(Reading time: 12 - 23 minutes)

ரவா இல்லையே, தண்ணி அடிக்கக் கூட டைம் வச்சிருக்கீங்க.  சரி பேசி நேரத்த கிடைத்த விரும்பல.  எந்த நேரம் வேணும்னாலும் தேவி வந்துடும்.  நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் முக்கியமா சில விஷயம் பேசத்தான் வந்தேன்”

“சொல்லுங்கய்யா, நீங்க என்ன சொன்னாலும் பண்றோம்.  நீங்க எங்களுக்காக பண்ணிட்டு இருக்கற  உதவிகளுக்கு  எங்க உசிரைக் கூட கொடுக்கலாம்”, தண்ணியின் பிடியில் இல்லாமலே உளறினான் வெற்றி. 

“அதை வச்சிட்டு நான் என்ன பண்றது, அதுக்கு பதிலா உன் தங்கச்சியைக் கொடுத்தேன்னு வைய்யி, நீங்களும் சந்தோஷமா இருக்கலாம், நானும் சந்தோஷமா இருப்பேன்”,என்று நல்லதம்பி நல்லபாம்பாக மாறி விஷத்தைக் கக்கினான். 

“ஐயா,  என்னங்கய்யா பேசறீங்க.  அது சின்ன பொண்ணுங்க, இந்த மாதிரி தப்பா பேசாதீங்க”, நல்லதம்பியின் குணம் அறிந்தும் மணி பதறினான்.

“என்ன மணி ரொம்ப பதட்டப்படற.  எந்த வித ஆதாயமும் இல்லாம உங்களுக்கு இவ்வளவு செய்ய நான் என்ன கேனையா. என்னைக்கு நான் தேவியைப் பார்த்தேனோ அன்னைக்கே அவ மேல கண்ணு வச்சுட்டேன்.  இப்போவும் நான் ஒண்ணும் உங்கள கட்டாயப்படுத்தலை.  இதுக்கு ஒத்துக்கலைன்னா தாராளமா இந்த இடத்தை விட்டு நீங்க கிளம்பலாம்.  ஆனா அதுக்கப்பறம் நீங்க எதுக்காகவும் என்கிட்ட வரக்கூடாது.  அதே சமயத்துல இதுக்கு ஒத்துக்கிடீங்கன்னா உங்க ரெண்டு பேரையும் நான் ராஜா மாதிரி வச்சுக்கறேன்.  எதுக்காகவும் நீங்க யார்கிட்டயும் கையேந்த வேண்டாம்.  நீங்க கேக்கறது எல்லாம் கிடைக்கும்”

நல்லதம்பி சொல்ல சொல்ல அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெற்றியும், மணியும் முழித்தார்கள்.  நல்லதம்பி சொன்னதை செய்யக்கூடியவன். அவன் என்னதான் அவர்களை விட்டுவிடுவதாக சொன்னாலும் இந்த ஊரை விட்டு போக முடியாது.  ஏதேனும் ஒரு வழியில் அவர்களை மடக்கி விடுவான்.  அதைவிட அவன் சொல்வதற்கு ஒத்துக்கொண்டு ராஜாவாக இருக்கலாமே.  நொடியில் யோசித்து இருவரும் தேவியை பணயம் வைக்கத் தயாரானார்கள்.

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

 

“ஐயா எங்களை இப்படி இக்கட்டுல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே.  உங்களுக்கே இது நியாயமா இருக்கா?”

“என்னையா இக்கட்டு.  இதைவிட உம்பொண்ணுக்கு  ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்துடுவியோ நீயி.  உன்கூட இருந்தா கடைசிவர கல்யாணம் பண்ணாம உங்களுக்கு உழைச்சு கொட்டிட்டு இருப்பா.  அதுக்கு இப்போ நான் செய்யுறது எவ்வளவோ தேவலை”, நல்லதம்பி சொல்ல மனசில்லாதவர்கள் போல் மணியும், வெற்றியும் நல்லதம்பி கூறியதற்கு ஒத்துக்கொண்டார்கள்.  குடிக்கு முன்னே தேவியின் வாழ்க்கை முடிந்தது. 

யலில் இருந்து வந்த தேவிக்கு முதலில் நல்லதம்பியைப் பார்த்து மிக சந்தோஷமாக இருந்தது.  அவன் செய்த உதவிகளுக்காக நெஞ்சார நன்றி கூறினாள். 

“வாங்கய்யா.  நீங்க பண்ணின எல்லா உதவிக்கும் ரொம்ப நன்றி.  அப்பாவுக்கும், அண்ணணுக்கும் எல்லா டெஸ்டும் முடிஞ்சுடுச்சு.  இனிமே சிகிச்சை ஆரம்பிச்சுடுவாங்கன்னு நினைக்கறேன்........”, அவள் மட்டும் அவர்கள் ஊருக்கு வந்த நாள் முதல் நடந்ததைக் கூறிக்கொண்டிருக்க மற்ற மூவரும் எதுவும் பேசாமல் தேவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  வேலுவோ இத்தனை நாள் பழகிய தோஷத்தில் இந்த சின்ன பெண் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். வருத்தப்படவேண்டிய மணியும், வெற்றியும் குனிந்த தலை நிமிரவில்லை. 

அவள் பேசி முடித்த பின்பும் மற்ற யாரும் பேசாமல் இருப்பதைப் பார்த்த தேவி ஆச்சர்யப்பட்டாள்.  அதைவிட மதிய நேரம் தாண்டிய பின்பும் தன் தந்தையும், தமையனும் குடிக்காமல் இருப்பதுக்கண்டு இன்னும் அதிசயப்பட்டாள்.   நல்லதம்பி தேவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மணியிடம் தான் ஒரு ஒருமணி நேரத்தில் வருவதாகவும் அதற்குள் தேவியிடம் அனைத்தையும் கூறும்படியும் சொல்லிவிட்டு வெளியில் சென்றான்.

மணி என்னதான் குடிகாரனாகவும், பொருப்பில்லாதவனாகவும் இருந்தாலும், தேவி அவன் மகளல்லவா.  அவனால் அந்த இழிவான செயலை சொல்ல முடியவில்லை.  ஆனால் வெற்றிக்கு அப்படி எதுவும் இல்லை  போல, தண்ணியா, தங்கையா என்றால் யோசிக்காமல் தண்ணியே என்று தீர்ப்பு வழங்குவான்.  ஆகவே எந்தத் தயக்கமும் இல்லாமல் தேவியிடம் நல்லதம்பியின் நோக்கத்தைக் கூறினான் வெற்றி.  முதலில் அவன் கூற வருவது என்ன என்றே அந்த வளர்ந்த குழந்தைக்குப் புரியவில்லை.

“அண்ணே நீ என்ன சொல்ற.  ஐயாக்கு என்னைய பிடிச்சிருக்குன்னா, எனக்குப் புரியலையே”, அவள் கேட்டதைப் பார்த்து வேலுவிற்கு ஐயோ என்று வந்தது.  ஆனால் வரவேண்டியவர்களுக்குத்தான் ஒன்றும் இல்லை.

“அய்யே இத்தனை படிச்சிருக்கே, இதுக்கூட புரியலை உனக்கு.  உன்னைய ஐயா வச்சிக்கறேன்னு சொல்றாரு”, மனசாட்சியே இல்லாமல் வெற்றி பேச, அப்பொழுதும் புரியாமல் முழித்தாள் தேவி.

“என்னா முழிக்கற.  இதுவும் புரியலையா”, என்று கேட்டுவிட்டு நல்லதம்பியின் நோக்கத்தை புளி போட்டு விளக்கினான் வெற்றி.

அதைக்கேட்டவுடன் ஆடிப்போய்விட்டாள் தேவி.  இவர்களுக்காக தான் இத்தனை கஷ்டப்படும்போது  தன்னை ஏதோ நேர்ந்து விட்ட ஆட்டைப் போல பலி கொடுக்கிறார்களே என்று அழுகையாக வந்தது.

“நீயெல்லாம் ஒரு அண்ணனா, அந்தாளு அப்படி பேசினா அவனை வெட்டிப் போடாம, என்கிட்ட வந்து போன்னு சொல்ற, வெக்கமா இல்லை.  நைனா நீ என்ன அண்ணன் பேசறதைக் கேட்டுட்டு இருக்க”, அழுகையில் குரலடைக்கக் கத்தினாள் தேவி.

“என்னை என்னம்மா செய்ய சொல்ற.  நம்மால அந்தாளை பகைச்சுக்க முடியாதும்மா.  ஊருக்குள்ள எவனும் உதவ மாட்டானுங்க”

“அந்த ஊர் இல்லைனா என்ன நைனா.  என் பள்ளிக்கூடம் கிட்டவே போய்டலாம்.  நான் இன்னும் நாலு வீட்டு வேலை செஞ்சாவது உங்க ரெண்டு பேரையும் காப்பாத்தறேன்.  இந்த ஈனப் பொழைப்பு வேணாம் நைனா”

“அப்படில்லாம் டக்குன்னு போய்ட முடியாதும்மா.  மொதல்ல இந்த எடத்தை விட்டே அந்தாள் நம்பளை நகறவிடமாட்டான்.  வேலு மட்டும்தானேன்னு பாக்காத, நீ வேலை செய்யும்போது பார்த்தியே அவங்க எல்லாமே நமக்கு காவல்தான்.  அந்தாள் நோக்கத்தை வெளிப்படையா சொல்ற வரைக்கும்தான் நமக்கு சுதந்திரம்.  எப்போ சொல்லிட்டானோ, அப்போ அவன் சொல்றபடி நாம ஆடித்தான் ஆவணும்”, மணி சொல்லி முடிக்க, தேவி ஆற்றாமையில் கதறி அழ ஆரம்பித்தாள் .

தேவியின் வாழ்வில் அனைத்தும் முடிந்தது.  வெளியில் சென்ற ஒரு மணி நேரத்திற்கு பின் நல்லதம்பி வீடு திரும்ப, வெற்றியும், மணியும் தேவியின் கெஞ்சலையோ, கதறலையோ பொருட்படுத்தாது அவளை நல்லதம்பியின் பிடியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.  நல்லதம்பியிடம் தேவி பலவிதமாக மன்றாட எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.  அவளின் கதறலை இம்மி அளவும் மதிக்காத நல்லதம்பி எனும் மனித மிருகம் தேவியை வேட்டையாடியது. 

படிப்பைத் தவிர வெளி உலகைப் பற்றி எதுவும் தெரியாத தேவிக்கு மரண அடி.  நரகம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு ஒரு முறை நல்லதம்பி அவளை புணரும்போதும் உணர்ந்தாள் தேவி.  மனைவியிடமோ, மற்ற பெண்களிடமோ தீர்த்துக் கொள்ள முடியாத வக்கிர எண்ணங்களுக்கு எல்லாம் அவள் வடிகாலாகிப் போனாள்.  முழு உயிராக இருந்தவள்  மூன்றே மாதங்களில் கால் உயிராகிப் போனாள்.  அவள் இரண்டு முறை அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயல, நல்லதம்பியின் ஆட்களிடம் பிடிபட்டு அதற்காக வேறு அடி வாங்கி படாதபாடு பட்டு விட்டாள் தேவி. 

இதற்கெல்லாம் விடிவு வந்தது.  ஆனால் வந்த விடிவும் மிகக் கொடூரமானதாக இருந்தது

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.