(Reading time: 19 - 37 minutes)

"த்தை, சாரி அத்தை, உங்க அண்ணா, என் அப்பா ஒரு ரோட் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார்.... நான் முழுவதும் சொல்கிறேன்.. அப்பா, என் அமெரிக்க அம்மாவை எல்லோரையும் எதிர்த்து கல்யாணம் பண்ணிண்டு போனார்..  அவங்க இரண்டு பேருமே, நான் பிறந்து ஐந்து வருஷங்கள் தான் ஒன்றாக இருந்தார்கள்.. என் அம்மாவுக்கு, கான்சர் நோய் வந்தது.. அந்த சமயத்தில் அப்பா அவரோட வேலை பார்த்த ஒரு இந்தியன் லேடியுடன் தொடர்பு ஏற்பட, அம்மா அவரை டைவர்ஸ் செய்து விட்டார்கள்.. அப்பாவுமே அந்த லேடியோட வேற கல்யாணம் செய்து கொண்டார்..  எனக்கு பத்து வயது இருக்கும் வரை நான் அம்மாவோடதான் இருந்தேன்..

அம்மாவுமே தனக்கு ஒரு காம்பனியன் அந்த நிலமையில் வேண்டும்ன்னு அமெரிக்கர் ஒருவரை ரீ மேரேஜ் செய்து கொண்டார்.. ஆனால் கொஞ்சம் நாள்லே அவங்க எனக்கு பத்து வயசாகும் போது இறந்து போயிட்டார்..

நான் அதற்கு பிறகு அப்பாவோடவும், அவர் இரண்டாவது இந்தியன் மனைவி மாலினி ஆண்ட்டியோடவும் இருந்தேன்.. அப்பாவோட அப்பதான் நான் நல்லா பழக ஆரம்பிச்சேன்.. 'எப்வாவது எங்கிட்ட சொல்லுவார், தான் தப்பு பண்ணி விட்டதாக.. கொஞ்சம் கொஞ்சம் இந்திய வாழ்க்கை பற்றி சொல்வார்.. இனி அந்த உறவு ஒட்டாது அப்படின்னு'.. எனக்கு அதெல்லாம் அப்போ புரியலை.. நல்ல பிரண்டிலியா பழகுவார்.. நல்லா தமிழ் கற்று கொடுத்தார்.. மாலினி ஆண்ட்டி கூட நல்லவங்க தான்.. அவா இரண்டு பெருக்கும் வேறு குழந்தை இல்லைன்னு என் கிட்ட பாசமாதான் இருந்தாங்க.. நான் அமெரிக்கன் பழக்க வழக்கங்களோடத்தான் வளர்ந்தேன்.. ஆனா, கடைசில என்னோட 18 வயுசல ரோட் ஆக்சிடெண்ட்ல இரண்டு பேரும் இறந்து போனார்கள்”..

“சாகும் முன்னாலே என்னை இந்தியா போய் தன் குடும்பத்தை பார்க்க சொன்னார்.. அப்பவும் நான் அதை பெரிசா எடுத்துக்கலை”..

“பணம் எனக்கு பிரச்சனை இல்லை.. அம்மா சைட், அப்பா சைட் இரண்டு பேருமே நிறைய வைச்சிட்டு போனா.. என் அமெரிக்க அம்மா பெரிய கோடீஸ்வரி.. எனக்கு அதுனால என் 18 வயசுல எக்கசக்க பணம் இருந்தது.. ஆனா வாழ்க்கை.. என்ன ஜாலியா தனியா தான் இருந்தேன்.. நல்லா படிச்சேன்.. அம்மா கேன்சர்ல இறந்ததால,  மெடிசன் படிச்சேன்.. ஒரு நாள் அப்பா டயரி கிடைச்சுது.. அப்பதான், நான் அப்பா பற்றி எல்லாமே தெரிஞ்சிண்டேன்.. 'அப்பா எப்படி தாத்தா, பாட்டி, அவர் தங்கை எல்லாரையும் உதறிட்டு அமெரிக்க மோகத்துல, அமெரிக்க லேடியை மணந்து ஈஸி என்ட்ரியா அங்கே வந்தது, அப்புறம் கூட அவர்களை கண்டு கொள்ளாமல், தன் தங்கை பொறுப்பை ஏற்று கொள்ளட்டும்ன்னு விட்டு வைச்சது, எல்லாம் எழுதியிருந்தார்'..என்னோட 18 வயசுல உண்மையை என் கிட்ட சொல்லி இந்தியா அனுப்பனும்னு நினைச்சிருந்தாராம்.. ஆனா அதுக்குள்ள, அவர் இறந்து போயிட்டார்.. 

“அந்த டயரியுமே எனக்கு கொஞ்சம் வருஷம் முன்னாடிதான் கிடைச்சுது.. அதை படிச்ச எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. அப்போ நான் டாக்டராகியிருந்தேன்.. அந்த சமயத்துல நிறைய கமிட்மெண்ட்ஸ்.. ரிசர்ச் வேற ஸ்டார்ட் பண்ணியிருந்தேன்.. உடனே எல்லாரையும் தேடி வர முடியலை..இப்ப தான் என்னாலே என்னுடைய வேர்களை தேடிண்டு இந்தியா வர முடிஞ்சுது"  என்று சொல்லி நிறுத்தினான்.

"ஏன் அஜய், ஏம்ப்பா அப்பவே நீ உனக்கு உண்மை தெரிஞ்ச பின்னாடி நீ யாருன்னு சொல்லியிருக்கலாமே"  என ராமமூர்த்தி கேட்க,

"இல்லை அத்திம்பேர்.. அந்த சமயத்தில் மஹதி கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்தது.. பணத்துக்கு நீங்க எல்லாம் கஷ்டப் பட்டுக் கொண்டு இருந்தீர்கள்.. எனக்கு உண்மையை சொல்லி உங்களுக்கு அந்த குத்தகை பணத்தை கொடுத்து உதவலாமான்னு கூட யோசித்தேன்.. பட் வரும் பொழுது நான் அதை எடுத்து வர மிஸ் பண்ணிட்டேன்.. அந்த டயரி, மஹதி கல்யாணத்துல காலையில் தான் எனக்கு கிடைச்சுது.. அந்த சமயத்துல எங்கப்பா பற்றி எனக்கு சொல்ல பிடிக்கலை.. தேவையில்லாமல் யாராவது எதையாவது கல்யாணத்துல பேசினா சாரதா அத்தைக்கு கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன்..

அதோட எந்த பண ப்ராப்ளம் வந்தாலும், அப்ப உங்களுக்கு கொடுத்து உதவனும்னே இருந்தேன்.. டாக்டர் விஜய் அம்மா தேவையில்லாமல் பணம் டிமாண்ட் செய்ய போது கூட நான் பணம் கொடுத்து வேறே கார் வாங்கிக் கொடுக்கலாம்ன்னு இருந்தேன்.. ஆனா, கடைசி நிமிஷத்துல அவா தேவையில்லாமல் என்னை மஹதியோட இணைச்சி பேசினவுடன், எனக்கு பொறுக்க முடியலை.. விஜய்யுமே, அம்மா பேச்சுக்கு மறு பேச்சே பேசலை.. அதான், என் அத்தை பொண்ணு, எனக்கு தான் முதல் உரிமைன்னு மஹதியை கல்யாணம் செய்துக்க கேட்டேன்..

இத்தனை நாளாக, எனக்கு இந்த குடும்பம், கல்யாணம், பாசம், பந்தம் இதெல்லாம் மேலே ஒரே வெறுப்பு.. உங்க குடும்பத்தோட பழகின கொஞ்ச நாள்லேயே எனக்கு இத்தனை நாளா நான் இழந்தது புரிஞ்சுது..  மஹிக்கு திருமணம் முடிஞ்சவுடன் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்ல நினைச்சேன்.. அதுக்குள்ள எனக்கே ஒரு ஆபர்சுனிட்டி கிடைச்சவுடன் அந்த மிஸ் பண்ண நான் முட்டாளா.. மஹதியை என் பெட்டர் ஹாஃபா ஏத்துண்டேன்.. வா மஹதி, அத்தைக்கிட்ட ஆசிர்வாதம் வாங்குவோம்" என அழைத்தவன், இருவரும் ஜோடியாக பெரியவர்களை நமஸ்கரிக்க,

தொலைந்து போன சொந்தம் மீண்டும் கிடைத்ததில் மகிழ்ந்த அந்த தம்பதியர், சின்னவர்களை ஆசிர்வதிக்க,

பைரவியும், வசந்தும் ஒரு சேர,  "திஸ் ஸ்பெஷல் அகேஷன் கால்ஸ் பார் கிராண்ட் செலிபரேஷன்" கோரசாக ஆர்பரிக்க, அங்கே அந்த வீட்டில் மகிழ்ச்சி துள்ளி விளையாடியது.

தொடரும்

Episode 19

Episode 21

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.