(Reading time: 19 - 37 minutes)

"ஹா.. சங்கரோட பிள்ளையா,.. என் அண்ணனின் மகனா"..  "ஆ.. என் மைத்துனன் மகன் நீயா"..  "எங்க மாமா பையனா"  ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்ல,

சாரதா, அப்படியே அருகில் இருந்த சேரில் அமர்ந்து விட்டார்..

ஓடிப் போய் அவர் காலடியில் அமர்ந்து கொண்டான் அஜய்..  "மஹதி போய் வாட்டர் கொண்டா"  என மஹதியிடம் சொல்லி விட்டு,  சாரதாவின் கையை பிடித்துக் கொண்டான்.

"அத்தை.. ப்ளீஸ் ரிலாக்ஸ்.. நான் உங்க அண்ணன் சங்கரோட பிள்ளை தான்.. இப்படி பட்டுன்னு போட்டு உடைச்சி இருக்கக் கூடாதுதான்.. சும்மா உங்களை அந்த குத்தகை பணம் அப்படி இப்படின்னு சிவகுமார் அண்ணா சொன்னவுடன், இதற்கு மேலே எத்தனை நாளைக்கு மூடி மறைக்கறதுன்னு உண்மையை சொல்ல வேண்டியதா போச்சு..."

அதற்குள் மஹதி தண்ணீர் டம்ளரை நீட்ட, அதை வாங்கி பருகிய சாரதா, தன்னை கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, "அஜய், நீ சொல்லறது உண்மையாப்பா.. எதுவும் விளையாடலேயே.. நிஜமாவே எங்க அண்ணா பிள்ளை தானா நீ"

"என்ன சகலை, புதுசா எதையோ குண்டை தூக்கிப் போடறீங்க.. எப்படியிருந்தாலும், உங்களுக்கும் சொத்துல ஒரு பங்கு கிடைக்கும்.. அதான் என் மச்சினியை கல்யாணம் பண்ணிண்டாச்சே.. அதுக்காக இப்படி மொத்த சொத்தும் அபகரிக்க நீங்கதான் சாரதா மாமியோட அண்ணன் பையன்னு சொல்லி டிராமா போடறீங்களா?.. இது என்ன புது டெக்னிக்கா இருக்கே.. நியாயமே இல்லை அஜய் "  என சிவகுமார் சொல்ல,

"ப்ளீஸ் சிவா அண்ணா, இதுல எந்த டிராமாவும் இல்லை.. எந்த டெக்னிக்கும் இல்லை.. நான் சொல்லறது எல்லாமே உண்மைதான்.. என்னை கொஞ்சம் அத்தையோட கொஞ்சம் பேச விடுங்கோ ப்ளீஸ்'  என்ற அஜய், தன் அத்தை சாரதாவிடம் திரும்பி,

"அத்தை.. நான் சொல்லறது எல்லாமே சத்தியமான உண்மைதான்.. உங்க எல்லாருக்குமே தெரியும், நான் இந்தியாவுக்கு வெறும் கான்சர் ரிசர்ச் ப்ராஜெக்ட்டுக்காக மாத்திரம் வரலைன்னு.. என்னோட பரம்பரையை தேடி வந்தேன்னு.. கொஞ்ச நாளைக்கு முன்னாலே, நான் மயிலாடுதுறைக்கு சென்றேன்.. அதுவும் உங்களுக்கு தெரியுமே.. அங்கே போன பிறகுதான் தெரிந்தது , நான் எடுத்துண்டு போன அட்ரஸில் இருந்தவர்கள், அந்த வீட்டை என் தாத்தா, பாட்டியிடம் இருந்து வாங்கியிருக்கிறார்கள் என்று..  அவர்கள்தான், என்  அப்பா அமெரிக்கா சென்ற கொஞ்சம் வருஷம் கழித்து,  வீட்டை அவர்களிடம் விற்று விட்டு, சென்னைக்கு தன் மகளுடன் சென்று விட்டதாக..

அதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த விவரமும் தெரியலை.. ஆனா, நீங்க தஞ்சாவூர் பக்கம் இருந்த நிலத்தை கோட்டைச்சாமி அங்கிளிடம் குத்தகைக்கு விட்டதை மாத்திரம் சொன்னார்கள்.. அவர்களுமே அவரிடம்தான் நிலத்தை விற்றார்களாம்.. நான் அவரோட அட்ரசை தேடி போனப் பொழுது, அவரோ இங்கே நம்மாத்துக்கு, குத்தகை பணம் கொடுக்க வந்திருக்கிறார்..  நல்லவேளை, அவரோட பொண்ணு அட்ரஸ்சை வைத்து அன்னிக்கே பைரவியோட போய் நான் அவரை மீட் பண்ணி விஷயத்தை எல்லாம் தெரிஞ்சுண்டோம்.. அவர் தான் உங்களை பற்றி சொன்னார்.. நீங்க எங்கப்பாவின் தங்கைன்னு தெரிஞ்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்..

என்னை பார்த்தவுடனே கோட்டைச்சாமி அடையாளம் தெரிஞ்சு விஜாரித்தார்.. நீங்க அந்த பணத்தையெல்லாம் யூஸ் பண்ணாமே சேர்த்து வைக்கறதையும் சொன்னார்.. நானும், பைரவியும் உங்களை பற்றி தெரிஞ்சுண்டு அவர்கிட்ட இதை பற்றி பேச வேண்டாம்ன்னு சொல்லிவிட்டு, நானே உங்களை நேரில் பார்த்து விஷயத்தை சொல்லறேன்னு சொன்னேன்..

நான் இந்த விஷயத்தை அன்னிக்கே, மஹதி கல்யாணம் முன்னாலேயே சொல்லாலாமா என்று நினைச்சேன்..  பட் ஒரு கன்ஃபுயூஷன், ஒரு வேளை நீங்க நம்பலேன்னா.. அதுவும் இல்லாம, எனக்கு நிரூபிக்க ப்ருஃப் எதுவும் அப்போ என்னிடம் இல்லை.. அதோட இப்ப கூட சிவா அண்ணா மாதிரி யாரும் கேள்வி கேட்டா??.. எங்கப்பா, உங்களை பற்றி எழுதியிருந்த டயரி மாத்திரமே எங்கிட்ட இருந்தது"....  என்ற அஜய்க்கு,

"இப்ப மாத்திரம் உங்களுக்கு ப்ரூஃப் கிடைச்சதா" என சிவகுமார் கேட்க,

"அஜய், கண்ணா நீ எதுவும் எனக்கு நிருபிக்க வேண்டாம்.. ஒன்னோட வார்த்தையே போறும்பா.. நான் ஒரு முட்டாள்.. அந்த கோட்டைச்சாமி உன்னை பார்த்தவுடனேயே கண்டு பிடிச்சிட்டான்னு சொல்லறே.. மஹி கல்யாணத்துல கூட அவன் வாயையே திறக்கலை பாரு.. நான் இத்தனை நாளா இருந்தும் கூடவே இருந்தும், எப்படி உன்னை கண்டு பிடிக்கலை.. இப்ப உன்னை பார்த்தா எனக்கு என் அண்ணணை பார்க்கற மாதிரியே இருக்கு.. அதான் விதி போல.. என் கண்ணை மறைச்சிருக்கு.. எப்படி நான் உன்னை கண்டு பிடிக்கவேயில்லை.. இவருக்கு கூட உன்னை தெரியலையே"  என்று அவனை சேர்த்து  அணைத்து உச்சி முகர்ந்தவர் கண்ணீர் வடிக்க,

அவர்களை பார்த்த அனைவருக்குமே ஆனந்தத்தில் கண்ணீர் வந்தது..

"அஜய், அண்ணாவும், மன்னியும் எப்படி..."

ஏற்கனவே அஜய்க்கு பெற்றவர்கள் இல்லை என்று தெரிந்தவர்கள், அவனை பெற்றவர்கள் தன் அண்ணனே என்பதையறிந்த சாரதா, தன் அண்ணனை குறித்து பேச்சை எடுத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.