஹல்யா. கண்ணில் தென்படவில்லை அவன்.
மேடையில் வரவேற்பு நடந்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருக்க, கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள் அருந்ததி. மாப்பிளையும் பெண்ணும் மலர் மாலைகள் மணக்க அருகருகே நின்று ஏதேதோ கிசுகிசுத்துக்கொண்டு, மகிழ்ந்து, சிரித்து,....
அவளருகில் வந்து அமர்ந்தான் ரிஷி. அவளையே சில நொடிகள் பார்த்திருந்தான் அவன். கன்னத்தில் கை வைத்துக்கொண்டு இமை தட்டாமல் மேடையையே பார்த்திருந்தவளை, அவள் எண்ண ஓட்டங்களை அடுத்த சில நிமிடங்களில் படித்திருந்தான் அவன். இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென அவன் நினைத்து முடித்த நொடியில் அதை செயல் படுத்த துவங்கி இருந்தான் தோழன்,
மேடையின் மீதிருந்து அவர்கள் இருவரையும் ரசித்துக்கொண்டிருந்த சஞ்சா என்ன தோன்றியதோ அங்கே இருந்த பாடகரிடம் மைக்கை வாங்கிக்கொண்டான்...... .
'மே ஐ ஹாவ் யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென். இன்னைக்கு இந்த மேடையோட கதாநாயகன், கதாநாயகி என் தங்கையும், எங்களோட அருமை மாப்பிளையும் தான். அவங்க அனுமதியோட இந்த மேடையை ஒரு அஞ்சு நிமிஷம் இன்னொரு ஜோடியும் பகிர்ந்துக்க போறாங்க அவங்க நம்ம எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஜோடி..'
'அவங்க யாருன்னு சொல்றதை விட அவங்க என்ன பண்ணாங்க சொல்றேன். கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுவும் ரகசியமா. யாருமில்லாத ஒரு ரூமுக்குள்ளே. இது என்னங்க அநியாயம்? அவங்க கல்யாணம் நடக்காதான்னு எத்தனை நாளா காத்துகிட்டு இருக்கோம்.? நாமெல்லாம் அவங்க கல்யாணத்தை பார்க்க வேண்டாமா?'
கண்கள் விரிய நிமிர்ந்தனர் ரிஷியும் அருந்ததியும்.
மழைச்சாரல் தொடரும்......
{kunena_discuss:886}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.