(Reading time: 11 - 22 minutes)

'ரி, அவன் வரான்னே, வச்சுக்க, இன்னொரு காரணத்துக்காக நீ அவனையும், பெண்களையும் விட்டு போகமாட்டாய் என்று என்ன நிச்சயம், அவர்கள் சரியாக படிக்கவில்லை என்று உனக்குத் தெரியுமா, என்னதான் பார்த்துக் கொள்ள எத்தனைப் பேர் இருந்தாலும் அம்மா பார்கிறா போல் வருமா? சரி விஷயத்துக்கு வரேன், கணேஷ் சொல்லியிருப்பான், வனிதாவுக்கு நல்ல வரன் வந்திருக்கு, நாங்கள் முடிவு பண்ணிவிட்டோம், நாளைக்கு நிச்சயம் வைத்திருக்கிறோம், அடுத்தவாரம் கல்யாணம்,'என்றார் நீலகண்டன்

'என்னிடம், நீங்கள் யாருக்கோ சொல்வது போல் சொல்கிறீர்கள், என்னை கேட்கக் கூட இல்லை?' என்றாள் கமலா

'சரி, நீ யாரு வனிதாவுக்கு,'

'நான் அவளைப் பெற்றவள், அவள் அம்மா'

'ஒத்துக்கிறேன், நீ அவளைப் பெற்றவள், அம்மா, அதற்கு அர்த்தம் தெரியுமா... என்னிக்காவது, உன் பெண்களை அரவனைத்திருக்கிறாயா?அவர்களுக்கு சமையல் செய்து ஊட்டி இருப்பாயா, இதெல்லாம் செய்தால் தான் அம்மா என்று அர்த்தம், உன் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணும் வயதில், நீ உங்கள் அம்மா வீட்டுக்கு போய் உட்கார்ந்திருக்கிறாய், அவர்களுக்கு நீ பேருக்குத்தான் அம்மா, பேருக்கு பெரியம்மாவாக இருப்பவள்தான் உண்மையான அம்மா, உனக்கு நான் விளக்கத் தேவை இல்லை, உங்க அம்மா உன்னை சின்ன வயதில் இப்படி விட்டு இருந்தால், எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார். சரி, இனி பேசிப் பயனில்லை, நான் சொன்னது தான், நாளைக்கு நிச்சயம், வனிதாவுக்கு பரிபூர்ண சம்மதம், உனக்கு தகவல் சொல்லியாச்சு, உன் மரியாதையைக் காப்பாத்திக் கொள்ளவேண்டுமென்றால், நீ இருக்கலாம், இல்லை என்றால் நீ உங்க அம்மா வீட்டில் போய் இருக்கலாம் எதுவும் நிற்காது,'என்று முடித்து விட்டார்.

‘கணேஷ் நாம் போய் நாளை நிச்சயத்துக்கு வாங்க வேண்டியது எல்லாம் வாங்க வேண்டும், நீ கிளம்பு…. ருத்ரா, உங்க அப்பா, அம்மா, வனிதா எல்லோரையும் கிளம்பச் சொல்,'

'தாத்தா இத்தனைப் பேர் போக இரண்டு வண்டி, வேணும்'

'சரிடா, என்னோட வண்டியும்,பெரிய வண்டியும் எடுத்துக்கலாம்,'

சரி என்று அந்த இடத்தை விட்டு எல்லோரும் நகர்ந்தார்கள், யாரும் அவளைக் கூப்பிடவுமில்லை,

ருத்ரா அம்மாவிடம் போய்ச் சொன்னான், அவளோ, 'நான் சமைக்கணும், வேலை இருக்கு,நீங்களெல்லாம் போய் வாருங்கள்,'என்று சொன்னாள்

சரியென்று, தாத்தாவிடம் சொன்னான் 'அம்மா வர முடியாது தாத்தா, வேலை இருக்கிறது' என்றான்

‘வர வர நம் வீட்டில் ஆட்கள் அதிகமாகி வருகிறார்கள் ரெண்டு சமயல்காரர்கள் போட்டு விடலாம், உங்க அம்மாவுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது, பாவம் அவளே எல்லா வேலையும் செய்கிறாள், பாட்டியாலும் இனி முடியாது அவளுக்கு  ஏற்கனவே வயதாகிவிட்டது ' என்றார்,

‘ஊருக்கு போன் செய்து ரெண்டு நல்ல சமையல் ஆட்களுக்கு சொல்லு' என்றார்

‘ருத்ராவிடமிருந்து போன் நம்பர் வாங்கிக் கொண்டு, அவரே கிருஷ்ணன் வீட்டுக்கு போன் செய்து, நான் நீலகண்டன் பேசறேன், உன் பெண் கனகாவைப் பற்றி பேசனும்,'என்றார்

'என்ன விஷயம் ஐயா,' என்று கேட்டார்

'என் கடைசி மகன் கார்த்திக் இருக்கானில்லையா, அவனுக்கு உன் பெண் கனகாவைப் பிடித்திருக்காம், அதான் பெண் கேட்கிறேன்,'என்று சொன்னார்

'ஐயா, ரொம்ப சந்தோஷம், நீங்கள் ரொம்ப பெரிய இடம், எனக்கு அவ்வளவு வசதி இல்லை,’ என்றார் கிருஷ்ணன்

'என்னப்பா இது, நீ ஒன்றும் செய்ய வேண்டாம், என்ன செய்யணுமோ நான் செய்யறேன்,'என்ன சரியா

‘நீ ஒன்னு செய் உன் பெண்ணுடன் மொத்த குடும்பமும் நாளைக்கு இங்கே இருக்கிற மாதிரி கிளம்பி வந்து விடுங்கள், அடுத்த வாரம் கல்யாணம் வச்சுக்கலாம் என்ன சொல்றே, நம் வீட்டில் மூன்று கல்யாணம், அதனால் இன்னிக்கே கிளம்பி விடு, இங்கு உங்களுக்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்துவிடுவேன், அப்படியே நமக்கு நல்ல சமயல் ஆள் வேண்டும் அவர்களையும் நீயே கூட்டி வந்து விடு, எந்த ட்ரைன் என்று சொல்லிவிடு, என் பேரன் வந்துக் கூட்டிக் கொள்வான்,'

'சரிங்க,’ என்றார் கிருஷ்ணன்

தன் மகன் கார்த்திக்குக்கு தானே போன் செய்தார், ருத்ரா போன் என்று 'ம்ம், சொல்லுடா,' என்று ஆரம்பித்தான்

'நான்தான், அப்பா பேசறேன், ‘நாளைக்கு நம்ம வனிதாக்கு நிச்சயம், அதனாலே கிளம்பி வா, அடுத்தவாரம் கல்யாணம், வனிதாவுக்கும், உங்க அண்ணன் தினேஷுக்கும், அதனாலே ஒரு ரெண்டு வாரம் லீவில் வா,’ என்றார்'

'சரிப்பா, நாளைக்கு காலை அங்கு இருப்பேன், ருத்ராவை அப்புறம் பேசச் சொல்லுங்க 'என்றான்

போனை வைத்து விட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.