(Reading time: 22 - 43 minutes)

“யார் வந்திருக்காங்க மித்ரன்?”

“ என் அம்மா….” என்றபடி இவளைப் பார்த்தான். அவன் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது ஒரு அசட்டை தொனி…

‘இவனது அம்மாவா?’ இவள் ஆச்சர்யம்,  அதிர்ச்சி மற்றும் அவனது அசட்டை தொனி கண்டு குழப்பத்தோடு முழிக்க

“இப்ப உன்னால அவங்களை மீட் பண்ண முடியுமா? இல்லை இன்னொரு நாள் வர சொல்லுவமா?” அவனிடமிருந்தது நிச்சயமாய் இவள் மீதான அக்கறை… ஆனால் அவன் அம்மாவை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை…

“என்ன நீங்க? வாசல் வரைக்கு வந்தவங்களை அப்றமா வர சொல்லுவமான்னு கேட்டுகிட்டு… முதல்ல கதவ திறங்க…” என்றவள் அவசர அவசரமாக தன்னையும் தன்னை சுற்றி இருக்கும் அறையையும் பார்வையால் துளாவினாள்….

“என்னைப் பார்த்தா என்ன சொல்லுவாங்க மித்ரன்? வீடு கூட இப்டி ஜன்னல் உடஞ்சு…” இவளுக்கு இப்போது இப்படியாய் படபடப்பு…. ஃபர்ஸ்ட் மீட்டிங்காச்சே…..அவங்களுக்கு என்னை பிடிக்கனுமே…..

அவசர அவசரமாய் விழுந்து உருண்டதில் சற்று விலகியிருந்த சோஃபாவை இழுத்து பொஷிஷனில் வைத்தவள்… அங்கு மீதி இருந்த கேரட் அல்வா மற்றும் முறுக்கை எடுத்துக் கொண்டு போய்  கிட்சனில் வைத்தவள், ஒற்றைக் கையால் தன் விரிந்திருந்த முடியை கட்டாக பிடித்தபடி உள்நோக்கி ஓடினாள். ஒர் ஹேர்பேண்ட் போட்டுட்டா கூட போதும்….

இப்டியா தலைவிரி கோலமா அழுத கண்ணோடயுமா அவங்களை பார்க்க?

இப்பொழுது மீண்டுமாய் காலிங் பெல்….

“நீங்க கதவை திறங்க மித்ரன்…எவ்ளவு நேரம் வெயிட் பண்ணுவாங்க….” அடுத்த ரூமிலிருந்து அவளது இன்ஸ்ட்ரக்க்ஷன் வரவேற்பறையில் நின்றிருந்த இவனுக்கு

“ப்ச் மனு டென்ஷனாகாத….உன்ட்ட முக்கியமான ஒன்னு சொல்லனும்” இப்பொழுது இவளிருந்த அறை வாசலில் வந்து நின்றான் அவன். இவளிருப்பது பெட் ரூம் என்றவுடன் வாசலிலேயே அவன் நின்றுவிட்டது இவளுக்கு புரிகிறது.

முடியை போனி டெய்லாய் ஹேர் பேண்ட் போட்டுக் கொண்டிருந்தவள் ஒரு சிறு திக் உடன் அப்போது தான் உணர்ந்தாள். பூட்டிய வீட்டுக்குள் அவனும் அவளும்…. அவனது அம்மா இதை எப்படி எடுத்துக் கொள்வார்?????

“எங்க அம்மா என்ன நினைப்பாங்கன்னு யோசிக்கிறியா மனு….அதை தான் சொல்ல வந்தேன்….. எது எப்டினாலும் என் மேரேஜ் முடிவுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது….நீ அவங்கட்ட தைரியமா பேசு…எனிவே நானே பார்த்துப்பேன்….”

முகம் சுருங்க அவனைப் பார்த்தாள் மனோஹரி. இவன் என்ன இவனோட அம்மாவை இப்படி பேசிக்கொண்டு போகிறான்??

அதேநேரம் காலிங் பெல் மூன்றாவது முறையாக அழைக்கிறது.

“அவங்க கிளம்பவும் உனக்கு டீடெய்லா சொல்றேன் மனு…. அப்ப புரியும்” மித்ரனின் குரல் நம்பிக்கையூட்டியது.

அப்பொழுதுதான் அவளுக்குள் அப்படி ஒரு கேள்வி வருகிறது…. “ஒருவேளை இது….. அவங்க உங்க…..சொந்த….. அம்மா இல்லையா?” தயங்கி தயங்கி கேட்டுவிட்டாள்.

“ஸ்டெப் மாம்னு கேட்கியா…? இல்ல பயாலிஜிகல் மாம் தான்….”

‘அம்மாவை பயாலஜிகல் மாம் என அடையாளப் படுத்துவது என்றால்….?’ மனோவிற்குள் மனதிற்குள் வேப்பிலை கசப்பு. என்ன விஷயமா இருக்கும்…..?

இதற்குள் அடுத்த முறையாய் ஒலிக்கிறது காலிங் பெல்.

ஏற்கனவே  இவனுக்கும் இவனது அம்மாவிற்கும் இடையில் கசந்திருக்கும் உறவு நிலை…. இதில் இவள் இணைப்பு பாலமாய் செயல் பட வேண்டுமே தவிர பிரிவை பெரிதாக்கிவிடக் கூடாது….

முதலில் கதவை திறக்க வேண்டும்… வேகமாக போய் அதை செயல் படுத்தினாள்.

ஒருவித க்ரீம் நிற புடவையில் இவள் இமேஜினேஷனுக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் ஒல்லியாய், குட்டை என்றும் சொல்ல முடியாமல் உயரம் என்றும் முடிக்க முடியாமல் இடைப்பட்ட உயரத்தில் ஒரு எளிமையான பெண்.

முகத்தில் எதோ ஒன்று மித்ரனை ஞாபக படுத்துகிறது. நிறம் அம்மாவுக்கும் பையனுக்கும் ஒன்றே தான்.

“வாங்க….  வாங்க ஆன்டி..” கை கூப்பி வரவேற்றாள். கூட இரு ஆண்கள் நிற்பது அப்பொழுதுதான் இவள் பார்வையில் படுகின்றது.

வந்த அந்த பெண்மணியோ இவளை ஏற இறங்க பார்த்தார்…. “நான் யார்னு தெரியுதாமா? நீ பாட்டுக்கு உள்ள வான்றியே”

“தெரியும் ஆன்டி…மித்ரனோட அம்மா”

இப்பொழுது இவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு அவர் மட்டுமாய் உள்ளே வந்தார். “என்னைப் பத்தி கூட உன்ட்ட சொல்லிருக்கானாமா அவன்?”

அவர் குரலின் உள்ளே என்ன ஏக்கமா சந்தோஷமா? எப்படியும் அவருக்கு மகன் மீது பாசம் இருக்கிறது. மித்ரனைப் போல அலட்சியம் இல்லை. மனதிற்குள் குறித்தாள்.

“அதெ….” இவள் தொடங்கும் போதே

“அதான் சொல்லி வைக்க வேண்டிய கட்டாயத்த உண்டு பண்ணி வச்சிருக்கீங்களே…” வித் டிஸ்ப்ளஷர் இதை சொன்னது  மித்ரனின் குரல்.

இவள் திரும்பிப் பார்த்தாள். சுவரில் சாய்ந்தபடி மார்பில் குறுக்காக கைகளை கட்டியபடி முற்றிலும் இரும்பின் முகபாவத்துடன் இவளது காதல் நாயகன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.