(Reading time: 22 - 43 minutes)

08. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithai Manohari

காலிங்பெல் சத்தம் கேட்கவும் மனதில் தோன்றிய நெருடலுடன் முழுகவனமுடன் கதவிலிருந்த பீப் ஹோல் வழியாக வந்திருப்பது யார் என பார்த்தாள் மனோஹரி. ஆனால் பீப் ஹோல் வழியாக பார்க்க முடிந்த எல்லை வரை யாரும் இல்லை.

யாராய் இருக்கும்? யாரு இந்நேரம் விளையாடுறது? வந்திருக்கவங்க பெல்லை அடிச்சுட்டு எதேச்சையா லெஃப்ட் சைடோ   ரைட் சைடோ  விலகி நின்றிருந்தாலும் இங்க இருந்து பார்க்க தெரியாதுதான்….. மெல்ல நகர்ந்து கதவின் இடப்பக்கம் இருந்த சுவரை ஆக்ரமித்த அந்த ஜன்னலின் கர்டனை விலக்கி வெளியே பார்த்தாள்.

பார்த்தவரை எதுவும் யாரும் இல்லை…. என்னாச்சு? எதுவும்….. இன்னுமாய் இவள் எக்கி வெளியே பார்க்க முயல…

ம்க்கும்….ஓர் ஆணின் கணைப்பொலி அவள் இடத்தோளிற்கு மேல். அதே நேரம் ஒரு  மூச்சுக் காற்றின் ஸ்பரிசம் அவள் காதில்…

“ஓமைகாட்….”கத்திய படி இவள் துள்ளி திரும்பினால் சற்றே இடப்பக்கம் தலை சாய்த்து முகமெங்கும் வம்பிழுக்கும் குறும்புடன் அவன்… மித்ரன்.

இழுத்து பிடித்த மூச்சு  இன்னும் கூட இவளுக்கு வெளிவரவில்லை…. இதற்குள் இவளது இரு புறமுமாக அவனது கைகள் இவள் பின்னிருந்த சுவரில்.

அனிச்சையாய் பின் விலகி, சுவரில் முதுகு பதித்து, உடல் விரைத்து இவள். தன் இரு புருவங்களை  ஏற்றி இறக்கினான் அவன் இவள் முகத்துக்கு நேராக.

“இ…இப்டித்தான் பயம்காட்டுறதாமா? “ இதயம் ஏகப்பட்ட ஸ்பீடில் எகிறி குதித்துக் கொண்டிருந்தாலும் பேசும் அளவிற்கு  வந்திருந்தாள் இவள்.

“இ…இப்டித்தான் கேர்லெஸ்ஸா இருக்றதாமா?” இவளைப் போலவே மூச்சிளைக்க இமிடேட் செய்தான் அவன்.

கேர்லெஸா….இவன் எப்படி உள்ள வந்தான்? அவனைத் தாண்டி இவள் பார்வையை சுழற்றுகிறாள்.

“ வாவ்” சுழன்ற அவள் மொக்கு கண்களில் குவிகிறது இவனது மொத்த ரசனை.

தன்னை விழுங்கிக்  கொண்டிருக்கும் அவன் கண்களை முகம் சற்று சுருக்கிப் பார்த்தாள்.

“கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா?”

“தப்பு மனு….மேரேஜுக்கு முன்ன இதுக்கு மேல பக்கத்துல வர கூடாது” ஒற்றைக் கண் சிமிட்டினான் அவன்.

“இதுக்கும் மேலயா? கடவுளே” முறைத்தாள் இவள்.

“வழி விடுங்க மித்ரன்” கோபத்தோடு சற்று சிணுங்கலும் வந்திருந்தது இப்போது இவள் குரலில். பெண்மை தாக்கும் அவன் பார்வை காரணம்.

“ஹேய் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கிற ஆஃபீஸர்ட்ட பேசுற பேச்சா இது…?”

“நான் என்ன தப்பு பண்ணேன்….அரெஸ்ட் பண்றதுக்கு?”

“பின் பக்க கதவை திறந்து போட்டுட்டு….. என்ன தப்பா?”

“இல்லையே… பூட்டிதான எப்பவும் இருக்கும்….” இவள் நெற்றி சுருக்கி யோசனையாய் சொல்ல விலகி நடந்தான் அவன் பின் வாசலை நோக்கி.

“வர்றப்பவே பார்த்துட்டேன் மனு….சாவியை வச்சு நீட்டா திறந்த மாதிரி தான் இருக்கு…. உங்க வீட்டு காம்பவ்ண்டுக்குள்ள யாரும் அப்நார்மலா நுழஞ்ச மாதிரியும் எதுவும் இல்லை….” சென்றவன் அருகில் போய் நின்று இவளும் கதவைப் பார்த்தாள்.

“நீ பூட்டின ஞாபகம் உனக்கு இருக்கா?” அவன் என்கொயரி டோனுக்கு போயிருந்தான்.

“இல்ல…..ஆனா அம்மா பூட்டியேதான் வச்சுருப்பாங்க…… அவங்க போனதும் ஃப்ரெண்ட் டோரை லாக் செய்துட்டு குளிக்க போய்ட்டேன்….” என்றவள்

“இப்ப இந்த டோரை லாக் செய்யவா வேண்டாமா?” என இவனைப் பார்த்தாள்.

கண்களால் வேண்டாம் என்றவன் ஃபிங்கர் ஃப்ரிண்ட்ஸ் பார்க்க நினைக்கிறான்…. அப்பன்னா விஜிலாவ இவன் சந்தேகப் படுறானோ….ஜோசப் எப்படியும் விஜிலாவை கூட்டிட்டு வந்ததை இவன்ட்ட சொல்லிருப்பார்…. என்ற நினைவில் அவள் முகம் சற்று வாடவும்

“ம்…ஒருவேளை அம்மா மறந்துருப்பாங்க..பொண்ணு பார்க்க போறதுன்னா ஒரு எக்‌ஸைட்மென்ட் இருக்கதானே செய்யுது…என்னையே பார்த்துக்கோயேன்…மாப்ள கிளம்பி பொண்ணு பார்க்க வாங்க…எங்க வீட்ல மனு தனியாதான் இருப்பான்னு அகதன் சொன்னதும் எக்‌ஸைட்மென்ட் தாங்க முடியலை” குறும்பை கொண்டு வந்திருந்தான் குரலில்….முக மொழியில்...

தன் முக வாட்டத்தை உணர்ந்து பேசுகிறான் என அவளுக்கும் புரிகிறது தான். ஆனாலும் அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு குப் என்கிறதுதானே உள்ளே

“ கண்டிப்பா எங்கண்ணா  அப்டில்லாம் சொல்லி இருக்கவே மாட்டான்…” சிறிதளவு சிணுங்கலும் பெருமளவு பிடிவாதமும் இங்கு இவளிடம்.

“எல்லாம் என் நேரம்…….  ஜூலியட் தனியா இருக்கான்னு ரோமியோவ கூப்ட்டு சொன்ன உன் அண்ணனை நம்புவ…. இவ்ளவு பெர்மிஷன் இருக்கப்பவும் பெர்ஃபெக்ட் ஜென்டில்மேனா நடந்துக்கிற என்னை நம்ப மாட்ட என்ன?”

ஆட்டமெட்டிக்காக புரையேறியது இவளுக்கு…. இதயெல்லாத்தையுமா இந்த அகதன் அறிவுஜீவி சொல்லி தொலச்சான்…..

“சரி சரி இப்டியே நின்னுகிட்டு இருந்தா எப்படி…? பொண்ணு பார்க்க வந்தா என்ன செய்யனும்னு தெரியுமா தெரியாதா?’ இவள் முகத்தை பார்த்து சொல்லியபடி அங்கிருந்த சோஃபாவில் சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்த மித்ரன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.