(Reading time: 22 - 43 minutes)

“அது வந்தும்மா…… உன்னை தப்பா நினைக்கிறேன்னு இல்லை…. உன்னைப் பத்தி எல்லோருமே நீ ரொம்ப புத்திசாலின்னு தான் சொல்லிருக்காங்க….. ஆக உனக்கு இவன் எப்படி டைப்னு தெரிஞ்சிருக்கும்….. ஏற்கனவே ஒரு டிவோர்ஸ் வேற……இத்தனைக்கும் அந்த மகிபா பொண்ணுமே நல்ல டைப் தான்….. அதோட இவனுக்கான ப்ராப்பர்டி ஷேரை அவங்க அப்பாட்ட இருந்து வாங்கி அதையும் காலி செய்தாச்சு….”

அவர் சொல்லிக் கொண்டு போக…. அரண்டு போய் மித்ரனைப் பார்த்தாள் மனோ.

அவன் எந்த உணர்வுமின்றி இறுகிய பாவத்துடன் தன் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். எந்த மறுப்பும் சொல்லாமல்….

“இப்ப அவனுக்கு எந்த இன்கம்மும் இல்லை…..முன்னமா இருந்தா நீ அவனை கல்யாணம் செய்யாதன்னு சொல்லி இருப்பேன்…. ஆனா இப்போ அவன் கொஞ்ச நாளா பொறுப்பா பயோசி வந்துட்டு இருக்கான்…..கவனிச்ச வரை நல்ல மாற்றம்….. இதுல உன்னை விரும்புறான்….. பயோசி என் மகன் வர்ஷனோடது…..அவனும் சரி என் பொண்ணு இன்பாவும் சரி இவன எப்படியும் தங்களோட ஷேர்ல உள்ள கம்பெனில எதுலயாவது சேர்த்துப்பாங்க…. அவங்களால இவனை ஒதுக்கி வைக்க முடியாது….…. அதிலும் குறிப்பா இன்பாக்கு இவன் மேல தனி பாசம் உண்டு…  அதனால அவன் இன்கம் பத்தி நீ கவலைப் பட வேண்டாம்….. ” அவர் எதற்கோ நிறுத்த

மனோஹரி மித்ரனை மட்டுமே புரண்டடிக்கும் உட் புயலுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவனோ ஒரு காலை பின் புறமாக மடித்து சுவரின் மீது ஊன்றிக் கொண்டு, நிதானமாக கையிலிருந்த அல்வாவை கவனிக்க ஆரம்பித்திருந்தான். இதற்கு இவள் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்?

அதே நேரம் வீட்டு வாசலில் மனோஹரியின் குடும்பத்தினர் வந்து இறங்கும் சத்த வெளிப்பாடுகள்.

தங்கள் காம்பவ்ண்டுக்கு வெளியில் நிற்கும் காரை வைத்தும், வீட்டு வாசலில் நிற்கும் இரண்டு சஃபாரிகாரர்களை வைத்தும் ஓரளவு அவர்கள் ஊகித்திருக்க,  அவசரமாக அவர்களை எழுந்து வாசலில் சென்று வரவேற்றது மித்ரனின் அம்மா.

 “நான் மனுமித்ரனோட அம்மா….. என் பேரு களஞ்சியம்…. என் பையனோட கல்யாண விஷயமா உங்களைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்….”

மித்ரன் இதற்குமே அசையவில்லை.

அடுத்து பெரியவர்களுக்குள் குட்டி பரஸ்பர அறிமுக படலம்.

அது முடியவும் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் களஞ்சியம்.

“ மனோஹரி அண்ணன் பத்தி தெரியும்….ரொம்ப பொறுப்பான பையன்னு கேள்விபட்டேன்…. தங்கை மேல ரொம்ப பாசம் போல….. அப்படி ஒரு பையன்தான் எங்க இன்பாக்கு அமையனும்…. ஆக நீங்க அகதன் இன்பா கல்யாணத்துக்கு ஒத்துக்கிற பட்சத்தில் ரெண்டு மேரேஜையும் ஒன்னா வச்சுகிட எனக்கு முழு சம்மதம்….” என  பாம் இல்லாமலே வெடி குண்டு வெடித்தார்.

இப்பொழுது மனோஹரி மித்ரன் மட்டுமல்ல யார் முகத்தையும் பார்க்கவில்லை…..

“இந்த பேச்சுக்கே இங்க இடமில்லை ஆன்டி….. அண்ணாவுக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிட்டுன்னு வச்சுகோங்க…. அதோட எந்த பார்கைனோட பேஸ்லயும் மேரேஜ் பத்தி முடிவு பண்றதுல இங்க யாருக்கும் உடன்பாடு இல்ல….அதிலும் குறிப்பா எனக்கு சுத்தமா அது பிடிக்காது…” நேரடியாக மித்ரனின் அம்மா முகத்தைப் பார்த்தே அழுத்தம் திருத்தமாய் அடுத்து இதைப் பத்தி பேச எதுவுமில்லை என்றபடியாய் சொல்லி வைத்தாள்.

“நீ சின்ன பொண்ணுமா புரியாம பேசுற….உன் நல்லதுக்காகவும் தான் இதை சொல்றேன்….உன் அண்ணன் உன் மேல பாசமா இருக்ற பட்சத்துல….அவன்  உன்னோட புகுந்து வீட்டு மாப்ளையா வந்தா …. உனக்கு எவ்ளவு உதவியா இருக்கும்னு யோசிச்சுப் பாரு….”

“இல்லைங்க…… அகதனுக்கு ஏற்கனவே பொண்ணு பேசி முடிச்சாச்சு…. அதான் மனோ அப்படி சொல்றா….நீங்க அவள தப்பா எடுத்துக்காதீங்க….” இப்போது இடையிட்டது மனோகரியின் அப்பா தெய்வீகன்.

அதுவரை யாருக்கோ வந்த விருந்து போல் தான் நின்ற இடத்திலேயே நின்றிருந்த மித்ரன், தெய்வீகன் பேச ஆரம்பிக்கவும் அங்கு வந்து “அங்கிள் நீங்க எதுவும் குழப்பிக்காதீங்க….. நான் அம்மாட்ட பேசிக்கிறேன்..நோ இஷ்யூஸ்….. அகதனுக்கு வைஃப் திரவியாதான்….” என சொல்லிக் கொண்டு போக

அதை முழுதாக சொல்லி கூட முடிக்கவிடவில்லை அவனது அம்மா.

“அதுதான் உங்க முடிவன்னா,  உங்க பொண்ணு மேரேஜை என் பையன் கூட நடக்க ஒருகாலமும் நான் அனுமதிக்க மாட்டேன்….” என்றுவிட்டு கடகடவென கிளம்பிப் போய்விட்டார் களஞ்சியம்.

புயல் வந்து ஓய்ந்தது போல் இருந்தது வீடு. சற்று நேரம் யாரும் எதுவும் பேசவில்லை.

“அங்கிள் இந்த ப்ரச்சனையை பீஸ்ஃபுல்லா சால்வ் பண்றதுக்கு எனக்கு டைம் தருவீங்கன்னு நம்புறேன்…. இப்ப எதையும் போட்டு குழப்பிக்காம நிம்மதியா இருங்க….” என்ற மித்ரன் அகதனை திருமணம் நிச்சயமாகி இருப்பதற்காக வாழ்த்தி விடை பெற்றான்.

கிளம்பும் நேரம் மனோஹரியிடம் வந்தவன் “ இதுக்கெல்லாம் விளக்கம் கேட்கவாவது  நாளைக்கு ஆஃபீஸ் வருவதான? “ என்றான்.

“ம்….” வேதனை கோபம் இயலாமை எல்லாம் கலந்து வந்தது அவளது அந்த “ம்”

அந்த ‘ம்’ ஐ அவள் செயல்  படுத்த மறு நாள் அலுவலகம் சென்ற போது நிச்சயமாய் மித்ரனிடம் தான் இப்படி மாட்டிக் கொள்வோம் என அவள் கற்பனை கூட செய்திருக்கவில்லை….

வலை விரித்திருந்தான் அவன். சென்று விழுந்தாள் இவள்.

Episode # 07

Episode # 09

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.