(Reading time: 22 - 43 minutes)

“முதல்ல வந்திருக்கவங்களுக்கு குனிஞ்ச தலை நிமிராம எதாவது சாப்ட குடிக்க கொண்டு வந்து சர்வ் பண்ணனும்….” கிண்டலாய் ஒரு போலி அதிகாரம் அவன் குரலில்.

இப்பொழுதும் இவளுக்கு முறைக்கத் தான் தோன்றியது.

“முதல் தடவை வந்திருக்கேன் மனு… கொடுக்கலாம் தப்பில்லை….” இது ஒருவகை போலி கெஞ்சல்.

அவன் விளையாடுகிறான் என தெரிந்தாலும்….உண்மையில் அவன் முதல் தடவை தானே வந்திருக்கிறான்….அதுவும் இன்று அவன் பிறந்த நாள் வேறு…. அவசரமாக சமயலறைக்குள் புகுந்தாள்.

இவளுக்காக அம்மா செய்து வைத்திருந்த கேரட் அல்வா இரு கிண்ணத்தில், எப்போதும் வீட்டில் இருக்கும் முறுக்கு சில....இவைகளை ஒரு குட்டி ட்ரேயில் இட்டு இவள் எடுத்து வரும் போது “வித் யுவர் பெர்மிஷன் “ என்ற படி அந்த நிகழ்வை தன் மொபைல் கேமிராவில் சேமித்தான்.

கொண்டு வந்ததை அவன் முன்பாக வைத்து “சாப்டுங்க” என்றவள் தன் அறைக்கு அவசர அவசரமாக சென்று திரும்பினாள். “அ வெரி ஹாப்பி பார்த்டே டு யூ மித்ரன்” என்றபடி தான் அவனுக்காக வாங்கி இருந்த அந்த வாட்ச்சை அவனிடம் நீட்டினாள்.

“வாவ்… தேங்க்யூ ஸ்வீட்டி பை… இதுக்குத்தான் இன்னைக்கு ஷாப்பிங் போச்சுதா மனுப் பொண்ணு” என்றபடி அவள் கொடுத்ததை வாங்கி கிப்ட் ராப்பை பிரித்தவன்

 உள்ளிருந்த வாட்சைப் பார்த்து “ட்ரெண்டி….. ஐ லைக் இட்….யூ நோ மை டேஸ்ட்” என பாராட்டும் மகிழ்ச்சியுமாய் சொல்லியபடி தன் கையில் ஏற்கனவே அணிந்திருந்த வாட்சை கழற்றிவிட்டு

இவள் எதிர்பாரா வகையில் தன் கையை இவளிடம் நீட்டினான்….. “நீயே போட்டு விடு மனு….”

“ம்கூம்… நோ நோ…” அவசரமாக பின்வாங்கினாள் இவள். 

“கை தானே…. அத கூட தொட கூடாதா? சரி விடு….ஆனாலும் நீ எப்ப போட்டுவிடுறியோ அப்பதான் இதை நான் போட்டுப்பேன்…. அதுவும் ரொம்ப சீக்கிரமா….”

“…………………..”

தான் கழற்றி இருந்த வாட்சை, ரோமம் அடர்ந்திருந்த தன் மணிக்கட்டில்  வைத்து அவன் அணிந்து கொள்வதில் பார்வை நிறுத்த ஏனோ முடியாமல், கண்களை இடம் பெயர்த்தாள் இவள்.

“அதுவும் இதை நீ போட்டு விட்டதும்…..இன்னைக்கு போட்டு விட மாட்டேன்னு சொன்னல்ல…..அதுக்கு ஒரு ஹெவி பனிஷ்மென்ட் கொடுப்பேன் ரெடியா இருந்துக்கோ….” அணிந்து கொண்டிருக்கும் வாட்சின் மீதே அவன் கண்களை வைத்திருந்தாலும்…..இவளை அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை என்றாலும்…. கீழ் உதடை சற்று கடித்தபடி….அந்த உதடுக்குள் மட்டுமாக சிரித்தபடி… அவன் முகத்தில் ஓடிய முழு குறும்போடும்…. ஒருவித ஆசையோடும் அவன் சொல்லிய விதத்தில்

 அந்த பனிஷ்மென்ட் என்னதாய் இருக்கும் என இவள் கண்களில் காட்சி என்றெல்லாம் எதுவும் விரியவில்லை, மனதில் எதுவும் தோன்றவும் இல்லை….. ஆனாலும் சரேலென பாய்ந்தேறியது ஒரு சிலீர் பனி நதி பாவைக்குள்….அள்ளி சிவந்தது அவள் சிறுமுகம்… ஐயோ என்றது பெண் மனம். பார்த்தா என்ன நினைப்பான்….?

இவள் நிலமை புரிந்தோ என்னமோ அவன் சிறு சிரிப்புடன் உணர்வுச் சூழலை மாற்றினான்.

“ரெண்டு நாளைக்கு முன்னால கூட  இன்னைக்கு இதெல்லாம் நடக்கும்னு யாரும் சொல்லிருந்தா நம்பி இருக்க மாட்டேன்…. ஐ’ம் வெரி ஹேப்பி மனு….என் லைஃப்ல இதுவரைக்கும் வந்ததுலயே பெஸ்ட் பெர்த் டே இதுதான்…” அவன் இயல்பாய் சொல்லிக் கொண்டே, இவள் அவன் முன் இருந்த சென்டர் டேபிளில் வைத்த அந்த ட்ரேயிலிருந்து, கேரட் அல்வா கிண்ணத்தை கையில் எடுக்க

அவளுக்கு மனதிற்குள் என்னவோ செய்ததது. இவன் சொல்றதோட முழு அர்த்தம் என்ன? இவனிடம் நிறைய பேச வேண்டும்.

அவனுக்கு எதிரிலிருந்த சிங்கிள் சீட்டரில் அமர்ந்தாள்.

“சாப்டுறப்ப இப்படி பார்த்தா எப்டியாம்? பைதவே இப்ப நீ பாடனும் இல்லைனா ஆடனும் அப்படித்தான? என்ன செய்யப்போற?” அவளை மறுபடியும் சீண்டினான்

திரும்பவும் முறைக்கும் நேரம் இவளுக்கு.

“சரி உனக்கு டேன்ஸ் ஆட நான் வேணும்…சோ அப்றமா அதை கவனிச்சுகலாம்…. இப்ப நீ பாடு….”

“ போதும் விளையாடினது மித்ரன்….உங்கட்ட கொஞ்சம் பேசனும்….”

“கொஞ்சம் இல்ல……நிறைய பேசனும்….” அவன் கண்கள் சட்டென மொத்த அறையையும் தரையையும் ரூஃபையும் ஒரு சுற்று சுற்றி வந்தது. அன்னிச்சையாய் மனோவின் கண்களும் அவன் கண்களைப் பின்பற்ற

“வீட்ல மகி தனியா இருக்கா ஒரு கண்ணு வச்சுகோங்கன்னு அகதன் சொன்னதால கிளம்பி வந்தேன்……ஜோசஃப் சொன்னார் தெருல நின்ன ஏதோ ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து வீட்ல வச்சிருக்கியாமே…. இதென்ன இந்த சிச்சுவேஷன்ல இப்படி ஒரு வேலை? நீ ரொம்ப ஷார்ப்னு நினச்சுகிட்டு இருக்கேன்…. என்ன இந்த வேலை பார்த்துட்டு இருக்க…..அவள எங்க?”

“அவங்க தெரிஞ்சவங்கதான் மித்ரன்…என் காலேஜ் சீனியர்….. கைல ஒரு குழந்தையோட யாருமில்லாம நிக்றப்ப நான் வேற என்ன செய்ய முடியும்? நீங்களே விஜிலாட்ட பேசிப் பாருங்க… உங்களுக்கே அவ இன்னொசென்ட்னு புரியும்….அவங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.