(Reading time: 22 - 43 minutes)

மனோ சொல்லி முடிக்கவில்லை அதே நேரம்  கலீர் என  கண்ணாடி உடையும் சத்தம்.

 மனோஹரியின் பக்கவாட்டிலிருந்த, ஆள் உயர ஜன்னலின் ஒரு கண்ணாடி கதவு விரிசல்களுடன் உடைந்து, சில பகுதி சிந்த, மற்ற பகுதி அப்படியே நிற்கிறது…

சட்டென எதிரிலிருந்தவளை இழுத்து தரையில் உருட்டியபடி தானும் தரையில் உருண்டான் மித்ரன்.

“மனு எந்த காரணத்தைக் கொண்டும் எந்திரிக்காத, ..சோஃபாவை ஒட்டி படுத்துக்கோ ஓகே…. பயப்படாத ப்ளீஸ்….இவளிடம் படபடவென சொல்லியபடி சோஃபாவோடு அவளை சேர்த்து அவளுக்கு அடுத்த இடத்தில் படுத்தபடி கையில் மொபைலை எடுத்தான்.

“ஜோசஃப் இங்க வீட்டுக்கு பின்னால ஒரு அப்பார்ட்மென்ட் அன்டர் கன்ஸ்ட்ரக்ஷன்ல இருக்குதுல்ல…அங்க இருந்து ஷூட் பண்றான் யாரோ….காரை அங்க மூவ் பண்ணுங்க….முடிஞ்சா அவன ரீச் பண்ண பாருங்க…கைல சொஃபிஸ்டிகேட்டட் ரைஃபிள் வச்சிருக்கான்…..கேர்ஃபுல்….”

அடுத்த நொடி இவளருகில் இருந்தவன் பக்கவாட்டில் உருண்டு மாடிப் படியேறி ஓடினான் தன் பிஸ்டலை கையில் எடுத்துக் கொண்டு….

மனோஹரிக்கு எப்படி உணர வேண்டும் என்று கூட முதல் நொடி புரியவில்லை…. துப்பாக்கியும் புல்லட் ஷாட்டும் அவளுக்கு தினசரி பழக்கமா என்ன?

பயம் என்ற நிலையிலெல்லாம் இல்லை அவள்….உடல் முழுவதும் பற்றி ஏறிய சூடும்….நெஞ்சம் அழுத்தும் கிண் என்ற உணர்வும்…..இறுகிப் போன உடலும்… காதடைத்துக்கொண்டு வந்த மனநிலை நிசப்தமும்…

நேரம் போய்க் கொண்டே இருக்கிறது…. கடவுளே மித்ரனுக்கு எதுவும் ஆகிடக் கூடாது…. அவன் கூட இருந்து காப்பாத்துங்க……

நெஞ்சின் டப் டப் டப் டபைத் தவிர வேறு எதுவும் இவள் காதுக்கு கிடைக்கவில்லை…. இருந்த மன அழுத்தத்தில் உலகத்தோடு உள்ள அத்தனை உணர்வும் மரிப்பது போல் ஒரு விரக்தி சூழ….

அதன் பின்னாய் மெல்ல மெல்ல பயம், குழப்பம், வேதனை, தவிப்பு என எல்லாம் வந்து குத்தி கொண்டாடுகிறது அவளை

என்ன நடக்குது? இவளை ஏன் துரத்துறாங்க? ஆஃபீஸ்ல தான் லேடீஸ்க்கு எதோ ப்ரச்சனைனு நினச்சா…..இவளை வீடு வரைக்கும் தேடி வந்திருக்காங்க…..அதுவும் கொலை பண்ண…ஏன்????? கடவுளே மித்ரன் சேஃபா இருக்கனுமே….. இவளுக்காக அவன் எதுல வந்து மாட்றான்? பின்வாசல் வழியா உள்ள வந்து மாடிப்படி வழியே வெளிய போயி… அவனால எப்பயாவது நிம்மதியா இருக்க முடியுமா?

மாடியில் விஜிலா இருந்தாளே? தெய்வமே அவள் நிலமை….. ஐயோ குட்டிப் பையன்!!!!

மித்ரன் போய் இவ்ளவு நேரமாச்சே…. அவன் எப்படி இருக்கான் …. யேசப்பா தயவு செய்து அவனை இப்பவே என் கண்ணுல காமிங்க….

எந்திரிச்சுப் போய்ப் பார்க்கலாமா? இன்னும் 60 எண்றதுக்குள்ள அவன் வரலைனா நான் எந்திரிச்சு போயிருவேன்…. 1…2…என இவள் தவிக்க தொடங்கிய நேரம்

பின் வாசல் கதவில் காலடி சத்தம்…. ‘ஐயோ….  வர்றது யாரு? மித்ரனை எங்க?.... அவன்னா இதுக்குள்ள இவளை கூப்பிட்டுறுப்பானே’ உயிர் தொண்டையில் துடிக்க…. இவள் பின் தலையில் அமர்கிறது ஒரு கரம். ஆறுதலின் கரம்.

மித்ரன்…..சட்டென துள்ளி எழுந்து தரையில் அமர்ந்தாள் மனோ. தரையில் ஒற்றை முழந்தாளை மடக்கி இவள் அருகாமையில் அவன்…

““சாரி மனு…தனியா விட்டுட்டு போய்ட்டேன்…அவங்க மாட்டிக்க கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கிறவங்க….இங்க உள்ள வரமாட்டாங்கன்னு தெரியும்…. இருந்தாலும்… ”

அவன் பேசுவதில் எதிலும் போகவில்லை இவள் கவனம். மனம் பரிதவிக்க,  இவளது கண்கள் அவசர அவசரமாக அவனை மொத்தமும் முழுவதுமாய் வந்திருக்கிறானா என ஆரய்கிறது. கடந்து வந்த நரக நொடிகள் மனதில் செய்துவிட்ட காயத்தில் கலப்படமற்ற காதல் ரத்தம்…..

அவளது கண்களையும் செயலையும் அவனுக்கு புரிகிறதுதானே…. அப்படியே இழுத்து அவளை தனக்குள் புதைத்துக் கொள்ள துடிக்கும் தோள்களை அடக்கி “எனக்கு ஒன்னுமில்லை மனு” என்றான்.

அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் இறங்கி ஓடுகிறது அவனது பார்வைக்கு முன்பாக… தலையை ஏதோ சம்மதிப்பது போல அசைத்து வைத்தாள்.

 “யார் மித்ரன் அவங்க? என்னை ஏன் துரத்துறாங்க…..?” இவள் கண் கலங்கி குரல் கலைய தொடங்கி….

“நம்ம மேரேஜ் செய்யப் போறோம்ல….”

“அதெப்படி….நாம ரெண்டு பேரும் விரும்புறோம்னு நமக்கே இப்பதான தெரியும்….அதுக்கும் முன்னமே என்னை கிட்நாப் அட்டெம்ட்….”

“அது….” மித்ரன் ஆரம்பிக்கவும் இங்கு வீட்டு கதவில் காலிங் பெல்….

அவன் ஆட்டமெட்டிகாக கதவை நோக்கி திரும்பினான் என்றால்…ஐயோ திரும்பவுமா? என்ற நினைவில் எதிரிலிருந்தவனை தோளோடு பற்றினாள் இவள்….

இப்பொழுது அவன் தோள் பற்றியிருந்த இவள் கை மீது தன் கையை வைத்தவன்… “ஒன்னும் ப்ராப்ளம் இல்ல மனு….. காலிங் பெல் அடிச்சுட்டு தானே வர்றாங்க…” அவன் முகத்தில் இவளை ஆறுதல் படுத்தும் விதமாக ஒரு இளம் புன்னகை….

இருவரும் எழுந்து கொள்ள,  மித்ரன் சென்று பீப் ஹோல் வழியாக பார்த்துவிட்டு தன் நெற்றியை தேய்த்தான் “இப்பதான் இவங்களும் வரனுமா?” என்றபடி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.