(Reading time: 11 - 22 minutes)

ருத்ராவுக்கு போன் வந்தது, 'இந்தாப்பா, போன் அடிக்குது பார், என்றார் தாத்தா

போனை ஆன் செய்து 'சொல்லுங்க அருண், சரி, வேலைக்கு சேர்ந்தாச்சா,நான் ரொம்ப பிசி, இன்னும் ஒரு வாரம், அதனாலே நீங்க எல்லாத்தையும் பார்த்துக்குங்க, நம்ம வேனுவையும், ஜீவாவையும், எனக்கு ஹெல்புக்கு அனுப்புங்க, இல்லை எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க, நான் சொல்றேன் அவங்க என்ன பண்ணனும்னு, சரி வச்சிடறேன்'

ருத்ரா போனை வைத்து விட்டு, காரை எடுக்க போனான், எல்லோரும் வெளியே வந்தார்கள், சித்ரா போன் செய்தாள், இவன் கொஞ்சம் தள்ளிப் போய் பேசினான்,

'நான் சித்ரா பேசறேன், ரொம்ப தேங்க்ஸ் இன்னிக்கு நீங்க சொன்ன மாதிரி வேலைக்குச் சேர்ந்து விட்டேன், நான் உங்களைப் பார்க்க வேண்டும், முடியுமா'என்றாள்,

அவன் 'இப்போ இன்னும் ஒரு வாரம் நான் பிசி, எங்கள் வீட்டில் கல்யாணம், எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? எனக்கு இப்போ ஒரு சமையல் ஆள் வேண்டும் கிடைக்குமா,’ என்று கேட்டான்

'ஓ, ஆள் உடனே வேண்டுமா, எவ்வளவு பேருக்கு சமைக்கணும்,’ என்று கேட்டாள்,

‘இருபது பேருக்கு என்று சொன்னான், உடனே வேணும், கிடைத்தா, எனக்கு அனுப்புங்கள் நான் அட்ரஸ் உங்களுக்கு சொல்கிறேன் எழுதிக்கிறீங்களா, முடியல்லன்னா சொல்லுங்கள்,’ என்றான்

'அவள் எதிக்கிறேங்க சொல்லுங்க என்றாள், அவன் சொன்னான், அவள் எழுதிக் கொண்டாள்.’ சரி, அங்கு யாரைப் பார்க்கணும்?' என்றாள்

'அங்கே கற்பகம்ன்னு இருப்பாங்க, அவங்களைப் பார்க்கணும், ருத்ரா வரச்சொன்னாரு, சமையலுக்கு என்று சொல்லச் சொல்லுங்கள்,' என்றான்

'சரி நான் பிறகு பேசறேன், இப்போ வெளியே போகணும்'

போனை அணைத்தான்

எல்லோரும் ஏறினார்கள், காரை எடுத்தான்

கடை வாசலில் நின்றான், எல்லோரும் இறங்கினார்கள், இவன் காரை அங்கிருக்கும் ஆட்களே எடுத்துக் கொண்டு பார்க்கிங் பக்கம் போனார்கள், இவர்கள் எல்லோரும் கடைக்குள் போனார்கள், கமலாவும் வந்திருந்தாள். உள்ளே போய் புடவை செக்க்ஷனில், ‘முதலில் பெண்ணுக்கு நிச்சயப் புடவை, பிறகு மூன்று முஹுர்த்தப் புடவை, நல்ல விலையில்,’ என்று சொன்னார்,

அவர் மனைவி சிவகாமியோ ' என்னங்க மருமக வந்து பார்க்க வேண்டாமா, அது சரி மூன்றாவது யார், மூன்று முஹுர்த்தப் புடவை என்றார்,’

'யாரு நம்ம கார்த்திக்கை மறந்து விட்டாயே?’ என்றார்

'ஓ, அப்படியா, ஆனா பொண்ணு யாருங்க, என்றார் சிவகாமி

'நம்ம ஊரு கிருஷ்ணன் தெரியுமா அவர் பொண்ணு கனகா, நம்ம பிள்ளை அந்தப் பெண்ணை விரும்பறான், அதான் அவங்களை நாளைக்கே வரச் சொல்லிட்டேன், ஒரு வாரம் இங்கே தங்கி அடுத்த வாராம் கல்யாணம் முடிச்சிடலாம், பேரப் பசங்கெல்லாம் ரெடியாயிட்டாங்க கல்யாணத்துக்கு, அதனாலே நம்ம பசங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் இல்லையா? அதான் முடிவு பண்ணிட்டேன் 'என்றார்

'சரிங்க, அந்தப் பொண்ணு வந்தவுடன், வாங்கலாமே?’ என்றார்

‘இல்ல, நமக்கு நேரம் இல்ல, அவங்க கலருக்கு ஏத்த மாதிரி வாங்கு,' என்றார்

‘பிறகு ஒரு சந்தர்பத்தில் அவங்களுக்கு பிடித்த மாதிரி வாங்கலாம்,அப்புறம் வீட்டில் எல்லோருக்கும் வாங்கு, கூடவே ஒரு ஐந்து புடவை வாங்கு எதுக்காகவாது உதவும் ' என்றார்

‘சரி’ என்று புடவையை பார்க்க ஆரம்பித்தார்கள்

ருத்ராவுடைய போன் ரிங் வந்தது, எடுத்து பேசினான்,’யாரோ ஒருத்தங்க வந்திருக்காங்க நீ அனுப்பிச்சேன்னு சமையலுக்கு,’ என்றாள் அம்மா

'ஆமாம்மா, எடுத்துக்கோங்க, நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் கூட இருந்து எது எங்கே இருக்குன்னு மட்டும் சொல்லுங்க, அம்மா ப்ளீஸ் ரெஸ்ட் எடுத்துக்குங்க, என்று அவன் குரல் தழு, தழுத்தது.

'சரிப்பா' என்றார் அம்மா

எப்படி இருந்தாலும் அவனே நினைத்திருந்தான், தன் பிசினெஸ் கொஞ்சம் சரியானவுடன், சமையலுக்கு ஆள் போட்டு அம்மாவை உட்கார்த்தி பார்த்துக் கொள்ளவேண்டுமென்று.கமலா சித்தி எப்படி தாத்தாவிடம் இன்று பேசினாள், ஒரு நாள் அம்மா இப்படி பேசி இருப்பாளா?, என்று நினைத்துக் கொண்டான்

வனிதா ' அண்ணா, இந்தப் புடவை எப்படி இருக்கு,’ என்று கேட்டாள்.

அவன் அவளைப் பார்த்து ஏய் வாலு, உன் ஆளை கேட்டியா, என்ன கலர் பிடிக்கும்ன்னு அவரைத்தானே நீ கவரனும்,' அவன் கேட்டதும்

அவள் முகம் சிவந்தாள்

'இல்லைண்ணா, என்றாள், சரி அவரிடம் கேளு குமாருக்கு என்ன கலர் பிடிக்கும், என்று,'

அவனே குமாருக்கு கால் பண்ணி அவளிடம் போனை கொடுத்தான்

அவள் பேசியதும், அவன் கேட்டான்,'ஏன், என்னைக் கூப்பிடவில்லை, நீ புடவை வாங்க, நான் உன்னையே பார்த்துக் கொண்டிருண்டிருப்பேனே,’ என்று அவன் சொன்னவுடன் அவள் முகம் சிவந்து தன் அண்ணனிடம் போனைக் கொடுத்தாள்.

அவன் போனை வாங்கி ‘என்ன மாப்பிள்ளை, என் தங்கையிடம் என்ன சொன்னீங்க, அவள் போனை என்னிடம் கொடுத்து விட்டாள்,’ என்றான்

‘நல்ல காலம் நீங்க பேசுனீங்க, இல்லையின்னா நான் அவதான் லைன் லே இருக்கான்னு ஏடா கூடமா ஏதாவது பேசியிருந்தா? சரி என்னை ஏன் கூப்பிடலை மச்சான்,’ என்று கேட்டான் குமார்

‘எல்லாம் திடீர்ன்னு முடிவெடுத்தது, உங்களுக்கு வேணும்னா உடனே கிளம்பினீங்கன்னா, நீங்கள் பதினைந்து நிமிடத்தில் வந்து விடுவீங்க 'என்றான்

‘சரி நான் வரேன் ப்ளீஸ் அவளுக்கு நான் வந்தவுடன் வாங்குங்க,’ என்றான்

‘சரி,’ என்றான் ருத்ரா.

Episode # 05

Episode # 07

தொடரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.