(Reading time: 20 - 39 minutes)

'ங்கே பின்னாடி என் ரூம் இருக்கு. என் கூட வரியா தரேன்.???' தீக்ஷா உடனே சம்மதிக்க அவளை அள்ளிக்கொண்டு நடந்தார் ஜானகி. அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் தீக்ஷாவுக்கு முத்த மழை.

அடுத்த சில நிமிடங்களில் வாயில் இரண்டு கடலை மிட்டாய்களுடன்  கூடத்துக்கு வந்தாள் தீக்ஷா.

'பட்டு பாப்பா .. வாயிலே என்ன?' என்றான் ரிஷி.

'க...ட...லை மி...ட்....டாய்...'

''ஹேய்... உனக்கு எங்கே கிடைச்சது கடலை மிட்டாய்.' என்றான் முகத்தில் ஆர்வம் மின்ன..

'அங்கே... ஒரு பாட்டி கொடுத்தாங்க...'

தனது இருக்கையில் இருந்து சட்டென எழுந்தான் ரிஷி. குழந்தையின் அருகில் வந்து மண்டியிட்டு 'பாட்டியா.. எந்த பாட்டி???' பார்வை ஒரு முறை சுற்றி எல்லாவற்றையும் அலசி விட்டு திரும்ப கேட்டான் ரிஷி.

'அங்கே... ஒரு பாட்டி.'. சமையலைறையை நோக்கி சுட்டியது மழலை. அவன் கண்ணில் யாரும் தென்படவில்லை.

ஏதோ ஒரு நெகிழ்வு அவனுக்குள் பரவ 'சரி... நீ அந்த பாட்டிகிட்டே போய் எனக்கு ஒரு கடலை மிட்டாய் வேணும்னு சொல்லி வாங்கிட்டு வா'' என்றான் ரிஷி. அதற்குள் அவர்கள் அருகில் வந்து விட்டிருந்தான் உயிர் நண்பன்.

'எது கடலை மிட்டாயா? தமிழ் நாட்டிலே பெரிய ஆக்ஷன் ஹீரோடா நீ. நீ போய் கடலை மிட்டாய் கேட்கிறே??' என்றான் சிரித்துக்கொண்டே

'இப்படி... பேசி பேசி உசுப்பத்தியே மனுஷனை வாழ விடாம பண்ணுங்கடா...' என்றான் அவன். ' எனக்கு கடலை மிட்டாய் ரொம்ப பிடிக்கும்டா. நான் அதை சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு. நான் இப்போ கடலை மிட்டாய் சாப்பிட்டே ஆகணும். நீ போய் வாங்கிட்டு வாடா பட்டு செல்லம்.'

சமையலைறயை நோக்கி ஓடியது தேவதை. அங்கே ஜானகி இல்லை. நேராக ஜானகியின் அறையை அடைந்தது அது.  குழந்தை மெல்ல உள்ளே நுழைந்த நேரத்தில், அவள் உள்ளே வந்ததை கவனிக்காமல் தனது கையில் இருந்த அந்த சின்ன புகைப்படத்தை பார்த்திருந்தார் ஜானகி.

அது ஜானகியும் அவரது மூத்த மகனும் இருக்கும் சின்னதொரு புகைப்படம். மகனின் நினைவுகள் அவரை அழுத்திக்கொண்டிருக்க, கண்ணீருடன் அதையே பார்த்திருந்தார் ஜானகி.

அவரது தோளுக்கு பின்னால் வந்து நின்றாள் தீக்ஷா. அவளது பார்வை அந்த புகைப்படத்தில் பட  'ஹை... அப்பா போட்டோ...' உற்சாகத்துடன் ஒலித்தது மழலைக்குரல்

திடுக்கிட்டு திரும்பி, அங்கே இருந்த அவரது துணிகளுக்கு அடியில் அந்த புகைப்படத்தை மறைத்து விட்டு, கண்ணீரை துடைத்துக்கொண்டு குழந்தையை நோக்கி திரும்பினார் பாட்டி.

'பாட்டி... அது அப்பா போட்டோதானே?' தெள்ளத்தெளிவாக கேட்டது குழந்தை.

'அது.... அது வேண்டாம் அது பழசு நீ விடு. உனக்கு இப்போ என்ன வேணும் சொல்லு. இன்னொரு கடலை மிட்டாய் தரவா?' படபடத்தது ஜானகியின் குரல். குழந்தை வெளியில் போய் எதையாவது சொல்லி வைத்தால் என்ன செய்வதாம்??

'எனக்கு வேண்டாம். அப்பாக்கு...'

'அப்பாக்கா???'

'ம்...' ரி....ஷி  அப்பா... இப்போ கடலை மிட்டாய் சாப்பிட்டே ஆகணும்...' அவன் சொன்னதையே சொன்னாள் அழகாக. தனது சிறு வயது மகனை மறுபடியும் பார்த்த ஒரு உணர்வு அந்த அன்னைக்கு. இரண்டு மூன்று கடலை மிட்டாய்களை குழந்தையின் கையில் அவர் திணித்து விட்டு நிமிர......

'ஜானகி அம்மா...' அரை வாசலில் இருந்து யாரோ அழைக்கும் குரல் கேட்க..

'இதோ வரேன்...' என்று வாசலை நோக்கி குரல் கொடுத்த படியே 'வாடா செல்லம்...நாம போகலாம்...' குழந்தையை நோக்கி சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தார் அவர். இருந்த இடத்தை விட்டு அசையவில்லை குழந்தை. அதன் மனம் இன்னமும் அந்த புகைப்படத்திலேயே.

'எனக்கு அப்பா போட்டோ வேணும்...' மெதுவாக வாய் விட்டு சொல்லியபடியே அழகாக அந்த துணிகளை விலக்கி, அந்த சின்ன புகைப்படத்தை எடுத்துவிட்டிருந்தாள் தீக்ஷா. ஒரு கையில் அந்த சின்ன புகைப்படம், மற்றொரு கையில் கடலை மிட்டாய்கள். கூடத்தை நோக்கி நடந்தன அந்த சின்ன பாதங்கள்.

அடுத்த சில நிமிடங்களில் இடக்கையில் இருந்த அந்த கடலை மிட்டாய்களை ரிஷியை நோக்கி நீட்டினாள் தீக்ஷா.

'பட்டு செல்லம்... யார் கிட்டே எது கொடுத்தாலும் ரைட் ஹான்ட்லே கொடுக்கணும்' சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் வந்தான் சஞ்சா. குழந்தையின் வலக்கையில் அந்த புகைப்படம்.

'டேய்.. அவ என்னை மாதிரியே லெஃப்டீடா.... பொண்ணு அப்பா மாதிரிதானே இருக்கணும்???' என்றான் ரிஷி சஞ்சாவை பார்த்து கண்சிமிட்டிய படியே

'ஆரம்பிச்சிட்டியா.??? எனக்கு பசிக்குது வா சாப்பிடலாம்....' என்றபடியே அவன் நகர எத்தனிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.